செவ்வாய், 21 ஜூன், 2022

நாவடக்கம். மேடை வசன நாடக நிகழ்ச்சி


 

இரண்டு மாணவர்கள் பங்கு பெறும் மேடை நிகழ்ச்சி.

 

ஜமால் : ஸ்.... அப்பா....டா இன்னிக்கு ஞாயித்துக் கிழமை இந்த ஒருநாள் தான் நம்ம வேலைய பாக்க முடியுது மத்த நாள் பூரா அடுத்தவங்க வேலை அடுத்தவங்க வேலைன்னே சுத்த வேண்டியதா இருக்குது. நாளைக்கழிச்சி ஹஜ்ஜி பெருநா வேற இன்னும் ட்ரஸ் வாங்கல என்னத்த செய்ய போ...

சரி தலை சீவீட்டு வெளிய போயி ஒரு டீ அடிச்சிட்டு வரலாம்....

தலையை சீவிக் கொண்டே பாட்டு ஹஜ்ஜி பெருநாள் வந்த சரித்திரம் கேளுங்கள் அன்று இப்ராஹீம் நபி செய்த தியாகத்தை தெரிந்து கொள்ளுங்கள்...(ராகமாக படிககனும்)

அடடா.......முடி ரொம்ப வளந்திருக்கே ஓகே இன்னிக்கு போயி முதல்ல முடிய வெட்டீருவோம்.

 

(ஹஸ்ரத் கூற வேண்டும் : அந்த ஊரில் சலூன் கடை வைத்திருப்பவர் பெயர் கமால் அந்த கமால் பாயிடம் இந்த வாய்க்கொழுப்பு நிறைந்த ஜமால் பாய் முடி வெட்ட செல்கிறார் அங்கு எனன நடந்தது என்று பார்ப்போம். இப்போது சலூன் கடை கமால் பாய் பேசுவார்.)

 

அல்ஹம்து லில்லாஹ் இன்னிக்கு ஞாயித்துக் கிழம நிறைய கஸ்டமர் என்னோட கடைக்கு வரனும். யாஅல்லாஹ்.

அட நம்ம கடைய பாத்து யாரோ வற்ற மாதிரி தெரியுதே யாரது ஆஹா ஜமால் பாயி இவன் வாயத் தொறந்தாலே ஏழரை ஆரம்பிச்சிருமே....

சரி எதுக்கும் கொஞ்சம் கவனமாவே பேசுவோம்.

ஜமால் : அஸ்ஸலாமு அலைக்கும் கமால் பாய்.

கமால் : வ அலைக்கும் ஸலாம் ஜமால் பாய்.

ஜமால் : அப்புறம் கமால் பாய் அப்டி இருக்கீங்க.  நாட்ல நீங்க மட்டும் தான் ஜாலியா இருக்கீங்க எங்க மழை பெய்யுதோ இல்லியோ ஒங்க காட்ல மடடும் வருசம்பூரா மழ தான் போங்க.

கமால் : எல்லாம் உங்க துஆ தான்.

ஜமால். : கரண்ட் இருக்கா....

கமால் :  ­ஃபேன் ஒடுறத பாக்கலியா.

ஜமால் : ஆமா ஃபேன் ஓடுதுன்னு சொன்னீங்க ஆன இங்க தான இருக்குது

கமால் : யாஅல்லாஹ் நீதான் என்ன காப்பாத்தனும்.

சரி சரி வாங்க முடி வெட்டலாம் உக்காருங்க.

ஜமால் : முடி வெட்ட எவ்வளவு... சேவிங் எவ்வளவு…?

கமால் :  கட்டிங் 100 ரூவா சேவிங் 50.

ஜமால் : ஓகே கட்டிங் சேவிங் பண்ணுங்க.

கமால் : வயசுல மூத்தவரா இருக்காரு ஆனா வாய் மட்டும் காதுவரை என்னத்த செய்ய.

ஜமால் : என்ன கமால் பாய்.

கமால் : ஒன்னுமில்ல ஜமால் பாய்.

ஜமால் : கமால் பாய கடுப்பேத்தி பாக்கலாம்னு பாத்தா இன்னிக்கு ரொம்ப கூலா இருக்காரே விடக்கூடாது. இன்னிக்கு அவர செமைய கலாய்சி அவர கடுப்பேத்தனும்.

கமால் : லைட்டா வெட்டனுமா இல்ல ஷாட்டா வெட்டனுமா.

ஜமால் :  ஷாட்டா வெட்டுங்க.

கமால் : ஓகே.

ஜமால் : கமால் பாய் எனக்கு ரொம்ப நாளா ஒரு டவுட்டு.

கமால் : என்ன சந்தேகம்.

ஜமால் : உங்க வேலை.!  முடி வெட்டுறது.. உங்க கைய வச்சித் தான் முடி வெட்றீங்க.. அப்புறம் எதுக்கு சம்மந்தமில்லாம.. உங்க நாக்கோட சம்மந்தப்படுத்தி உங்கள "நாவிதன்னு" தமிழ்ல சொல்றாங்க..?

கமால் :  நல்ல சந்தேகம் தான்.. நாங்க தொழில் செஞ்சா மட்டும் பத்தாது.. முன்னால உக்காந்து இருக்கறவங்களுக்கு அலுப்புத்தட்டாம இருக்க, "நாவால" இதமா நாலு வார்த்தை  பேசுறதனால தான்..!முடி வெட்றவங்கல  நாவிதர்கள்.. அப்படின்னு கூப்பிடுறாங்க.

ஜமால் :  என்னடா கமால்பாய் கடுப்பாகுவார்னு பாத்தா ரொம்ப தெளிவா இருக்காறே விடக்கூடாது தொடர்ந்து கடுப்பேத்ற மாதிரி பேசுவோம்.

ஆமா எதவச்சி நீங்க முடி வெட்றீங்க...

கமால் :  கத்ரிக்கோல் வச்சி தான்.

ஜமால் : சரி கத்திரி இங்க இருக்கு கோல் எங்க இருக்கு.ஹா....ஹா.....ஹா.... இதெப்படி இருக்கு.

கமால் : ஹா.....ஹா...ஹா...என்னோட தல எழுத்து இந்தியா சுதந்திரம் வாங்குறதுக்கு முன்னாடி உள்ள ஜோக்குகெல்லாம் சிரிக்க வேண்டி இருக்கு என்ன பொழப்புடா இது.

ஜமால் : என்ன கமால் பாய்.

கமால் : சூப்பர் ஜோக்குன்னு சொன்னேன். சூப்பரா காமெடி பண்றீங்க போங்க.

ஜமால் :  என்ன இன்னும் கடுப்பாகம இருக்காரு. இன்னிக்கு இவர கடுப்பேத்தி பாக்காம விடக்கூடாது.

சரி......எப்ப பாத்தாலும் நீங்க வெட்டிகிட்டே இருக்கீங்க அப்போ இந்த ஊர்லயோ  நீங்க தான் பெரிய வெட்டிப் பய போல இருக்கு. ஹா....ஹா....ஹா....

ஆஹா கமால் பாய் கடுப்பாய்டாரு போல இருக்கு முகம் மாறிடுச்சி இத இத இதத் தான் எதிர்பார்த்தேன்.

கமால் : இவன் இன்னிக்கு நம்ம மனச ரொம்ப வேதனப் படுத்திட்டான். முடிவெட்ட வந்தா இனிமே ஒழுங்கா பேசனும்ங்குறத இவனுக்கு இன்னிக்கு கத்துக் கொடுக்கனும். இரு இப்போ என்ன பண்றேன் பாரு.

கமால் : ஜமால் பாய் முடி வெட்டிட்டேன் ஷேவிங் பண்ண போறேன். மீச சூப்பரா வச்சிருக்கீங்க போல இருக்கு.

ஜமால் : கமால் பாய் மீச வளக்குறது எனக்கு ரொம்ப புடிக்கும். மீச வச்சிருக்குறது ஒரு தனி கெத்து தெரியுமா.

கமால் : அப்படியா....

ஜமால் : ஆமா.... இந்த அணீல் மீசய எத்தன வருசமா வளத்துட்டு இருக்கேன்

கமால்  : அப்போ இந்த மீச உங்களுக்கு வேணும்களா...?

ஜமால் : ஆமா எனக்கு வேணும்.

கமால் : சரக்....அப்போ இந்தாங்க.

ஜமால் : அய்யோ.... ஏய்யா இப்போ என் மீச வழிச்சு எடுத்த...

கமால் : நீங்க தான வேணும்னு சொன்னீங்க.

ஜமால் : யோவ் நா அந்த வேணும் சொல்லலியா

கமால் : நீங்க தெளிவா சொல்லீருக்கனும் இப்போ நா என்ன செய்ய அது சரி உங்க புருவ முடி ரொம்ப அடர்த்தியா அழகா இருக்கு இது வேணுமா...?

ஜமால் : ஆஹா...... இப்போ நாம வேணும்னு சொன்னா புருவத்த எடுத்துருவான். அதனால வேணாம்னு சொல்லீருவோம்.

வேணாம்.

கமால் : சரக் இந்தங்க புருவ முடி.

ஜமால் : அய்யோ... யோவ் இப்போ எதுக்குயா என்னோட புருவ முடிய எடுத்த.

கமால் : நீங்க தான வேண்டாம்னு சொன்னீங்க.

ஜமால் : அய்யோ நா அந்த வேண்டாம்ணு சொல்லல...

கமால். நீங்க மொதல்லயே தெளிவா சொல்லீருக்கனும்.

போங்க நீங்க அடுத்த தடவ முடி வெட்ட வற்றப்போ எதுவா இருந்தாலும் தெளிவா சொல்லுங்க. இப்போ முடி வெட்னதுக்கு 100 ரூபா ஆச்சி.

கேஷா ஃபோன் பே வா...?

ஜமால் : இந்த நூறுவா.

கமால் : ஓகே ஜமால் பாய் நீங்க ரொம்ப தமாஷான ஆளா இருக்கீங்க போங்க நீங்க சொல்ற ஜோக்க கேட்டா நாள் பூரா கேட்டு கிட்டே இருக்கலாம் போல இருக்கு இன்ஷா அல்லாஹ் அடுத்த தடவ வரும் போது உங்கள நிறைய பேச வச்சி கேட்கனும்.

ஜமால் : அடப்பாவி கமால் பாய் மொக்க ஜோக் சொல்லி உன்ன கலாய்ச்சி வெறுப்பேத்தி பாத்ததுக்கு இப்படி என்ன வச்சி செஞ்சிட்டயே...

இனிமே போற எடத்துல வாய வச்சிட்டு ஒழுங்கா இருக்கனும்.

கமால் : ஜமால் பாய் அட்வான்ஸ் ஈத் முபாரக் ஹஜ் பெருநாள் நல்வாழ்த்துக்கள். 

ஹஜ்ஜி பெருநாள் வந்த சரித்திரம் கேளுங்கள் ஜமால் செய்த மீச தியாகத்தை தெரிந்து கொள்ளுங்கள்... (ராகமாக படிககனும்)

ஜமால் : நாற்பது வருஷமாய் ஆசை ஆசையாய் வளத்த மீசயும் போச்சி என்னோட முகத்துல கம்பீரமா இருந்த புருவமும் போச்சி.

நாம தான் பெரிய அறிவாளி நமக்கு தான் நிறைய திறம இருக்கன்னு அடுத்தவங்கள கேவலமா நினச்சதுக்கு எனக்கு இது தேவ தான்.

இனிமே அடுத்தவங்க மனசு புண்படாம பேசனும் நாம வேதன படுத்துறப்போ எல்லாரும் வாய மூடிட்டு இருக்க மாட்டாங்க.

இந்த மாதிரி மத்தவங்களும் நம்ம கிட்ட நடந்துகிட்டா நம்ம நிலம என்ன ஆகும்.

கமால் : ஹஜ்ஜி பெருநாள் வந்த சரித்திரம் கேளுங்கள் ஜமால் செய்த மீச தியாகத்தை தெரிந்து கொள்ளுங்கள்...

 

ஜமால் கமால் :  அஸ்ஸலாமு அலைக்கும்.


இதை எப்படி மேடையில் அரங்கேற்றுவது என்பதை தெரிந்து கொள்ள எனது நம்பருக்கு ஃபோன் செய்யவும்.

A.காதிர் மீரான் மஸ்லஹி. 9952129706 

2 கருத்துகள்: