அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…
எனது பெயர்………….
நான் ஒரு முஸ்லிம் இடம் எந்தெந்த பண்புகள் இருக்கக்கூடாது என்பதை பற்றி கூற இங்கு வந்துள்ளேன்.
அல்லாஹ்வின் நல்லடியார்களே நாம்
பிறர் வீட்டில் அனுமதி பெறாமல், உள்ளே நுழைவது கூடாது.
கிப்லா திசையில் கால் நீட்டி உட்காருவதோ, கால் நீட்டி படுப்பதோ கூடாது.
ஒலு இல்லாமல் குர்ஆன் ஷரீபை தொடுவது கூடாது.
பிறர் பொருளை அனுமதியின்றி பயன்படுத்தக்கூடாது.
கிப்லா திசையை நோக்கி எச்சில் துப்பக்கூடாது.
கழிப்பறையில் இருந்துகொண்டு பேசக்கூடாது.
விருந்து உண்ண சென்றால் நீண்டநேரம் அங்கேயே தங்கி இருக்கக்கூடாது.
உள் பள்ளியில் உலக காரியங்களைப் பேசுவது கூடாது.
ஆண்கள் கணுக்காலுக்குக் கீழ் (தரையில் படும்படி) கீழாடை உடுத்தக் கூடாது.
பிறரது பொருட்களை அவர்களின் அனுமதியின்றி பயன்படுத்துவது கூடாது.
பிறருக்கு செய்த உதவிகளை சொல்லிக் காட்டக்கூடாது.
மற்றவர்கள் பேசுவதை ஒட்டுக் கேட்பது கூடாது.
நகத்தைப் பல்லில் கடிப்பது கூடாது.
ஏழைகளின் ஏழ்மையை சுட்டிக்காட்டி குறைவாகப் பேசக்கூடாது.
யாருடைய ஊனத்தையும் கேலி செய்யக்கூடாது.
ஒருவருடைய பாவத்தைப் பகிரங்கப்படுத்தக் கூடாது.
இப்படிப்பட்ட கெட்ட பண்புகளை விட்டு வல்லோன் அல்லாஹ் நம் அனைவர்களையும் பாதுகாப்பானாக.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
பழைய குறிப்புகள் வாசிக்க 👇 கிளிக் செய்யவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக