ஞாயிறு, 18 ஜூன், 2023

மக்காவைப் பற்றிய சிறு குறிப்புகள்.

 

புனித கஃபாவைப் பற்றி சிறு குறிப்புகளை நான் இங்கு சொல்ல வந்துள்ளேன் .......

 

கஃபா என்பது அது- ஒரு சதுரவடிவ கட்டிடம்,

கஃபாவின் மொத்த உயரம் 53 அடி[14 மீட்டர்] ஆகும்,

நீளம் ,மேற்கில் 45 அடி, கிழக்கில் 49 அடி,

வடக்கிலும் தெற்கிலும் 31 அடி, இருக்கிறது

 

இதன் தென் கிழக்கு மூலைக்கு ருக்னுல் ஹிந்த்

[இந்திய மூலை] என்றும்,

வடகிழக்கு மூலைக்கு ருக்னே இராக்கி[ஈராக்கிய மூலை]என்றும்,

தென்மேற்கு மூலைக்கு ருக்னே யமானி[யமனிய மூலை] எனவும் கூறப்படுகிறது,

 

இதன் தென் கிழக்கு மூலைக்கு தவாப் செய்யும்

இடத்திலிருந்து 1.10 மீட்டர் உயரத்தில் வெள்ளி

வளையத்திற்குள் "ஹஜ்ருல் அஸ்வத்"கல் பதிக்கப்

பட்டுள்ளது, இங்கிருந்து தவாபை ஆரம்பித்து,முடிக்க வேண்டும்,

 

ஒரே கல்லாக இருந்த"ஹஜ்ருல் அஸ்வத்"ஹிஜ்ரி

319 ஆம் ஆண்டில் ஏற்பட்ட ஒரு சம்பவத்தில் உடைந்து

போய் தற்போது சிறியதும்,பெரிதுமாக எட்டு துண்டுகளாக நமக்கு காட்சி அளிக்கிறது,

அல்லாஹ்வின் நல்லடியார்களே...

ஹஜ்ருல் அஸ்வது அருகில் தரையிலிருந்து 2.25 மீட்டர்

உயரத்தில் "கஃபாவின்"உள்ளே செல்ல வாயில்

அமைக்கப்பட்டுள்ளது இதன் அகலம் 1.90 மீட்டர் நீளம்,

3.10 மீட்டர் இதன் கதவு அளவு, இக்கதவு முழுக்கமுழுக்க

தங்கத்தால் செய்யப்பட்டுள்ளது,

 

13.420.000 சவூதி ரியால் செலவில் 280 கிலோ தங்கத்தால் இக்கதவு தயாரிக்கப்பட்டுள்ளது,

வருடத்திற்கு மூன்று முறை இக்கதவு திறக்கப்பட்டு

உள்பகுதி "ஜம்ஜம்"நீரால் கழுவி சுத்தம் செய்யப்படும்,

"ஹஜ்ருல் அஸ்வத்"வாயிலுக்கு இடையிலுள்ள 4 அடி

அகலமுள்ள சுவற்றிக்கு"முஸ்தஜம்"என்று பெயர்,

 

ருக்னே இராக்கி, மற்றும் ருக்னே ஷாமீ ஆகிய

கஃபாவின் இரு மூலைகளுக்கும் எதிரில் அரைவட்ட

வடிவம் 1.30 மீட்டர் உயரத்தில் உள்ள சுவருக்கு"ஹதீம்"

என்று பெயர், இதற்கு "ஹிஜ்ரே இஸ்மாயீல்"என்றும்

ஒரு பெயருண்டு, இச்சுவரின் சுற்றளவு 21.57 மீட்டர்

நீளமாகும்,

 

ஆரம்பத்தில் இதுவும் "கஃபாவின்"உட்பகுதியாகத்

தான் இருந்தது, குரைஷிகள் இதைக்கட்டியபோது

போதிய பணவசதியில்லாததால் முன்பு இருந்த

அளவைவிட அகலத்தில் ஆறரை முழத்தைக் குறைத்து

விட்டார்கள், குறைக்கப்பட்ட அப்பகுதியும்"கஃபா"வில்

சேர்ந்ததே என்பதை தெரிவிப்பதற்காகவே அரை வட்ட

வடிவில் சிறிய மதில் சுவரை எழுப்பி உள்ளார்கள்,

 

இந்த"ஹதீமுக்கு"நேர் மேலே "கஃபாவின்"மீது விழும்

மழைநீர் வடிவதற்காக ஒரு வடிகுழாய் பொருத்தப்

பட்டுள்ளது, முன்பு வெள்ளியால் செய்யப்பட்டிருந்த

இக்குழாய் இப்போது தங்கத்தால் தயாரிக்கப்

பட்டுள்ளது,,இதற்கு "மீஜாபுர் ரஹ்மத்"என்று பெயர்,

 

"கஃபாவை"சுற்றியுள்ள பள்ளிவாசலுக்கு "ஹரம்

ஷரீப்"என்று பெயர்,

தற்போது இதன் உட்புற,வெளிப்புற,தொழுகை இடங்கள் உள்ளடக்கி, இதன் பரப்பளவு 88.2 ஏக்கராகும்,

 

இப்பள்ளியில் தலா 89 மீட்டர் உயரம் கொண்ட 9 மினராக்களும், வெளியிலிருந்து உள்ளே வருவதற்காக 95 வாயில்களும் அமைக்கப்பட்டுள்ளன,

 

தரைத்தளத்தில் வழவழப்பான சலவைகற்கள் பதிக்கப்

பட்டுள்ளது, "கஃபாவை"சுற்றியுள்ள தவாப் செய்யும்  இடத்திற்கு "மதாஃப்"என்று பெயர்,

 

இதில் ஒரு மணி நேரத்திற்கு 1.30.000 பேர்வரை

தவாப் செய்யமுடியும்,

ஒரே சமயத்தில் 8.20.000 பேர் தொழும் அளவிற்கு

வசதி செய்யப்பட்டுள்ளது,

60.000 காவலர்கள் கண்காணிப்பு பணியில்

ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்,

10.000 மேற்பட்ட கேமராக்கள்

பாதுகாப்புக்காக பயன்படுத்தப்பட்டுள்ளன.....

 

வல்லோன் அல்லாஹ் நமது வாழ்வில் மிண்டும் மீண்டும் ஹஜ் உம்ரா செய்யும் பாக்கியத்தை நமக்கும் நமது குடும்பத்தினர்களுக்கும் நமது சந்ததியினருக்கும் தந்தருள் புரிவானாக.

எனக்கு இங்கு பேச வாய்ப்பளித்த எனது ஹஸ்ரத் அவர்களுக்கும் ஜமாத்தார்களுக்கும் உங்கள் அனைவருக்கும் ஸலாத்தைக் கூறி விடை பெறுகிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக