செவ்வாய், 29 செப்டம்பர், 2015

யார் சிறந்தவர்?

2 கருத்துகள்:

https://mail.google.com/mail/u/0/images/cleardot.gif

ஒரு குருவிடம் மூன்று சீடர்கள் இருந்தனர். குருகுல வாசம் முடிந்து மூவரும் குருவிடம் சொல்லிக் கொண்டு தத்தமது வழியில் பிரிந்து சென்றனர். என்ன வேலை செய்வது என்று முதலாவது சீடன் யோசித்தான். இந்த நாட்டின் அரசன் கற்றறிந்த அறிஞர்களை மதிப்பவன் என்பதால் அரசவை சென்று மன்னனை போற்றிப் பாடி நின்றான். அந்தத் துதிப் பாடல் கேட்டு பெருமகிழ்ச்சி கொணன்ட அரசன் சீடனுக்கு வெகுமதி அளித்ததோடு, அரசவையிலேயே வைத்துக் கொண்டான்.


இரண்டாவது சீடனிடம் நிறைய யோசனைகள் இருந்தன. ஆனால் எதைச் செய்வது, எப்படிச் செய்வது என்பதில் குழப்பம் இருந்தது. அவன் தன் மனம்போன போக்கில் எங்கெங்கோ சுற்றித் திரிந்தான். ஒருநாள் சத்திரம் ஒன்றில் இளைப்பாறினான். அந்தச் சத்திரத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது. அவன் அதை வாங்கி உண்டபோது, அதுவரை கண்டறியாத ருசியை உணர்ந்தான். அந்த அறுசுவை உணவைத் தயாரித்து அளித்த சமையல்காரரைச் சந்தித்துப் பேசினான். தனக்குப் பின்னால் அந்தக் கலையை, அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லத் தகுந்த வாரிசு இல்லாமல் அவர் வாடுவது புரிந்தது. சற்றும் தயங்காமல், அந்தப் பெரியவரிடம் உதவியாளராகச் சேர்ந்து கொண்டான். அவனைப் பிடித்துப் போனதால் சமையல் கலையின் நுணுக்கங்கள் எல்லாவற்றையும் அவனுக்குக் கற்றுக் கொடுத்தார். அவனும் வெகு விரைவிலேயே சிறந்த நளபாகச் சக்கரவர்த்தியாக உருவெடுத்தான்.


மூன்றாவது சீடனோ முதலில் தனது சொந்த ஊருக்குச் சென்றான். அப்போதுதான் அந்தக் கிராமத்தில் நிறையச் சிறுவர்கள் காடுகளிலும் வரப்புகளிலும் கிடைத்த வேலைகளைச் செய்து பொழுதைக் கழிப்பதைக் கண்டான். தனக்கு அமைந்தது போல ஒரு குருவின் வழிகாட்டல் அவர்களுக்குக் கிடைக்கவில்லை என்பதைப் புரிந்து கொண்டான். ஏன் அந்தச் சிறுவர்களுக்குத் தான் கற்ற கல்வியை அளிக்கக் கூடாது என்ற நோக்கத்துடன் செயலில் இறங்கினான். ஆனால் தன்னுடைய வாழ்க்கைக்கே வழிதேட வேண்டிய நிலையில் தன்னால் எப்படி மற்றவர்களுக்கு உதவ முடியும் என்ற சந்தேகம் அவனுக்கு. குரு அடிக்கடி சொல்லும் உபதேசம் ஒன்று நினைவுக்கு வந்தது. எந்த ஒரு நல்ல காரியத்தையும் சிந்தித்தவுடன் செயல்படுத்தத் துவங்கிவிட வேண்டும்; அவ்வாறு துவங்கிவிட்டால் அதை வெற்றிகரமாக முடிப்பதற்குத் தேவையான அனைத்து உதவிகளும் தானே தேடி வரும் என்பதுதான் அந்த உபதேசம். 

உடனடியாக, அந்தச் சீடன், அச் சிறுவர்களின் பெற்றோர்களைச் சந்தித்துப் பேசினான். சில சிறுவர்களைச் சேர்த்துக் கொண்டு, ஒரு மரத்தடியில் அவர்களுக்குக் கல்வி கற்றுக் கொடுக்க ஆரம்பித்தான். அவனுடைய அர்ப்பணிப்பு உணர்வைக் கண்ட அந்த மக்கள் அவன் எதிர்பார்த்ததற்கும் மேலாகவே, தாமாக முன்வந்து உதவிகளைச் செய்தனர். அவற்றைச் சிறப்பாகப் பயன்படுத்தி, படிப்படியாக வளர்ந்தான். சீக்கிரத்திலேயே, பெரியதொரு கல்விச் சாலையை நிறுவி, சிறந்த கல்வியாளனாகத் திகழ்ந்தான்.


பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு நாள் தன் சீடர்களைக் காண விரும்பினார் குரு. மூவரும் குருவைக் காண ஒருசேரக் கிளம்பிப் போனார்கள். தனது சீடர்களைக் கண்டதும், அவர் பெரிதும் மகிழ்ந்தார். தங்களுக்கு ஞானம் அளித்த குருவுக்கு, சிலநாட்கள் பணிவிடை செய்வது என்று மூவரும் தீர்மானித்தனர். ஆசிரமத்தில் தங்கி, குருவுக்குப் பணிவிடைகள் செய்தனர்.


அப்போது மற்ற இரண்டு சீடர்களைக் காட்டிலும் மூன்றாவது சீடனுக்குக் கூடுதல் முக்கியத்துவம் தந்தார் குரு. இது மற்ற சீடர்கள் இருவரையும் மனம் நோகச் செய்தது. ஒருநாள், மூன்றாவது சீடன் இல்லாத சமயம் பார்த்து, இருவரும் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். குரு புன்னகைத்தார். பின்னர் முதலாமவனைப் பார்த்துச் சொன்னார். "நீ அரசவைப் புலவன்! சிறந்த இலக்கியங்களைப் படைக்கின்றாய். உனது படைப்பு, படிப்பவர்களுக்கு மகிழ்ச்சி தருகிறது. மன எழுச்சியையும் தருகிறது. அதனால் நீ உயர்ந்தவன்தான்! நான் மறுக்கவில்லை!'என்றார்.


பின்னர், இரண்டாமவனைப் பார்த்து, "நீ சிறந்த நளபாகனாக இருக்கின்றாய். வயிற்றுக்கு உணவளித்தவன் தாய்க்கு ஒப்பானவன்! அதனால் நீயும் உயர்ந்தவன்தான்! நான் ஏற்றுக் கொள்கிறேன்," என்ற குரு மேலும் தொடர்ந்தார். "ஆனால், அறியாமையில் இருக்கும் ஒருவனுக்குக் கல்வி அளிப்பது என்பது, பார்வையில்லாதவனுக்கு பார்வை அளிப்பது போல! கல்விக்கண் திறக்கப்பட்டவனுக்குத்தான் உலகின் மற்ற வளங்கள் அனைத்தும் கிடைக்கும்! அதனால் எழுத்தறிவித்தவன் இறைவனாகிறான்! அதனால்தான் உங்கள் இருவரையும்விட மூன்றாமவனுக்குச் சற்றுக் கூடுதல் முக்கியத்துவம் கொடுத்துவிட்டேன். ஒரு குருவாக நான் இதைச் செய்திருக்கக்கூடாதுதான்! உங்கள் மூவரையும் சமமாகப் பாவித்திருக்க வேண்டும்... என்னை மன்னித்துவிடுங்கள்...' என்றார்


குருவே. "அகங்காரம் எங்கள் கண்களை மறைத்துவிட்டது. எங்கள் இருவரைக் காட்டிலும் அவனுடைய சேவை உயர்வானது என்பதை நாங்கள் இப்போது தெளிவாக உணர்ந்து கொண்டோம்.திருக்குர்ஆன்என்கிற வார்த்தைக்கான பொருள் என்ன தெரியுமா?

ஓதப்பட்டது, ஓதப்படக் கூடியது, ஓதப்பட வேண்டியது. இதுவே குர்ஆன்என்கிற வார்த்தைக்கான உள்ளார்ந்த பொருளாகும். சுருக்கமாக சொல்வதென்றால், எல்லா காலத்திற்கும் எல்லா மக்களுக்கும் ஏற்ற வேதம் குர்ஆன்.

ஆம், திருக்குர்ஆனுக்கு இதர வேதங்களை காட்டிலும் தனிச்சிறப்புகள் பல உண்டு. முந்தைய நபிமார்  களுக்கு வழங்கப்பட்ட தவ்ராத், இன்ஜில், ஜபூர் போன்ற வேதங்கள் ஒரு குறிப்பிட்ட சமூகத்தாருக்கு, ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமானதாகும்.

ஆனால் குர்ஆன் என்பது இஸ்லாமியர்களுக்கு மட்டுமான வேதம் அல்ல. மாறாக அனைத்துலக மக்களுக்கும் இறுதி நாள் வரை பொருந்தக்கூடிய உலக பொது மறையாகும்.

திருக்குர்ஆன் உலகில் மனித சமூகத்துக்கு தேவையான அனைத்து துறைகள் குறித்தும் ரத்தின சுருக்கமாக முத்தாய்ப்பாக சொல்வதில் அமைந்துள்ள இலக்கிய இலக்கண நயம் மெய்சிலிர்க்க வைக்கிறது.

குர்ஆன் ஓர் இலக்கிய அதிசயமாகும். திருக்குர்ஆனின் இலக்கிய நயம் அன்றைய அரபுலக பண்டிதர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. 14 நூற்றாண்டுகளுக்கு முன்பாக குர்ஆனின் வசனங்கள் சொல்கிற இலக்கிய சவாலை சந்திக்க யாரும் அன்று முன்வரவில்லை. இனிமேலும் வருவார் இல்லை. காரணம் திருக்குர்      ஆனின் இலக்கியம்  மனித சக்தி அப்பாற்பட்டே நிற்கிறது.

ஆரம்பத்தில் திருக்குர்ஆன் வசனங்களை செவி    மடுத்தவர்கள் இதிலென்ன அதிசயம், நினைத்தால் நாங்களும் இதைப் போன்று சொல்ல முடியுமேஎன்றனர். அதை இறைவன் திருக்குர்ஆனில் அப்படியே சொல்லிக் காட்டுகிறான்.

وَإِذَا تُتۡلَىٰ عَلَيۡهِمۡ ءَايَـٰتُنَا قَالُواْ قَدۡ سَمِعۡنَا لَوۡ نَشَآءُ لَقُلۡنَا مِثۡلَ هَـٰذَآ‌ۙ إِنۡ هَـٰذَآ إِلَّآ أَسَـٰطِيرُ ٱلۡأَوَّلِينَ
நம் வசனங்கள் அவர்களுக்கு ஓதிக் காண்பிக்கப்பட்டால் (இதனை முன்பே) நாங்கள் செவியுற்றுள்ளோம். நாங்கள் நினைத்தால் இதைப் போன்று பேச எங்களாலும் இயலும். இதுவெல்லாம் முன்னோர்களின் கட்டுக் கதைகள் தவிர வேறொன்றும் இல்லை என அவர்கள் கூறினார்கள்’. (திருக்குர்ஆன் 8:33)

இதை தொடர்ந்து குர்ஆன் அடுக்கான அடுக்கான சவால்களை விடுத்தது. அத்தனை சவால்களும் எதிர்கொள்ள முடியாத தோல்வியாகவே அமைந்தது.

قُل لَّٮِٕنِ ٱجۡتَمَعَتِ ٱلۡإِنسُ وَٱلۡجِنُّ عَلَىٰٓ أَن يَأۡتُواْ بِمِثۡلِ هَـٰذَا ٱلۡقُرۡءَانِ لَا يَأۡتُونَ بِمِثۡلِهِۦ وَلَوۡ كَانَ بَعۡضُہُمۡ لِبَعۡضٍ۬ ظَهِيرً۬ا
கூறுவீராக, மனிதன் மற்றும் ஜின் இனத்தவர் ஒன்று கூடி இந்தத் திருக்குர்ஆனுக்கு நிகரானதை வெளிக்
கொணர முயலுவார்களாயின் இதற்கு நிகரானதை அவர்களால் கொண்டு வர இயலாது. அவர்களின் சிலர் சிலருக்கு ஒத்துழைப்புச் செய்வார்களாயினும் சரியே’. (திருக்குர்ஆன் 17:88).

இந்தச்சவாலை யாரும் ஏற்க முன் வராதது கண்ட திருக்குர்ஆன் தன் சவாலைச் சற்றுத் தளர்த்தியது.

أَمۡ يَقُولُونَ ٱفۡتَرَٮٰهُ‌ۖ قُلۡ فَأۡتُواْ بِعَشۡرِ سُوَرٍ۬ مِّثۡلِهِۦ مُفۡتَرَيَـٰتٍ۬ وَٱدۡعُواْ مَنِ ٱسۡتَطَعۡتُم مِّن دُونِ ٱللَّهِ إِن كُنتُمۡ صَـٰدِقِينَ
இதை அவர் சுயமாகக் கற்பனை செய்தார் என்று அவர்கள் கூறுகிறார்களா? அப்படியானால் கற்பனை செய்யப்பட்ட இது போன்ற பத்து அத்தியாயங்களை கொண்டு வாருங்கள் பார்க்கலாம்என்றது திருக்குர்ஆன் (11:13).

وَإِن ڪُنتُمۡ فِى رَيۡبٍ۬ مِّمَّا نَزَّلۡنَا عَلَىٰ عَبۡدِنَا فَأۡتُواْ بِسُورَةٍ۬ مِّن مِّثۡلِهِۦ وَٱدۡعُواْ شُهَدَآءَكُم مِّن دُونِ ٱللَّهِ إِن كُنتُمۡ صَـٰدِقِينَ
இந்த சவாலையும் எவரும் ஏற்க முன்வராதது கண்ட திருக்குர்ஆன் தன் சவாலை மேலும் தளர்த்தியது. பத்து அத்தியாயங்களை கொண்டு வரவேண்டாம். ஒரே ஓர் அத்தியாயத்தையாவது கொண்டு வரட்டும் பார்க்கலாம்என்றது திருக்குர்ஆன். (2:23)

فَلۡيَأۡتُواْ بِحَدِيثٍ۬ مِّثۡلِهِۦۤ إِن كَانُواْ صَـٰدِقِينَ
இறுதியாக, ‘ஓர் அத்தியாயத்தை வேண்டாம். ஒரே ஒரு வசனத்தையாவது கொண்டு வாருங்கள்என்றது திருக்குர்ஆன். (52:32–33)

திருக்குர்ஆனின் சவால் அரபி மொழிக்கு மட்டும் விடப்பட்டது அல்ல. மாறாக உலகின் எந்த மொழியிலும் திருக்குர்ஆனுக்கு ஈடாக இலக்கியத்தை கொண்டு வரலாம் என்பதே திருக்குர்ஆனின் சவலாகும்.

இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டு மலரில் அல்லாமா கான் பாகவி அவர்கள் திருக்குர்ஆன் குறித்து பதிவு செய்துள்ள தகவல் இது.

எகிப்து நாட்டு இலக்கியவாதியும் பெரிய எழுத்தாளருமான பேராசிரியர் கைலானி அவர்களுக்கு அமெரிக்காவை சேர்ந்த பேராசிரியர் வெங்கால் நல்ல நண்பர். வெங்கால் அரபி, ஆங்கிலம், ஜெர்மனி மற்றும் ஹீப்ரு மொழிகளில் தேர்ந்தவர். இவ்விருவருக்கும் அரபு இலக்கியத்தின் மீதான நட்பு அதீதமானதாகும்.

இருவரும் ஒரு நாள் உரையாடிக் கொண்டிருக்கையில் குர்ஆனை ஓர் அற்புதம்என்று நீங்களுமா நம்புகிறீர்கள்? என்று கைலானிடம் வெங்கால் கேட்டார். ஆனால் அதுவே பரிசோதனைக்கு காரணமாயிற்று. குர்ஆன் ஓர் இலக்கிய அற்புதம் தான் என்பதனை நிரூபிக்க கைலானி ஓர் வாய்ப்பாக பயன்படுத்தினார்.

இறுதியில் ஆய்வு தொடங்கியது. இரு அறிஞர்களும் சேர்ந்து ஒரு பொருளை தேர்ந்தெடுத்தனர். அதற்கு அவர்கள் சொல்லாக்கம் அளித்தனர். இறுதியில் அப்பொருள் தொடர்பாக குர்ஆன் என்ன சொல்லியிருக்கிறது என்று பார்த்தனர். முடிவில் வியந்து போயினர். அவர்கள் சோதனைக்காக எடுத்துக் கொண்ட பொருள்நரகம் எவ்வளவு பெரியது?’ என்பதை பல வாக்கியங்களில் சொல்ல வேண்டும்.

இருவரும் சேர்ந்து தங்களின் மொழித் திறனையும் இலக்கிய ஆற்றலையும் முழுவதுமாகப் பயன்படுத்தி, மூளையை கசக்கி, இனி இதற்கு மேல் இப்பொருளுக்கு வாசகம் அமைக்க முடியாது என்று சொல்லி, சுமார் இருபது வாக்கியங்களை அரபியில் உருவாக்கினர்.

நரகத்தின் அளவு மனித அறிவுக்கு எட்டாதது. நரகத்தில் முழு உலகத்தையே அடைக்கலாம். மனித இனமும் ஜின் இனமும் புகுந்தால் கூட நரகத்தில் அத்தனை பேருக்கும் இடமுண்டு. நாம் நினைப்பதை விட நரகம் மிகவும் விசாலமானது... என்றெல்லாம் வாசகங்கள் அமைத்து முடித்த பிறகு வெற்றிப் புன்னகை சிந்தினார் வெங்கால்.

இறுதியாக, திருக்குர்ஆனைப் புரட்டி இதே பொருளுக்கு குர்ஆன் அமைத்துள்ள வாசகம் என்ன என்று தேடினார்கள்.
يَوۡمَ نَقُولُ لِجَهَنَّمَ هَلِ ٱمۡتَلَأۡتِ وَتَقُولُ هَلۡ مِن مَّزِيدٍ۬
அன்று நாம் நரகத்தை நோக்கி உன் வயிறு நிரம்பிவிட்டதா? என்று கேட்போம். (ஆனால் நரகமோ) இன்னும் இருக்கிறதா? என கேட்கும்’. (50:30)

ஆஹா, என்ன அற்புதமான வசனம். நரகம் எவ்வளவு பெரியது? என்பதை இறைவன் இலக்கிய நயத்தோடு சொல்கிறான் என்பதை பாருங்கள். இறுதியில் வெங்கால் தன் தோல்வியை ஒப்புக் கொண்டார்.

இப்படி எத்தனையோ அற்புதங்கள் குர்ஆனுக்கு உண்டு. பல கோடி பக்கங்கள் எழுதிக் கொண்டே போகலாம்.

இத்தகைய சிறப்புகளை தாங்கியுள்ள குர்ஆனை அறிந்தவரும் அதனை ஓதுபவரும் மேன்மை பெறுகிறார். திருக்குர்ஆனை தானும் கற்று அதனைப் பிறருக்கும் கற்றுக் கொடுப்பவரே உங்களில் மிகச் சிறந்தவர் என்றார்கள் நாயகம்.

என்னை திக்ர்செய்வதையும், என்னிடத்தில் பிரார்த்தனை செய்வதை விட்டு விட்டு, யார் குர்ஆன் ஓதுவதில் ஈடுபட்டுள்ளாரோ அவருக்கு, என்னிடத்தில் கேட்போருக்கு நான் வழங்குவதை விட சிறந்த ஒன்றையே நான் வழங்குவேன் என இறைவன் கூறுவதாக நாயகம் (ஸல்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இறைவேதமான குர்ஆனிலிருந்து ஒரு வசனத்தை கற்றுக் கொள்பவரை அவ்வசனம் புன்னகை பூத்த முகத்துடன் நாளை மறுமை நாளில் வரவேற்கும் என்பது நபிமொழியாகும்.

அபூஹுரைராவே, குர்ஆனை நீர் கற்று, மக்களுக்கு அதனைக் கற்றுக் கொடுப்பீராக. உமக்கு மரணம் வரும் வரை இவ்வாறே இருந்து வருவீராக. இந்நிலையில் நீர் மரணமடைந்து விட்டால் கஅபத்துல்லாவை மக்கள் தரிசிப்பது போல உம்முடைய அடக்க ஸ்தலத்தை வானவர்கள் தரிசிப்பார்கள்என்றார்கள் நாயகம்.

ஒரு சமூகத்தை தண்டிக்கும் விதமாக அவர்களின் மீது கண்டிப்பாக வேதனையை அனுப்புவதற்கு இறைவன் முடிவு செய்வான். ஆனால் அரபி பாடசாலைகளில் பயின்று கொண்டிருக்கும் குழந்தைகள் அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்’ (எல்லாப் புகழும் இறைவனுக்கே) என ஓதுவதை கேட்டு இறைவன் அச்சமூகத்தின் மீதான வேதனையை நாற்பதாண்டுகள் அழிக்காமல் விட்டுவிட்டான் என்றார்கள் நாயகம்.

ஹஜ்ரத் இக்ரிமா என்கிற நபிதோழர், திருக்குர்ஆனை ஓதிடும் போது பல நேரங்களில் உணர்விழந்து கீழே சாய்ந்து விடுவார்களாம். ஹாதா கலாமு ரப்பி’ (இது என் இறைவனின் மறையாகும்) என அவர்களின் நாவு முணுமுணுத்துக் கொண்டிருக்குமாம்.

யாசீன் அத்தியாத்தில் இடம் பெற்றுள்ள பாவிகளே இன்றைய தினம் நீங்கள் நல்லடியார்களை விட்டு பிரிந்து நில்லுங்கள்என்கிற வசனத்தை இரவு முழுவதும் ஓதி ஓதி உள்ளம் உருகி நிற்பார்களாம்.

இவ்வளவு மேன்மைகளை தாங்கியுள்ள திருக்குர்ஆனை அதன் ஓதும் முறையறிந்து பொருளுணர்ந்து உள்ளச்சத்தோடு ஓதுவோம், இறையருள் பெறுவோம்.

2 கருத்துகள்:

  1. மிக உயர்ந்த கருத்தை மிக எளிமையாக தந்திருக்கின்றீர்கள்.
    மாஷாஅல்லாஹ்

    பதிலளிநீக்கு
  2. மிக உயர்ந்த கருத்தை மிக எளிமையாக தந்திருக்கின்றீர்கள்.
    மாஷாஅல்லாஹ்

    பதிலளிநீக்கு

 
back to top