செவ்வாய், 3 ஜூலை, 2012

ஜும்ஆவும் - 1 வருடத்தில் 145 கோடி நன்மைகளும



அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்தஹீ

அன்பிற்கினிய என் அருமை சகோதர சகோதறிகளே!

ஜும்ஆ நாளன்று உங்களுக்கு கிடைக்கும் நன்மைகள் ஒவ்வொரு ஜும்ஆ நாளன்றும்பள்ளி (தொழுமிடங்)களின் வாயில்களின் ஒவ்வொரு வாசலிலும் மலக்குமார்கள்அமர்ந்து முதல் நேரத்தில் வருபவர்கள், அதற்கடுத்த நேரத்தில் வருபவார்களைவறிசையாக எழுதுகிறார்கள். இமாம் (மிம்பறில்) அமர்ந்து விட்டால் (எழுதிய)தங்களது ஏடுகளை சுருட்டிக்கொள்கின்றனார்.

மேலும் இமாம் கூறும் ஜும்ஆ உரையை செவிமடுக்க வந்துவிடுகின்றனர்.முதல் நேரத்தில் வருபவர்களுக்கு உதாரணம் ஒட்டகத்தை அன்பளிப்புச் செய்தவர்போன்றவராவார்..அதன் பிறகு வருபவர் ஒரு மாட்டை அன்பளிப்புச் செய்தவர் போன்றவராவார்.அதன் பிறகு வருபவர் ஒரு கடா (ஆட்டை) அன்பளிப்புச் செய்தவர் போன்றவராவார்.அதன் பிறகு வருபவர் ஒரு கோழியை அன்பளிப்புச் செய்தவர் போன்றவராவார்.அதன் பிறகு வருபவர் ஒரு முட்டையை அன்பளிப்புச் செய்தவர் போன்றவராவார்.- என்று அல்லாஹ்வின் தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக அபுஹீரைரா (ரலி) கூறியதாக நபிமொழி சுன்னத் அறிவிக்கறது. (பார்க்க சஹீமுஸ்லிம் என்ற ஹதீஸ் வசனம் 406)

ஒரு வேலை உணவோ அல்லது 1 ருபாய் பணமோ ஏழைகளுக்கு கொடுக்கவே 1 கோடி தடவை யோசிக்கும் நமது தீன்குலச் சசோதர, சகோதறிகளுக்கு அல்லாஹ் ஒட்டகம், மாடு,கடா, கோழி, முட்டை என எவ்வளவு நன்மைகளை நமக்காக மலக்குமார்களின் ஏடுகளில் பதியச் செய்கிறான். இது ஒவ்வொறு ஜீம்மா நாளன்றும் நமக்கு அல்லாஹ் தரக்கூடிய ஜீம்மா நன்மைகள்!

ஆனால் நாம்மில் சிலபேற் ஜும்ஆ நாளில் கடைசிநேரத்தில் இமாம் பயான் முடித்த பிறகு தொழுகைக்கு சென்று மக்களிடம் நல்லபெயரை எடுத்துக்கொள்கிறோம். ஆனால் இறைவனிடம்??????

நீங்கள் இன்றைய காலகட்டத்தில் ஒரு ஒட்டகத்தின் விலைக்கு வாங்க எண்ணினால் எவ்வளவு தொகை செலவழிக்கவேண்டும் எண்ணிப் பாருங்கள்.

கீழ்கண்ட கணக்கு போட்டுப் பாருங்கள்

1 ஜும்ஆவிற்கு 1 ஒட்டகம்
1 மாத ஜும்ஆக்களுக்கு 4 ஒட்டகம் (4 ஜும்ஆக்கள்)
1 வருட ஜும்-ஆக்களுக்கு 52 ஒட்டகம் (52 ஜும்ஆக்கள்)
ஒரு ஒட்டகம் சுமார் ரு.40,000 என்று வைத்துக்கொள்வோம்

இந்த40,000 ருபாயை 52 வாரங்களுக்கு கணக்கு போடுங்கள் விடை ரு.20,80,000 என வரும்.
இந்த நன்மைகளை அல்லாஹ்வின் கணக்குப்படி பார்த்தால் (அல்லாஹ்வின் கணக்கு 1நன்மைக்கு 700 வீதம் அதாவது ரு. 20,80,000 x 700 = 145,60,00,000 நன்மைகள். உங்களால் ஒரு வருடத்தில் 145 கோடியே அறுபது இலட்சம் ருபாயை ஒருஆண்டில் சம்பாதிக்க முடியுமா?

இதனால் தான் தனது திருமறையில் ஜும்மா நாளுக்கு விரையும்படியும் அன்றையதினம் தங்களுடைய வியாபாரங்களை அந்த நேரம்மட்டும் விட்டுவிடும்படியும் அறிவுறுத்துகிறான்!.

1 ருபாய் தானம் செய்வதற்கே நாம் திக்குமுக்காடுகிறொம் சுமார் 145கோடிக்கான நன்மைகளை நாம் இழக்கலாமா?

நமது ஒரு வருடத்தில்.இந்த 1 வருட நன்மைகளான ருபாய் 145 கோடியை உங்கள் வாழ்நாளிலகணக்குபோட்டுபார்த்தால் மயக்கம் வந்துவிடுமே!

ஜும்-ஆ நாளையும் அதன் முதற்பகுதியையும் எக்காரணம் கொண்டும்தவறவிடாதீர்கள்! அது உங்களின் சுவனப்பாதையை எளிதாக்கும் விஷயமாகும்.

நம்அனைவருக்கும் ஜும்-ஆவின் நன்மைகள் அதிகமதிகம் கிடைக்க வல்ல இறைவனிடம்துவா செய்வோமாக!

இதை உங்களால் முடிந்தால் உங்கள் குடும்பத்தினருக்கும்சொல்லி நன்மைகளை அதிகமதிகம் பெற்றிடுங்கள் அவர்களும் பயன்பெறுவார்கள்!.

(எனது கருத்துக்களிலோ அல்லது கணக்குகளிலோ தவறு கண்டால் என்னை மன்னிக்கவும்)

அல்ஹம்துலில்லாஹ் (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே உறியது)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக