கண்ணியத்திற்குரிய ஹிதாயத்துல் இஸ்லாம் மதரஸா மற்றும் மஸ்ஜிதே முபாரக் பள்ளிவாசல் தலைவர் செயலாளர் மற்றும் நிர்வாக பெருமக்களே ஜமாஅத்தார்களே இவ்விழாவிற்க்கு சிறப்பு விருந்தினராக வருகை தந்த ஆலிம்களே சமூக சேவையாளர்களே….
இவ்விழாவிற்க்கு உடலாலும் பொருளாலும் உதவி செய்த செல்வந்தர்களே மற்றும் பெற்றோர்களே என் உடன் பயிலும் மாணவ மாணவிகளே அனைவருக்கும் என் இனிய ஸலாம் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
ஒரு பெண்ணை குடும்பத் தலைவி என்றும், இல்லத்தரசி என்றும் பொதுவாக அழைக்கப்படுகின்றாள் வீட்டுக்கு அவள்தான் அரசியாம்! குடும்பத்துக்கு அவள்தான் தலைவியாம்! இல்லத்துக்கு அரசியாக இருப்பவள் பொறுப்பில்லாமல் செலவு செய்து கஜானாவைச் காலி பண்ணுபவளாக இருந்தால் நிலைமை என்னவாகும் என்று சிந்தித்துப் பாருங்கள் குடும்பமே நடு வீதிக்கு வந்து விடுமல்லவா
சில பெண்களின் கையில் காசு கிடைத்து விட்டால் அவர்களுக்குத் தலை கால் புரிவதில்லை பக்கத்து வீட்டு பாத்திமாவுக்கும், அடுத்த வீட்டு ஆயிஷாவுக்கும் கலர்ஸ் காட்டுவதற்காகப் பணத்தை தண்ணீ மாதிரி செலவு செய்கின்றனர். இப்படி வீண் விரயத்தாலும், போலி ஆடம்பரத்தாலும் நடு வீதிக்கு வந்து நிற்கும் நிர்ப்பந்த நிலைக்கு ஆளாகின்றனர்
"நான் போட்டிருக்கும் செருப்பு ஐயாயிரம் ரூபாய்!" எனப் பெருமைகொள்கின்றனர். வலது காலுக்குக் கீழே 2500 ரூபாவும், இடது காலுக்குக் கீழே 2500 ரூபாவும் இருந்தால் தான் இவர்களால் நடக்கவே முடியும் போல..
"தேவையில்லாததை வாங்குபவன் அவசியமானதை விற்பான்!" என்பார்கள் ஆடம்பரத்துக்காகவும், வீண்விரயத்துக்காகவும் தேவையற்ற பொருட்களை வாங்கி வாங்கி விட்டை விற்றவர்கள் எவ்வளவு பேர்
இருக்கின்றனர்! தெரியுமா?
எனயே முதலில் வாழ்க்கையைப் புரிய வேண்டும் எமக்குத் தேவையான பொருட்கள் எவை? அவசியமானவை எவை? அத்தியவசியமானவை எவையென்ற தெளிவு இருக்க வேண்டும் அவற்றின் முக்கியத்துவத்துக்கு ஏற்பவே அவற்றை வாங்குவதில் முக்கியத்துவமளிக்க வேண்டும் இதில் தவற விடும் போது வினாகக் கடன் தொல்லைக்கும், அவமானத்துக்கும் ஆளாக நேரிடும். எனவே வீண் விரயத்தைத் தவிர்ப்பது இல்லத்தரசிகளுக்கு அவசியமான பண்பாகும்
வீண் விரயத்தினால் ஏற்படும் பாதிப்புகளை அறிந்து தெளிவு பெறுங்கள்!
ان الْمُبَدرِينَ كَانُوا اخْوَانَ الشَّيْطَيْنِ وَكَانَ الشغل لِرَبِّهِ كَوْرًا
திண்ணமாக, வீண் செலவு செய்வோர் ஷைத்தானின் சகோதரர்களாவர் ஷைத்தானோ தன் இறைவனுக்கு மிகவும் நன்றி கொன்றவனாய் இருக்கின்றான்.
(அல்குர்ஆன் 17:27)
வீண் விரயம் செய்வோரை அல்லாஹ் நேசிக்க மாட்டான். அல்லாஹ்வின் நேசம் உங்களுக்கு வேண்டாமா? வீண் விரயம் செய்வோர் ஷைத்தானின் சகோதார்களாவர் நீங்கள் ஷைத்தானின் சகோதரராக இருப்பதில் சந்தோஷப்படுகின்றீர்களா?
விண் விரயம் உங்களது செல்வங்களையும், உழைப்பையும் விழுங்கி ஏப்பம் விடுகின்றது. இதனால் வெகு விரைவிலேயே உங்களை வறுமை வாரி அணைத்துக்கொள்ளும் இந்த வறுமையை நீங்கள் அஞ்ச வேண்டாமா?
எனவே பெண்களே!
வீண் விரயத்தைத் தவிருங்கள்! சிக்கனமாக வாழப் பழகுங்கள்!
உங்கள் பெண் குழந்தைகளுக்கு சிக்கன குணத்தை ஏற்படுத்துங்கள்! வரவறிந்து செலவு செய்யும் பக்குவம் பெண்ணுக்கு அழகாகும்! இந்த அழகு உங்களை விட்டும் அகலாது இருக்கட்டும்!
வாய்ப்பு அளித்தமைக்கு நன்றி கூறி விடை பெறுகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.
பழைய குறிப்புகள் பார்க்க 👇 கிளிக் செய்யவும்.
மக்தப் மதரஸா மேடை நிகழ்ச்சிகள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக