புதன், 21 பிப்ரவரி, 2024

பொறுமை வேண்டும்.

 


செய்யும் செயல்களிலும்
செய்யப்படும் முயற்சிகளிலும்
பொறுமை வேண்டும்.


வாழ்வில் வெற்றிக்கு
பொறுமை வேண்டும்.


தோல்வி கண்ட பின்பும்
பொறுமை வேண்டும்.


துன்பத்திலிருந்து மீள
துரோகியை கண்ட பின்பும்
பொறுமை வேண்டும்.


எதிரிகளின் எண்ணங்களை
எதிர்கொள்ள பொறுமை வேண்டும்.


கிடைக்கும் பொறுப்புகளில்
கேட்கும் வார்த்தைகளில்
பொறுமை வேண்டும்.


வேண்டாத வார்த்தைகளை
கேட்கும் பொழுதும்
பொறுமை வேண்டும்.


இன்ப துன்பத்திலும்
பொறுமை வேண்டும்.


பணத்தையும் பந்தத்தையும்
கையாள பொறுமை வேண்டும்.


சூழ்ச்சிகள் நிறைந்த சூழ்நிலையில் 

நாம் நினைத்ததை
அடைய  பொறுமை வேண்டும்.


வாழ்வில் அனைத்திலும் பொறுமை வேண்டும்.

பொறுமை இல்லாத வாழ்வில்

வெறுமையே முடிவாகும். 


அருள்மறையாம் திருக்குர்ஆனில் அல்லாஹ் கூறுகிறான்.


يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اسْتَعِينُوا بِالصَّبْرِ وَالصَّلَاةِ ۚ إِنَّ اللَّهَ مَعَ الصَّابِرِينَ

இறைநம்பிக்கை கொண்டவர்களே…! பொறுமையின் மூலமும் தொழுகையின் மூலமும் இறைவனிடம் உதவி தேடுங்கள். நிச்சயமாக, இறைவன் பொறுமையாளர்
களுடன் இருக்கிறான்.” (குர்ஆன் 2:153)



இப்ராஹிம் கனி மிஸ்பாஹி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக