......#முஹம்மது_றஸுலுல்லாஹ்......
.................#வினா_விடை..............
......#பாகம்=5
101 : இஸ்ராஃ என்றால் என்ன?
*நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மக்காவிலுள்ள மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து பாலஸ்தீனத்தில் இருக்கும் மஸ்ஜிதுல் அக்ஸா வரை சென்ற இரவு பயணத்திற்கு இஸ்ராஃ என்று சொல்லப்படும்.*
102 : மிஃராஜ் என்றால் என்ன?
*நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் பைத்துல் முகத்தஸிலிருந்து ஏழு வானங்களையும் கடந்து அல்லாஹ்வை காண்பதற்காக சென்ற பயணத்திற்கு மிஃராஜ் என்று சொல்லப்படும்.*
103 : இஸ்ராஃ மிஃராஜ் எப்போது நடைபெற்றது?
*நுபுவத்தின் பதினொன்றாம் வருடம் ரஜப் மாதம் 27_ம் நாள் திங்கட்கிழமை இரவு.*
104 : பைத்துல் முகத்தஸில் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் என்ன செய்தார்கள்?
*எல்லா நபிமார்களுக்கும் இமாமாக நின்று தொழுகை நடத்தினார்கள்.*
105 : நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை ஜின்கள் சந்தித்தது எப்போது?
*நுபுவத்தின் பத்தாம் வருடம் துல் கஃதா மாதம்.*
106 :இஸ்ராஃ பயணத்திற்கு எந்த வாகனத்தில் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் சென்றார்கள்?
*புராக்*
107 : மிஃராஜின் போது ஏழு வானங்களிலும் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் எந்தெந்த நபிமார்களை சந்தித்தார்கள்?
முதல் வானம்: ஆதம் நபி (அலை)*
இரண்டாம் வானம்: ஈஸா நபி மற்றும் யஹ்யா நபி (அலை)
மூன்றாம் வானம்: யூசுஃப் நபி (அலை)
நான்காம் வானம்: இத்ரீஸ் நபி (அலை)
ஐந்தாம் வானம்: ஹாரூன் நபி (அலை)
ஆறாம் வானம்: மூஸா நபி (அலை).
ஏழாம் வானம்: இப்ராஹிம் நபி (அலை)
108 : ஏழாம் வானத்தில் நபி (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள் கண்ட ஆலயம் எது?
*பைத்துல் மஃமூர்*
109 : நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அல்லாஹ்வை எப்படி பார்த்தார்கள்?
*புறக் கண்களால் பார்த்தார்கள்.*
110 : மிஃராஜின் போது அல்லாஹ் என்ன கடமையாக்கினான்?
*ஐம்பது நேர தொழுகை*
111 : யாருடைய தூண்டுதலின் பேரில் ஐம்பது நேரத்தொழுகை ஐந்து நேரத் தொழுகையாக குறைக்கப்பட்டது?
மூஸா நபி (அலை) அவர்கள்
112 : ஹிஜ்ரத் என்றால் என்ன?
*நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மக்காவிலிருந்து மதீனாவுக்குச் சென்ற புனித பயணத்திற்கு ஹிஜ்ரத் என்று பெயர்.*
113 : நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை கொலை செய்வதற்காக முடிவெடுக்க குறைஷிகள் ஒன்று சேர்ந்த இடம் யாது?
*தாருந்நதுவா*
114 : ஹிஜ்ரா போகும் நேரத்தில் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் தமது படுக்கையில் யாரைப் படுக்க வைத்தார்கள்?
*அலிய்யிப்னு அபீ தாலிப்
(ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள்*
115 : நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை கொலை செய்வதற்காக குறைஷிகள் தீட்டிய திட்டம் என்ன?
*நூறு பேர்கள் சேர்ந்து ஒரே வெட்டில் வெட்டி கொல்தல்*
116 : வீட்டை சுற்றி நின்ற கொலையாளிகளிமிருந்து நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் எவ்வாறு தப்பித்தார்கள்?
*ஒரு பிடி மண்ணெடுத்து ஸூரத் யாஸீன் முதல் ஐந்து வசனங்களை ஓதி எதிரிகள் மீது எறிந்தார்கள்.*
117 : ஹிஜ்ரத் பயணத்தின் போது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுடன் சென்றது யார்?
*அபூபக்கர் சித்தீக்
(ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள்*
118 : ஹிஜ்ரத் சென்ற நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களும் அபூபக்கர் சித்தீக் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களும் எந்த குகையில் தங்கினார்கள்?
*ஸவ்ர் குகை*
119 : ஸவ்ர் குகையில் எத்தனை நாட்கள் தங்கினார்கள்?
*மூன்று நாட்கள்*
120 : மக்காவிலிருந்து ஸவ்ர் குகைக்கு உணவு கொண்டு சென்றது யார்?
*அஸ்மா ரலி அவர்கள்*
121 : தனது இடுப்புப் பட்டையை இரண்டாகக் கீறி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு உணவு கட்டிக்கொடுத்ததால் அஸ்மா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்கள் எந்தப்பெயரில் அறியப்படுகிறார்கள்?
*தாதுன் நிதாகைன்*
122 : நூறு ஒட்டகங்கள் கிடைக்கும் என்ற ஆசையில் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை பிடிப்பதற்காக குதிரையில் துரத்தி சென்றவர் யார்?
*ஸுராக்கா*
123 : ஹிஜ்ரா செல்லும் வழியில் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் வற்றிய ஆட்டிலிருந்து பால் கறந்தது யார் வீட்டில்?
*உம்மு மஃபது*
124 : நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மதீனாவில் முதலில் இறங்கிய இடம் எது?
*குபாஃ*
125 : குஃபாவில் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கட்டிய பள்ளிவாசல் எந்த பெயரில் அறியப்படுகிறது?
*மஸ்ஜிதுல் குபாஃ*
#ஆக்கம்.
M.#சிராஜுத்தீன்_அஹ்ஸனி.
#இயக்குனர்_மைமூன்_பப்ளிஷிங் #ஹவுஸ்
#திருவிதாங்கோடு.
குமரி மாவட்டம்….
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக