வெள்ளி, 13 டிசம்பர், 2024

பொண்ணு பாருங்க.. (உரையாடல்)

 

காதர் : வாங்க தரகர் நம்ம பையனுக்கு பொண்ணு ஒன்னு பார்க்கனும்


தரகர் : என்ன காதர் பாய் பாத்திட்டா போச்சி அது சரி ஒங்க பையன் என்ன பன்னுறான்


காதர் : என்ன அப்படி கேட்டுடிங்க என் பையன் (VIP யா இருக்கான்.


தரகர் : என்ன உங்க பையன் VIP யா VIP னா என்னங்க


காதர் : VIP னா வேலையில்லா பட்டதாரி


தரகர் :இதத்தான் இவ்வளவு பெருமையா சொல்லுரீங்களா


காதர் : அதவிடுய்யா பையனுக்கு பெரிய இடமா பார்க்கனும்.


தரகர் : நம்ம ஊரு தண்ணி டேங் ரொம்ப பெருசு பாப்போமா…


காதர்: யோவ் பெருசுனா பசையுள்ள ஆளு என்று அர்த்தம்


தரகர் : ஓ… பசையுள்ள பார்ட்டி இவன் தான் வேலையில்லாம போஸ்டர் ஒட்டிட்டு அலையிரான் ஓகே வா


காதர் : பசையுள்ள பார்டின்னா பணக்காரன் வீடு என்று அர்த்தம்.


தரகர் :புரிஞ்சிரிச்சி பார்த்துட்டா போச்சு


காதர் : தரகரே சில கண்டிசன் இருக்கு


தரகர் : உன் பையனுக்கு பொண்ணுகுடுக்கறதே அதிசயம் அதிலே கண்டீசன் வேறயா.


காதர் : என்னய்யா முனங்குற


தரகர் : ஒன்னுமில்ல நீங்க மேல சொல்லுங்க


காதர் : ரொம்ப வேண்டாம் 2 லட்சம் ரொக்கம் 50 பவுன் நகை போடனும்


தரகர் : முதல்ல உள்ள போடனும்


காதர் : என்னய்யா புலம்பர


தரகர் : ஒன்றுமில்ல மேல் சொல்லுங்க


காதர் : பையனுக்கு4 பவுன் பிரேஸ்லட்டும்


 2 கிராம் மோதிரமும் போடணும்


தரகர் : வெள்ளிலயா போடனும்


காதர் : 


யோவ் எங்க அந்தஸ்துக்கு வெள்ளியா பிளாட்டினமே போடனும் போனா போதுன்னு தங்கத்துல போடச் சொல்லுறேன்


தரகர் : ஆமா ஆமா உங்க பையன்தான் VIP யாச்சே மேலே சொல்லுங்க


காதர் : பையனுக்கு KTM பைக் வாங்கி கொடுக்கனும்


தரகர் இவன் வீட்ல சைக்கிளே கிடையாது நீ கெட்ட கேட்டுக்கு பைக்கு வேறயா?


காதர் : என்னய்யா முனங்குற


தரகர் : ஒன்னுமில்ல நீங்க மேல சொல்லுங்க


ஃப்ரிட்ஜ் வாசிங் மெஷின் தரனும் இவ்வளவு தான் 


மண்டபத்தில் நிக்காஹ் நடக்கனும் ஆயிரம் பேருக்கு பிரியாணி போடனும் 


எங்க விட்டுக்கு 500 முறுக்கும் 200 குழல் பனியாரம் தரனும்


தரகர் ;மண்டபத்தில் கச்சேரி வைக்கனுமா?


காதர் ; கூடாது கூடாது மார்கத்துல அது ஹராம்


தரகர் : ஏண்டா. இதுக்கு முன்னால நீ கேட்டதெல்லாம் மார்கத்தில் ஹலாலா,


காதர் : என்னடா மரியாதை இல்லாம பேசுற


தரகர் ; உனக்கெதுக்குடா மரியாதை அல்லாஹ்வும் ரஸுலும் மஹர் கொடுத்து மணம் முடிக்க சொன்னா…


வரதட்சணை என்ற பிச்சை வாங்கி பையனுக்கு மணம் முடிக்க பாக்குற


 இனிமேல என் பையனுக்கு பொண்ணு பாருன்னு இந்த ஏரியா பக்கம் வந்த தோலைச்சிபுடுவேன் திரும்பி போய்கு


2 கருத்துகள்: