ஜகாத் சட்டங்களில்
وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ ۚ وأنفقوا مما رزقناكم
بني الإسلام على خمس: شهادة أن لا إله إلا الله، وأن محمداً عبده ورسوله، وإقام الصلاة، وإيتاء الزكاة، وحج البيت، وصوم رمضان
"இஸ்லாம் ஐந்து தூண்கள் மீது நிறுவப்பட்டுள்ளது:
1. அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை, முஹம்மது (ஸல்) அவர்கள் அவனது தூதர் என சாட்சி கூறுவது,
2. தொழுகையை நிலைநாட்டுவது,
3. ஜகாத் கொடுப்பது,
4. ஹஜ் செய்வது,
5. ரமலானில் நோன்பு நோற்பது."
நூல்: புகாரி
وَاَقِيْمُوا الصَّلٰوةَ وَاٰتُوا الزَّكٰوةَ وَارْكَعُوْا مَعَ الرّٰكِعِيْنَ
தொழுகையைக் கடைப்பிடியுங்கள்; ஜகாத்தையும் கொடுங்கள்; ருகூஉ செய்வோரோடு சேர்ந்து நீங்களும் ருகூஉ செய்யுங்கள். .
புனித ரமலான் மாதத்தின் மூன்றாவது ஜும்ஆவில் நாம் இருக்கின்றோம் அல்லாஹ் நாம் நோற்ற நோன்புகளை ஏற்று கொள்வானாக.
மீதமுள்ள நாட்களில் முழுமையாக நோன்புகளை நோற்க உடல் ஆரோக்கியத்தை தந்தருள் புரிவானாக.புனித லைலத்துல் கத்ர் இரவை அடையும் பாக்கியத்தையும் அந்த இரவில் முழுவதும் இபாதத் செய்யும் பாக்கியத்தை தருவானாக.
ஜகாத் ஹிஜ்ரி 2-ஆம் ஆண்டு கடமையாக்கப்பட்டது. (கி.பி. 624-ல்), ரமலான் நோன்பு கடமையாக்கப்பட்ட அதே காலக்கட்டத்தில் ஜகாத்தும் கடமையாக்கப்பட்டது.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
"உங்கள் செல்வங்களை ஜகாத் கொடுப்பதன் மூலம் பாதுகாத்துக் கொள்ளுங்கள் (தூய்மைப்படுத்துங்கள்)." நூல்: அபு தாவூத்
ஜகாத்தின் நன்மைகள்:
ஜகாத் கொடுப்பதால் செல்வம் குறையாது, மாறாக அதில் இறைவனின் பரக்கத் (அருள்) கிடைக்கும்.
கஞ்சத்தனம் மற்றும் பேராசையிலிருந்து மனிதனை விடுவிக்கிறது.
ஏழ்மையை ஒழித்து, பொருளாதார சமநிலையை உருவாக்குகிறது.
அல்லாஹ்வின் கோபத்தைத் தணித்து, அவனது அருளைப் பெற்றுத் தருகிறது.
நான்கில் ஜகாத் கடமை ஆகும்
சேமிப்பு பொருள்
கால்நடை
விவசாய பொருள்
வியாபார பொருள்
ஹலால் ஆன செல்வம் தூய்மை ஆகும். அதற்கான ஜகாத் அது கழிவு பொருள் ஆகும். தர்பூசணி பழத்தின் தோல் போல்….
ஏழைகளுக்கு வறுமை நீக்கம் மட்டுமல்ல ஆன்மீக சிந்தனை உண்டு .
கஞ்சத்தனம், மற்றும் பேராசை விட்டு பாதுகாப்பு உதவி மனப்பான்மை.
மனித இயல்பிலேயே பொருளாசை என்பது ஆழமாக வேரூன்றிய ஒன்று.
அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்:-
"எவர்கள் தங்கள் உள்ளத்தின் கஞ்சத்தனத்திலிருந்து காக்கப்பட்டார்களோ, அவர்களே வெற்றி பெற்றவர்கள்." (அல்-ஹஷ்ரு 59:9)
குர்ஆனில் நேரடியாக "அகிமுஸ்ஸலாத வ ஆதுஸ் ஜகாத்" (தொழுகையை நிலைநாட்டுங்கள் மற்றும் ஜகாத்தைக் கொடுங்கள்) என்ற ஏவல் வினை வாக்கியமாக 25 இடங்களில் அல்லாஹ் கூறுகிறான்.
தொழுகையையும் ஜகாத்தையும் ஒன்றாக இணைத்து (உதாரணமாக: "அவர்கள் தொழுகையை நிலைநாட்டுவார்கள், ஜகாத்தைக் கொடுப்பார்கள்" போன்ற பல்வேறு வசன அமைப்புகளில்) திருக்குர்ஆனில் மொத்தம் 32 இடங்களில் அல்லாஹ் குறிப்பிட்டுள்ளான்.
உடல் சம்பந்தமான வணக்கம் தொழுகை
பொருள் சம்பந்தப்பட்ட வணக்கம் ஜகாத்.
ஜகாத் எப்போது கடமை ஆகின்றதோ உடனே கொடுக்கனும்.
அன்னை ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கிறார்கள், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
"எந்தச் செல்வத்தோடு ஜகாத் (பங்கு கொடுக்கப்படாமல்) கலந்திருக்கிறதோ, அந்தச் செல்வத்தை அது அழிக்காமல் விடுவதில்லை."நூல்: புகாரி
அதாவது, ஒருவரது செல்வத்தில் ஜகாத் கடமையாகி, அதை அவர் பிரிக்காமல் வைத்திருந்தால், அந்த ஜகாத்தின் பங்கு (அழுக்கு) ஹலாலான மற்ற செல்வத்தையும் சேர்த்து அழித்துவிடும் (பரக்கத்தை நீக்கிவிடும்) என்பதே இதன் பொருள்.
விரைந்து நிறைவேற்றுவதன் அவசியம்
உக்பா பின் அல்-ஹாரிஸ் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
"நான் மதீனாவில் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்குப் பின்னால் அஸர் தொழுதேன்.
அவர்கள் ஸலாம் கொடுத்தவுடன் மிக வேகமாக எழுந்து, மக்களின் தோள்களைக் கடந்து தனது மனைவியின் அறைக்குச் சென்றார்கள்.
அவர்களின் வேகத்தைக் கண்டு மக்கள் திடுக்கிட்டனர். பிறகு நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் வெளியே வந்து, மக்கள் ஆச்சரியப்படுவதைக் கண்டு கூறினார்கள்: 'என்னிடம் இருந்த ஒரு தங்கக் கட்டியை (தர்மம் செய்ய வேண்டியதை) நினைவுகூர்ந்தேன்.
அது (என் வசம் இருப்பது) என்னைத் தடுத்துவிடக் கூடாது என்று நான் விரும்பினேன், அதனால் அதை விநியோகிக்க உத்தரவிட்டேன்.'" (நூல்: புகாரி)
தங்கம் 87 ½ கிராம்.
வெள்ளி 612 கிராம்.
பணம் வெள்ளியின் அன்றைய மதிப்பு சுமார் 1,80,000 ரூபாய்
பணம் வெள்ளி கணக்கில் பார்க்க வேண்டும்.
வியாபார பொருள் அவர் வாங்கிய பொருட்கள் அந்த ரூபாயின் கணக்கு .
ரமலானில் தான் கடமையா ?
ரமலானில் கடமை இல்லை.
ஒவ்வொரு நபருக்கும் ஒவ்வொரு மாதம் ஒவ்வொரு நாள் கடமையாகும். பொருள் வந்த தேதியில் இருந்து 1 வருடம் கழித்து கொடுக்க வேண்டும்.
ரமாலானில் கொடுப்பதால் 1க்கு ரூபாய்க்கு 70 மடங்கு நன்மை உண்டு.
அதனால் பலர் ரமலான் மாதத்தில் கொடுக்கின்றனர்.
கடமை ஆன பின் ரமலான் வர இரு மாதங்கள் வரும் வரை தள்ளி போட கூடாது.
பொருள் போய்விட கூடாது.
களவு போகி விட கூடாது.
நோய் வந்து விட கூடாது.
ஜகாத் கடமை ஆகும் முன் கொடுக்கலாமா?
முன்னே நிறைவேற்றலாம்.
أنَّ العبَّاسَ سألَ النَّبيَّ صلَّى اللَّهُ علَيهِ وسلَّمَ في تَعجيلِ صدقتِهِ قبلَ أن تَحلَّ ، فرخَّصَ لَهُ في ذلِكَ ،
அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம், தனது ஜகாத்தை அது கடமையாவதற்கு (தவணை முடிவதற்கு) முன்பே கொடுத்துவிடலாமா என்று கேட்டார்கள். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அனுமதி அளித்தார்கள்."நூல் : அபூ தாவூத்
பொருட்கள் சம்பந்தப்பட்ட வணக்கம் கூடும். ஃபித்ரா தர்மம், ஜகாத், தர்மம், சதகா போன்றவைகள் முன்பே கொடுப்பது கூடும்.
உடல் சம்பந்தபட்ட வணக்கம் முன் செய்வது கூடாது.நோன்பு தொழுகை இதுவெல்லாம் முன்பே செய்ய கூடாது. நோன்பு நேரம் வரும் முன் நோற்பதோ தொழுகை நேரம் வரும் தொழுவதோ கூடாது.
அணியும் நகைக்கு ஜகாத் உண்டா ?
ஜகாத் உண்டு என்பதற்கான ஆதாரங்கள் ஹனஃபி மத்ஹப்
அம்ரு பின் ஷுஐப் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் தனது தந்தை மற்றும் பாட்டனார் வழியாக அறிவிக்கிறார்கள்:
عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ رضي الله عنهم أَنَّ امْرَأَةَ أَتَتْ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَمَعَهَا ابْنَةٌ لَهَا وَفِي يَدِ ابْنَتِهَا مَسَكَتَانِ غَلِيظَتَانِ مِنْ ذَهَبٍ فَقَالَ لَهَا أَتَعْطِينَ زَكَاةَ هَذَا قَالَتْ لَا قَالَ أَيَسْرُكِ أَنْ يُسَوِّرَكِ اللَّهُ بِهِمَا يَوْمَ الْقِيَامَةِ سِوَارَيْنِ مِنْ نَارٍ قَالَ فَخَلَعَتْهُمَا فَأَلْقَتْهُمَا إلى النبي صلى الله عَلَيْهِ وَسَلَّمَ وَقَالَتْ هُمَا لِلَّهِ عَزَّ وَجَلَّ وَلِرَسُولِهِ (ابوداود
"இரண்டு பெண்கள் தங்கக் காப்புகளை அணிந்த நிலையில் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் வந்தனர். நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள், 'இதற்கான ஜகாத்தை நீங்கள் கொடுத்துவிட்டீர்களா?' என்று கேட்டார்கள். அவர்கள் 'இல்லை' என்றனர். அதற்கு நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள், 'மறுமை நாளில் அல்லாஹ் உங்களுக்கு நெருப்பினால் ஆன இரண்டு காப்புகளை அணிவிப்பதை நீங்கள் விரும்புவீர்களா?' என்று கேட்டார்கள். உடனே அவர்கள் அந்த நகைகளைக் கழற்றி நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் கொடுத்துவிட்டார்கள்."நூல்: அபூ தாவூத்
ஷாஃபி மத்ஹபில் இல்லை .ஜகாத் இல்லை என்பவர்களின் கருத்து (ஷாஃபி, மாலிகி, ஹன்பலி மத்ஹப்கள்)
ليس في الحُلِيِّ زكاةٌ
ஜாபிர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கும் அணிகலன்களுக்கு (நகைகளுக்கு) ஜகாத் இல்லை.” நூல் : ஹாகிம்.
ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா
عَنْ نَافِعٍ أَنَّ عَائِشَةَ زَوْجَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَتْ تَلِي بَنَاتِ أَخِيهَا يَتَامَى فِي حِجْرِهَا لَهُنَّ الْحُلِيُّ فَلَا تُخْرِجُ مِنْ حُلِيِّهِنَّ الزَّكَاةَ.
"ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்கள், தனது பொறுப்பில் இருந்த (அனாதைகளான) தன் சகோதரரின் பெண் குழந்தைகளுக்குப் பொறுப்பேற்று வளர்த்து வந்தார்கள்.
அந்தப் பெண் குழந்தைகளுக்கு அணிகலன்கள் (நகைகள்) இருந்தன. ஆனால், ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்கள் அந்த நகைகளிலிருந்து ஜகாத் கொடுக்கவில்லை." (நூல்: முஅத்தா மாலிக், கிதாபுஸ் ஜகாத், ஹதீஸ் எண்: 585)
கடன் கொடுத்து இருக்கார். இவர் ஜகாத் கொடுக்குனுமா?
நீங்கள் கொடுத்த கடனை வாங்கியவர் நல்லவர், அவரிடம் பணம் இருக்கிறது, கேட்டால் தந்துவிடுவார் என்ற நம்பிக்கை இருந்தால்:
அந்தப் பணத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் நீங்கள் ஜகாத் கொடுக்க வேண்டும்.
ஏனெனில், அந்தப் பணம் உங்களுடையது, அது உங்களிடம் இல்லை என்றாலும் அதன் உரிமை உங்களிடமே உள்ளது.
குறிப்பு: இதை ஒவ்வொரு ஆண்டும் உங்கள் மற்ற சொத்துக்களுடன் சேர்த்து கணக்கிட்டுக் கொடுக்கலாம். அல்லது, பணம் கையில் வந்த பிறகு கடந்த ஆண்டுகளைக் கணக்கிட்டும் மொத்தமாக கொடுக்கலாம் (ஆனால் ஒவ்வொரு ஆண்டும் கொடுப்பதே சிறந்தது).
திரும்பக் கிடைப்பது சந்தேகமான கடன் (Weak Debt)
வாங்கியவர் ஏழை, அவரிடம் பணம் இல்லை, அல்லது அவர் கடனைத் தர மறுக்கிறார் (தருவார் என்ற நம்பிக்கையே இல்லை) என்றால்:
அந்தத் தொகைக்கு நீங்கள் இப்போதைக்கு ஜகாத் கொடுக்கத் தேவையில்லை.
எதிர்காலத்தில் எதிர்பாராத விதமாக அந்தப் பணம் உங்கள் கைக்கு வந்தால், அப்போது முதல் அந்தப் பணத்திற்கு ஜகாத் கடமையாகும். (சில அறிஞர்கள் கைக்கு வந்த பிறகு கடந்த ஒரு ஆண்டிற்கான ஜகாத்தை மட்டும் கொடுத்தால் போதும் என்கின்றனர்).
வாடகை வீடு ,கடைக்கு கொடுத்த அட்வான்ஸுக்கு ஜகாத் கொடுக்க வேண்டுமா?
வாடகை அட்வான்ஸ் என்பது நீங்கள் வீட்டு உரிமையாளரிடம் கொடுத்த ஒரு கடன் போன்றது. இது குறித்து மூன்று கருத்துக்கள் உள்ளன:
1. ஜகாத் கடமையில்லை (பெரும்பான்மை அறிஞர்களின் கருத்து)
வாடகை அட்வான்ஸ் என்பது உங்கள் கையில் இல்லாத, உங்களால் உடனடியாகப் பயன்படுத்த முடியாத ஒரு சொத்து. எனவே, இதற்கு ஜகாத் கடமையில்லை என்பது பல அறிஞர்களின் தீர்ப்பு.
ஆதாரம்: "நிச்சயமாக ஜகாத் என்பது கையில் இருக்கும் (அதிகாரத்தில் இருக்கும்) செல்வத்திற்கே ஒழிய, கையில் இல்லாத செல்வத்திற்கு அல்ல." (நூல்: அல்-மப்சூத், இமாம் ஸரக்ஸி)
அட்வான்ஸ் தொகை என்பது ஒரு 'பிணையாக' (Security) இருப்பதால், ஒப்பந்தம் முடியும் வரை அதை நீங்கள் திரும்பப் பெற முடியாது. உங்கள் முழுமையான கட்டுப்பாட்டில் இல்லாத செல்வத்திற்கு ஜகாத் இல்லை என்பது ஹனபி மற்றும் ஷாபி மத்ஹபுகளில் ஒரு வலுவான கருத்தாகும்.
2. திரும்பப் பெற்ற பிறகு ஜகாத் (இமாம் அபூ ஹனிபா (ரஹ்) அவர்களின் கருத்து)
வாடகை அட்வான்ஸ் என்பது 'பலவீனமான கடன்' வகையைச் சார்ந்தது.
ஆதாரம்: இமாம் அபூ ஹனிபா (ரஹ்) அவர்களின் கூற்றுப்படி, ஒருவருக்குக் கிடைக்க வேண்டிய கடன் தொகை 'நிசாப்' அளவை எட்டி, அது அவர் கைக்கு வந்து சேர்ந்தால், அன்று முதல் அவருக்கு ஜகாத் கடமையாகும். (நூல்: ஹிதாயா, கிதாபுஸ் ஜகாத்)
நீங்கள் வீட்டை காலி செய்து, அட்வான்ஸ் தொகையைத் திரும்பப் பெற்ற பிறகு, அந்தத் தொகை நிசாப் அளவை விட அதிகமாக இருந்தால், அந்த ஆண்டின் ஜகாத் கணக்கில் அதைச் சேர்த்துக்கொள்ள வேண்டும். கடந்த காலங்களுக்குக் கொடுக்கத் தேவையில்லை.
3.கொடுத்தால் சிறந்தது (பேணுதலான கருத்து)
சில அறிஞர்கள் இதை 'டைன் கவி' (Strong Debt) அதாவது "உறுதியாகத் திரும்பக் கிடைக்கும் கடன்" என்று கருதுகின்றனர்.
ஆதாரம்: "ஒருவர் மற்றவரிடம் கொடுத்துள்ள கடன் திரும்பக் கிடைக்கும் என்று உறுதியாக இருந்தால், அவர் ஒவ்வொரு ஆண்டும் அதற்கு ஜகாத் கொடுக்க வேண்டும்." (நூல்: அல்-முத்தவன்னா, இமாம் மாலிக் (ரஹ்)
விலை மதிப்பு உள்ள கல் மாணிக்கம் மரகதம் வைரம் ஜகாத் உண்டா?
தங்கம் மற்றும் வெள்ளியைத் தவிர மற்ற விலையுயர்ந்த கற்கள் அலங்காரத்திற்காகவோ அல்லது அணிவதற்கோ பயன்படுத்தப்பட்டால், அவற்றிற்கு ஜகாத் கிடையாது.(நூல்: அல்-மப்சூத் (இமாம் ஸரக்ஸி),
வைரம், மாணிக்கம் போன்ற கற்களுக்கு ஒரே ஒரு சூழ்நிலையில் மட்டுமே ஜகாத் கடமையாகும்.
வியாபார நோக்கம் (Trade): நீங்கள் அந்தக் கற்களை விற்பனை செய்வதற்காக (Business Stock) வைத்திருந்தால், அவற்றின் சந்தை மதிப்பைக் (Market Value) கணக்கிட்டு, அதில் 2.5% ஜகாத் கொடுக்க வேண்டும்.
முதலீடு (Investment): வருங்காலத்தில் விலை கூடும்போது விற்று லாபம் ஈட்டலாம் என்ற நோக்கத்தில் வாங்கி வைத்திருந்தாலும், அது வியாபாரப் பொருளாகக் கருதப்பட்டு ஜகாத் கடமையாகும்.(நூல்: பதாவா ஷாமி,)
பயன் படுத்தும் பொருட்கள் மற்றும் வசிக்கும் வீட்டிற்கு ஜகாத் கொடுக்க வேண்டுமா?
சொந்த உபயோகப் பொருட்களுக்கு ஜகாத் இல்லை
ஒரு மனிதர் தனது அடிப்படைத் தேவைக்காகப் பயன்படுத்தும் வீடு, ஆடை, வாகனம் (கார், பைக்) மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களுக்கு ஜகாத் கிடையாது. அவை எவ்வளவு விலை உயர்ந்ததாக இருந்தாலும் சரியே.
ஆதாரம்: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
"ஒரு முஸ்லிம் வைத்திருக்கும் அவரது குதிரைக்கும், அவரது அடிமைக்கும் (அவரது பணிக்கும் தேவைப்படும் உடைமைகளுக்கும்) ஜகாத் கடமையில்லை."
(நூல்: புகாரி: )
இமாம் நவவீ (ரஹ்) அவர்கள் இந்த ஹதீஸிற்கு விளக்கம் அளிக்கும்போது, ஒருவருடைய அடிப்படைத் தேவைக்கான வீடு, ஆடை, வீட்டுச் சாமான்கள் மற்றும் வாகனங்கள் ஜகாத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டவை என்று குறிப்பிடுகிறார்கள்.
எந்த வகையான வீட்டிற்கு ஜகாத் உண்டு?
வீட்டை நீங்கள் எந்த நோக்கத்தில் வைத்திருக்கிறீர்கள் என்பதைப் பொறுத்து சட்டம் மாறும்
நீங்கள் குடியிருக்கும் வீடு இல்லை அது எவ்வளவு பெரிய பங்களாவாக இருந்தாலும் ஜகாத் கிடையாது.
வாடகைக்கு விடப்பட்ட வீடு இல்லை வீட்டின் மொத்த மதிப்பிற்கு ஜகாத் இல்லை. ஆனால் வீட்டிலிருந்து வரும் வாடகைப்பணம் உங்கள் சேமிப்பில் சேர்ந்து, அது 'நிசாப்' அளவை எட்டினால், அந்தப் பணத்திற்கு மட்டும் 2.5% ஜகாத் உண்டு.
விற்பனைக்காக வாங்கிய வீடு (Real Estate) உண்டு ஒரு வீட்டை லாபத்திற்கு விற்க வேண்டும் என்ற எண்ணத்தில் (Investment/Trading) வாங்கியிருந்தால், அதன் அப்போதைய சந்தை மதிப்பில் 2.5% ஜகாத் கொடுக்க வேண்டும். நூல்: பதாவா ஷாமி,
ஒவ்வொரு வருடமும் ஜகாத் கொடுக்க வேண்டுமா?
فَإِذَا كَانَتْ لَكَ مِائَتَا دِرْهَمٍ، وَحَالَ عَلَيْهَا الْحَوْلُ، فَفِيهَا خَمْسَةُ دَرَاهِمَ، وَلَيْسَ عَلَيْكَ شَيْءٌ – يَعْنِي – فِي الذَّهَبِ حَتَّى يَكُونَ لَكَ عِشْرُونَ دِينَارًا، فَإِذَا كَانَ لَكَ عِشْرُونَ دِينَارًا، وَحَالَ عَلَيْهَا الْحَوْلُ، فَفِيهَا نِصْفُ دِينَارٍفَمَا زَادَ، فَبِحِسَابِ ذَلِكَ ،
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: உனக்கு 200 திர்ஹங்கள் இருந்து, அதற்கு 1 வருடம் நிறைவடைந்து விட்டால், அதில் 5 திர்ஹங்கள் (ஸகாத் கடமையாகும்). 20 தீனார் ஆகும் வரை (தங்கத்தில் ஸகாத்) கடமையில்லை. 20 தீனார் இருந்து, அதில் 1 வருடம் நிறைவடைந்து விட்டால், அரை தீனார் (ஸகாத்) ஆகும். இந்தக் கணக்கின் அடிப்படையில், இதற்கு அதிகமானவைகளுக்கு கணக்கிட வேண்டும். நூல்: அபூ தாவூத் 1573
இந்த ஹதீஸ் அடிப்படையில் ஒவ்வொரு வருடமும் ஜகாத் கொடுக்க வேண்டும் என்று இமாம்கள் சொல்கிறார்கள்.
வெளிப்படையில் ஜகாத் கொடுத்தால் குறைந்த மாதிரி தெரியும்.
يَمۡحَقُ ٱللَّهُ ٱلرِّبَوٰاْ وَيُرۡبِي ٱلصَّدَقَٰتِۗ وَٱللَّهُ لَا يُحِبُّ كُلَّ كَفَّارٍ أَثِيمٍ [البقرة: 276]
அல்லாஹ் வட்டியை (அதில் எந்த பரக்கத்தும் இல்லாமல்) அழித்து விடுவான்; இன்னும் தான தர்மங்களை (பரக்கத்துகளைக் கொண்டு) பெருகச் செய்வான்; (தன் கட்டளையை) நிராகரித்துக் கொண்டிருக்கும் பாவிகள் எவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை (அல்குர்ஆன் : 2:276.
ஜகாத் சரியாக நிறைவேற்றினால் ஏழைகள் இருக்க மாட்டார்கள்
முஆத் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் யமன் நாட்டின் ஆளுனராக அனுப்பியதிலிருந்து மிக சிறப்பாக தன் பொறுப்பை நிறைவேற்றினார்கள். குறிப்பாக ஜகாத்தை வசூலிப்பதில், வினியோகிப்பதில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இருக்கும் வரையிலும், பின்பு அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் ஆட்சிக்காலத்திலும், பின்பு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் ஆட்சிக்காலத்திலும் சிறப்பாக செயல்பட்டார்கள்.
ஒரு முறை யமன் நாட்டிலிருந்து ஜகாத் தொகையின் மூன்றில் ஒரு பகுதியை உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு அதாவது மத்திய அரசுக்கு அனுப்புகிறார்கள். உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அதை வாங்க மறுத்து நான் உங்களை ஜகாத், ஜிஸ்யா வசூலித்து இங்கு அனுப்பச் சொல்லவில்லை. அங்குள்ள ஏழை மக்களிடம் விநியோகம் செய்யவே கூறினேன் என்றார்கள்.
அதற்கு முஆத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் இங்கு ஜகாத் வாங்க வேண்டிய நிலையில் உள்ளவர்களுக்கு கொடுத்தது போக மீதியைத் தான் அனுப்பினேன் என்றார்கள். அடுத்த ஆண்டு முஆத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் யமனில் வசூலான ஜகாத்தில் பாதியை உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு அனுப்புகிறார்கள்.
மீண்டும் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஆட்சேபிக்க, முஆத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் முன்பு சொன்ன பதிலையே இப்போதும் கூறினார்கள். மூன்றாவது ஆண்டிலோ யமனில் வசூலான ஜகாத் முழுவதையும் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு அனுப்புகிறார்கள். இம்முறை உமர் ரலியல்லாஹு அன்ஹு ஆட்சேபித்த போது முஆத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் எழுதிய பதில் என்ன தெரியுமா இங்கு ஜகாத் வாங்க வேண்டிய நிலையில் எவரும் இல்லை.- கிதாபுல் அம்வால், முங்னீ
ஐகாத் கொடுக்காதவர்களுக்கு உலகிலும் தண்டனை உண்டு
قال رسول الله صلى الله عليه وسلم: "مَا تَلِفَ مَالٌ فِي بَرٍّ وَلَا بَحْرٍ إِلَّا بِحَبْسِ الزَّكَاةِ"
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: "தரையிலோ அல்லது கடலிலோ ஒரு செல்வம் அழிந்து போகிறது என்றால், அது ஜகாத் கொடுக்கப்படாமல் தடுக்கப்பட்டதாலேயே தவிர வேறில்லை.". (நூல்: தபரானி )
ஜகாத் என்னும் சொல்லுக்கு பரிசுத்தமாக்குதல், வளருதல் என்று பொருள். ஒரு பொருளுக்குரிய ஜகாத்தை நிறைவேற்றுவதன் மூலம் அப்பொருள் அழிவை விட்டும் பாதுகாக்கப்படும். மேலும் வளரும். பெருகும். எந்தப் பொருளுக்குரிய ஜகாத்தை நிறைவேற்றவில்லையோ அப்பொருள் பரிசுத்தமாகாது. கொடுக்க வேண்டிய ஜகாத் தொகையை விட அதிகமாக பல்வேறு வழிகளில் அப்பொருள் பிடுங்கப்படும் .
ஜகாத் கொடுக்காதவர்களுக்கு மறுமையிலும் தண்டனை உண்டு.
அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்:
"எவர்கள் தங்கம் மற்றும் வெள்ளியைச் சேமித்து வைத்துக்கொண்டு அவற்றை அல்லாஹ்வின் பாதையில் செலவிடவில்லையோ, அவர்களுக்கு நோவினை செய்யும் தண்டனை உண்டு என்று (நபியே!) நீர் எச்சரிக்கை செய்வீராக! நரக நெருப்பில் அவை பழுக்கக் காய்ச்சப்பட்டு, அவற்றைக் கொண்டு அவர்களுடைய நெற்றிகளிலும், விலாப்புறங்களிலும், முதுகுகளிலும் சூடு போடப்படும். (அப்போது அவர்களிடம்) 'இதுதான் நீங்கள் உங்களுக்காகச் சேமித்து வைத்தது; ஆகவே நீங்கள் சேமித்து வைத்ததைச் சுவையுங்கள்' (என்று கூறப்படும்)." (அல்குர்ஆன் 9:34, 35)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
"அல்லாஹ் யாருக்காவது செல்வத்தைக் கொடுத்து, அவர் அதற்குரிய ஜகாத்தைக் கொடுக்கவில்லை என்றால், மறுமை நாளில் அந்தச் செல்வம் 'ஷுஜாஉன் அக்ரா' (தலையில் முடிகள் இல்லாத/நச்சுப்பையுள்ள) ஒரு பெரும் விஷப்பாம்பாக மாற்றப்படும். அந்தப் பாம்பிற்கு இரண்டு கரிய புள்ளிகள் இருக்கும். அது அந்த மனிதனின் கழுத்தில் மாலையாகச் சுற்றிக்கொண்டு, அவனது இரு தாடைகளையும் கவ்விப் பிடித்துக் கொண்டு சொல்லும்: 'நான்தான் உன்னுடைய செல்வம்! நான்தான் நீ சேமித்து வைத்த புதையல்!'” நூல்: புகாரி
அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் உறுதி
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மறைந்ததும், அரேபியாவின் சில கோத்திரத்தினர் இஸ்லாத்தை விட்டு வெளியேறினர் (முர்தத்). இன்னும் சிலர், "நாங்கள் தொழுகிறோம், ஆனால் ஜகாத் கொடுக்க மாட்டோம். அது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு மட்டுமே நாங்கள் கொடுத்து வந்த வரி" என்று வாதிட்டனர்.
நிலைமை மிக மோசமாக இருந்ததைக் கண்ட உமர் (ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் போன்ற மூத்த தோழர்கள், "இப்போதுதான் ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மறைந்திருக்கிறார்கள், மக்கள் குழப்பத்தில் உள்ளனர். எனவே, ஜகாத் விஷயத்தில் இப்போது இவ்வளவு கண்டிப்பு காட்ட வேண்டாம். அவர்களும் 'லா இலாஹ இல்லல்லாஹ்' சொல்கிறார்களே!" என்று ஆலோசனைக் கூறினார்கள்.
உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் கருத்தைக் கேட்ட அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் உணர்ச்சி பொங்க ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை அறிவித்தார்கள்:
"واللهِ لأُقَاتِلَنَّ مَنْ فَرَّقَ بَيْنَ الصَّلَاةِ وَالزَّكَاةِ”
"அல்லாஹ்வின் மீது சத்தியமாக! தொழுகைக்கும் ஜகாத்திற்கும் இடையே பிரிவினை செய்பவருடன் (ஒன்றை ஏற்று மற்றொன்றை மறுப்பவருடன்) நான் கண்டிப்பாகப் போர் செய்வேன். ஏனெனில், செல்வம் உள்ளவர்கள் மீது ஜகாத் என்பது அதன் உரிமையாகும்."
மேலும் அவர்கள் தொடர்ந்தார்கள்: "அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அவர்கள் கொடுத்து வந்த ஓர் ஒட்டகக் குட்டியை - அல்லது ஒரு கயிற்றை - கொடுக்க மறுத்தாலும் கூட, அதை வாங்குவதற்காக நான் அவர்களுடன் போர் புரிவேன்!" நூல்: புகாரி
அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் இந்த உறுதியான பேச்சைக் கேட்ட உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்: "அல்லாஹ் அபூபக்கரின் இதயத்தைப் போருக்காகத் திறந்துவிட்டான் என்பதை நான் உணர்ந்து கொண்டேன். அதுவே சத்தியம் என்பதையும் நான் அறிந்து கொண்டேன்.”
1.மறுமையில் தரப்படும் தண்டனைகள்
وَلَا يَحْسَبَنَّ الَّذِينَ يَبْخَلُونَ بِمَا أَتَاهُمُ اللَّهُ مِنْ فَضْلِهِ هُوَ خَيْرًا لَهُمْ بَلْ هُوَ شَرٌّ لَهُمْ سَيُطَوَقُونَ مَا بَخِلُوا بِهِ يَوْمَ الْقِيَامَةِ [آل عمران: 180]
"அல்லாஹ் தன் அருளினால் தங்களுக்குக் கொடுத்திருப்பவற்றில் கஞ்சத்தனம் செய்பவர்கள், அது தங்களுக்கு நல்லது என்று எண்ண வேண்டாம். அவ்வாறன்று! அது அவர்களுக்குத் தீமையே ஆகும். அவர்கள் கஞ்சத்தனம் செய்து (சேகரித்து) வைத்தவை எல்லாம் மறுமை நாளில் அவர்கள் கழுத்தில் மாலையாக (சுற்றிக் கொள்ளும்) நெருக்கப்படும்..." (அல்குர்ஆன், சூரா ஆலு இம்ரான்: 180)
وَوَيْلٌ لِلْمُشْرِكِينَ الَّذِينَ لَا يُؤْتُونَ الزَّكَاةَ (فصلت: 16.7
"...இணைவைப்பவர்களுக்கு (முஷ்ரிக்குகளுக்கு) கேடுதான்! அவர்கள் எத்தகையோரென்றால், ஜகாத்தைக் கொடுக்கமாட்டார்கள்; இன்னும் அவர்கள் மறுமையை நிராகரிப்பவர்கள்." (அல்குர்ஆன், சூரா புஸ்ஸிலத்: 6-7)
وقال: وَالَّذِينَ يَكْفِرُونَ الذَّهَبَ وَالْفِضَةَ وَلَا يُنْفِقُونَهَا فِي سَبِيلِ اللَّهِ فَبَشِّرْهُمْ بِعَذَابٍ أَلِيمٍ * يَوْمَ يُحْمَى عَلَيْهَا فِي نَارِ جَهَنَّمَ فَتُكوَى بِهَا جِبَاهُهُمْ وَجُنُوبُهُمْ وَظُهُورُهُمْ هَذَا مَا كَنَرْتُمْ لِأَنفُسِكُمْ فَذُوقُوا مَا كُنتُمْ تَكْثِرُونَ [التوبة: 34 35]
"அந்த (மறுமை) நாளில் அவை நரக நெருப்பில் பழுக்கக் காய்ச்சப்பட்டு, அவற்றைக் கொண்டு அவர்களுடைய நெற்றிகளிலும், விலாப்புறங்களிலும், முதுகுகளிலும் சூடு போடப்படும். (அப்போது அவர்களிடம்) 'இதுதான் நீங்கள் உங்களுக்காகச் சேமித்து வைத்தது; ஆகவே நீங்கள் சேமித்து வைத்ததைச் சுவையுங்கள்' (என்று கூறப்படும்)."(அல்குர்ஆன், சூரா அத்தவ்பா: 34-35)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:-
ஒட்டகத்துக்கான ஜகாத்தை தரா விட்டால் ஜகாத்தாக தர வேண்டிய அந்த ஒட்டகம் பிரமாண்டமான உருவம் தரப்பட்டு விசாலமான இடத்தில் அமர்ந்த படி அவன் செல்லும் பாதையை அடைத்துக் கொண்டு வழி மறிக்கும். தன் கால்களால் அவனை மிதிக்கும். மாட்டுக்கான ஜகாத்தை தரா விட்டால் அந்த மாட்டுக்கு பிரமாண்டமான உருவம் தரப்பட்டு விசாலமான இடத்தில் அமர்ந்த படி அவன் செல்லும் பாதையை அடைத்துக் கொண்டு வழி மறிக்கும். அந்த மாடு தன் கொம்பினால் அவன் வயிற்றைக் குத்திக் கிழிக்கும். தன் கால்களாலும் அவனை மிதிக்கும். ஆட்டுக்கான ஜகாத்தை தரா விட்டால் அந்த ஆட்டுக்கு பிரமாண்டமான உருவம் தரப்பட்டு விசாலமான இடத்தில் அமர்ந்த படி அவன் செல்லும் பாதையை அடைத்துக் கொண்டு வழி மறிக்கும். அந்த ஆடு தன் கொம்பினால் அவன் வயிற்றைக் குத்திக் கிழிக்கும். உலகில் அவன் தர வேண்டிய ஜகாத் ஆடு அல்லது மாடு உலகில் கொம்பு இல்லாததாக இருந்தாலும் மறுமையில் கொம்பு உருவாக்கப்படும். தங்கம். வெள்ளி, பணத்தை சேமித்து வைத்தவருக்கு அவைகள் மிகப்பெரும் பாம்பாக உருவாக்கப்படும். அது தன் வாயைத் திறந்த படி அவனை துரத்தும். அவன் ஓடுவான். அந்தப் பாம்பு என்னைக் கண்டு ஏன் ஓடுகிறாய் நான் தான் நீ ஆசையாக சேர்த்து வைத்த சேமிப்பு என்று சொல்லும். வேறு வழியின்றி அவன் தன் கையை அதன் வாய்க்குள் செலுத்துவான். அது அவனது கைகளை மாடு அசைபோடுவது போன்று மெல்லும். இதுவும் தண்டனை.
இது அல்லாமலும் தண்டனை உண்டு ஜகாத் தரப்படாத தங்கம், வெள்ளி ஆகியவை நரக நெருப்பில் பழுக்க காய்ச்சி சூடு போடப்படும் என குர்ஆன் கூறுகிறது.
ஜகாத் கொடுக்காதவர்களுக்கு உலகிலும் மறுமையிலும் பல வகை தண்டனைகள் வழங்கப்படும்.
ஒரு பொருளின் ஜகாத்தை நிறைவேற்றி விட்டால் அப்பொருளின் தீங்கை விட்டும் நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும். இல்லா விட்டால் சேர்த்து வைத்த அந்தப் பொருளே நமக்கு ஆபத்தாக அமைந்து விடும்.
ஜகாத் யாருக்குக் கொடுக்கக்கூடாது?
ஜகாத் யாருக்குக் கொடுக்க வேண்டும் என்பது எவ்வளவு முக்கியமோ, அதே அளவு யாருக்குக் கொடுக்கக்கூடாது என்பதும் முக்கியமானது. தகுதியற்றவர்களுக்குக் கொடுத்தால் ஜகாத் நிறைவேறாது.
1. மிக நெருங்கிய உறவினர்கள் (இரத்த பந்தம்)
உங்கள் செல்வத்தின் மூலம் பராமரிக்கப்பட வேண்டிய கடமை யாருக்கெல்லாம் இருக்கிறதோ, அவர்களுக்கு ஜகாத் கொடுக்கக்கூடாது.
* பெற்றோர்: தந்தை, தாய், பாட்டனார், பாட்டி.
* பிள்ளைகள்: மகன், மகள், பேரன், பேத்தி.
* (நூல்: பதாவா ஷாமி, தொகுதி 2, பக்கம் 346)
2. கணவன் மற்றும் மனைவி
* கணவன் மனைவிக்கு: மனைவிக்குச் செலவு செய்வது கணவனின் கடமை (நஃபகா) என்பதால், கணவன் தன் மனைவிக்கு ஜகாத் கொடுக்க முடியாது.
* மனைவி கணவனுக்கு: இதில் கருத்து வேறுபாடு இருந்தாலும், ஹனபி மத்ஹபின்படி மனைவி தன் கணவனுக்கு ஜகாத் கொடுக்கக்கூடாது. (நூல்: ஹிதாயா, கிதாபுஸ் ஜகாத்).
3. வசதி படைத்தவர்கள் (செல்வந்தர்கள்)
யாரிடம் 'நிசாப்' அளவு (சுமார் 87.48 கிராம் தங்கம் அல்லது அதன் மதிப்பு) செல்வம் இருக்கிறதோ, அவர்களுக்கு ஜகாத் கொடுக்கக்கூடாது.
* (நூல்: ஸஹீஹ் புகாரி, "நிச்சயமாக ஜகாத் செல்வந்தர்களிடமிருந்து வாங்கப்பட்டு ஏழைகளுக்கு வழங்கப்படும்" ).
4. பனூ ஹாஷிம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வம்சா வழியினர்
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் குடும்பத்தைச் சார்ந்தவர்களுக்கு (ஸையதுகள்) ஜகாத் கொடுப்பது ஹராம். இது அவர்களுக்கு வழங்கப்படும் கண்ணியம்.
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: "நிச்சயமாக ஜகாத் என்பது மக்களின் அழுக்காகும். அது முஹம்மதுக்கும், முஹம்மதின் குடும்பத்தாருக்கும் அனுமதிக்கப்பட்டதல்ல." (நூல்: புகாரி)
5. முஸ்லிம் அல்லாதவர்கள்
ஜகாத் என்பது முஸ்லிம்களில் உள்ள ஏழைகளுக்கு மட்டுமே உரியது. (பொதுவான தர்மங்களை - ஸதகா - முஸ்லிம் அல்லாதவர்களுக்கு வழங்கலாம்).
* (நூல்: பதாவா ஆலம்கீரி, தொகுதி 1, பக்கம் 188).
6. மசூதி கட்டுதல் அல்லது பொதுப் பணிகள்
ஜகாத் என்பது ஒரு ஏழையை அந்தப் பணத்திற்கு உரிமையாளராக ஆக்குவதாகும் (Tamleek). எனவே:
* மசூதி கட்டுவதற்கு, கிணறு தோண்டுவதற்கு, கபனை அடக்கம் செய்ய அல்லது இறந்தவரின் கடனை அடைக்க ஜகாத் பணத்தைப் பயன்படுத்தக்கூடாது.
* (நூல்: பதாவா காஜிகான்).
ஒரு முக்கியமான குறிப்பு:
உங்களுடைய சகோதரர், சகோதரி, மாமா, அத்தை போன்ற உறவினர்கள் ஏழைகளாக இருந்தால், அவர்களுக்கு ஜகாத் கொடுப்பது இரண்டு மடங்கு நன்மையைத் தரும். ஒன்று ஜகாத் கொடுத்த நன்மை, மற்றொன்று உறவைப் பேணிய நன்மை. (நூல்: திர்மிதி, 658).
ஜகாத் யாருக்கு கொடுக்க வேண்டும்?
1)ஏழைகள் (Faqir):
மிகவும் கஷ்டப்படும் நிலையில் உள்ளவர்கள்.பக்கீர் (ஜகாத் கடமையாகும் நிஸாபு அளவு பொருளாதார வசதி இல்லாதவர்
2)ஏழைகளான பயணிகள் (Miskīn):
சொந்த ஊருக்குத் திரும்பப் போகும் வழியில் பணம் இல்லாமல் தவிப்பவர்கள்.மிஸ்கீன் (தனக்கென எதுவுமில்லாத) ஏழை
3)தன்னிச்சையான கடன்பட்டவர்கள் (Amil):கடன்பட்டவர்கள், ஆனால் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாதவர்கள்.
கடனாளி (ஜகாத் கடமையாகும் நிசாபு அளவு பொருளாதாரம் உள்ளவர் எனினும் கடன்பட்டிருப்பவர். கடனை
அடைத்தால் நிசாபின் அளவை விடப் பொருளாதாரம் குறைந்து விடும் என்ற நிலையிலுள்ளவர்.
4)அடிமைகளை மீட்க விரும்புவோர் (Mu'allaf):அடிமைகளாக இருப்பவர்கள் தங்களை மீட்க விரும்புபவர்கள்.
5)இஸ்லாம் மன மாறியவர்கள் (Mu'allaf):
இஸ்லாத்துக்கு வந்தவர்கள்.
6) வழிப்போக்கர் குடும்பத்தினர் (Ibn-Sabil):ஏழை மற்றும் தகுதிவாய்ந்த குடும்பத்தினர்.பயணி (தமது ஊரில் பொருளாதாரம் உள்ளவர், பயணத்தில் பொருளாதாரத்தை இழந்தவர் அல்லது செலவழித்தவர்.
7)இஸ்லாமிய சமூகத்தின் நலனுக்காக செலவிடப்படுபவர்கள் (Sabil):இறைப் பாதையில் இருப்பவர் (போர் புரிபவர், ஹஜ் கடமையை நிறைவேற்றுபவர்)
இறைப் பாதையில் இருப்பவர் (போர் புரிபவர், ஹஜ் கடமையை நிறைவேற்றுபவர்)
இஸ்லாமிய சமூகத்தின் நலனுக்காக செலவிடப்படுபவர்கள்.
8)ஜகாத் சேகரிப்பவர்கள் (Amil):
ஜகாத் சேகரிப்பவர்கள்.
ஆகிய இவர்களுக்கு ஜகாத் பணத்தைக் கொடுக்க வேண்டும்.
ஒருவருடைய ஜகாத் தொகையை, ஒரே நபருக்கு அனைத்தையும் கொடுக்கலாம். பல நபர்களுக்குப் பிரித்தும் கொடுக்கலாம். மேற்கண்டவர்கள் அல்லாமல், விடுதலைச் சீட்டு வழங்கப்பட்ட அடிமை, ஜகாத் வசூலிப்பவர் ஆகியோர் நமது நாட்டில் வழமையில் இல்லை. இவர்கள் வழமையில் உள்ள நாட்டில் அவர்களுக்கும் ஜகாத் தொகையைக் கொடுக்கலாம்.
ஜகாத் என்பது வெறும் நிதி பரிமாற்றம் அல்ல; அது ஒரு முஃமினின் ஈமானை (நம்பிக்கையை) உறுதிப்படுத்தும் சோதனையாகும். "ஜகாத்" என்ற சொல்லின் பொருளுக்கேற்ப, அது நம்முடைய செல்வத்தைத் தூய்மைப்படுத்துகிறது, நம்முடைய உள்ளத்தில் உள்ள பேராசையை அகற்றுகிறது மற்றும் சமூகத்தில் உள்ள ஏழைகளின் கண்ணீரைத் துடைக்கிறது.
ஜகாத் கொடுப்பவர் ஓத வேண்டிய துஆ:
ஜகாத்தை வழங்கும்போது உள்ளத்தால் 'நிய்யத்' செய்வது கட்டாயமாகும். மேலும் இந்தத் துஆவை ஓதுவது நன்மையாகும்:
اللَّهُمَّ اجْعَلْهَا مَغْنَمًا، وَلَا تَجْعَلْهَا مَغْرَمًا
"யா அல்லாஹ்! இந்த ஜகாத்தை எனக்கு லாபமாகவும் (மறுமை நன்மையாகவும்) ஆக்குவாயாக; இதை எனக்கு ஒரு நஷ்டமாக (வீண் செலவாக) ஆக்கிவிடாதே." (நூல்: இப்னு மாஜா)
"யா அல்லாஹ்! எங்கள் செல்வத்தை ஹலாலான முறையில் ஈட்டவும், அதில் ஏழைகளுக்குரிய பங்கை முறையாகக் கணக்கிட்டுக் கொடுக்கவும் எங்களுக்குத் தௌஃபீக் செய்வாயாக. ஜகாத் கொடுக்காதவர்களுக்கு நீ எச்சரித்துள்ள மறுமையின் கொடிய தண்டனைகளிலிருந்து எங்களைக் காத்தருள்வாயாக. எங்கள் செல்வத்திலும், வாழ்விலும் பரகத் செய்வாயாக. ஆமீன்.
தொகுத்தவர்.
மவ்லவி B.முஹம்மது ராஃபி ரஷீதி.
தலைமை இமாம். மஸ்ஜிதே முபாரக் கிருஷ்ணாம்பேட்டை அரக்கோணம்.
Cell : +91 90949 86824.
முந்தைய பதிவுகள் வாசிக்க 👇 கிளிக் செய்யவும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக