புதன், 27 நவம்பர், 2013

“இறைவா எனக்கு ஓரு ரூபாய் கொடேன்.”




இறைவனிடம் ஓருவன் கேட்டானாம்,. ஆண்டவனே ஓரு கோடி ரூபாய் என்பது உன்னைப் பொறுத்தவரையில் எவ்வளவு....?”  ஆண்டவன் சொன்னான், ஓரு ரூபாய்.  அடுத்து அவன் கேட்டான். ஆண்டவனே ஓரு யுகம் என்பது உனக்கு எவ்வளவு காலம்..?”  ஆண்டவன் சொன்னானாம்.  ஓரு நிமிடம்.
 பக்தனுக்கு புரிந்தது. அவன் ஆண்டவனிடம் இறைவா எனக்கு ஓரு ரூபாய் கொடேன்.” என்றானாம். உடனே ஆண்டவன் இதோ ஓரு நிமிடத்தில் என்றானாம்.
திருக்குர்ஆனில் ஓரு வசனம் வருகிறது.


والله خير المكرين


அதாவது திட்டம் போடுபவர்களையெல்லாம் விட மேலான திட்டமிடுபவன் இறைவன் தான் என்ற அர்த்தம். அதாவது மக்கர் பண்ணுபவனையெல்லாம் விட டக்கராக மக்கர் பண்ணுபவன் அவன் தான் என்று பொருள். அதாவது இறைவனிடம் நமது பருப்பு வேகாது என்று அர்த்தம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக