புதன், 14 அக்டோபர், 2015

வாட்ஸ் ஆப்.



அல்லாஹு தஆலா நம்மை படைத்த பொழுது மனித வாழ்விற்கு உடல் ரீதியாக உறுப்புக்கள் ரீதியாக எந்த மாதிரியான பயன்பாட்டிற்கு தேவை என்பதை அறிந்து மிக கச்சிதமாகவும் நேர்த்தியாக வடிவமைத்தான்.

ٱلَّذِى خَلَقَ فَسَوَّىٰ                                             
அவன் எத்தகையவனென்றால் (படைப்புகளனைத்தையும்) படைத்து, பிறகு (அவற்றைச்) செவ்வைப்படுத்தினான்

திருக்குர்னின் பல இடங்களில் فَقَدَّرَ  மிகவும் நுணுக்கமான தேர்வு செய்யப்பட்ட அமைப்பில் உடலின் எல்லா பாகத்தையும் பொருத்தினான் என்பதாக வருகிறது.

அல்லாஹ் வழங்கிய மனித உடலமைப்பில் பெரிய வெகுமதிகளில் மிக முக்கியமானது ஐம்புலன்கள். அந்த ஐம்புலன்களில் குறிப்பாக பார்ப்பதற்கு இரண்டு கண்கள், கேட்பதற்கு இரண்டு செவிகளை வழங்கியிருக்கிறான். பார்ப்பது, கேட்பது, சிந்திப்பது இந்த எல்லா உணர்வுகளைகளை வெளிப்படுத்த நாவை அல்லாஹ் நமக்கு தந்திருக்கிறான். மிகவும் பலன் தருகின்ற அதே நேரம் மிகவும் ஆபத்தான ஓர் உறுப்பு நாவு.

செவிப்புலனைக் கொண்டும் பார்வைப்புலனைக்கொண்டும் மனிதன் தாறுமாறாக நடந்து விடக்கூடாது என்பதற்காக திருக்குர்ஆனில் அல்லாஹ் கூறும் போது

وَلَا تَقۡفُ مَا لَيۡسَ لَكَ بِهِۦ عِلۡمٌ‌ۚ إِنَّ ٱلسَّمۡعَ وَٱلۡبَصَرَ وَٱلۡفُؤَادَ كُلُّ أُوْلَـٰٓٮِٕكَ كَانَ عَنۡهُ مَسۡـُٔولاً۬

17:36. எதைப்பற்றி உமக்கு(த் தீர்க்க) ஞானமில்லையோ அதை(ச் செய்யத்) தொடரவேண்டாம்; நிச்சயமாக (மறுமையில்) செவிப்புலனும், பார்வையும், இருதயமும் இவை ஒவ்வொன்றுமே (அதனதன் செயல் பற்றி) கேள்வி கேட்கப்படும்.


நாம் இந்த உலகில் கேட்பதை பற்றி பார்ப்பதை பற்றி பேசுவதைப் பற்றி என அனைத்தை பற்றியும் மறுமையில் கேள்வி கேட்கப்படும். அதற்கு நாம் பதில் சொல்ல வேண்டும்.

கட்டற்ற சுதந்திரம் தணிக்கை இல்லாத சுதந்திரம் நமது உறுப்புகளுக்கு வழங்கப்பட்டிருப்பதாக நினைப்பது தவறு.

நாம் பார்ப்பதில், கேட்பதில், பேசுவதில், அனைத்திலும் தணிக்கை கட்டுப்பாடு வேண்டும். ஏன் நமது சிந்தனையில் கூட முடிந்தவரை கட்டுப்பாடு வேண்டும்.

ஒரு முஸ்லிமினுடைய அடையாளத்தை நபியவர்கள் கூறும் போது சொன்னார்கள்.

"‏ الْمُسْلِمُ مَنْ سَلِمَ الْمُسْلِمُونَ مِنْ لِسَانِهِ وَيَدِهِ،

ஒரு முஸ்லிமினுடைய நாவினாலும் கையினாலும் பிற முஸ்லிம்கள் நோவினை அடையக்கூடாது. என்றார்கள்.

திண்ணையில் அமர்ந்து பேசிக்கொண்டு அரட்டை அடித்துக் கொண்டிருந்து காலம் மாறி இன்று அதிவேக இணையதள வருகைக்கு பின்னால் எலக்ட்ரானிகஸ் பொருட்கள் வளர்ச்சியடைந்திருக்கிறது.

சமூக வலைதளங்கள் பேஸ்புக், ட்விட்டர், குறிப்பாக அனைவரின் செல்போன்களிலும் இருக்ககூடிய வாட்ஸ் ஆப் போன்றவைகளின் வருகைக்கு பிறகு தகவலை பரப்புவதில், எழுதுவதில், பேசுவதில், வரைவதில், என எதிலுமே தணிக்கை இல்லாமல் போய்விட்டது. இதனால் அசிங்கங்கள் மிக உச்சகட்டமாக அரங்கேருகிறது. வக்கிரங்கள் நிறைந்ததாக இன்றய இணையதளம் இருந்து வருகிறது.

பலனற்ற எதையும் பேச வேண்டாம் ஆசைப்பட வேண்டாம் ஹதீஸ்.

இமாம் மாலிக் ரஹ் அவர்கள் லட்சக்கணக்காண நபிமொழிகளில் தனக்கு பிடித்த ஐந்து நபிமொழிகள் என்பார்கள். அந்த ஐந்து ஹதீஸ்களில் ஒன்று

عن أبي هريرة رضي الله عنه قال : قال رسول الله ص لى الله عليه من حسن إسلام المرء تركه ما لا يعنيه  الترمذي وغيره .

ஒரு மனிதனுடைய இஸ்லாமிய அழகு என்னவென்றால் அவனுக்கு தேவையில்லாதில் அவன் ஈடுபடாமல் இருக்க வேண்டும். ஹதீஸ்.
தேவையில்லாதில் ஈடுபடாமல் இருப்பது என்பது இஸ்லாமியனுடைய அழகில் உச்சகட்ட அழகு.

இன்றைக்கு மீடியாக்களின் மூலம் பேசப்படுகின்ற, பகிரப்படுகின்ற, தகவல்களில் 90% சதவீதம் நிச்சயமாக பலனில்லாதவையாக இருக்கிறது.

عن عبد الله بن سبرة أنه سمع النبي صلى الله عليه وسلم يقول‏:‏
‏"‏إن الله ينهاكم عن ثلاث‏:‏ قيل وقال، وكثرة السؤال، وإضاعة المال‏"‏‏.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அல்லாஹ்விற்கு பிடிக்காத மூன்று விசயங்கள்.

1. ஆதாரமற்ற செய்திகள்.
2. பொருளாதார விரயம்.
3. சம்பந்தமில்லாத கேள்விகளை கேட்டுக்கொண்டே இருப்பது.

இன்றைக்கு சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல்கள் குறிப்பாக பேஸ்புக், வாட்ஸ் ஆப் களில் பகிரப்படும் பல தகவல்கள் வக்கிரம் நிறைந்திருக்கிறது. இதிலிருந்து வெளியே வந்தால் தான் தனிமனித வாழ்வு சந்தோசமாக இருக்கும் என்ற நிலைக்கு நாம் தள்ளப்பட்டு இருக்கிறோம். தனி மனித சுதந்திரம் ஒட்டு மொத்தமாக போய்விட்டது.

முகத்துக்கு முன்னால் இருக்கும் சொந்தங்களோடு பேசுவது கிடையாது. ஆனால் வாட்ஸ் ஆப் அல்லது முகநூல் நண்பர்களோடு மூழ்கி கிடக்கிறார்கள். ஒவ்வொரு நிமிடமும் ஆயிரக்கணக்கான பொய்யான செய்திகள் நம்பி பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

ஒரு தகவல் நமக்கு கிடைத்தது என்றால் அதில் நமக்கு நிதானம் தேவை. தனி நபர் மானபங்கம் சம்பந்தமான செய்திகள், அடுத்தவர் மீது சொல்லப்படும் குற்றச்சாட்டுக்கள், மதம் சார்ந்த குற்றச்சாட்டுகள், இப்படி அது எந்த செய்தியாக இருந்தாலும் இப்படியான செய்திகள் நமக்கு வருகின்ற போது நமக்கு அதில் நிதானம் தேவை.

இது போன்ற அவதூறுகள், அசிங்கங்களின் சங்கமமாக இன்றய பேஸ்புக்கும், வாட்ஸ் ஆப்பும் இருக்கிறது என்று சொன்னால் அது மிகையல்ல.

நபி சுலைமான் (அலை) அவர்கள் ஹுத்ஹுத் என்ற பறவையை வளர்த்து வந்தார்கள்.  அந்த பறவை  செய்திகளை சேகரித்து வந்து சொல்லும். அது சொன்ன செய்திகள் பொய்யனதில்லை. ஒருநாள் அந்த பறவை ஸபா என்ற நாட்டுக்கு சென்ற அங்கு நடக்கும் விசயங்களை பார்வையிட்டு வந்து நபியிடம் சொன்னது.

قَالَ سَنَنظُرُ أَصَدَقْتَ أَمْ كُنتَ مِنَ الْكَاذِبِينَ   

27:27. (அதற்கு ஸுலைமான்:) நீ உண்மை கூறுகிறாயா அல்லது பொய்யர்களில் நீ இருக்கிறாயா என்பதை நாம் விரைவிலேயே கண்டு கொள்வோம்என்று கூறினார்.

ஹுத்ஹுத் பறவை சொன்ன செய்தியை கேட்டதும் உடனடியாக செயலில் இறங்கவில்லை. நபி சுலைமான் அவர்கள் சொன்னார்கள்.
நி சொல்வது உண்மையா..? அல்லது பொய்யா..? என தீவிரமாக விசாரித்து பார்ப்பேன், அவர்களுக்கு கடிதம் எழுதுவேன் அங்கிருந்து  வரும் பதிலை வைத்துதான் அதன் பிறகு ஆக்கப்பூர்வமாக அதிகாரப்பூர்வமாக நான் செயலில் இறங்குவேன் என்றார்கள்.

திருக்குர்ஆனில் சொல்லப்பட்டிருக்கும் இந்த விசயம் ஹுத்ஹுத் பறவையின் உரையாடலும் சுலைமான் (அலை) அவர்களின் பதிலும் உலக முஸ்லிம்களுக்கான பெரிய பாடம் அடங்கியிருக்கிறது.

எந்த செய்தியாக இருந்தாலும் அதை உங்களிடத்தில் எவ்வளவு நம்பத்தகுந்த நபர் சொன்னாலும் அவர் சொல்லிவிட்டார் என்பதற்காக உடனடியாக களத்தில் இறங்கிவிடவேண்டாம்.

ஹுத்ஹுத் ஒரு நிருபரை போல நபி சுலைமான் (அலை) அவர்களோடு பயணிக்கின்ற பறவை. அது தனது கடந்த காலத்தில் கூட நபியிடம் பொய் பேசியது கிடையாது. இருந்தும் கூட அந்த பறவை சொன்ன போது சுலைமான் (அலை) அவர்கள் செய்தியை உறுதி செய்த பின்னர் தான் இந்த விசயமாக இறங்க முடியும் என்று சொல்லி விட்டார்கள்.

இன்று பேஸ்புக் வாட்ஸ்ஆப் பயன்படுத்துபவர்களிடம் வரும் செய்திகளில் நிதானம் என்பது இல்லை. தன்னிடம் வரும் செய்திகளை அது நல்லதா... அல்லது கெட்டதா... எனபார்த்து இதை நாம் அனுப்புவதால் பிறருக்கு  நல்லதா அல்லது கெட்டதா என்பதை நிதானித்து செய்ய தவறி விடுகிறோம். ஒரு செய்தியை நாம் அடுத்தவர்களிடம் சொல்லும் போது நிதானம் தேவை என்பதாக குர்ஆன் கூறுகிறது.

இன்று மோசமான நிலையில் பேஸ்புக் வாட்ஸ்ஆப் வீழ்ந்து கிடக்கிறது. தன் சொந்த சமுதாயத்தையே கேவலப்படுத்துகின்ற அளவுக்கு ஏராளமான செய்திகளும் செயல்பாடுகளும் நிறைந்து காணப்படுகிறது.


ஒரு காலத்தில் ஊர் கதை பேசுவதற்காக திண்ணையில் அமர்ந்து வேலையில்லாதவர்கள் காலையிலிருந்து மாலை வரை ஊர்கதை பேசுவார்கள். தனக்கு பிடிக்காத ஆசிரியரைப்பற்றி மாணவன் மோசமாக கழிவறை சுவர்களில் எழுதுவான். தனக்கு பிடிக்காதவர்களை கேவலப்படுத்த பொது கழிப்பறைகளில் சிலர் அவர்களின் பெயரை எழுதி கேவலப்படுத்துவார்கள். இன்று இது போன்ற செயல்களெல்லாம் திண்ணையிலிருந்தும், கழிவறையிலிருந்தும் இடம் பெயர்ந்து அது வாட்ஸ்ஆப்பிலும், பேஸ்புக்கிலும் குடியமர்ந்து இருக்கிறது.

ஒரு பக்கம் நன்மையான விசயங்கள் திருக்குர்ஆனின் வசனங்கள், ஹதீஸ் சம்பந்தமான தகவல்கள், நல்ல பல விசயங்கள் வலம் வந்தாலும் 90% சதவீதம் கேடுகெட்ட விசயங்கள் தான் நிறைந்திருக்கிறது.

ஒரு பத்திரிக்கையில் நாம் ஏதாவது எழுதினோம் என்றால் அது தணிக்கை செய்யப்பட்டு பத்திரிக்கைகளில் வெளியிடுகிறார்கள். ஆனால் இன்று தணிக்கை செய்யப்படாமல் எது வேண்டுமானாலும், என்ன வேண்டுமானாலும், எழுதப்பட்டு அதை எத்தனை லட்சம் பேருக்கு வேண்டுமானாலும் அனுப்ப முடிகிறது.

அந்த எழுத்தாளனின் பேனாவுக்குள் ஊற்றப்பட்ட மை சமயங்களில் காமம் உடையதாக, வன்முறை நிறைந்ததாக இருக்கிறது. யாரும் எழுதலாம் யாருக்கும் அனுப்பலாம் என்ற கட்டுப்பாடற்ற ஒரு சுதந்திரம் சமூக வலைதளங்களில் இருப்பதால் பேஸ்புக் வாட்ஸ்ஆப்களில் இது போன்ற அசிங்கங்கள் நிரம்பி இருக்கிறது.

குறிப்பாக அடுத்தவர்களின் மானம் சம்பந்தமான செய்திகளை வெளியிடும் போது புகைப்படங்களை பரப்பும் போது மனிதனின் வக்கிரம் நிறைந்த மனம் வெளியே வருகிறது. மானபங்கம் சம்பந்தமான செய்தி அது யாருடையதாக இருந்தாலும் அது நிறுத்தப்பட வேண்டிய ஒன்று. பரப்பக்கூடிய செய்தி அல்ல.


12:23   وَرَاوَدَتْهُ الَّتِىْ هُوَ فِىْ بَيْتِهَا عَنْ نَّـفْسِهٖ وَغَلَّقَتِ الْاَبْوَابَ وَقَالَتْ هَيْتَ لَـكَ‌ؕ قَالَ مَعَاذَ اللّٰهِ‌ اِنَّهٗ رَبِّىْۤ اَحْسَنَ مَثْوَاىَ‌ؕ اِنَّهٗ لَا يُفْلِحُ الظّٰلِمُوْنَ‏ 
12:23. அவர் எந்தப் பெண்ணின் வீட்டில் இருந்தாரோ, அவள் அவர்மீது விருப்பங்கொண்டு, கதவுகளைத் தாழிட்டுக் கொண்டு (தன் விருப்பதிற்கு இணங்குமாறு) வாரும்என்று அழைத்தாள் - (அதற்கு அவர் மறுத்து,) “அல்லாஹ் (இத்தீய செயலிலிருந்து) என்னைக் காத்தருள்வானாக; நிச்சயமாக (உன் கணவர்) என் எஜமானர், என் இடத்தை அழகாக (கண்ணியமாக) வைத்திருக்கிறார் - அநியாயம் செய்பவர்கள் நிச்சயமாக வெற்றி பெற மாட்டார்கள்என்று சொன்னார்.

12:24   وَلَـقَدْ هَمَّتْ بِهٖ‌ۚ وَهَمَّ بِهَا‌ لَوْلَاۤ اَنْ رَّاٰ بُرْهَانَ رَبِّهٖ‌ؕ كَذٰلِكَ لِنَصْرِفَ عَنْهُ السُّۤوْءَ وَالْـفَحْشَآءَ‌ؕ اِنَّهٗ مِنْ عِبَادِنَا الْمُخْلَصِيْنَ‏ 

12:24. ஆனால் அவளோ அவரைத் திடமாக விரும்பினாள்; அவரும் தம் இறைவனின் ஆதாரத்தைக் கண்டிராவிட்டால் அவள் மீது விருப்பம் கொண்டே இருப்பார்; இவ்வாறு நாம் அவரைவிட்டுத் தீமையையும் மானக்கேடான செயல்களையும் திருப்பிவிட்டோம் - ஏனெனில் நிச்சயமாக அவர் நம் தூய்மையான அடியார்களில் ஒருவராக இருந்தார்.


12:25   وَاسْتَبَقَا الْبَابَ وَقَدَّتْ قَمِيْصَهٗ مِنْ دُبُرٍ وَّاَلْفَيَا سَيِّدَهَا لَدَا الْبَابِ‌ؕ قَالَتْ مَا جَزَآءُ مَنْ اَرَادَ بِاَهْلِكَ سُوْۤءًا اِلَّاۤ اَنْ يُّسْجَنَ اَوْ عَذَابٌ اَلِيْمٌ‏ 

12:25. (யூஸுஃப் அவளை விட்டும் தப்பி ஓட முயன்று) ஒருவரை ஒருவர் முந்திக் கொள்ள வாசலின் பக்கம் ஓடினார்கள்; அவள் அவருடைய சட்டையைப் பின்புறத்தில் கிழித்து விட்டாள்; அப்போது அவளுடைய கணவரை வாசல் பக்கம் இருவரும் கண்டனர். உடன் (தன் குற்றத்தை மறைக்க) உம் மனைவிக்குத் தீங்கிழைக்க நாடிய இவருக்குச் சிறையிலிடப்படுவதோ அல்லது நோவினை தரும் வேதனையைத் தருவதோ அன்றி வேறு என்ன தண்டனை இருக்கமுடியும்?” என்று கேட்டாள்.


12:26   قَالَ هِىَ رَاوَدَتْنِىْ عَنْ نَّـفْسِىْ‌ وَشَهِدَ شَاهِدٌ مِّنْ اَهْلِهَا‌ۚ اِنْ كَانَ قَمِيْصُهٗ قُدَّ مِنْ قُبُلٍ فَصَدَقَتْ وَهُوَ مِنَ الْكٰذِبِيْنَ‏ 

2:26. (இதை மறுத்து யூஸுஃப்;) “இவள் தான் என்னை வற்புறுத்தித் தன்னிடம் அழைத்தாள்என்று கூறினார்; (இதற்கிடையில்) அவள் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் சாட்சி(யாகப் பின்வருமாறு) கூறினார்: இவருடைய சட்டை முன்புறத்தில் கிழிந்திருந்தால், அவள் உண்மை சொல்கிறாள்; இவர் பொய்யராவார்.

  وَاِنْ كَانَ قَمِيْصُهٗ قُدَّ مِنْ دُبُرٍ فَكَذَبَتْ وَهُوَ مِنَ الصّٰدِقِيْنَ‏ 
12:27. “ஆனால் இவருடைய சட்டை பின்புறமாகக் கிழிந்திருந்தால், அவள் பொய் சொல்லுகிறாள்; அவர் உண்மையாளர்களில் உள்ளவர்.


யூசுப் (அலை) அவர்கள் ஜுலைஹா அவர்களினால் துரத்தப்படும் போது கதவை திறந்து வெளியே ஒடிவந்த நேரம்  கணவர் உள்ளே வர கையும் களவுமாக மாட்டிக்கொள்கிறார்கள். இருவரையும் ஒன்று சேர பார்த்த பொழுது ஜுலைஹா அவர்கள் நான் தவறு செய்யவில்லை யூசுப் (அலை) அவர் தான் தவறு செய்தார் என்று பழி சொன்ன பொழுது யூசுப் (அலை) அவர்கள் நான் தவறு செய்யவில்லை அந்த பெண் தான் தவறு செய்தார் என்று சொன்னார்கள். அப்போது தொட்டில் குழந்தை பேசியது (சில அறிவிப்புகளில் அறையின் ஒரு மூலையில் இருந்து சப்தம் வந்தது.)

யூசுப் (அலை) அவர்களின் சட்டை முன்புறம் கிழிந்திருந்தால் அந்த பெண் உண்மை சொல்லுகிறாள் என்று அர்த்தம். சட்டை பின்புறம் கிழிந்திருந்தால் அந்த பெண் தான் தவறு செய்தவள் என்று சொல்லப்பட்டது.

12:28   فَلَمَّا رَاٰ قَمِيْصَهٗ قُدَّ مِنْ دُبُرٍ قَالَ اِنَّهٗ مِنْ كَيْدِكُنَّ‌ؕ اِنَّ كَيْدَكُنَّ عَظِيْمٌ‏ 
12:28. (யூஸுஃபுடைய) சட்டை பின்புறமாகக் கிழிந்திருந்ததை அவர் கண்டபோது, நிச்சயமாக இது (பெண்களாகிய) உங்கள் சதியேயாகும் - நிச்சயமாக உங்களுடைய சதி மகத்தானதே!

  يُوْسُفُ اَعْرِضْ عَنْ هٰذَا؄ وَاسْتَغْفِرِىْ لِذَنْۢبِكِ ۖ ‌ۚ اِنَّكِ كُنْتِ مِنَ الْخٰطِٮـِٕيْنَ‏ 

12:29. (என்றும்)யூஸுஃபே! இதனை நீர் இம்மட்டில் விட்டு விடும். (பெண்ணே!) உனது பாவத்திற்காக மன்னிப்புத் தேடிக் கொள்; நிச்சயமாக நீ தவறு செய்தவர்களில் ஒருத்தியாக இருக்கின்றாய்என்றும் கூறினார்.


இந்த நேரத்தில் அந்த மன்னர் நடுநிலையோடு யூசுப் (அலை) அவர்களை நோக்கி சொன்னார். يُوْسُفُ اَعْرِضْ عَنْ هٰذَا  இந்த மானபங்க பிரச்சனை விசயத்தை இதோடு விட்டு விடு என்றார்.

ஜுலைஹா அவர்களிடம் وَاسْتَغْفِرِىْ لِذَنْۢبِكِ ۖ ‌ۚ اِنَّكِ كُنْتِ مِنَ الْخٰطِٮـِٕيْنَ நி உனது பாவத்திற்கு மன்னிப்பு தேடிக்கொள். நீ தவறு செய்தவர்களில் ஒருத்தியாக இருக்கிறாய் என்றார்கள்.

மானபங்கம் சம்பந்தமான நிகழ்வுகளில் நீங்கள் நேரிடையாக நீங்கள் சம்பந்தப்பட்டிருந்தாலும் கூட அந்த தகவல் பரப்பபடுவதற்கான தகவல் அல்ல. மறைக்கப்படுவதற்கான தகவல் என்பதாக திருக்குர்ஆன் அற்புதமாக காட்டித் தருகிறது.

மனிதன் செய்த தவறை கேட்டு விசாரிக்க நீதிமன்றம் இருக்கிறது. ஷரீஅத் இருக்கிறது. ஆனால் ஒரு தனி மனிதனின் மான சம்பந்தமான செய்திகளை நாம் அடுத்தவர்களுக்கு பரப்ப கூடாது என்பதை மேற்கூறிய வசனம் நமக்கு கற்றுத் தருகிறது.

ஏதாவது ஒரு மூலையில் ஒரு பெண் தவறு செய்து விட்டால் அவளை பிடித்து அடித்து அவளிடம் நி எப்படி வந்தாய், எப்படி இவனோடு பழகினாய், எப்படி இருவரும் நடந்து கொண்டிர்கள் என்பதையெல்லாம் அந்த பெண்ணிடமிருந்து வாக்குமூலம் வாங்கி  அந்த ஆடியோவை பரப்புகிறார்கள். இது போன்ற தகவல்களை பரப்புகிறவர்களை தான் கல்லால் அடிக்கப்படவேண்டியவர்கள் .

இஸ்லாத்திற்கு ஒரு கவர்ச்சி நடிகையோ அல்லது ஒரு பாப் நடிகை வந்து விட்டால் அந்த பெண்ணிண் இரு போட்டாவை போட்டு இது இஸ்லாத்தை ஏற்பதற்கு முன்பு இது ஏற்றதற்கு பின்பு. என்பதாக தகவல்கள் வெளியிடுகிறார்கள். இவைகளெல்லாம் இதை பரப்பியவர். சதை மேல் கொண்ட மோகத்தை வெளிக்காட்டுகிறது.

இன்றய சூழ்நிலையில் பேஸ்புக்கும், வாட்ஸ்ஆப்பும் கழிவறை சுவற்றுக்கு நிகராக மாறிக்கொண்டிருக்கிறது. இன்று இதை பயன்படுத்தக்கூடிய இளைஞர்களுக்கு ஒரு செய்தி கிடைக்கின்ற போது அதை பரப்பலாமா கூடாதா என்று அவர்கள் யோசிப்பது இல்லை.

நபி (ஸல்) அவர்கள் அவர்களின் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்வு.

நபி (ஸல்) அவர்கள் தங்களின் எல்லா மனைவிமார்களையும் தலாக் விட்டு விட்டார்கள் என்று செய்தி மதீனாவில் காட்டுத்தீயாக பரவியது. இது பற்றி பள்ளிவாசலிலும் கடைவீதியிலும் எல்லோரும் பேசிக்கொண்டிருந்தார்கள். இந்நிலையில் நபியவர்களுக்கு தன் மகளை திருமணம் செய்து கொடுத்திருந்த  உமர் (ரலி) நேராக நபி (ஸல்) அவர்களின் வீட்டிற்கு சென்று தன் மகள் ஹப்ஸா (ரலி) அவர்களிடம் கேட்டார்கள். நபியவர்கள் உங்களை தலாக் விட்டு விட்டார்களா....? என கேட்ட பொழுது இல்லை அப்படி எதுவும் நடக்கவில்லை என்றார். 

இதை கேட்டதும் உமர் (ரலி) அவர்கள் பள்ளிவாசலுக்கு வந்து மக்களை நோக்கி சப்தமிட்டு சொன்னார்கள். நான் உமர் பேசுகிறேன் பெருமானார் (ஸல்) அவர்கள் எந்த மனைவியையும் தலாக் விடவில்லை இது பற்றி இனிமேல் யாரும் எதுவும் பேச வேண்டாம். எனச்சொல்லி விட்டு கீழே இறங்கி நடந்தார்கள்.

அப்போது அல்லாஹ் திருகுர்ஆனில் வசனத்தை இறக்கினான்.

4:83   وَاِذَا جَآءَهُمْ اَمْرٌ مِّنَ الْاَمْنِ اَوِ الْخَـوْفِ اَذَاعُوْا بِهٖ‌ ۚ وَلَوْ رَدُّوْهُ اِلَى الرَّسُوْلِ وَاِلٰٓى اُولِى الْاَمْرِ مِنْهُمْ لَعَلِمَهُ الَّذِيْنَ يَسْتَنْۢبِطُوْنَهٗ مِنْهُمْ‌ؕ وَلَوْلَا فَضْلُ اللّٰهِ عَلَيْكُمْ وَرَحْمَتُهٗ لَاتَّبَعْتُمُ الشَّيْطٰنَ اِلَّا قَلِيْلًا‏ 

4:83. மேலும் பீதியோ, பாதுகாப்பைப் பற்றிய செய்தியோ அவர்களுக்கு எட்டுமானால், உடனே அவர்கள் அதை பரப்பி விடுகிறார்கள்; அவர்கள் அதை (அல்லாஹ்வின்) தூதரிடமோ, அல்லது அவர்களில் நின்றுமுள்ள அதிகாரிகளிடமோ தெரிவித்தால், அவர்களிலிருந்து அதை ஊகித்து அறியக்கூடியவர்கள், அதை நன்கு விசாரித்தறிந்து (தக்க ஏற்பாடுகளைச் செய்து) கொள்வார்கள். அல்லாஹ்வுடைய கிருபையும் அவனுடைய அருளும் உங்கள் மீதில்லாதிருந்தால், உங்களில் சிலரைத் தவிர மற்றவர்கள் ஷைத்தானையே பின்பற்றியிருப்பார்கள்.

செய்திகளை துறைசார்ந்தவர்களிடம் கொண்டு போய் சேர்க்காமல் அனைவருக்கும் பரப்பவதை இஸ்லாம் வன்மையாக கண்டிக்கிறது.
இன்று பேஸ்புக்கின் மூலமாக, வாட்ஸ்ஆப்பின் மூலமாகவும் நீலப்படங்கள் பரிமாறப்பட்டுக் கொண்டிருக்கிறது. தன்னுடைய முன்னால் காதலி தனக்கு கிடைக்கவில்லை என்பதற்காக அவளோடு எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளிப்படுத்தின் மூலம் அவனின் குரூர புத்தியையும், வக்கிரமங்கங்கள் வெளியாவதை நாம் பார்க்கிறோம்.

இன்னும் சிலர் மதங்களின் மீது அதிக பற்று வைத்திருக்கிறோம் என்பதற்காக அத்துமீறிய செய்திகளை வெளியிடுகிறார்கள்.
பர்மாவில் முஸ்லிம்கள் துன்புறுத்தப்படுகிறார்கள், அகதிகளாக நடத்தப்படுகிறார்கள், உணவின்றி தவிக்கிறார்கள், நடுக்கடலில் தவிக்கிறார்கள், அந்த நாட்டு அரசாங்கத்தால் கைவிடப்பட்ட நிலையில் இருக்கிறார்கள் என்பது போன்ற செய்திகள் உண்மையாக இருந்தாலும் அதை மக்களிடையே பரப்புகின்ற போது ஒன்றரை வருடங்களுக்கு முன்னால் இலங்கையில் நடந்த யுத்ததின் போது ரத்தம் சொட்ட சொட்ட எடுத்த புகைப்படங்களை போட்டு இது பர்மாவில் இப்போது நடந்து கொண்டிருக்கிறது என்பதாக தகவல்களை பரப்புகிறார்கள். இவர்களின் நோக்கம் என்ன...? 

பெண்ணிண் கழுத்தை அறுத்து ரத்தத்தை பாத்திரத்தில் பிடிப்பது போன்ற புகைப்படங்கள் இன்று சர்வ சாதாரணமாக பேஸ்புக்கிலும் வாட்ஸ்ஆப்பிலும் காணமுடிகிறது. பொய்யான ஏராளமான செய்திகள் உலாவருகிறது.

ஏதாவது ஒரு நம்பரை கொடுத்து இந்த நம்பருக்கு மிஸ்டுகால் கொடுத்தால் நாட்டில் ஊழல் ஒழிந்து விடும் என்பது போன்ற தகவல்கள் வருகிறது. மிஸ்டுகால் செய்வதிலே நாட்டின் ஊழல் ஒழிந்து விடுமா...? என்று அனுப்புபவர்கள் கொஞ்சம் கூட சிந்தித்து பார்ப்பதில்லை.

சமூகங்களின் மீது, ஒரு நாட்டினர் மீதும் அவதூறு பரப்பப்படுகிறது.
நான்கு அரபியர்கள் முழுசா உரிக்கப்பட்ட ஒரு ஆட்டை சமைத்து சாப்பிடுவதற்கு அமர்ந்திருப்பதை போல போட்டவை போட்டு அதன் அருகில் சோமாலியாவில் பசியால் வயிறு ஒட்டிய நிலையில் ஒரு குழந்தை உட்காந்திருக்கும் போட்டாவை போட்டு. 

பாத்தீர்களா..!. அரபியர்கள் எப்படியெல்லாம் உணவை வீணாக்குகிறார்கள். என்று ஒரு செய்தியை பரப்புகிறார்கள்.

பொதுவாக அரபியர்கள் ஒரு வட்டமான தட்டில் சாப்பிட அமர்ந்தால் தங்கள் வயிறு நிரம்ப உண்டு விட்டு எழுந்த பின் அதே தட்டில் அடுத்த நான்கு பேர்கள் அமர்ந்து உணவு உண்ணுவார்கள் அதன் பிறகு அடுத்த நான்கு பேர்கள் கடைசியாக அவர்களின் குடும்ப பெண்களும் சாப்பிவார்கள் இப்படி அந்த உணவு அங்கிருக்கும் அனைவரும் உண்ணுவார்கள். ஆனால் நாம் அடுத்தவர் உண்ட எச்சில் பாத்திரத்தில் நான் உண்ணமாட்டேன் என்று சொல்வோம். இது போன்ற புகைப்படங்கள் யூதர்கள் அரபு சமூகத்தின் போடக்கூடிய அவதூறான செய்திகள். நாமும் சிந்திக்காமல் அதை மற்றவர்களுக்கு பரப்புகின்றோம்.

இன்னும் சில காணமல் போனவரை பற்றிய செய்திகள். அவர் கிடைத்த பிறகும் வாட்ஸ்ஆப், பேஸ்புக்கில் சுற்றிக்கொண்டிருக்கிறது. உடனடியாக ஒ பாசிடிவ் ரத்தம் தேவை என்ற செய்தி நோயாளி சிகிட்சை முடிந்து வீடு திரும்பிய பிறகும் சேர் செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது.

இதுமட்டுமல்ல மலக்குமார்களின் குரூப்பை மிஞ்சுகின்ற வாட்ஸ்ஆப் குரூப்கள். அதில் அவர்கள் அடிக்கின்ற லூட்டிகள், தனி நபர் வசைபாடுதல், குற்றம் சுமத்துதல் போன்ற எவ்வளவோ விசயங்கள் ஒவ்வொரு நாளும் அரங்கேறுகிறது.

இன்றய இளைஞர் சமுதாயம் எந்த செய்திகளையும் ஆராயாமல் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள் இது மிகவும் ஆபத்தான விசயமாக இருக்கின்றது. கழிவறை சுவராக இன்றய வாட்ஸ்ஆப் பேஸ்புக் மாறி வருகிறது.

எந்த செய்தி நமக்கு கிடைத்தாலும் அதில் நமக்கு எச்சரிக்கை தேவை, நிதானம் தேவை. இது போன்று வரும் செய்திகளை அனுப்பாமல் இருப்பது நல்லது. அல்லது என் மொபைலில் இந்த பேஸ்புக், வாட்ஸ்ஆப் வேண்டாம் என்று வெளியேறினால் அது அதைவிட நல்லது.

அல்லாஹு தஆலா இன்று வளர்நது வரும் மீடியாக்களின் தீங்கிலிருந்தும், குணங்கள் கெட்டுப்போவதை விட்டும், தனி மனித வக்கிர சிந்தனைகளில் இருந்தும், நம்மையும் நமது சமுதாயத்தினரையும் பாதுகாப்பானாக. ஆமீன்.


மதிப்பிற்குரிய ஷதீதுத் தீன் பாகவி ஹழரத் அவர்களின் ஆடியோ உரையை எழுத்தாக்கம் செய்துள்ளேன். இன்ஷா அல்லாஹ் இது உங்களுக்கு பலனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன். வஸ்ஸலாம்.
 

3 கருத்துகள்:

  1. மிக பலனுள்ளதாக இருந்தது அல்ஹம்துலில்லாஹ்

    பதிலளிநீக்கு
  2. மதிப்பிற்குரிய ஷதீதுத்தீன் பாகவி ஹழரத் அவர்களின் ஆடியோ உரையை வாரம்தோரும் எழுத்தாக்கம் செய்து பதிவிட்டால் இன்ஷா அல்லாஹ் அது அனைவருக்கும் பலனுள்ளதாக இருக்கும் அன்புடன் பரகத் பாகவி திருப்பூர்

    பதிலளிநீக்கு
  3. மதிப்பிற்குரிய ஷதீதுத்தீன் பாகவி ஹழரத் அவர்களின் ஆடியோ உரையை வாரம்தோரும் எழுத்தாக்கம் செய்து பதிவிட்டால் இன்ஷா அல்லாஹ் அது அனைவருக்கும் பலனுள்ளதாக இருக்கும் அன்புடன் பரகத் பாகவி திருப்பூர்

    பதிலளிநீக்கு