வெள்ளி, 15 நவம்பர், 2013

ஆல் இன் ஆல் அஸா



அஸாவானது சுவனத்திலுள்ள அவ்சஜ் என்ற முட்செடியின் கொம்புகளில் ஓன்று என்றும் கூறப்படுகிறது.
ஆதம் அலை அவர்கள் விண்ணிலிருந்து கொண்டு வந்தார்கள் என்றும். மண்ணகம் வந்த ஆதம் அலை அவர்களுக்கு தீங்கிழைக்க வன விலங்குகள் அவர்களை அனுகிய பொழுது அவற்றை விரட்டியடிக்க அது இறைவனால் விண்ணகத்திலிருந்து அனுப்பி வைக்கப்பட்டதென்றும். இரு வேறு விதமாக கூறப்படுகிறது.
அது வழி வழியாக வந்து ஷூஐப் அலை அவர்களின் கரம் வந்ததென்றும் கூறப்படுகிறது.
அதன் முழம் பத்து முழம் என்றும் நாற்பது முழம் என்றும் கூறப்படுகிறது.
 அது பத்தடி நீளமுள்ளதாக இருந்தது. என்றும் அதிலே இரு கிளைகள் இருந்தன. அதன் அடிப்பாகத்தில் இரும்பாலான ஈட்டி இருந்தது. அதற்க்கு மஸாஸூத் என்றும் நகா ஆ என்றும் நபீஸா என்றும் அய்யாத் என்றும் அத்தீக் என்றும் இயாத் என்றும் நபாஅ என்றும் பல்வேறு பெயர்கள் உள்ளன.
அதன் பெயர் கஅஃபா என்று மகாத்தில். இப்னு ஸுலைமான் அவர்கள் கூறுகிறார்கள்.
அதன் பெயர் கியாஸ் உதவி செய்பவர் என்று மகாத்தில். இப்னு ஹிப்பான் சொல்கிறார்கள்.
சிலர் அதன் பெயர் ஜாஹித் தூய்மையானது என்றும் பலர் தன் பெயர் அலீகா என்றும் சொல்கிறார்கள்.
ஆனால இறைவன் அதனைத் திருக்குர்ஆனில் அஸா என்றும் ஹையத் என்றும் ஸூஃபான் என்றும் கூறுகின்றான்.

அந்த அஸாவினால் எழுபது அற்புதங்கள் நிகழ்த்தப்பட்டன  என்று அப்துல்லாஹ் ப்னு அப்பாஸ் ரலி அவர்கள் கூறுகிறார்கள். ஆனால் திருக்குர்ஆனில் அதனால் கடலைப் பிளக்கச் செய்த்தது. கல்லை அடித்து பன்னிரன்டு நீறுற்றுக்கள் வரச் செய்தது. ஆகிய இரண்டு அற்புதங்களே பொறிக்கப்பட்டுள்ளன.
அந்த அஸாவினால் ஏற்ப்பட்ட பதினெட்டு அற்ப்புதங்கள்.u
1.நபி மூஸா அலை அவர்கள் தமக்கு களைப்பு மிகும்பொழுது அதன் மீது ஏறிக் கொள்வார்கள் அது அவர்களை சுமந்து கொண்டு அரபிக் குதிரை போன்று ஓடும்.
2.இருளில் அது விளக்கென அதன் ஓரு கிளை சூரியன் போன்றும் மற்றொரு கிளை சந்திரன் போன்றும் ஓளிரும்.
3.அவர்களுக்கு தாகம் ஏற்ப்படின் அதனைக் கிணற்றில் விட வேண்டியது தான். அது நீண்டு அதன் முடிவில் வாளி போல் ஆகி தண்ணீர் மொண்டு கொண்டுவரும்.
4.அவர்களுக்கு பசி ஏற்ப்பட்டால் மண்ணில் அதனை அடிப்பார்கள் மண்ணிலிருந்து உணவு வெளிப்படும்.
5.அவர்கள் கனி தின்ன விரும்பினால் அவர்கள் அதனை மண்ணில் நடுவார்கள். அது தளிர்த்து பூத்துக் காய்த்துப் பழங்களைச் தரும்.
6.அவர்கள் நறுமணம் நுகர ஆசைப்பட்டால் அதைத் தேய்த்தால் போதும் அம்பரும் கஸ்தூரியும் நறுமணம் வீசும்.
7.பாறை மீது ஆற்றின் மீது அதை அடித்தால் அது பிளந்து வழி விடும்.
8.சில நேரம் அதன் இரு கிளைகளிலும் தேனும் பாலும் வழிந்தோடும் அதநை அவர்கள் குடிப்பார்கள்.
9.எதிரிகள் மீது அதை ஏவினால் அது கருநாகமாக மாறி அவர்களாக் கொன்று குவித்து திரும்பி வரும்.
10.அதைக் கொண்டு அவர்கள் ஆடு மாடுகளை மேய்க்கவும் மரங்களிலிருந்து அவற்றிற்க்கு குழை ஓடிக்கவும் செய்வார்கள்
11.ஆறுகளைக் கடக்க அது பாலமாகவும் பயன்படும்.
12.பிரயாணத்தில் வழி மறந்து விட்டால் அது வழி காட்டும்.
13.பயங்கர வழியில் அவர்கள் காலெடுத்து வைத்தால் அவர்களை செல்ல விடாது தடுக்கும்.
14.பக்கத்தில் வரும் தீய பூச்சிகளை அது அப்பறப்படுத்தி விடும்.
15.பிரயாணத்தில் அதன் மீது பொருட்களை மாட்டி தோளில் தொங்க வைத்துக் கொண்டால் கணம் தெரியாது.
16.உறங்கும் போது ஆடுகளைப் பாதுகாக்கும்.
17.பிர்அவ்ன் ரகசியமாக பேசும் பேச்சுக்களை அது மூஸா அலை அவர்களுக்கு தெரியப்படுத்தும்.
18.ஓவ்வொரு வியாழக் கிழமை மதினா சென்று அண்ணல் நபி ஸல் அவர்கள் அடங்க இருக்கும் இடத்தில் நின்று ஸலவாத் ஓதி அவர்களின் உம்த்துக்காக துஆச் செய்து விட்டு மீண்டும் மூஸா அலை அவர்களிடம் வந்து சேரும்.

முஆவியா ரலி அவர்களுக்கு ரோமனியப் பேரரசரிடமிருந்து ஓரு கடிதம் வந்தது. தாய் வயிற்றிலிருந்து பிறக்காது இவ்வுலகிற்க்கு வந்த நான்கு பொருள்கள் என்ன... என்று கேட்டிருந்தார்கள்.
அதற்க்கு முஆவியா ரலி அவர்கள்.
1.ஆதம் அலை அவர்களும்.
2.ஹவ்வா அலை அவர்களும்.
3.இஸ்மாயில் ஏலை அவர்களுக்கு பகரமாக அறுக்க விண்ணிலிருந்து கொண்டு வரப் பட்ட செம்மறியடும்.
4.மூஸா அலை அவர்களின் அஸா பாம்பாக மாறிய போது ஆகும். என்று பதில் எழுதினார்கள்.











1 கருத்து: