சனி, 24 மார்ச், 2018

5. நபிமார்கள் வரலாறு.


(வானமும் , வையகமும் அவரில் படைத்தான் )

ஆதத்தின் உடலினில் விண்ணிலுள்ள 12 ராசிகளையும் பிரதிபலிக்கச் செய்தான் .


தலை - மேஷத்தையும்,
கழுத்து - ரிஷபத்தையும்
கைகள் - மிதுனத்தையும்
மார்புக் காம்புகள் _ கடகத்தையும்
மார்பு -சிம்மத்தையும்
இதயம் - கன்னியையும்
தொப்பூழ் - துலாத்தையும்
இன உறுப்பு - விருச்சிகத்தையும்
தொடைகள் - தனுசையும்
பிட்டி - மகரத்தையும்
கால்கள் - கும்பத்தையும்
பாதங்கள் - மீனத்தையும்
பிரதிபலித்தன.

வையகத்திற்கு அனுப்பப்படவிருக்கும் அந்த முதல் மாமனிதரிடம் மண்ணகமும் அதில் உள்ளவை அனைத்தும் பிரதிபலித்தன .

எலும்புகள் - மலைகளையும்,
இரத்தக் குழாய்கள் - ஆறுகள் மற்றும் ஓடைகளையும் ,
வயிறு -கடலையும் .அதிலுள்ள உயிரினங்களையும் ,
மயிர்கள் - மரங்களையும்,
பற்கள் - விலங்குகளையும் ,
ஆன்மா - பறவைகளையும் .
முகம் - மனிதர்கள் வாழும் பகுதியையும்
முதுகு - மனிதர்கள் வாழாக் காடு , வனாந்தரங்களையும் பிரதிபலித்தன.

உலகின் பருவ காலங்களையும் அவரில் பிரதிபலித்தன.

இளமை - வசந்த காலத்தையும்
வாலிபம் - வேனிற்காலத்தையும்
முதுமை - குளிர் காலத்தையும் ,
முடிவு - இலையுதிர் காலத்தையும் பிரதிபலித்தன .

சுருங்கக் கூறின் அவரில் மொத்த பிரபஞ்சத்தையே இறைவன் வைத்தான்.
இதன் காரணமாகவே அலீ (ரலி) அவர்கள், " மனிதனே ...! நீ என்ன சிறிய சடலம் என்றா உனை நினைக்கின்றாய் ?
உனக்குள்ளே பெரிய பிரபஞ்சமே அமைந்து கிடக்கின்றதே " என்னும் கருத்தை உள்ளடக்கி,
" அதஹ்ஸிபு அன்னக ஜிஸ்முன் ஸகீருன் வஃபீக்கன்தவல் ஆலமுல் கபீரு " என்று கூறினார்கள்.

ரஹ்மத் ராஜகுமாரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக