புதன், 7 அக்டோபர், 2015

5 விசயம்.

கருத்துகள் இல்லை:

இமாம் அபு ஹனிபா (ரஹ்) அவர்கள் தனது மகனுக்கு கற்று கொடுத்த 5 விசயம்
இமாம் அபூஹனீபா -ரஹ்- தனது மகன் ஹம்மாத் அவர்களுக்கு 5 ஹதீஸ்களை சுட்டிக்காட்டி இதன்படி நடந்தால் முழு மார்க்கத்தையும் கடைபிடித்தவராகலாம் என்றார்கள்..

பல்லாயிரக்கணக்கான ஹதீஸ்களிலிருந்து இமாம் அபூஹனீபா -ரஹ்- தேர்ந்தெடுத்து தன் மகனுக்கு சொன்னவை என்கிற போது இந்த ஹதீஸ்களின் முக்கியத்துவம் புலப்படுகிறது.
அறிவிற்சிறந்த அந்தப் பெருமகனாரின் அறிவுரை நமக்கும் பயன்தரக் கூடியதே!
நபிகள் (ஸல்) அவர்களின் பொன்மொழிகளில் இந்த ஐந்தையாவது நாம் ஞாபகத்தில் வைத்து, நம் பிள்ளைகளுக்கும் போதிக்கலாமே....!!!


1.முதல் ஹதீஸ்
ُ عُمَرَ بْنَ الْخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ عَلَى الْمِنْبَرِ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ إِنَّمَا الْأَعْمَالُ بِالنِّيَّاتِ وَإِنَّمَا لِكُلِّ امْرِئٍ مَا نَوَى فَمَنْ كَانَتْ هِجْرَتُهُ إِلَى دُنْيَا يُصِيبُهَا أَوْ إِلَى امْرَأَةٍ يَنْكِحُهَا فَهِجْرَتُهُ إِلَى مَا هَاجَرَ إِلَيْهِ

எந்த செயலுக்கும் நிய்யத் அவசியம். அது நல்லதாக இருக்க வேண்டும்.
இந்த ஹதீஸின் முக்கியத்துவம்
6
லட்சம் ஹதீஸ்களை மன்னம் செய்திருந்த இமாம் புஹாரி ரஹ் அதில் 7586 ஹதீஸ்களை மட்டும் தனது ஸஹீஹிற்கு தேர்வு செய்தார்கள். ஓவ்வொரு ஹதீஸை தனது நூலில் சேர்ப்பதற்கு முன்பும் மஸ்ஜிதுன்னபவியில் இரண்டு ரக அத் தொழுத பிறகே சேர்த்தார்கள்.
இப்படித் தொகுத்த அந்த நூலுக்கு முதல்ஹதீஸாக அவர்கள் நிய்யத் பற்றிய இந்த ஹதீஸையே தேர்வு செய்தார்கள்.
நிய்யத்தில் மூன்று நிலை இருக்கிறது

1. நல்லெண்ணம
2.
தீய எண்ணம்
3.
எந்த எண்ணமும் இல்லாமல் இருப்பது.

சமுதாயத்தின் பெரும் கேடு சமுதாயம் பெரும்பாலும் 3 வது நிலையிலிருக்கிறது.
நாம் மார்க்கப்படியான ஒரு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டால் எந்த காரியத்தையும் நிய்யத்தோடு அதுவும் நல்ல சுத்தமான நிய்யத்தோடு செய்து பழக வேண்டும்.
நிய்யத் சுத்தமாக இல்லாவிட்டால் உயர்ந்த வணக்கங்கள் கூட பயன் தராமல் போய்விடும்.


2.இரண்டாவ்வது ஹதீஸ்
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ حُسْنِ إِسْلَامِ الْمَرْءِ تَرْكُهُ مَا لَا يَعْنِيهِ قَالَ هَذَا حَدِيثٌ غَرِيبٌ
ஒரு முஸ்லிம் தேவையற்ற காரியங்களில் இறங்கக் கூடாது.
தேவையற்றது எது???
எது நன்மைக்குரியதில்லையோ அது தேவையற்றதுதான்.
பெரியவர்களும் இளைஞர்களூம் இந்த ஹதீஸை ஞாபகத்தில் வைத்துக் கொண்டால் ஜெண்டில் மேன் மரியாதைக்குரியவராக திகழலாம். வீண் பிரச்சினைக்கு ஆளாவதிலிருந்து அவர்களும் சமுதாயமும் பாதுகாப்புப் பெறுவர்.
 
ஒரு கேலிக்கை சபையை இப்னு மஸ்வூத் ரலி கடந்து சென்றார் அங்கே நின்று கொண்டிருக்கவில்லை.
இப்னு மஸ்வூத் மரியாதையாக எப்போதும் நடந்து கொள்கிறார் என பெருமானார் பாராட்டினார்கள்.
தனக்கு தேவையற்ற விஷயங்களிலிருந்து எப்போதும் தவிர்ந்திருக்க வேண்டும் என்பதை இந்நிகழ்வு நமக்கு தெளிவுபடுத்துகிறது.
ஆனால் சமுதாய அக்கறை இல்லாமல்,
தான் உண்டு,,தன் வேலையுண்டு என்று இருக்க வேண்டும் என்று சொல்லவில்லை.
சமுதாயத்திற்கு உழைப்பதும், தலையிடுவதும் நன்மை தரும் செயலாகும்.3.மூன்றாவது ஹதீஸ்
عَنْ أَنَسٍ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا يُؤْمِنُ أَحَدُكُمْ حَتَّى يُحِبَّ لِأَخِيهِ مَا يُحِبُّ لِنَفْسِهِ
நமக்கு நாம் எதை விரும்புவோமோ, அதையே முஸ்லிமான சகோதரர்கள் அனைவருக்கும் விரும்பவேண்டும்.
நாம் நமக்கு சிறந்தப்பொருளை வாங்குகிறோம். பிறர் என்று வருகிறபோது விலை, தரம் குறைந்ததாக வாங்கிக்கொடுக்கிறோம். இதை இஸ்லாம் தடுக்கிறது. உலகில் எந்த தலைவனும் சொல்லாத, எந்த மதமும் போதிக்காத உன்னத பாடத்தை நமக்கு நபிகளார் கற்றுத்தந்திருக்கிறார்கள்.
நாம் மன்னிக்கப்படுவத விரும்புகிறோம். பிறரை நாம் மன்னிக்கிறோமா-
மனைவி நல்லவளாக இருக்க வேண்டும் நாம் நல்லவர்களாக் அவர்களூக்கு பிடித்த மாதிரி நடந்து கொள்கிறோமா -
நாம் ஏமாற்றப்படக்கூடாது என் நினைக்கிறோம். நாமும் பிறை ஏமாற்றக் கூடாது.
சுயநலம் பேணுவது இஸ்லாமியனின் தன்மையே அல்ல என்பதைப் புரிந்துக்கொள்ள வேண்டும்.4. நான்காவது ஹதீஸ்
النُّعْمَانَ بْنَ بَشِيرٍ يَقُولُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ الْحَلَالُ بَيِّنٌ وَالْحَرَامُ بَيِّنٌ وَبَيْنَهُمَا مُشَبَّهَاتٌ لَا يَعْلَمُهَا كَثِيرٌ مِنْ النَّاسِ فَمَنْ اتَّقَى الْمُشَبَّهَاتِ اسْتَبْرَأَ لِدِينِهِ وَعِرْضِهِ وَمَنْ وَقَعَ فِي الشُّبُهَاتِ كَرَاعٍ يَرْعَى حَوْلَ الْحِمَى يُوشِكُ أَنْ يُوَاقِعَهُ أَلَا وَإِنَّ لِكُلِّ مَلِكٍ حِمًى أَلَا إِنَّ حِمَى اللَّهِ فِي أَرْضِهِ مَحَارِمُهُ أَلَا وَإِنَّ فِي الْجَسَدِ مُضْغَةً إِذَا صَلَحَتْ صَلَحَ الْجَسَدُ كُلُّهُ وَإِذَا فَسَدَتْ فَسَدَ الْجَسَدُ كُلُّهُ أَلَا وَهِيَ الْقَلْبُ
 
ஹலால் எது? ஹராம் எது? என்பதை திருமறையும், நபிமொழியும் தெளிவுபடுத்தியுள்ளது.
சந்தேகத்திற்க்குரிய சட்டங்களை விட்டுவிடுவதும், அதை தவிர்ந்திருப்பதும் அவசியமாகும்.
மனித உடல் உறுப்புகளில் உள்ளம் சரியாகிவிட்டால், மனிதனின் உள்ளும்,புறமும் பரிசுத்தமாகிவிடுகிறது.
சிறந்த வாழ்க்கைக்கு இதை விட சிறந்த தத்துவம் தேவையில்லை.
மனிதனைப் புனிதனாக்கி விடும் இது
இன்றைய நாகரீக உலகு சுய விருப்பத்தின் படியான வாழ்வை தேர்ந்தெடுத்திருக்கிறது அதனால் நாகரீக உலகில் அநாகரீகம் கொடி கட்டிப்பறக்கிறது.
இலஞ்சம், ஏமாற்றுதல் கொடிகட்டிப் பறக்கிறது = பத்திரிக்கையை திறந்தால் சமூகத்தில் படர்ந்திருக்கிற அவலங்கள் நெஞ்சைப் பதறச் செய்கிறது.
இப்போது தில்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியமைக்கிறது ,அவர்களூடைய சின்னம் துடைப்பக்கட்டை இந்திய அரசியலில் மலிந்து கிடக்கிற முறை கேடுகள், இலஞ்ச இலாவண்யத்தை துடைத்தெரிவோம் என்று அவர்கள் சூளுரைத்திருக்கிறார்கள்.
நாட்டைப் பாதுகாப்பத்ற்கு இப்படி யாராவது வரமாட்டார்களா என்று ஏங்கிக் கொண்டிருந்தது போல மக்கள் அவர்களூக்கு வாக்களித்திருக்கிறார்கள். ஊழல் பேர்வழிகளை விடமாட்டோம் என அவர்கள் சூளுரைத்திருக்கிறார்கள்.
இந்த மாற்றத்தை நாம் வரவேற்கிறோம். அல்லாஹ் நமது நாட்டைப் பாதுகாத்தருள்வானாக
ஆனால் சட்டங்களாலும் தண்டனைகளாலும் இந்த கொடுமைகளை அழித்து ஒழித்து விட முடியாது.
 

இந்த ஹதீஸ் கூறும் உணர்வு மக்களிடம் பரப்பப் படவேண்டும். அனுமதிக்கப்பட்டது நல்லது அனுமதிக்கப்படாதது கெட்டது பற்றிய சிந்தனை பொதுமைப்படுத்த பட வேண்டும்.
அது வரை திருடர்களூம் கொள்ளையர்களூம் திருப்பதி உண்டியலில் காசு போட்டு விட்டு திருடிக் கொண்டுதான் இருப்பார்கள்.
இந்த ஹதீஸை ஒரு தனி மனிதர் நடைமுறைப்படுத்தினால் அவரும் அவரைச் சூழ்ந்திருக்கிற சமூகமும் நிம்மதி பெறும்.
 
அப்துல் மாலிக் சித்தீகி என்ற பெரியவர் தான் சந்தித்த ஒரு மனிதரைப் பற்றி தெரிவிக்கிறார். அவர் குளிர் காலத்தில் குடை பிடித்திருந்தார். ஏன் குளிர்காலத்தில் குடை
பிடித்திருக்கிறீர்கள் என்று கேட்டதற்கு அந்தப் பெரியவர் சொன்னார் அன்னியப் பெண்களை காணாதிருக்க!
நாட்டில் தனியே செல்லும் பெண்களை துரத்திச் சென்று கற்பழித்துக் கொலை செய்கிற நிகழ்வுகள் அன்றாடம் செய்தியாகி வருகிறது, என்னுடைய நண்பர் ஒருவர் டூவீலரில் செல்கிற போது பக்கத்தில் பெண்கள் யாராவது வண்டி ஓட்டிக் கொண்டு வந்தால் அல்லது வண்டியில் பின் இருக்கையில் இருந்தால் இவர் அவர்களை முந்திச் சென்று விடுவார். அவரின் இந்த குணத்தை நான் இயல்பாக கவனித்தேன்.
ஹலால் ஹராமைப் பேணி நடந்தால் மனித வாழ்வு எப்படி உன்னதமாகிவிடுகிறது
பாருங்கள்.5.ஐந்தாவது ஹதீஸ்
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو رَضِيَ اللَّهُ عَنْهُمَا عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ الْمُسْلِمُ مَنْ سَلِمَ الْمُسْلِمُونَ مِنْ لِسَانِهِ وَيَدِهَِ
தன் நாவினாலும், கரங்களாலும் பிறருக்கு சிரமம் தராதவரே உண்மை முஸ்லிம்.
சிந்தித்துப் பாருங்கள் நண்பர்களே இந்த ஹதீஸைக் கடைபிடித்தால் ஒரு முஸ்லிம் எவ்வளவு உன்னதமானவராக இருப்பார்,
இந்த ஹதீசின் அடிப்படையில் நாம் முஸ்லிமாக இருக்கிறோமா என நம்மில் ஒவ்வொருவரும் யோசிக்க வேண்டும்.
இந்த ஐந்து ஹதீஸ்களும் மார்க்கத்தை நாம் முழுமையாகக் கடைபிடிக்க உதவக் கூடியவை என்று இமாம் அபூஹனீபா ரஹ் கூறீனார்கள்


நாம் இந்த ஹதீஸ்களை நினைவில் நிறுத்துவோம். இதனடிப்படையில் நடக்க கவனம் செலுத்துவோம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 
back to top