ஞாயிறு, 25 பிப்ரவரி, 2024

ஆடம்பரம் ஆடும் பம்பரம்!


 ஆடம்பரம் என்பது நமக்கு நாமே

தேடிக் கொள்ளும் வறுமை! - சாக்ரடீஸ்

ஆடம்பரச் செலவு என்பது தரித்திரத்தை
விலை கொடுத்து வாங்குவது போல. - தந்தை பெரியார்

வாழ்வில் ஆடம்பரம் அதிகரிக்க அதிகரிக்க ஒழுக்கம் மறையத் தொடங்கும். ஆகவே, ஆடம்பரம் ஆபத்து. எளிமையான வாழ்வே உண்மையான வாழ்வு. - ஜனாதிபதி அப்துல் கலாம்.

பணம் வந்ததும் குணத்தை மாற்றாதே!
பதவி வந்ததும் அதிகாரத்தைக் காட்டாதே!
ஆடம்பரம் வந்ததும் ஆணவத்துடன் ஆடாதே! ஏனெனில், இந்த உலகில் எதுவும் யாருக்கும் நிரந்தரமில்லை.



ஆடம்பரம் என்ற மிருதுவான படுக்கையில் பல பெரிய அரசுகள் இருந்த இடம் தெரியாமல் அழிந்து போயுள்ளன.

தோசை அத்தியாவசியமானதுதான். ஆனால், முந்திரி தோசை - பிஸ்தா தோசை என்பது ஆடம்பரமானது.

பிறரது மனதைக் கவர ஆடம்பரம் தேவையில்லை. கண்ணியமான உடையும் மலர்ந்த புன்னகையுமே போதுமானது.

ஆடம்பரம் என்பது, உயரே பறக்கும் பட்டம்போல. எப்போது வேண்டுமானாலும் ஆரம்பித்த இடத்துக்கே திரும்பி வரலாம்.

'
பம்பரம்' போல சுறுசுறுப்பாக உழைத்துச் சேர்த்த செல்வத்தை 'ஆடம்பரம்' என்ற ஆசையால் வீண் விரயம் செய்துவிடாதே!

'
ஆடம்பரம்' என்ற பாதையில் சென்றவன்தான்
'
அடமானம்' என்ற பாதையில் சிக்கித் தவிக்கிறான்.

ஆனந்தமான வாழ்வு வாழ ஆடம்பரமான பொருள்கள் தேவையில்லை. அன்பானவர்கள் நம்முடன் இருந்தாலே போதுமானது.

வாழ்வதற்கு செலவு மிகக் குறைவுதான். ஆனால், அடுத்தவங்களைப் போல வாழத்தான் செலவு மிக அதிகம்.

ஆடம்பரம் என்பது ஆடும் பம்பரம் போன்றது. அது எப்போது வேண்டுமானாலும் சாய்ந்துவிடலாம்.

ஆடம்பர வாழ்க்கை வாழ்வது தவறில்லை. மாறாக,
நமது ஆரம்ப வாழ்க்கையை மறந்துவிடுவதுதான் தவறு.

வசதியான வாழ்க்கை வாழ்வது தவறல்ல. மாறாக,
'
வசதிதான்... வாழ்க்கை!' என்று எண்ணுவதுதான் தவறு.

இறுதியாக நச்சென்ற ஒரு பாயிண்ட்!

பெற்றோர் வைத்த பெயரும் பிணம் என்று மாறுது.
விரும்பி நீ அணிந்த ஆடையும் கந்தல் ஆகுது.

பாடுபட்டு சேத்த பணமும் வாரிசு இடம் போய் சேருது.
கூடி வாழ்ந்த மனைவியும் உன் கூட'வே' வா சாகுது.

ஓடியாடி உழைத்த உடம்பு உயிரை விட்டுக் கிடக்குது.
உயிர் கொடுப்பேன் என்றதெல்லாம் ஊமையாக நிக்குது.

சொந்தம் என்று சொல்வதெல்லாம்
உனக்கு சொந்தம் இல்லை, நீ வந்த இந்த உலகில்.

சொல்லப்போனால், நீயே உனக்கு சொந்தம் இல்லை.
பின் ஏன்... இந்த ஆர்ப்பாட்டமும் ஆடம்பரமும்?
-----------------------------------------
-
கே.ரஹ்மதுல்லாஹ் மஹ்ளரீ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக