செவ்வாய், 17 டிசம்பர், 2024

தொழுகைக்கு அல்லாஹ் வழங்கும் சிறப்புகள்!

 

💞அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

எனது பெயர் ………


தொழுகைக்கு அல்லாஹ் வழங்கக்கூடிய சிறப்புகளை பற்றி சொல்ல நான் இங்கு வந்திருக்கிறேன். 


அன்பிற்கினிய அல்லாஹ்வின் நல்லடியார்களே….


💞தொழுகை என்பது இரு ஷஹாதாக்களுக்குப் பிறகு சிறந்த நற்செயலாகும்!


💞தொழுகை என்பது இஸ்லாத்தின் தூணாகும்!


💞தொழுகை என்பது ஈருலகிலும் பிரகாசமாகும்!


💞தொழுகை என்பது நமது சிறு பாவங்களுக்குப் பரிகாரமாகும்!


💞தொழுகை என்பது இறை நம்பிக்கைக்கு ஆதாரமாகும்!


💞தொழுகை என்பது ஈருலகிலும் வெற்றியாகும்!


💞தொழுகை என்பது பதவிகளை உயர்த்தும்!


💞தொழுகை என்பது நமது பாவங்களை மன்னிக்கும்!


💞தொழுகை என்பது சுவனத்தில் நுழைவிக்கும் மகத்தான நற்செயலாகும்!


💞சொர்க்கத்தின் திறவுகோல் தொழுகையாகும்!


💞 நாம் தொழுகைக்கு வைக்கும் ஒவ்வொரு எட்டும் நமது பாவங்களை மன்னிக்கும், சொர்க்கத்தில் நமது பதவிகளை உயர்த்தும்!


 💞தொழுகைக்கு நாம் வைக்கும் ஒவ்வாரு எட்டுக்கும் ஒரு நன்மை பதியப்படும்!


💞ஒரு தொழுகை மறு தொழுகை வரை நிகழ்ந்த சிறு பாவங்களுக்குப் பரிகாரமாகும்!


💞தொழுகை எதிர்பர்த்து அமர்ந்திருப்பவர் தொழுகையில் இருப்பவரைப் போன்றவர்!


💞தொழுகையை எதிர்பார்த்து அமர்ந்திருப்பவருக்கு வானவர்கள் பிரார்த்திக்கின்றனர்!


💞தனித்துத் தொழுபவரை விட கூட்டாகத் தொழுபவருக்கு 27 மடங்கு நன்மை உண்டு!


💞நற்செயல்களில் தொழுகையே நாளை மறுமையில் முதலில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்!


💞தொழுகையின் மூலம் நமது உள்ளம் அமைதி பெறும்!


💞தொழுகை என்பது நிம்மதியாகும்!


💞 தொழுகை என்பது கண் குளிர்ச்சியாகும்!


💞தொழுகை நமது நெருக்கடிகளை நீக்கும்!


💞தொழுகை என்பது நமது கவலைகளைப் போக்கும்!


💞தொழுகை என்பது பாதுகாப்பாகும்!


💞தொழுகை சீராகிவிடும் போது நமது மற்ற நற்செயல்கள் சீராகி விடும்!


💞தொழுகை நம்மை சுவனத்தில் நுழைவிக்கும் ஒப்பந்தமாகும்!


💞தொழுகை நாளை மறுமையில் இறைவன் முன்னால் நிற்கும் வணக்கமாகும்!


💞தொழுகை என்பது இறைவனுடன் நமக்காக உரையாடும் வணக்கமாகும்!


💞தொழுகை என்பது இறைவனுக்கு மிக நெருக்கமாக இருக்கும் வணக்கமாகும்!


💞தொழுகை என்பது நம்மை பாவங்களை விட்டுத் தடுக்கும்!


💞தொழுகை என்பது இறைவனிடம் உதவி தேடும் மகத்தான வணக்கமாகும்!


💞தொழுகை என்பது நபியவர்களின் இறுதி வஸிய்யத்தாகும்!


💞தொழுகை என்பது இஸ்லாத்தின் அடையாளமாகும்!


💞தொழுகை என்பது இறைநம்பிக்கைக்கும், நிறாகரிப்புக்கும் இடயிலுள்ள ஒப்பந்தமாகும்!


💞தொழுகை என்பது நயவஞ்சகத்ததை விட்டு காக்கும்!


💞தொழுகை என்பது வாழ்வாதாரத்தில் பரகத்தை ஏற்படுத்தும்!


💞தொழுகை என்பது நாளை மறுமையில் இறைவனைப் பார்க்கும் பாக்கியத்தைப் பெற்றுத் தரும்!

.

💞தொழுகை என்பது வெற்றியின் பால் விரைந்து வாருங்கள் என அழைக்கப்படும் வணக்கமாகும்!

.

💞தொழுகை மிஃராஜில் (வானுலகில்) கடமையாக்கப்பட்டதாகும்! 


💞தொழுகை என்பது பதட்டத்தைத் தடுத்து, மன உறுதியைத் தரும்!


💞தொழுகை நரகத்தை விட்டு காக்கும்!


💞தொழுகையின் இவ்வளவு சிறப்புகள்

உள்ளது!


என் அன்பிற்கு இனிய அல்லாஹ்வின் நல்லடியார்களே. 



💞எனவே ஐந்து நேரத் தொழுகையை ஆயுள் உள்ளவரை நாம் தொழுதால் அது நம்முடைய கடந்த காலத்தையும் சீராக்கிவிடும்! நம்முடைய எதிர் காலத்தையும் ஒளிமயமாக்கி விடும்!


அல்லாஹ் நம் அனைவருக்கும் இந்த உலகத்தில் உயிர் வாழும் காலம் எல்லாம் அல்லாஹ்வை நின்று வணங்கக்கூடிய மக்களாக வல்லோன் அல்லாஹ் நம்மையும் நமது குடும்பத்தினர்களையும் திகழ செய்வானாக. 


எனக்கு இங்கு பேச வாய்ப்பளித்த ஹஸ்ரத் அவர்களுக்கும் உங்களுக்கும் சலாம் கூறி விடைபெறுகிறேன் 


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ.


பழைய குறிப்புகள் வாசிக்க 👇 கிளிக் செய்யவும்.

மக்தப் மதரஸா மேடை நிகழ்ச்சிகள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக