சனி, 31 மார்ச், 2018

6. நபிமார்கள் வரலாறு.


6. நபிமார்கள் வரலாறு

( ரூஹு என்னும் ஆன்மா )

இறைவன் அம் மண்ணுருவியின் தலையில் தன் ஆவியை ஊதினான் என்றும் அதன் தொப்பூழில் ஊதினான் என்றும் இரு விதமாகக் கூறப்படுகிறது
."நான் என் ரூஹி லிருந்து அவரில் ஊதினேன்" என்றே இறைவன் கூறுகிறான்.

அது தலையிேல நுழைந்தது. என்ன வியப்பு ! அது உடனே சதையும் எலும்புமாக ஆகி விட்டது. பின்னர் அது நெற்றி, செவி, நாவு ஆகியவற்றிற்கு வந்து பின்னர் உடலிற்குள் புகுந்து முதுகு வழியாக இடுப்புக்கு வந்தது. அதற்கு மேல் செல்ல வழியில்லாது மீண்டும் மேலே வந்து கண்களிலே இறங்கியது. அவ்வளவுதான். கண்கள் ஒளி பெற்றன.

அதன் பின் மூக்கில் இறங்கியது. ஆதம் (அலை) அவர்கள் தும்மினர்கள் .அப்பொழுது இறைவன் ஜிப்ரீலை நோக்கி , ஜிப்ரீலே ..! அந்தத் தும்மலைப் பிடித்து வைத்துக் கொள்ளும் ! நான் அதைக் கொண்டு என் நல்லடியார் ஈஸாவைப் படைக்க விரும்புகிறேன்" என்று கூறினான்

ஆதம் (அலை) தும்மும் போது "அல்ஹம்து லில்லாஹ் ! "எல்லாப் புகழும் இறைவனுக்கே " என்று கூறியதும் , "ஆதமே ! உம் மீது என் அருள்பொழியட்டும் ! " இதற்காகவே நாம் உம்மைப் படைத்தோம் " என்று கூறினான்.

ஆதமின் தும்மலிருந்த பிடித்து வைத்த ரூஹை ஈஸா (அலை ) அவர்களைப் படைக்கும் போது அவருடைய தாயிடம் ஊதப்பட்டதாக குர் ஆனில் அல்லாஹ் ..

وَالَّتِىْۤ اَحْصَنَتْ فَرْجَهَا فَـنَفَخْنَا فِيْهَا مِنْ رُّوْحِنَا وَ جَعَلْنٰهَا وَابْنَهَاۤ اٰيَةً لِّـلْعٰلَمِيْنَ‏ 
தன் கற்பைக் காத்துக்கொண்ட (மர்யம் என்ப)வரை(யும் நீங்கள் ஞாபகமூட்டுங்கள். நம்முடைய தூதர்) ஜிப்ரீல் மூலம் அவருடைய கர்ப்பத்தில் நாம் ஊதினோம். அவரையும் அவருடைய மகனையும் உலகத்தாருக்கு ஓர் அத்தாட்சியாகவும் ஆக்கினோம்.
(அல்குர்ஆன் : 21:91)

தும்மல், காற்று தவிர வேறு எந்த வெளிப் பொருளும் மூக்கில் நுழைந்தால், நமது மூக்கு அதை அனுமதிக்க மறுக்கிறது. அதற்கான அனிச்சைச் செயல்தான் தும்மல்.

மூக்கில் ஒரு மென்மையான சவ்வுப் படலம் உள்ளது. இது நிறமற்ற திரவத்தைச் சுரக்கிறது.

அளவுக்கு அதிகமாகத் தூசியோ, துகளோ மூக்கில் நுழைந்து விட்டால், இந்தச் சவ்வுப் படலம் தூண்டப்பட்டு, அதிக அளவில் நீரைச் சுரக்கிறது. இதன் தூண்டுதலால், நுரையீரல், தொண்டை, வாய் மற்றும் வயிற்றுத் தசைகள் ஒன்று சேர்ந்து மூச்சுப் பாதையில் உள்ள காற்றை அழுத்தமாகவும் வேகமாகவும் மூக்கு வழியாக வெளித் தள்ளுகின்றன. இதைத்தான் தும்மல் என்பர். இவ்வாறு தும்மும்போது அந்த அந்நியப் பொருள் வெளியேற்றப்படுகிறது.

ஒரு தும்மலின் வேகம் மணிக்கு 160 கி.மீ. எனக் கணக்கிட்டுள்ளனர். அமெரிக்க ஆய்வாளர்கள், நாம் தும்மும்போது நம் மூக்கு மற்றும் வாயிலிருந்து வெளிப்படும் திரவத்தின் வெவ்வேறு நுண்ணிய வடிவங்களை முதன் முறையாக வரைபடம் போல வடிவமைத்திருக்கிறார்கள்.

ரஹ்மத் ராஜகுமாரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக