சனி, 24 மார்ச், 2018

1. நபிமார்கள் வரலாறு.




(120 வருடங்களும் ,120 நாட்களும் )

களிமண்ணில் தான் செய்த உருவத்தை  இறைவன் மக்காவுக்கும் , தாயிபுக்கும் இடையில் கிடக்கச் செய்தான் .


மண்ணாக 40 ஆண்டுகள் கிடந்ததென்றும் ,

நீர் விட்ட குழைத்த மண்ணாக 40 ஆண்டு கள் கிடந்ததென்றும் ,

அதன் பின் நாற்றமுள்ள மண்ணாக 40 ஆண்டுகள் கிடந்ததென்றும் ,

அதன் பின்தான் அதில் உயிர் (ரூஹ்) ஊதப்பட்டது என்று லஹ்ஹாக் (ரஹ்) அவர்கள் கூறுகின்றனர் .

இதன் காரணமாகவே கருவிலுள்ள குழந்தைக்கு ஒரு நூற்று இருபது நாட்களில் உயிர் ஊட்டப்படுகிறது என்று கூறப்படுகிறது .

அதென்ன ஆதம் நபிக்கு 120 வருடங்களில் ரூஹ் ஊதப்படுகிறது. அவருடைய மக்களுக்கு 120 நாட்களில் ரூஹ் ஊதப்படுகிறது ?

ஆதம் (அலை) அவர்களுக்கு  1000 வயது
அவருடைய மக்களுக்கு 100 வயது.

ரஹ்மத் ராஜகுமாரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக