சனி, 15 டிசம்பர், 2018

ஒளுவைப் பற்றிய கேள்வி : பதில்கள்.



கேள்வி : ஒளு என்றால் என்ன...?

பதில் : ஒளு என்றால் முகம் இரு கைகள் கழுவப்படுவதுடன், தலையை நனைத்த கையால் தடவுவதும், இரு கால்களை கரண்டை மொழி உட்பட கழுவுவதற்குச் சொல்லப்படும்.


கேள்வி : ஒளு செய்யாவிட்டால் தொழுகை நிறைவேறுமா...?

பதில் : ஒளுச் செய்யாவிட்டால் தொழுகை நிறைவேறாது.

கேள்வி : ஒளுவில் எத்தனை பர்ளுக்கள் உள்ளன...?

பதில் : நான்கு பர்ளுக்கள் உள்ளன.
v  1 முகம் கழுவுதல். அது எவ்வாறென்றால், நெற்றி உரோமம் முதல்      
  காதுகளின் சேனைவரையும் தாடையுட்பட கழுவுவதாகும்.
v  
 2 இருகைகளையும் முழங்கை மூட்டு வரை கழுகுதல்.

v  3 தலையில் கால் பகுதி மஸஹ் செய்தல்.

v  4 இரு கால்களையும் கணுக்கால் உட்பட கழுவுதல். ஆக இந்நான்கும் பர்ளுகளாகும்.

கேள்வி : ஒளுவின் சுன்னத்துகள் எத்தனை..?

பதில் : ஒளுவின் சுன்னத்துகள் பதிமூன்று.
v  
 1 நிய்யத் செய்தல்.

v  2 பிஸ்மில்லாஹ் சொல்லுதல்.

v  3 இரு கைகளையும் மணிக்கட்டு வரை கழுவுதல். கழுகும் போது இரு கைவிரல்களையும் கோதிக் கழுகுதல்.

v  4 பற்களை துலக்குதல்.

v  5 வாய் கொப்பளித்தல்.

v  6 மூக்கிற்குள் நீர் செலுத்துதல்.

v  7 அடர்ந்த தாடியை கோதிக்கழுவுதல்.

v  8 கால் விரல்களைக் கோதிக் கழுகுதல்.

v  9 ஒவ்வொரு உறுப்பையும் மூன்று முறைக் கழுகுதல்.

v  10 தலை முழுவதும் நனைந்த கையால் மஸஹ் செய்தல்.

v  11 இரு காதுகளையும் மஸஹ் செய்தல்.

v  12 ஒவ்வொரு பர்ளான உறுப்புகளையும் வரிசைப்படி தர்தீபாக செய்தல்.

v  13 ஒர் உறுப்பு காயுமுன் மறு உறுப்பைக் கழுவுதல். இவைகள் சுன்னத்துகளாகும்.

கேள்வி : ஒளுவில் எந்தெந்த செயல்கள் மக்ரூஹ்களாகும்...

பதில் : ஒளுச் செய்யும் போது உலக பேச்சுக்களைப் பேசுவதும், நீரை முகத்தில் அடிப்பதும், மறைவிடத்தை பார்ப்பதும், கறைபடிந்த பாத்திரத்தில் நீர் எடுத்து ஒளுச்செய்வதும், பர்ளான உறுப்புகளை மூன்று முறைகளுக்கு மேல் கழுவுவதாலும் ஒளுவில் மக்ரூஹ் ஏற்படும்.

கேள்வி : ஒளுவை முறிக்கும் காரியங்கள் எது...?

பதில் :

v  1 முன் பின் துவாரங்களிலிருந்து சிறுநீர் காற்று மலம் வெளியாவதைக் கொண்டு ஒளு முறிந்து விடும்.

v  2 உடலில் உள்ள புண்ணிலிருந்து இரத்தம் சீழ் நீர் வெளியாகி வடிதல்.

v  3 வாய் நிரம்ப வாந்தி எடுத்தல்.

v  4 மெய் மறந்து தூங்குதல்.

v  5 பைத்தியம் பிடித்தல்.

v  6 போதையாகுதல்.

v  7 ஒரு பொருளை உண்பதால் போதையாகுதல்.

v  8 பருவமெய்தியவர் தொழுகையில் வாய்விட்டுச் சிரித்தல்.

v  9 ஆண் பெண் இருவருடைய மறைவிடங்களும் திரையின்றி சந்தித்தல்.

v  10 இவற்றுள் ஏதாவது ஒரு செயல் நிகழ்ந்துவிடுமாயின் ஒளு முறிந்துவிடும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக