1: நமது நபி யார்?
*நமது நபி முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள்*
2: முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் எங்கே பிறந்தார்கள்?
*அவர்கள் மக்காவில் பிறந்தார்கள்.*
3 : முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் எந்த குலத்தை சேர்ந்தவர்கள் .?
*அரேபியர்களின் உயர் குலமான குறைஷிக்குலத்தைச் சேர்ந்தவர்கள்.*
4 : முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் குடும்ப பெயர் என்ன?
*ஹாஷிம்*
5 : நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் தந்தை பெயர் என்ன?
*அப்துல்லாஹ் (ரலியல்லாஹு) அவர்கள்*
6 : நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் தாயார் பெயர் என்ன?
*ஆமீனா (ரலியல்லாஹு) அவர்கள்.*
7 : நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் நிறம் என்ன?
*சிவப்பு கலந்த வெள்ளை நிறம்.*
8 : நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் எப்போது பிறந்தார்கள்?
*கி.பி571 _ம் ஆண்டு ஏப்ரல் மாதம் _20 ரபீஉல் அவ்வல் 12, திங்கள் அதிகாலை யானைப்போருக்கு 50 நாட்களுக்கு பின்னர் பிறந்தார்கள்.*
9 : நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் தந்தை
எப்போது மரணமடைந்தார்கள்.?
*நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் தாயார் இரண்டு மாத கர்ப்பிணியாக இருக்கும்போது.*
10 : நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் தாயார்
எப்போது மரணமடைந்தார்கள்?
*நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் ஆறாம் வயதில்.*
11 : நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் இரண்டாவது தாய் என்று அழைக்கப்படும் பெண்மணி யார்?
*பீவி உம்மு அய்மன் (ரலியல்லாஹு அன்ஹா) அவர்கள்.*
12 : நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கு பால் ஊட்டியவர்கள் யார்?
*1.ஸுவைபத்துல் அஸ்லமிய்யா. 2.ஹலீமா பீவி.*
13 : தாயாரின் மரணத்திற்கு பிறகு நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை வளர்த்தவர் யார்?
*பாட்டனார் அப்துல் முத்தலிபு.*
14 : பாட்டனார் எப்போது மரணமடைந்தார்கள்?
*நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் எட்டாம் வயதில்.*
15 : நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் தந்தை
எங்கே வைத்து மரணமடைந்தார்?
*மதீனா*
16 : முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் தாயார் எங்கே வைத்து மரணமடைந்தார்கள்?
*அபவாஹ் என்னுமிடத்தில் மரணமடைந்தார்கள்.*
17 : பாட்டனாருடைய மறைவுக்கு பின் முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை பராமரித்தவர் யார்?
*பெரிய தந்தை அபூதாலிப்.*
18 : நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் பிறந்த வேளையில் அணைந்த நெருப்பு குழி எது?
*ஈரானிலுள்ள ஒரு நெருப்பு குழி.*
19 : நபி (ஸல்லல்லாஹு அலைஹி) அவர்கள் பிறந்த வேளையில் தண்ணீர் முற்றிலுமாக தீர்ந்து வறட்சியாக காணப்பட்ட நதி எது?
*பாலஸ்தீனத்திலுள்ள ஸாவா நதி.*
20 : நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் பிறந்த வேளையில் தரைமட்டமாக கீழே சரிந்த மாளிகையின் பெயர் என்ன?
*கிஸ்ரா மாளிகை.*
21 : பாட்டனாருடைய மரணத்திற்கு பின் முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை பராமரித்தவர் யார்?
*பெரிய தந்தை அபூதாலிப்.*
22 : இஸ்லாம் ஏற்றுக் கொள்ள வில்லையென்றாலும் இஸ்லாமிய மார்க்கத்திற்க்காக நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்த நபர் யார்?
*பெரிய தந்தை அபூதாலிப்.*
23 : நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் பிறந்த வேளையில் தலைகுப்புற கவிழ்ந்தவை எவை?
*அஸ்னாமுகள் (விக்ரகங்கள்) தலைகுப்புற விழுந்தன.*
24 : நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் தந்தை என்ன தொழில் செய்தார்கள்?
*வியாபாரம்*
25 : பாட்டனார் அப்துல் முத்தலிபு நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை எத்தனை வருடம் பராமரித்தார்கள்?
*
இரண்டு வருடங்கள்*
#ஆக்கம்_சிராஜுத்தீன்_அஹ்ஸனி.
#இயக்குனர்_மைமூன்_பப்ளிஷிங் #ஹவுஸ்.
#திருவிதாங்கோடு.
அஸ்ஸலாமு அலைக்கும்.17) - 21) ஒரே மாதிரி கேள்வி பதில் ஹஜ்ரத்
பதிலளிநீக்கு