அஸ்ஸலாமு அலைக்கும்
வரஹ்....
நஹ்மதுஹு வநுஸல்லி அலா
ரசூலிஹில் கரீம் அம்மா பஃத்.
ஃபகத் காலல்லாலாஹு தஆலா
ஃபில் குர்ஆனில் மஜீத் வல் ஃபுர்கானில் மஜீத் அவூது பில்லாஹி மினஷ் ஷெய்தானிர்
ரஜீம். பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
நமது உயிரினும் கண்மணி
நாயகம் ஸல் அவர்கள் மீதும் அவர்களின் தோழர்கள் மீதும் நாதாக்கள் நல்லோர்கள்
அனைவரின் மீதும் குறிப்பாக இந்த மீலாது / எங்கள் மதரஸாவின் ஆண்டு விழா
நிகழ்வில் பங்கொண்டு அல்லாஹ்வையும் ரசூலையும் நினைவு கூர்ந்து நன்மையை அடைந்து
கொள்ள இங்கு வந்திருக்கும் நம் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் அன்பும் அருளும்
என்றும் நின்று நிலவட்டுமாக. ஆமீன்.
எனது பெயர்
.................................................
நான் இங்கு அல்லாஹ் நம்மோடு
இருக்கிறான் என்ற தலைப்பில் பேச வந்திருக்கிறேன்.
அல்லாஹ்வின் நல்லடியார்களே..
🔹 கணவன் சரி இல்லையே என்ற கவலையா???
கவலைப்படாதீங்க!
ஆசியா நாயகி அவர்களுக்கும் அவரது
கணவன் (பிர்அவ்ன்) மோசமானவன் தான்!
🔹 மனைவி சரி இல்லை என்ற கவலையா?
கவலைப்படாதீங்க!
லூத் நபி, நூஹ் நபி (அலை) அவர்களின் மனைவியும் மோசமானவர்கள்தான்..!
🔹 குழந்தை இல்லையே என்ற கவலையா....???
கவலைப்படாதீங்க!
முஃமின்களின் தாயார்கள்
ஆயிஷா_ரலி அவர்களுக்கும்,
ஸைனப்_ரலி அவர்களுக்கும் குழந்தை இல்லை!
🔹 பிள்ளை சொன்ன பேச்சு கேட்காமல் இருக்கிறானே என்ற கவலையா?
கவலைப்படாதீங்க!
நூஹ் நபி அலை அவர்களின் மகனும்
மாறு செய்தவன் தான்!
🔹சொந்த வீடு இல்லையே என்ற கவலையா???
கவலைப்படாதீங்க!
அன்னை ஹாஜரா (அலை) அவர்கள் பாலைவனத்தில்
வானம் பார்த்த பூமியில் தான் வாழ்ந்து வந்தார்கள்!!!
🔹 தீராத நோய் என்ற கவலையா?
கவலைப்படாதீங்க!
அய்யூப் (அலை) அவர்களுக்கும்
நோய் வந்தது!
🔹 பெற்றோர்கள் சரி இல்லை என்ற கவலையா?
கவலைப்படாதீங்க!
இப்ராஹீம் நபி (அலை) அவர்களின்
தகப்பனும் மாறு செய்தவர்தான்!
🔹 படிச்ச படிப்புக்கு வேலை கிடைக்கவில்லை என்ற கவலையா???
கவலைப்படாதீர்கள்!
எல்லா நபியும் ஆடுதான் மேய்த்தார்கள்!
🔹 உடன் பிறந்தோரே துரோகம் செய்கின்றனரா...???
கவலைப்படாதீங்க!
யூசுப் நபிக்கும் அதுதான் நடந்தது!!!
🔹 கஷ்டத்தில் இருப்பவர்களை காப்பாற்றினால் அவர்கள் முதுகில் குத்திவிட்டார்களா?
கவலைப்படாதீங்க!
கடலையே பிளந்து அற்புதத்தை கண்ணால்
கண்ட பின்னும் மூஸா நபியின் முதுகில் ஒரு சமுதாயமே குத்தியது!
🔹 உங்கள் மீதும், குடும்பத்தார் மீதும் அவதூறு சொல்லி துன்புறுத்துகிறார்களா?
கவலைப்படாதீங்க!
கொடைவள்ளல் அபுபக்கர் (ரலி)
அவர்களின் மகள்,அல்லாஹ்வின் தூதரின் மனைவி
அன்னை ஆயிஷா (ரலி) மீதும் அவதூறு சொன்ன சமுதாயம் தான் இது...
நம்மை மட்டும் தங்க தராசிலா
வைத்து தாங்கப் போகிறார்கள்!
மனிதர்கள் அப்படித்தான்!
அல்லாஹ்வின் நல்லடியார்களே....
இவ்வுலகில் எல்லாம் கிடைத்தவர்
எவருமில்லை!
சோதனைக்கு அப்பாற்பட்டவர் இங்கு
யாருமில்லை!
ஒவ்வொரு நன்மையும் சோதனை என்ற
போர்வை போர்த்தித்தான் வரும்! என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
வல்லோன் அல்லாஹ் தன்
அருள்மறையாம் திருகுர்ஆனில் கூறுகிறான்.
لَا
تَحْزَنْ إِنَّ
الله مَعَنَا...
நிச்சயமாக அல்லாஹ் நம்மோடு
இருக்கிறான்...
அல்லாஹ் நமது ஈமானை உறுதியானதாக
ஆக்குவானாக.
எனக்கு இங்கு பேச
வாய்ப்பளித்த எனது ஹஸ்ரத் அவர்களுக்கும் ஜமாத்தார்களுக்கும் உங்கள் அனைவருக்கும் ஸலாத்தைக்
கூறி விடை பெறுகிறேன்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக