சனி, 24 மார்ச், 2018

4. நபிமார்கள் வரலாறு.

கருத்துகள் இல்லை:

(தாவரமும் , மனித படைப்பும்)

மனிதன் மண்ணின் சாரத்திலிருந்து படைக்கப்பட்டான் என்பதை பேராசிரியர் மாரிஸ் புகைல்ஸும் ஏற்றுக் கொள்கிறார்.


இந்த மண்ணின் சாரத்திலிருந்துதான் ஆதம் (அலை) அவர்களும் பாடக்கப் பட்டார்கள் .அவர்களின் மக்களான அனைத்து மனிதர்களும் படைக்கப்பட்டனர் .இன்றும் படைக்கப்பட்டு வருகின்றனர்.

மண்ணில் பல சத்துகள் உள்ளன.அவற்றில் இரண்டு நைட்ரஜனும் ,நுண்ணுயிரான பாக்டீரியாவும் ஆகும் .

இந்த பாக்டீரியா , நைட்ரஜனைப் புரதகத்துக்கான முதன்மைப் பொருளாக
மாற்றுகிறது. அதனைத் தாவரங்கள் உறிஞ்சி தமக்குள்ளே புரத சத்தாக மாற்றுகின்றன.

அத்தாவரங்கள் தரும் காய்கறிகளையும் , கனிகளையும் மனிதன் உண்ணுகின்றான். மனிதன் உணவாக உண்ணும் விலங்குகளும் அதே தாவரங்களையே உணவாக உண்ணுகின்றன.

ஒளிச்சேர்க்கை நிகழ்வின்போது
(photosynthesis)
சூரியஒளியானது பசுமையான இலைகளின் மீது ஒளிர்கையில், அவ்விலைகளிலுள்ள பசுங்கணிகங்களில் ஒளிச்சேர்க்கை என்னும் வேதியியல் மாற்றம் ஏற்படுகிறது.

அதனால் இலைகள் தங்கள் உணவினைத் தயாரிக்கின்றன. அப்போதுகரியமில வாயுவும் உட்கொள்ளப்படுகிறது. (உயிர்கள் வெளியிடும் மூச்சுக்காற்று ) பிராண வாயு வெளிவிடப்படுகிறது (உயிர்கள் உட்கொள்ளும் மூச்சுக்காற்று )

ஒளிச்சேர்க்கை மூலம் தாவரங்கள் உணவைத் தயாரித்து சேமிக்கின்றன.

இதனால் மனிதனின் ஒவ்வொர் உயிர் அணுவும் அதனைப் பயன்படுத்துகின்றன. மேலும் அத்தாவரங்கள் ஒளிச்சேர்க்கையில் சேர்ந்த மாவுப் பொருளையும் (கார்போஹைட்ரேட்டையும் )மனிதன் பயன் படுத்துகின்றான்.

இச் சத்துக்களின் வாயிலாக ஆண் விந்தும் , பெண் இந்திரியமும் ஏற்பட்டு பின்னர் உடலுறவில் ஒன்று சேர்ந்து குழந்தையாக உருவாகிப் பிறக்கிறது .

இதையே குர்ஆனில் மனிதனின் படைப்பை தாவரங்களின் படைப்போடு ஒப்பிட்டு கூறி இருப்பது உங்கள் சிந்தனைக்கு விருந்தளிக்கும் .கீழ்க்கண்ட வசனத்தைக் கவனியுங்கள் .

يٰۤـاَيُّهَا النَّاسُ اِنْ كُنْـتُمْ فِىْ رَيْبٍ مِّنَ الْبَـعْثِ فَاِنَّـا خَلَقْنٰكُمْ مِّنْ تُرَابٍ ثُمَّ مِنْ نُّـطْفَةٍ ثُمَّ مِنْ عَلَقَةٍ ثُمَّ مِنْ مُّضْغَةٍ مُّخَلَّقَةٍ وَّغَيْرِ مُخَلَّقَةٍ لِّـنُبَيِّنَ لَـكُمْ‌  وَنُقِرُّ فِى الْاَرْحَامِ مَا نَشَآءُ اِلٰٓى اَجَلٍ مُّسَمًّى ثُمَّ نُخْرِجُكُمْ طِفْلًا ثُمَّ لِتَبْلُغُوْۤا اَشُدَّكُمْ ‌ وَمِنْكُمْ مَّنْ يُّتَوَفّٰى وَمِنْكُمْ مَّنْ يُّرَدُّ اِلٰٓى اَرْذَلِ الْعُمُرِ لِكَيْلَا يَعْلَمَ مِنْ بَعْدِ عِلْمٍ شَيْــٴًـــا‌  وَتَرَى الْاَرْضَ هَامِدَةً فَاِذَاۤ اَنْزَلْنَا عَلَيْهَا الْمَآءَ اهْتَزَّتْ وَرَبَتْ وَاَنْبَـتَتْ مِنْ كُلِّ زَوْجٍ بَهِيْجٍ‏ 
மனிதர்களே! (மறுமையில் உங்களுக்கு உயிர் கொடுத்து) எழுப்புவதைப் பற்றி நீங்கள் சந்தேகம் கொண்டால் (உங்களை முதலில் எவ்வாறு படைத்தோம் என்பதைக் கவனியுங்கள்.) நிச்சயமாக நாம் உங்களை (உங்கள் மூலப் பிதாவாகிய ஆதமை) மண்ணில் இருந்தே (படைத்துப்) பின்னர் இந்திரியத் துளியிலிருந்து, பின்னர் அதனை ஓர் இரத்தக் கட்டியாகவும், பின்னர் (அதனை) குறைவடிவ அல்லது முழு வடிவ மாமிசப் பிண்டமாகவும் (நாம் உற்பத்தி செய்கிறோம். நம்முடைய வல்லமையை) உங்களுக்குத் தெளிவாக்கும் பொருட்டே (இவ்வாறு படிப்படியாகப் பல மாறுதல்களை அடைய) ஒரு குறிப்பிட்ட காலம் வரையில் தங்கி இருக்கும்படி செய்கிறோம். பின்னர், உங்களைச் சிசுக்களாக வெளிப்படுத்தி நீங்கள் உங்கள் வாலிபத்தை அடையும்படிச் செய்கிறோம். (இதற்கிடையில்) இறந்து விடுபவர்களும் உங்களில் பலர் இருக்கின்றனர். (அல்லது வாழ்ந்து) அனைத்தையும் அறிந்த பின்னர் ஒன்றுமே அறியாதவர்களைப்போல் ஆகிவிடக் கூடிய தள்ளாத வயது வரையில் விட்டு வைக்கப்படுபவர்களும் உங்களில் இருக்கின்றனர். (மனிதனே!) பூமி (புற்பூண்டு ஏதுமின்றி) வறண்டு இருப்பதை நீ காணவில்லையா? அதன் மீது நாம் மழையை பொழியச் செய்தால், அது பசுமையாகி வளர்ந்து அழகான பற்பல வகை (ஜோடி ஜோடி)யான உயர்ந்த புற்பூண்டுகளை முளைப்பிக்கிறது.
(அல்குர்ஆன் : 22:5)

ரஹ்மத் ராஜகுமாரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 
back to top