திங்கள், 16 டிசம்பர், 2024

ஆடையும் மனிதனும்.


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

நஹ்மதுஹு வநுஸல்லி அலா ரசூலிஹில் கரீம் அம்மா பஃத்.

ஃபகத் காலல்லாலாஹு தஆலா ஃபில் குர்ஆனில் மஜீத் வல் ஃபுர்கானில் மஜீத் அவூது பில்லாஹி மினஷ் ஷெய்தானிர் ரஜீம். பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.


நமது உயிரினும் கண்மணி நாயகம் ஸல் அவர்கள் மீதும் அவர்களின் தோழர்கள் மீதும் நாதாக்கள் நல்லோர்கள் அனைவரின் மீதும் குறிப்பாக இந்த மீலாது / எங்கள் ……….. ……… மதரஸாவின் ஆண்டு விழா நிகழ்வில் பங்கொண்டு அல்லாஹ்வையும் ரசூலையும் நினைவு கூர்ந்து நன்மையை அடைந்து கொள்ள இங்கு வந்திருக்கும் நம் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் அன்பும் அருளும் என்றும் நின்று நிலவட்டுமாக. ஆமீன்.

எனது பெயர் ................................................. 

நான் இங்கு .......................... தலைப்பில் பேச வந்திருக்கிறேன்.

அல்லாஹ்வின் நல்லடியார்களே…

ஆடை இல்லா மனிதன் அரை மனிதன் அன்னாசு பில்லிபாஸ்ஆடையை வைத்தே மனிதர்கள் மதிக்கப்படுகிறார்கள்


முல்லா ஒரு விருந்துக்கு அழைக்கப்பட்டிருந்தார் குறித்த நேரத்தில் விருந்துக்கு சென்றார். எளிமையான உடையில் இருந்ததால் வாட்ச்மேன் உள்ளே விடவில்லை எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அனுமதிக்கவில்லை முல்லா திரும்பி சென்றார்; கடைக்குச் சென்று ஒரு அழகான டிப்டாப்பான உடையை வாடகைக்கு வாங்கி அணிந்துகொண்டு மீண்டும் விருந்துக்கு வந்தார் 

இப்பொழுது வாட்ச்மேன் வாயெல்லாம் பல்லாக வாங்க வாங்க என்று வரவேற்றான். உள்ளே சென்ற முல்லா விருந்தை எடுத்து தன் சட்டைப் பைக்குள் போட்டு "சட்டையே ! இந்தா தின்னு" என்று சொல்லிக் கொண்டிருந்தார். எல்லோரும் என்ன முல்லா.. என்னாச்சு உங்களுக்கு?" என ஏளனமாக கேட்டனர் முல்லா சொன்னார்; ரொம்ப நல்லா சொன்னார் ஆமா முதலில் எளிமையா வந்தேன்; எதுவும் கிடைக்கல டிப்டாப்பா வந்தேன்; எல்லாமே கிடச்சது. அப்படின்னா இந்த விருந்து எனக்கா? இந்த சட்டைக்கா?"


ஆடையழகு அவசியம்தான்; அதற்காக ஆடையில் அனாச்சாரத்தைப் புகுத்தி கலாச்சாரத்தை மாற்றக்கூடாது


தற்போதைய மாறி வரும் சூழ்நிலையால், இளைஞர்களையும் மற்றும் இளைஞிகளையும் டீ சர்ட் புரட்சியானது அவர்களின் நெஞ்சங்களை கொள்ளை கொண்டு விட்டது டீ சர்ட் எங்கிருந்து வந்தது, எப்படி வந்தது என்று ஆராய்ந்தால் மேலைநாட்டு கலாச்சாரம் என்று கூறலாம்

அல்லாஹ்வின் நல்லடியார்களே...

டீ சர்ட் சாதாரணமாக இருந்தால் பரவாயில்லை. அதில் கூட என்னனென்ன அலங்கோலங்கள் இருக்கிறது என்பதினை நாம் பார்த்தால் கண்றாவியாக இருக்கும்.

 பார்ப்பவர்களின் கண்களை கூசச்செய்யும் அளவிற்கு பல கலர்கள், பல கெட்ட கெட்ட வாசகங்கள். ஸ்பைடர் மேன், சூப்பர் மேன், ரஸ்ஸிலின் போட்டோக்கள், பாலிவுட், ஹாலிவுட், கோலிவுட் என்று எல்லா நட்சத்திரங்களின் படங்கள் போட்டதாக இருக்கும். இது ஆண்கள் உடுத்தும் டீ சர்ட் என்பது மட்டுமில்லை, பெண்கள் உடுத்தும் டீ சர்ட்டிலும் இத்தகைய அலங்கோலங்கள் இருக்கத்தான் செய்யும்


அது போல் ஜீன்ஸை எடுத்து கொண்டால், பல வண்ணங்கள் பல வடிவங்கள்.


ஒரு பக்கம் கிழிந்து போய் இருக்கும் ஒரு பக்கம் கலர் மங்கிப்போய் இருக்கும். ஒரு வயதான முதியவர் தன்னுடைய பேரனிடம் இப்படி கேட்கிறார் என்ன பேரான்டீ நீ வாங்கிட்டு வந்த பேண்ட் துணி (அவருக்கு ஜீன்ஸ் என்று சொல்ல தெரியவில்லை.) கிழிந்து தொங்குது. அதற்கு பேரனின் பதில் போங்க தாத்தா. உங்களுக்கு எப்பவும் ஒரு கிண்டல் தான். இது தான் இப்போது ஃபேஷன் தாத்தா என்பான்


ஒரு இளைஞியிடம் ஒரு முதியோர்.. என்னபுள்ளையாக இருக்கிறாய் நீ ஆம்பிளை புள்ளை போடுற பேண்டை போட்டுக்கொண்டு திரிகிறாய் அந்த இளைஞியின் பதில் போங்க பெரிசு. உங்க காலத்தில் இதுவெல்லாம் எங்கே கிடைத்தது எங்க காலம் வேற நாங்க நாகரீக காலத்தில் மாறி விட்டோம். இப்பவெல்லாம் இது தான் எங்களுக்கு பிடிச்சு இருக்குது வேணும் என்றால் உங்களுக்கும் வாங்கி தரட்டா என்றுசொல்வாள் என்ன செய்வது காலங்கள் மாறிவிட்டது. மாற்றங்கள் அவசியமானது தான் ஆனால் அது நாகரீகத்தினை குப்பைக்கு கொண்டு சென்றால் என்ன செய்வது ?..!

அல்லாஹ்வின் நல்லடியார்களே...


இதுமட்டுமல்லாமல், தற்போது பல கடைகளில் ஷார்ட்ஸ் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் அரைக்கால் டவுசர்கள் விற்பனைக்கு வந்து விட்டது. அதனையும் விரும்பி அணியக்கூடிய பலரை நாம் பார்த்து இருக்கலாம் அந்த ஆடையானது முழங்கால் தெரியக்கூடிய அளவிலும் மற்றும் தொடைகள் தெரியக்கூடிய அளவிலும் தான் இருக்கும்


ஆனால் இஸ்லாம் மார்க்கமோ இத்தகைய ஆடைகளை அணிவதை தடை செய்து உள்ளது. நாம் அணியும் ஆடையானது, நம்முடைய கணுக்கால் மேல் இருக்கவேண்டுமே தவிர கணுக்காலுக்கு கீழே இருக்கக்கூடாது என்றும், மற்றும் தொடைப்பகுதிகளையும் காலின் மற்ற பகுதிகளையும் மறைக்கக்கூடிய அளவிலும் தான் இருக்க வேண்டும் மானத்தை மறைக்கத்தான் ஆடையே தவிர மானத்தினை காற்றில் பறக்கவிடுவதற்கல்ல


يبنى آدم قد انزلنا عليكمْ لِبَاسًا يُوَارِي سَواتِكُمْ وَرَيْشًا وَلِبَاسُ التَّقوى ذلك خَيْرٌ ذَلِكَ مِنْ آيَتِ اللَّهِ لَعَلَّهُمْ يَذَّكَّرُوْنَ 


ஆதமுடைய மக்களே! மெய்யாகவே, நாம் உங்களுக்கு உங்களுடைய மானத்தை மறைக்கவும், உங்களுக்கு அலங்காரமாகவும், ஆடையை அளித்துள்ளோம் ஆயினும் தக்வா (பயபக்தி) எனும் ஆடையே (அதைவிட) மேலானது இது அல்லாஹ்வுடைய (அருளின்) அடையாளங்களில் (ஒன்றாக) உள்ளதாகும் (இதைக் கொண்டு) நல்லுணர்வு பெறுவார்களாக.


(அல்குர்ஆன் : 7:26)


இந்த வசனத்தில் ஆடை யென்பது


1. மானத்தை மறைக்க வேண்டும்


2. ஓரளவு அழகாக இருக்கவேண்டும்


3. இதை விட மேலாக இறையச்சத்தை உண்டாக்க வேண்டும் என்று கூறி இறையச்சம் என்ற ஆடைதான் சிறந்தது என்கிறான் இறைவன்


எனவே ஆடை என்பது வெறும் அலங்காரம் மட்டுமல்ல; அது நமது உடலில் உள்ளத்தில் குணத்தில் சிந்தனையில் வாழ்வில் ஒரு மாபெரும் பிரதிபலிப்பை மாற்றத்தை ஏற்படுத்தக் கூடியது.


இங்கு பேச எனக்கு வாய்ப்பு அளித்த எனது ஹஸ்ரத் அவர்களுக்கும் உங்களுக்கும்  நன்றி கூறி விடை பெறுகிறேன் 


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…

பழைய குறிப்புகள் வாசிக்க 👇 கிளிக் செய்யவும்.

மக்தப் மதரஸா மேடை நிகழ்ச்சிகள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக