அஸ்ஸலாமு
அலைக்கும் வரஹ்....
நஹ்மதுஹு
வநுஸல்லி அலா ரசூலிஹில் கரீம் அம்மா பஃத்.
ஃபகத் காலல்லாலாஹு தஆலா ஃபில் குர்ஆனில் மஜீத் வல்
ஃபுர்கானில் மஜீத் அவூது பில்லாஹி மினஷ் ஷெய்தானிர் ரஜீம்.
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
நமது உயிரினும் கண்மணி நாயகம் ஸல் அவர்கள் மீதும் அவர்களின்
தோழர்கள் மீதும் நாதாக்கள் நல்லோர்கள் அனைவரின் மீதும்
குறிப்பாக இந்த மீலாது / எங்கள் மதரஸாவின் ஆண்டு விழா
நிகழ்வில் பங்கொண்டு அல்லாஹ்வையும் ரசூலையும் நினைவு
கூர்ந்து நன்மையை அடைந்து கொள்ள இங்கு வந்திருக்கும் நம்
அனைவரின் மீதும் அல்லாஹ்வின் அன்பும் அருளும் என்றும் நின்று
நிலவட்டுமாக. ஆமீன்.
எனது பெயர்
.................................................
நான் இங்கு அனைத்து புகழும் அல்லாஹ்வுக்கே என்ற தலைப்பில்
பேச வந்திருக்கிறேன்.
எனக்கு இங்கு பேச வாய்ப்பளித்த எனது ஹஸ்ரத் அவர்களுக்கும்
ஜமாத்தார்களுக்கும் இங்கு வந்திருக்கும் உங்கள் அனைவருக்கும்
ஸலாத்தைக் கூறி எனது உரையை துவங்குகிறேன்.
கண்ணியத்திற்குரிய
அல்லாஹ்வின் நல்லடியார்களே...
துவக்கம்
பிஸ்மில்லாஹிர்
ரஹ்மானிர் ரஹீம்.
அதனை தொடர்ந்து வரும்
வார்த்தை
அல்ஹம்துலில்லாஹி
ரப்பில் ஆலமீன் என்பதாகும்*
இந்த மாபெரும் சொல்லின்
எதார்த்த
உண்மைகளை ஒரு
மனிதர்
புரிந்து கொண்டால்
அவர் பல்வேறு விதமான உலக சிக்கல்களிலிருந்து
விடுபட்டுவிடுவார்
அவரது உள்ளம் சதா இறைவனுக்கு நன்றி கூறிய வண்ணமே
இருக்கும்
ஒவ்வொரு நொடிப் பொழுத்தையும்
அவர் அச்சம்
தீர்ந்தவராக இன்பத்திலேயே இந்த உலகத்தில் வாழ்ந்து
கொண்டிருப்பார்
அன்பிற்கினிய
அல்லாஹ்வின் நல்லடியார்களே....
அல்ஹம்துலில்லாஹி
ரப்பில் ஆலமீன் என்றால்
அனைத்துலக இறைவனுக்கே எல்லாப் புகழும் என்ற அர்த்தம் இது
அனைவருக்கும் தெரிந்திருந்தாலும் கூட இந்த சொல் இன்று
வார்த்தை அலங்காரமாக கூறப்படுகிறதே தவிர செயல்
அலங்காரத்தில் போற்றப்படுவதில்லை இதுதான் மனித வாழ்வின்
பலப் பிரச்சனைகளுக்கும்
காரணமாகி இருக்கிறது
எப்படி இருக்கீங்க... அல்ஹம்து லில்லாஹ்.
சாப்டாச்சா அல்ஹம்து லில்லாஹ்.
போன இடத்துல கவனிப்பு எப்படி அல்ஹம்து லில்லாஹ்.
தலைவர் பதவிக்கு போட்டி போட்டீங்க கிடைச்சதா அல்ஹம்து
லில்லாஹ்.
இப்படி மூச்சுக்கு 300 தடவை இச்சொல்லை நாம் உச்சரித்தாலும்
ஏன் ஒவ்வொரு தொழுகையிலும் இதை ஓதினாலும் கூட இதன்
ஆழ்ந்த பொருள் நம் தொண்டையை விட்டு கீழே இறங்க மறுக்கிறது.
புகழ் எல்லாம் இறைவானாகிய
உனக்கே என்று சொல்லிவிட்டு
அந்த புகழ் நமக்கு
வரவேண்டும் என ஒவ்வொரும் நினைப்பது தான்
சமுதாய ஒற்றுமையின் சீர் குலைவுக்கு நம்மிடையே சண்டைகள் வர
முக்கிய காரணமாக இருக்கிறது.
இன்று நாம் நம் புகழை தூக்கி நிறுத்திட என்ன விலை
வேண்டுமானாலும் கொடுக்க தயாராகி விடுகிறோம்
சின்ன பிரச்சனையிலிந்து பெரிய பிரச்சனை வரை அதற்கு என்ன
காரணம் ? என்று ஆய்வு செய்தால் அது இந்த புகழாசையால்
வந்த்தாகவே
இருக்கும்
*ஒவ்வொரும் அமைப்புகளும்
பல குட்டிகள் போடுவதற்கு
இந்த புகழாசையும்
அது தூண்டுவிடும்
பொருளாசை தான்
காரணமாக
இருக்கிறது.
அல்லாஹு அக்பர் அல்லாஹ் மிகப் பெரியவன் என்று சொல்கிறோம்.
அல்ஹம்ந்துலில்லாஹ் அனைத்து புகழும் அல்லாஹ்வுக்கே சொந்தம்
என்று கூறுகிறோம்.
ஆனால் இந்த வார்த்தைகளை வெறும் வாயளவில் கூறுகிறோமே
தவிர அதனுடைய உண்மையான அர்தத்தை விளங்காமல் தினமும்
கூறுகிறோம்.
ஒவ்வொரு விசயத்திலும் தன்னை தானே அக்பராகவும்
அதாவது ( பெரியவனாகவும்)
தனது சொன்ன கருத்துக்களை அக்பராகவும்,
அதாவது பெரியதாகவும்
தனது மனோஇச்சைகளை அக்பராகவும் நினைத்துக் கொண்டு
வாழ்கிறோம்.
வாழும் போது சுயநலமாக வாழ்ந்து புகழின் போதையில்
மிதப்பவர்களால் நம் சமுதாயம் எப்படி சீர் படும் ?
அது பிளவு பட்டுத்தான்
போகும்.
அல்ஹம்ந்தின் அர்த்தம்
புரிதால் தனிமனித வாழ்வு மட்டுமல்ல
சமுதாய வாழ்வும் ஆனந்தமாக
அமையும்
எனவே அல்ஹம்து லில்லாஹ் என்ற வார்த்தையை நமது
வாழ்கையிலும் கொண்டு வந்து வாழக்கூடிய நல்லோர்களில்
ஒருவராக நம்மையும் நமது குடும்பத்தினர் அனைவரையும்
வல்லோன் அல்லாஹ் ஆக்கி
அருள்புரிவானாக.
அஸ்ஸலாமு அலைக்கும்
வரஹ்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக