அஸ்ஸலாமு அலைக்கும்
வரஹ்....
நஹ்மதுஹு வநுஸல்லி அலா
ரசூலிஹில் கரீம் அம்மா பஃத்.
ஃபகத் காலல்லாலாஹு தஆலா
ஃபில் குர்ஆனில் மஜீத் வல் ஃபுர்கானில் மஜீத் அவூது பில்லாஹி மினஷ் ஷெய்தானிர்
ரஜீம். பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
நமது உயிரினும் கண்மணி
நாயகம் ஸல் அவர்கள் மீதும் அவர்களின் தோழர்கள் மீதும் நாதாக்கள் நல்லோர்கள்
அனைவரின் மீதும் குறிப்பாக இந்த மீலாது / எங்கள் மதரஸாவின் ஆண்டு விழா நிகழ்வில்
பங்கொண்டு அல்லாஹ்வையும் ரசூலையும் நினைவு கூர்ந்து நன்மையை அடைந்து கொள்ள இங்கு
வந்திருக்கும் நம் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் அன்பும் அருளும் என்றும் நின்று
நிலவட்டுமாக. ஆமீன்.
எனது பெயர்
.................................................
நான் இங்கு அனைத்து
சூழ்நிலையிலும் அல்லாஹ் என்ற தலைப்பில் பேச வந்திருக்கிறேன்.
எனக்கு இங்கு பேச
வாய்ப்பளித்த எனது ஹஸ்ரத் அவர்களுக்கும் ஜமாத்தார்களுக்கும் உங்கள் அனைவருக்கும்
ஸலாத்தைக் கூறி எனது உரையை துவங்குகிறேன்.
கண்ணியத்திற்குரிய
அல்லாஹ்வின் நல்லடியார்களே...
முஸ்லிம்களாகிய நாம் நமது அன்றாட வாழ்க்கையில் இன்ஷா
அல்லாஹ். மாஷா அல்லாஹ். அல்ஹம்து லில்லாஹ். அஸ்தஃபிருல்லாஹ். அவூதுபில்லாஹ்.
நவூதுபில்லாஹ். பிஸ்மில்லாஹ். ஃபி அமானில்லாஹ். இது போன்ற அர்த்தம் நிறைந்த பல
வார்த்தைகளை தினமும் பலமுறை பயன்படுத்துகிறோம்
அந்த வரிசையில் ‘இன்ஷா அல்லாஹ்’ என்ற ஒரு வார்த்தை உள்ளது. அதன் அர்த்தம் (இறைவன் நாடினால்) என்பதாகும்.