அஸ்ஸலாமு
அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு.
நஹ்மதுஹு வநுஸல்லி ஆலா ரசூலிஹில் கரீம் அம்மா பஃது கலல்லாஹு
தஆலா ஃபில் குர்ஆனில் அழீம் வல்புஃர்கானில் மஜீத் அவூது பில்லாஹி மினஷ் செய்தானிர்
ரஜீம் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
يٰـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا كُتِبَ عَلَيْکُمُ
الصِّيَامُ کَمَا كُتِبَ عَلَى الَّذِيْنَ مِنْ قَبْلِکُمْ لَعَلَّكُمْ تَتَّقُوْنَۙ
நபிகள் நாயகம் நற்குணத்தின் தாயகம் கண்மனி நாயகம் ஸல்
அவர்கள் மீதும் அவர்களின் அடிச்சுவட்டை அப்படியே பின்பற்றி வாழ்ந்த உத்தம சத்திய
ஸஹாபாக்கள் நாதாக்கள் நல்லோர்கள் அனைவரின் மீதும் குறிப்பாக எனது மதரஸாவின்.......
வது ஆண்டு விழாவிற்கு வருகை தந்திருக்கும் நம் அனைவரின் மீதும் அல்லாஹ்வின்
அன்பும் அருளும் நிலவட்டுமாக.
எனக்கு இங்கு பேச வாய்ப்பளித்த எனது ஹஸ்ரத் அவர்களுக்கும் ஜமாத்தார்களுக்கும் இங்கு வந்திருக்கும் உங்கள் அனைவருக்கும் எனது நன்றி கலந்த ஸலாத்தை தெரிவித்து எனது உரையை துவங்குகிறேன்.
அன்பிற்கினிய அல்லாஹ்வின்
நல்லடியார்களே.....
நோன்பின் மாண்பைப் பற்றி பேச இங்கு வந்துள்ளேன்.
ஒவ்வொரு மனிதனும் தன் மனோ
இச்சைகளுக்கு முன்பு பலவீனம் அடைந்து விடுகின்றான். மனோ இச்சை என்றால் நம்ம மனசுல
வரக்கூடிய ஆசைகள் அப்படிப்பட்ட அந்த மனோ இச்சைகளை எதிர் கொண்டு, தம்மை பலப்படுத்திக் கொள்ள நமக்கு நான்கு வகையான
அம்சங்கள் தேவையாகும்
அது என்னவென்றால் முதலாவது: 1)
இறை நம்பிக்கையில் உறுதி, இரண்டாவது 2) மனவலிமை மூன்றாவது,
3) உறுதியான எண்ணம், நான்காவது 4) சாந்தம் இந்த நான்கும் ஒரு மனிதனுக்கு மிக
அவசியமாகும்.
அல்லாஹ்வின் நல்லடியார்களே..
ஒரு நோன்பாளி சூரியன் உதயமானதிலிருந்து அஸ்தமனம் ஆகும்
வரைக்கும் பசியெடுத்தாலும் உண்ணாமலிருப்பது,
தாகமெடுத்தாலும் தண்ணீர் பருகாமலிருப்பது, மனோ
இச்சைகளை கட்டுப்படுத்தி இருப்பது ஆகிய அனைத்தும் செயல்களும் நோன்பாளியின் இறை நம்பிக்கையை பலப்படுத்துகிறது.
பசியும், தாகமும்
ஒரு நோன்பாளியை படாதபாடு படுத்தும்போதும்,
தமக்கு எட்டிய தொலைவில் உணவும், பானமும்,
துணைவியும் இருந்த போதிலும் அவற்றை தொடாமல், அனுபவிக்காமல் விலகிச் செல்வது அவரின் மனஉறுதியை
பலப்படுத்துகிறது.
அனைத்தையும் அனுபவிக்க ஏகபோக உரிமை இருந்தும், அவருக்கு அதன் மீது நாட்ட மில்லாமல் இருப்பது அவரின்
உறுதியான எண்ணத்தை வலுப்படுத்துகிறது.
அவர் அனைத்தையும் தாங்கும்போது எதையும் தாங்கும் இதயமும், பொறுத்துக் கொள்ளும் சாந்தமும் அவருக்கு
உண்டாகிவிடுகிறது. இந்த நான்கு வகையான செயல்களால் ஒரு நோன்பாளி பலம் பெற்று தமது
நோன்புகளை தொடர முடிகிறது.
இதை தான் அல்லாஹுத் தஆலா தன் அருள்மறையாம் திருக்குர்ஆனில்
கூறும் போது
يٰـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا كُتِبَ عَلَيْکُمُ
الصِّيَامُ کَمَا كُتِبَ عَلَى الَّذِيْنَ مِنْ قَبْلِکُمْ لَعَلَّكُمْ تَتَّقُوْنَۙ
‘ஈமான் கொண்டோர்களே
! உங்களுக்கு முன்இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள்
மீதும் (அது) விதிக்கப்பட்டுள்ளது;
(அதன் மூலம்) நீங்கள் இறையச்சமுடையோர் ஆகலாம்’. (திருக்குர்ஆன் 2:183)
என்று கூறுகிறான்.
அல்லாஹ்வின் நல்லடியார்களே..
இதுமட்டுமல்ல
நோன்பு வைக்கும் போது தமது பசியின் கொடுமையை உணர்வதன் மூலம், ஏழைகளின் பசியையும் அந்த மனிதன் உணர்ந்து கொள்வான்.
நமக்கு உணவளித்த இறை வனுக்கு வாழ்நாள் முழுவதும் நன்றி செலுத்திட வேண்டும் என்ற
எண்ணத்தை அவனது உள்ளத்தில் விதைக்கிறது.
அல்லாஹ்வின் நல்லடியார்களே....
நோன்பு நான்கு விதமான நோக்கங்களுக்காக நோற்கப்படுகிறது.
1) ஆன்மிக
நோன்பு,
2) அரசியல்
நோன்பு,
3) ஆரோக்கிய
நோன்பு,
4) அழகிய
நோன்பு
ஆன்மிக நோன்பு என்றால் மதம் சார்ந்த கடமை . அது இறைவனின்
ஆணைக்கிணங்க , அவனின்
திருப்தியை பெற நோற்கப்படுகிறது.
அரசியல் நோன்பு என்பது ஒருவர் தமது உரிமைக்குரலை
அரசாங்கத்தின் பக்கம் தெரிவிக்க , அரசின்
கவனத்தை பெற உண்ணாவிரதம் மேற்கொள்வது. சாகும் வரை உண்ணாவிரதம் என்பதாக கூறி இன்று
பல அரசியல் கட்சியினர் ரோட்டின் ஓரத்தில் இருக்கிறார்களே இதைத்தான் அரசியல்
நோன்பதாக கூறுவார்கள்.
ஆரோக்கிய நோன்பு என்றால் டாக்டருடைய அறிவுரையின்படி ஒரு சில
உணவுகளை சில காலங்கள் வரைக்கும் தவிர்த்து கொள்ளும்படி கூறுவார்கள் அதை ஏற்று
உண்ணாமல் இருப்பது, பத்தியம்
இருப்பது. அழகிய நோன்பு என்பதாக கூறப்படும்.
உடல் எடை கூடாமல் இருக்க ,
அழகிய தோற்றம் பெற உணவுக்கட்டுப்பாட்டை மேற்கொள்வார்கள் இதை
ஆரோக்ய நோன்பு என்பதாக கூறப்படும்.
இந்த நான்கு வகை காரணங்களுக்காக தான் உண்ணாமல், பருகாமல் உணவுக் கட்டுப்பாட்டை ஒரு மனிதன் மேற்கொள்கிறான்.
இதில் ஆன்மிக நோன்பு நோற்கும் போது, கடமையும் நிறைவேறுகிறது. இறைவனின் திருப்தியும்
கிடைத்துவிடுகிறது. இத்துடன் அனைத்துவித உடல்சார்ந்த நலன்களும், உலகம் சார்ந்த பயன்களும் கிடைத்து விடுகிறது.
நமது உயிரினும் மேலான கண்மணி நாயகம் ஸல் அவர்கள்
கூறினார்கள்.
‘ரமலானில்
நம்பிக்கையுடனும், நன்மையை
எதிர்பார்த்தும் நோன்பு நோற்பவர்களின் முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன என கூறினார்கள்’.
இறையச்சம், இறையருள், பாவமன்னிப்பு,
உடல் ஆரோக்கியம் உள்பட ஏராளமான நற்பாக்கியங்களைத்தரும்
ரமலான் நோன்பை இறைவன் வகுத்த வழியில் கடைப்பிடித்து நன்மைகள் பெறுவதற்கு நம்
அனைவருக்கும் அல்லாஹ் நஸீபாக்குவானாக.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
அ. செய்யது அலி மஸ்லஹி,
பாட்டப்பத்து,
திருநெல்வேலி டவுண்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக