திங்கள், 12 ஜூன், 2023

விலை மதிப்பற்ற நமது உறுப்புகள்.

 


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

நஹ்மதுஹு வநுஸல்லி அலா ரசூலிஹில் கரீம் அம்மா பஃத்.

ஃபகத் காலல்லாலாஹு தஆலா ஃபில் குர்ஆனில் மஜீத் வல் ஃபுர்கானில் மஜீத் அவூது பில்லாஹி மினஷ் ஷெய்தானிர் ரஜீம். பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

 فَكُلُوا مِمَّا رَزَقَكُمُ اللَّهُ حَلَالًا طَيِّبًا وَاشْكُرُوا نِعْمَتَ اللَّهِ إِنْ كُنْتُمْ إِيَّاهُ تَعْبُدُونَ

நமது உயிரினும் கண்மணி நாயகம் ஸல் அவர்கள் மீதும் அவர்களின் தோழர்கள் மீதும் நாதாக்கள் நல்லோர்கள் அனைவரின் மீதும் குறிப்பாக இந்த மீலாது /  எங்கள் மதரஸாவின் ஆண்டு விழா நிகழ்வில் பங்கொண்டு அல்லாஹ்வையும் ரசூலையும் நினைவு கூர்ந்து நன்மையை அடைந்து கொள்ள இங்கு வந்திருக்கும் நம் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் அன்பும் அருளும் என்றும் நின்று நிலவட்டுமாக. ஆமீன்.

எனது பெயர் .................................................

நான் இங்கு விலை மதிப்பற்ற நமது உறுப்புகள். என்ற தலைப்பில் பேச வந்திருக்கிறேன்.

 

 

அல்லாஹ் நமக்கு கொடுத்துள்ள உறுப்புகள் விலை மதிப்பற்றது. விலை மதிப்பற்ற உறுப்புக்களின் அருமை தெரிய வேண்டும் என்றால் எந்த உறுப்பின் அருமை உங்களுக்கு தெரிய வேண்டுமோ அந்த உறுப்பின்றி இருக்கும் மனிதர்களிடம் சென்று கேட்டுப் பாருங்கள். அந்த உறுப்பு இல்லாமல் தன் வாழ்வில் படும் அவஸ்தைகளை நீண்ட நேரம் நம்மிடம் சொல்வார்கள்.

அல்லாஹ்வின் நல்லடியார்களே...

இன்று மருத்துவமனையில்

ஒரு செயற்கைப் பல் வைக்க - ரூ 6,000 ஆகும்.

 

செயற்கை இதயத்தின் விலை - ரூ 80 லட்சம்.

 

ஒரு கிட்னி - ரூ 30 லட்சம். அதை ஆப்ரேசன் மூலம் பொருத்த ஆகும் செலவு ரூ 20 லட்சம் )

ஹேர் ட்ரான்ஸ் பிளான்ட் என்று சொல்லப்படும் செயற்கை முடி வைக்க - ரூ 2 லட்சம்.

 

ஒரு செயற்கை விரல் வைக்க - ரூ 1 1/2 லட்சம்

 

செயற்கைக் கால் வைக்க - ரூ 2 லட்சம்

 

கண்ணுக்கு லென்ஸ் பொருத்த - ரூ 50, 000

 

எலும்புக்குப் பதிலாக plate வைக்க -ரூ 50,000

 

கிட்னிக்குப் பதிலாக ஒரு முறை டயாலிசிஸ் பண்ண - ரூ 3,000

 

இதயத்தை ஒரு மணி நேரம் செயற்கையாக இயங்க வைக்க -ரூ 45, 000

 

நுரை ஈரலை ஒரு மணி நேரம் செயற்கையாக சுவாசிக்க வைக்க - ரூ 50,000

 

இரத்தம் ஒரு Unit வாங்க - ரூ 2,000

 

உயிருக்கு விலை மதிப்பே இல்லை.

அல்லாஹ்வின் நல்லடியார்களே...

அன்றொரு நாள் சிறுநீர் வெளியேறாமல் வயது முதிர்ந்த ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு சிறுநீரும் வெளியேற்றப்பட்டது.

சில நாட்கள் கழித்து அவரது உடல்நிலை தேறியது.

டாக்டர் இப்போ உங்க உடம்பு சரியாயிருச்சி நீங்க வீட்டுக்கு போகலாம் என்று கூறினார். அப்படியே அவருக்கான பில்லை அவரிடம் டாக்டர் கொடுத்தார்

அந்த பில்லை பார்த்து விட்டு அந்த முதியவர் அழுதுவிட்டார்.

ஏன் அழுறீங்க பில் ரொம்ப அதிகமா போட்டாங்களா.. என்று டாக்டர்

அதற்கு அந்த முதியவர், ‘நான் எனக்கு ஆன மருத்துவ செலவை நினைத்து அழவில்லை. இரண்டு நாட்கள் என்னுடலிலிருந்து சிறுநீர் வெளியேற்றியதற்காக என்னிடம் இவ்வளவு பணம் கேட்கின்றீர்களே.

அருளும், அன்பும் உடைய எனது இறைவன் கடந்த 60 வருடங்களாக சிறிதும் எந்த தடங்கலின்றி சிறுநீர் வெளியேற்றியதற்காக இதுவரை ஒருபைசா கூட கேட்டு பில் அனுப்பவில்லை. அவனின் அருளை நினைத்து ஆனந்தக் கண்ணீர் வடிக்கின்றேன்என்றார்.

அல்லாஹ்வின் நல்லடியார்களே...

இதுபோன்ற எண்ணிலடங்காத அருட்கொடைகளை அல்லாஹ் நமக்கு அனுதினமும் வழங்கி கொண்டு இருக்கிறான்.. அதற்காக அவனுக்கு நாம் செய்யும் கைமாறு என்னவென்றால் அல்லாஹ்வுக்கு நன்றி பாராட்டுவதாகும்

அருள்மறையாம் திருக்குர்ஆனில் அல்லாஹ் கூறுகிறான்.

 

 فَكُلُوا مِمَّا رَزَقَكُمُ اللَّهُ حَلَالًا طَيِّبًا وَاشْكُرُوا نِعْمَتَ اللَّهِ إِنْ كُنْتُمْ إِيَّاهُ تَعْبُدُونَ

  ‘(ஈமான் கொண்டோர்களே), இறைவன் உங்களுக்கு அளித்துள்ளவற்றிலிருந்து அனுமதிக்கப்பட்ட தூய்மையானதையே உண்ணுங்கள். நீங்கள் அவனையே வணங்குவோராக இருந்தால் இறைவனின் அருட்கொடைக்கு நன்றி செலுத்துங்கள்’. (திருக்குர்ஆன் 16:114)

என்று கூறுகிறான்.

அல்லாஹ் நமக்கு வழங்கியுள்ள விலை மதிப்பற்ற நமது உறுப்புகளை கெட்ட பழக்கங்களினாலும், பொறுப்பற்ற விபத்துக்களினாலும் நமது ஆரோக்கியமான உறுப்புக்களை சேதமாக்கிக் கொள்வதை இறைவனின் உதவியோடு நாம் நமது வாழ்வில் தவிர்க்க வேண்டும்.

 

கோடி கோடியாக செலவழித்து செயற்கை உறுப்புகள் பொருத்தினாலும் இறைவன் வழங்கியதைப்போன்று இந்த உறுப்புகள் இயங்க முடியுமா என்று நாம் சிந்திப்போம், பொறுப்புடன் செயல்படுவோம்.

 

மது புகை புகையிலை ஹான்ஸ் இன்னும் பிற போதை தரும் வஸ்துக்களை வாழ்வில் தவிர்ப்போம் ஆரோக்கியமாக வாழ்வோம்..

 

எனக்கு இங்கு பேச வாய்ப்பளித்த எனது ஹஸ்ரத் அவர்களுக்கும் ஜமாத்தார்களுக்கும் உங்கள் அனைவருக்கும் ஸலாத்தைக் கூறி விடை பெறுகிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக