திங்கள், 14 ஜனவரி, 2013

உரையாடல்.




தஹ்ஸின். அஸ்ஸலாமு அலைக்கும் சனா.....

சனா. வா அலைக்கும் ஸலாம் தஹ்ஸின்.

தஹ். எங்க சனா கிளம்பிட்ட...?

சனா. ம்......துபாய்க்கு...

தஹ். உங்கிட்ட புடிச்சதே இந்த காமெடி தான்.

சனா. பிறகு என்னடி...ஸ்கூல் யூனிபார்ம் போட்டுகிட்டு பேக் எடுத்துகிட்டு  எங்க போவாங்க…

தஹ். சரி விடு.  நானும் ஸ்கூலுக்கு தான் போறேன். வா பேசிக்கிட்டே போகலாம்  அப்புறம் உங்க வீட்ல எல்லாரும் எப்டி இருக்காங்க...?

சனா. ம்.... எல்லாரும் நல்லா இருக்காங்க.  இன்ஷா அல்லாஹ். வர்ர புதன் கிழமை வந்தவாசில இருந்து எங்க சொந்தகாரங்க வர்ராங்க.

தஹ். அல்ஹம்துலில்லாஹ்....ரொம்ப சந்தோசம்.

சனா. சரி உங்க வீட்ல எல்லாரும் எப்டி இருக்காங்க...?

தஹ். ம்....அல்ஹம்துலில்லாஹ். எல்லாரும் நல்லா இருக்காங்கோம்.

சனா. ஏ. தஹ்ஸின் அங்க பாத்தியா. ஜுமானா  போட்டு இருக்குற ட்ரஸ் சூப்பரா இருக்குல்ல....சான்சே இல்லடி.....வாவ்.

தஹ். மாஷா அல்லாஹ். ஆமா சனா. ரொம்ப சூப்பரா இருக்குடி.

சனா. ஆமா....நி எதுக்கு இப்போ மாஷா அல்லாஹ்னு சொன்ன…?

தஹ். சனா...நாம ஓரு அழகான பொருள பாத்து அது நம்ம மனச ரொம்ப கவர்ந்திருச்சின்னா உடனே மாஷா அல்லாஹ்னு சொல்லனும். இல்லன்ன அங்க கண்திருஷ்டி விழும்னு நபி ஸல் சொல்லியிருக்காங்க.

சனா. தஹ்ஸின் ஷாப்பிங் போலாம் வர்ரியா...?

தஹ். என்ன விஷயம்.

சனா. மருதாணி கோன் வாங்க போறேன் வர்ரியா...?

தஹ். ஓ...இன்ஷா அல்லாஹ் இருந்தா வர்ரேன்....சனா உனக்கு ஓரு விஷயம் தெரியுமா... இஸ்லாத்துல நெய்ல் பாலிஷ். லிப்ஸ்டிக். போடுறது ஹராம். அத நாம போடக் கூடாது.

சனா. என்னது நெய்ல் பாலிஷ் ஹராமா....ஏன் எதுக்கு...?

தஹ். நெய்ல் பாலிஷ் லிப்ஸ்டிக் போடுறதால நாம ஓளுச் செய்றப்போ அந்த உறுப்பு மேல தண்ணிபடாம போய்ருது. இதனால ஓளு கூடாது.. ஓளு கூடாதுன்னா தொழுகையும் கூடாது. அதனால தான் இஸ்லாம் அத ஹராம் ஆக்கியிருக்கு.

சனா. அப்போ மருதாணி வைக்கலாமா….?

தஹ். ஓ....தாராளமா வைக்கலாம். ஆனா ஆண்கள் மருதாணி வைக்க கூடாது. ஆண்களுக்கு மருதாணி ஹராம் சனா.

சனா. என்னது ஆண்களுக்கு மருதாணி வைக்க கூடாதா...?

தஹ். ஆமா சனா...ஆண்களுக்கு மருதாணி ஹராம். நபி ஸல் அவங்க பெண்களைப் போல வேஷமிடும் ஆண்களையும். ஆண்களைப் போல வேஷமிடும் பெண்களையும் சபித்து இருக்காங்க. நபி ஸல் அவங்க காலத்தில் மருதாணியிட்ட ஓருவரை நாடு கடத்தும் படி உத்தரவு போட்டு இருக்காங்க.

சனா. அப்போ கல்யாண மாப்பிளைக்கு மருதாணி வைக்கிறாங்களே அது...?

தஹ். ஆண்களுக்கு சின்ன வயசிலயே நரை முடி இருந்தா தலையில் மருதாணி வைக்கலாம். அதே மாரி தாடியிலும் மருதாணி வைக்கலாம். அத விட்டு பெண்கள் மாரி கையில டிசைன் டிசைனா மருதாணி வைக்கிறது எப்பவுமே ஹராம் தான். அது கல்யாணமா இருந்தாலும் சரி. சாதாரண நேரமா இருந்தாலும் சரி

சனா. ஐய்யய்யோ....

தஹ். நீ எதுக்குடி ஷாக் ஆகுற….?

சனா. இல்ல....போன வாரம் எங்க டாடி மருதாணி வச்சாரு அதான்....

தஹ். அல்லாஹ்கிட்ட பாவ மன்னிப்பு கேட்டு இனிமே மைக்காம இருக்க சொல்லு. அல்லாஹ் மன்னிக்க கூடியவனாக இருக்கான்.

சனா. தஹ்ஸின் போன வாரம் என் பிரண்ட் மகாலட்சுமி டாடி இறந்துட்டாருடி.

தஹ். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.


சனா. ஹேய்.....அவர் ஓரு காபிர்டி. ஓரு காபிர்க்கு போய் இன்னாலில்லாஹி...ன்னு சொல்லுற.

 தஹ். சனா...இன்னாலில்லாஹி...ங்கிறது முஸ்லிம்களின் மரணத்துக்கு மட்டுமில்ல திடுக்கிடும் செய்தி எதுவா இருந்தாலும் சொல்லலாம்.

சனா. மாஷா அல்லாஹ்.

தஹ்.ஆமா....நீ எதுக்கு இப்போ மாஷா அல்லாஹ்னு சொன்ன….?

சனா. இல்ல தஹ்ஸின். இஸ்லாத்த பத்தி இவளோ விஷயம் தெரிஞ்சி வச்சிருக்க. இவளோ அழகா விளக்கம் சொல்லுறயே. அதனால தான் மாஷா அல்லாஹ்னு சொன்னேன்.

தஹ். ஏ....ய் ரொம்ப கலாய்க்காத.

சனா. ஆமா இதல்லாம் நீ எங்க கத்துக்ற…?

தஹ். நீயும் எங்க மதரஸாக்கு வா.  இந்த மாறி இன்னும் நிறைய விஷயத்த தெரிஞ்சிக்கலாம்.

சனா. இனஷா அல்லாஹ் நானும் கண்டிப்பா மதரஸாக்கு வர்ரேன். சரி வர்ரேன். தஹ்ஸின் அஸ்ஸலாமு அலைக்கும். By.

தஹ். வஅலைக்கும் ஸலாம். சனா. By.

2 கருத்துகள்:

  1. தம்பி மீரான்..
    சூப்பர்.. கலாச்சார சீரழிவை சுட்டிக்காட்டி
    இஸ்லாமிய நாகரீகத்தை நயமாக சொல்லக்கூடிய
    உரையாடல்

    பதிலளிநீக்கு