வியாழன், 30 ஜூன், 2022

அனைத்து சூழ்நிலையிலும் அல்லாஹ்

 

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

நஹ்மதுஹு வநுஸல்லி அலா ரசூலிஹில் கரீம் அம்மா பஃத்.

ஃபகத் காலல்லாலாஹு தஆலா ஃபில் குர்ஆனில் மஜீத் வல் ஃபுர்கானில் மஜீத் அவூது பில்லாஹி மினஷ் ஷெய்தானிர் ரஜீம். பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

 

நமது உயிரினும் கண்மணி நாயகம் ஸல் அவர்கள் மீதும் அவர்களின் தோழர்கள் மீதும் நாதாக்கள் நல்லோர்கள் அனைவரின் மீதும் குறிப்பாக இந்த மீலாது /  எங்கள் மதரஸாவின் ஆண்டு விழா நிகழ்வில் பங்கொண்டு அல்லாஹ்வையும் ரசூலையும் நினைவு கூர்ந்து நன்மையை அடைந்து கொள்ள இங்கு வந்திருக்கும் நம் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் அன்பும் அருளும் என்றும் நின்று நிலவட்டுமாக. ஆமீன்.

எனது பெயர் .................................................

நான் இங்கு அனைத்து சூழ்நிலையிலும் அல்லாஹ் என்ற தலைப்பில் பேச வந்திருக்கிறேன்.

எனக்கு இங்கு பேச வாய்ப்பளித்த எனது ஹஸ்ரத் அவர்களுக்கும் ஜமாத்தார்களுக்கும் உங்கள் அனைவருக்கும் ஸலாத்தைக் கூறி எனது உரையை துவங்குகிறேன்.

கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே...

முஸ்லிம்களாகிய நாம் நமது அன்றாட வாழ்க்கையில் இன்ஷா அல்லாஹ். மாஷா அல்லாஹ். அல்ஹம்து லில்லாஹ். அஸ்தஃபிருல்லாஹ். அவூதுபில்லாஹ். நவூதுபில்லாஹ். பிஸ்மில்லாஹ். ஃபி அமானில்லாஹ். இது போன்ற அர்த்தம் நிறைந்த பல வார்த்தைகளை தினமும் பலமுறை பயன்படுத்துகிறோம்

அந்த வரிசையில் இன்ஷா அல்லாஹ் என்ற ஒரு வார்த்தை உள்ளது. அதன் அர்த்தம் (இறைவன் நாடினால்) என்பதாகும்.

 

எந்த ஒரு செயலைச் செய்தாலும், அதைத் தொடங்குவதற்கு முன்பு, முஸ்லிம்களாகிய நாம் சொல்லும் வார்த்தை, ‘பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம்.அதன் பொருள் அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருநாமத்தால் தொடங்குகிறேன் என்பதாகும்.

அதுபோல ஆச்சரியத்தைத் தரக்கூடிய பொருளைப் பார்க்கும்போது சொல்ல வேண்டிய சொல், ‘சுப்ஹானல்லாஹ்’ (இறைவன் மிகவும் தூய்மையானவன்) என்று சொல்ல வேண்டும்.

கோபம் வரும்போதும், தீய செயல்களில் ஈடுபடாமல் தன்னைத் தற்காத்துக் கொள்ளும்போதும், ‘அவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம்’ (சபிக்கப்பட்ட ஷைத்தானின் தீங்கில் இருந்து நான் இறைவனிடம் பாதுகாப்பு தேடுகிறேன்) என்று சொல்ல வேண்டும்.

கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே...

நண்பரின் மகளுக்கு திருமணம். அதில் பங்கேற்க முடியாத உறவினர் அவரைச் சந்தித்து, ‘முக்கிய வேலை இருந்ததால் உங்கள் மகளின் திருமணத்தில் கலந்து கொள்ள முடியவில்லை. திருமணம் சிறப்பாக நடந்ததா?’ என்று கேட்கும் போது. அதற்கு அந்த நண்பர், ‘ஆமா.... ரொம்ப சிறப்பாக நடந்துச்சிஎன்று சொல்ல மாட்டார்.

அதற்கு மாறாக மாஷா அல்லாஹ்ரொம்ப சிறப்பாக நடந்துச்சிஎன்று பதில் அளிப்பார்.

மாஷா அல்லாஹ்என்றால் இறைவனால் நடந்தது’, ‘இறைவன் நாடியதால் தான் நடந்ததுஎன்று பொருளாகும்.

கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே...

எந்தவொரு சுப நிகழ்ச்சி நடந்தாலோ அல்லது வாழ்வில் உயர்வு நம்மை தேடி வந்தாலோ அதற்குக் காரணம் இறைவன் என்று நம்புவதும், தான் இதற்கு எந்தவிதத்திலும் காரணம் அல்ல; இது முழுக்க முழுக்க இறைவனால் நடந்தது என்றும் முஸ்லிம்கள் நம்ப வேண்டும்.

அதன் அடிப்படையிலேயே மாஷா அல்லாஹ்என்ற வார்த்தையைப் கூறுகிறோம்.

யாராவது நமக்கு நன்மை செய்யும்போது, ‘ஜஸாக்கல்லாஹ் கைராஎன்று சொல்ல வேண்டும். இதற்கு அல்லாஹ் உங்களுக்கு இதை விட சிறந்ததைப் பரிசளிப்பானாகஎன்றும், ‘அல்லாஹ் உங்களுக்கு நற்கூலி அருள்வானாகஎன்றும் அர்த்தம்.

ஜஸாக்கல்லாஹ் கைராஎன்பது ஆங்கிலத்தில் தேங்க்ஸ்என்று சொல்வது போலவும், தமிழில், ‘நன்றிஎன்று கூறுவது போலவும் அமையும்.

ஆனால் இந்தச் சொல்லை ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்தால் அதன் உயர்ந்த நோக்கம் புரியும். அதாவது உதவி செய்தவருக்கு வெறுமனே நன்றிசொல்வது பத்தாது என்று கருதி, ‘நீங்கள் செய்த இந்த உதவிக்காக, ‘இறைவன் உங்களுக்கு நற்கூலி தருவான்என்ற ஒற்றை வாக்கியத்தில், இறைவனை நினைவு கூர்வதையும், உதவி செய்தவருக்கு இறைவனிடத்தில் உயர்வை வேண்டி பிரார்த்திப்பதிலும் உள்ளடங்கிய மேன்மை தெரிகிறது.

கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே...

மிகப்பெரிய சாதனைகளைச் செய்து முடித்தபோதும், உண்டு முடித்தவுடனும் அல்ஹம்து லில்லாஹ்என்று சொல்ல வேண்டும். இதற்கு, ‘எல்லா புகழும் இறைவனுக்கேஎன்று அர்த்தம்.

அதே நேரத்தில் தும்மும்போது தும்பியவர் அல்ஹம்து லில்லாஹ்என்று சொல்ல வேண்டும். அதைக் கேட்டவர், தும்மியவருக்கு, ‘யர்கமுகல்லாஹ்’ (இறைவன் உங்கள் மீது அருள் பாலிப்பானாக) என்று பதில் கூற வேண்டும்.

சாதனைகளைப் புரிவதற்கும், உணவைப் பெறுவதற்கும் இறைவனின் அருள் வேண்டும். அதனால் அல்ஹம்து லில்லாஹ்என்கிறோம். ஆனால் தும்மும்போதும் ஏன் அல்ஹம்து லில்லாஹ்என்று கூற வேண்டும்? என்று நாம் ஆழ்ந்து சிந்தித்தால் அதன் அர்த்தம் நமக்கு புரியும்.

கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே...

தும்மும்போது மனித இதயம் ஒரு வினாடி நின்று மீண்டும் இயங்குவதைப் பார்க்கலாம். அதனால்தான் தும்மும்போது இறைவனைப் புகழும் வகையில் அல்ஹம்து லில்லாஹ்என்கிறோம்.

இதுமட்டுமல்ல முஸ்லிம்கள் அடிக்கடி பயன்படுத்தும் இன்னொரு சொல், ‘தவக்கல்து அலல்லாஹ்.இதற்கு இறைவன் மீது நான் பொறுப்பு சாற்றுகிறேன்’, ‘இறைவன் உன்னைப் பாதுகாப்பான்என்பதாகும். தவக்குல்என்பது ஒருவன் இறைவன் மீது நம்பிக்கை வைத்து தன் செயல்கள் அனைத்தையும் அவனிடமே ஒப்படைப்பதாகும்.

வல்லோன் அல்லாஹ் தன் அருள்மறையாம் திருக்குர்ஆனில் கூறுகிறான்.

وَمَن يَتَوَكَّلْ عَلَى ٱللَّهِ فَهُوَ حَسْبُهُ

எவர்கள் அல்லாஹ்வை முற்றிலும் நம்புகிறார்களோ அவர்களுக்கு அவனே (முற்றிலும்) போதுமானவன்’ (திருக்குர்ஆன்–65:3) என்று கூறுகிறான்.

இறைவனின் பாதுகாப்பே இறை நம்பிக்கையாளர்களுக்கு ஈமான் கொண்டவர்களுக்கு உயர்ந்த பாதுகாப்பாகும். ஒரு இறைநம்பிக்கையாளனுக்கு வாழ்வில் எப்பேர்பட்ட பெரும் சோதனை ஏற்பட்டாலும் அவர் கலங்குவதில்லை. அதற்கு என்ன காரணம் என்றால் இறை விதிப்படியே இது நடந்திருக்கிறதுஎன்ற எண்ணம் தான் அதற்குக் காரணமாகும்.

கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே...

ஒருவர் மரணம் அடைந்து விட்டால் முஸ்லிம்கள் சொல்லக்கூடிய வார்த்தை இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்என்பதாகும். இதன் பொருள் நாம் இறைவனுக்காகவே இருக்கின்றோம்; அவனிடமே செல்லக் கூடியவராக இருக்கின்றோம்என்று அர்த்தம்.

நம்மிடம் உள்ளவை அனைத்தும் இறைவனுக்கு சொந்தமானது; நாமும் அல்லாஹ்வுக்கு சொந்தமானவர்களாக இருக்கின்றோம். அவனே அதைத் திரும்பப் பெற்றுக்கொள்கிறான். என்பது தான் அந்த வார்த்தையின் கருத்தாகும்.

ஆக முஸ்லிம்கள் எந்தக் காரியத்தைச் செய்தாலும் இறைவனை முன்னிறுத்தியே வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்கிறார்கள்.

ஒரு முஸ்லிம் தன் வாழ்வில் எல்லா சூழ்நிலையிலும் அவன் நிற்கும்போதும், நடக்கும்போதும், பார்க்கும்போதும் கேட்கும்போதும், பேசும்போதும், எழுதும்போதும், தும்மும்போதும், தூங்கும்போதும், எழும்போதும், இது போன்ற வார்த்தைகளை சொல்லும் போது அவர்கள் எப்போதும் தங்கள் இறைவனாம் அல்லாஹ்வை தங்கள் சொல்லில் செயலில் சிந்தையில் வைத்து வாழும் வாழ்க்கையாக அவர்களின் வாழ்க்கை மாறி விடுகிறது.

எனவே நம்மை படைத்த  அல்லாஹ்வை நம் வாழ்வில் வரும் அனைத்து நிலையிலும்  மறக்காதவர்களாக வாழக்கூடிய நல்லோர்களாக நம் அனைவர்களையும் வல்லோன் அல்லாஹ் ஆக்கி ்அருள் புரிவானாக.


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக