உன் சின்னச் சிறு சிரிப்பிற்காக
அழுது அழுது நடிப்போம்
நீ ஒங்கி ஒர் குத்துவிட்டால்
பாய்ந்துபோய் விழுவேன்;
எலும்புகள் திடகாத்திரமான போதே;
எல்லாம் உன் வெடிச்சிரிப்பிற்காக..
இளமையில் கல்
என்பதை உனக்கு நிறைவேற்ற;
நான் கல் சுமந்தேன் அயல்தேசத்தில்..
இன்றோ!
பார்த்து பார்த்து வளர்த்த எங்களை
பார்க்கவே மாட்டேன் என்கிறாய்;
வயதாகிவிட்டதால்; கிழடாகிவிட்டோம்;
எலும்புகளும் நரம்புகளும் ஒய்வுக்கேட்பதால்
பாராமாகிவிட்டோம் உனக்கு!
தற்போது
மெல்ல கனக்கிறது நெஞ்சம்;
என் பேரப்பிள்ளைக்காக
நீயும் பாய்ந்து விழுகிறாய்;
அவன் வெடிச்சிரிப்பை எதிர்பார்த்து…
-யாசர் அரஃபாத்
Ganatthu vittathu in nenjamum
பதிலளிநீக்கு