வெள்ளி, 30 ஜூன், 2023

குர்பானி பிராணியின் வயதெல்லை.

 (நான்கு மத்ஹப்களின் பார்வையில் உழ்ஹிய்யா பிராணியின் வயதெல்லை)


✒️ அஷ்ஷெய்க் முப்தி அம்ஜத் (ஹாமிதி, பின்னூரி)

*குறிப்பு* : சமூக வலைத்தளங்களில் பரவும் அட்டவணைகளை கண்மூடித்தனமாக எடுத்துக்கொள்ள வேண்டாம்!!!

*மாடு*

*ஷாபிஈ, ஹனfபி, ஹன்பலி* ஆகிய மத்கப்களின் கூற்று : மாடுகளுக்கு இரண்டு வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.
*மாலிகி* மத்கபின் கூற்று : மாடுகளுக்கு மூன்று வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.

*வெள்ளாடு*

*ஹனfபி, மாலிகி, ஹன்பலி* ஆகிய மத்கப்களின் கூற்று :  வெள்ளாடுளுக்கு ஒரு வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.
*ஷாபிஈ* மத்ஹபின் கூற்று : வெள்ளாடுகளுக்கு இரண்டு வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.

*செம்மறி ஆடு*

*ஹனfபி, ஹன்பலி* : செம்மறி ஆடுகளுக்கு ஆறு மாதங்கள்  பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.
*மாலிகி, ஷாபிஈ* : செம்மறி ஆடுகளுக்கு ஒரு வருடம் பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.

*ஒட்டகம்*

*நான்கு மத்கப்களும்* :
ஒட்டகத்திற்கு ஐந்து வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.

السن المشترط في الأضحية بالتحديد فقد اختلف في ذلك الأئمة :

فالجذع من الضأن : ما أتم ستة أشهر عند الحنفية والحنابلة ، وعند المالكية والشافعية ما أتم سنة .

والمسنة (الثني) من المعز : ما أتم سنة عند الحنفية والمالكية والحنابلة ، وعند الشافعية ما أتم سنتين .

والمسنة من البقر : ما أتم سنتين عند الحنفية والشافعية والحنابلة ، وعند المالكية ما أتم ثلاث سنوات .

والمسنة من الإبل : ما أتم خمس سنوات عند الحنفية والمالكية والشافعية والحنابلة .

انظر : "بدائع الصنائع" (5/70) ، "البحر الرائق" (8/202) ، "التاج والإكليل" (4/363) ، "شرح مختصر خليل" (3/34) ، "المجموع" (8/365) ، "المغني" (13/368) .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக