திங்கள், 7 செப்டம்பர், 2015

வரதட்சணை.

கருத்துகள் இல்லை:

காதர்      : வாங்க தரகர் நம்ம பையனுக்கு பொண்ணு 
                  ஒன்னு பார்க்கனும்.


தரகர்      : என்ன காதர் பாய் பாத்திட்டா போச்சி. அது சரி ஒங்க 
                பையன் என்ன பண்ணுறான்


காதர்      : என்ன அப்படி கேட்டுடீங்க என் பையன்  
                 VIP யா இருக்கான்.


தரகர்      : என்ன..... உங்க பையன் VIP யா VIP னா என்னங்க.


காதர்      :    VIP னா வேலையில்லா பட்டதாரி.


தரகர்      : இதத்தான் இவ்வளவு பெருமையா சொல்லுரீங்களா


காதர்      : அதவிடுய்யா பையனுக்கு பெரிய இடமா பார்க்கனும்.


தரகர்      : நம்ம ஊரு தண்ணி டேங் ரொம்ப பெருசு பாப்போமா...


காதர்      : யோவ் பெருசுனா பசையுள்ள ஆளு என்று அர்த்தம்.


தரகர்      :  ஓ.... பசையுள்ள பார்ட்டி இவன் தான் வேலையில்லாம
                         போஸ்டர் ஒட்டிட்டு அலையிரான்  ஓகே வா..


காதர்       : பசையுள்ள பார்டின்னா பணக்காரன் வீடு என்று அர்த்தம்.


தரகர்       : புரிஞ்சிரிச்சி.... பார்த்துட்டா போச்சு.


காதர்       : தரகரே சில கண்டீசன் இருக்கு.


தரகர்       : உன் பையனுக்கு பொண்ணுகுடுக்கறதே அதிசயம். அதிலே
                            கண்டீசன் வேறயா...


காதர்      :         என்னய்யா முனங்குற...

தரகர்        : ஒன்னுமில்ல நீங்க மேல சொல்லுங்க.

காதர்         : ரொம்ப வேண்டாம் 2 லடசம் ரொக்கம். 50 பவுன் நகை   
                                 போடனும்.

தரகர்        : முதல்ல உன்ன போடனும்.

காதர்        : என்னய்யா புலம்புர

தரகர்        : ஒன்னுமில்ல மேல சொல்லுங்க..

காதர்.     :       பையனுக்கு 4 பவுன் பிரேஸ்லட்டும் 2 கிராம் 
                               மோதிரமும்  போடணும்.

தரகர்.     :      வெள்ளிலயா போடனும்.

காதர்.     :       யோவ் எங்க அந்தஸ்துக்கு வெள்ளியா.... பிளாட்டினமே
                               போடனும். போனா போதுன்னு தங்கத்துல போடச்
                                                              சொல்லுறேன்.

தரகர்.      :    ஆமா.. ஆமா... உங்க பையன்தான் VIP யாச்சே மேலே
                                                                   சொல்லுங்க.

காதர்       :       பையனுக்கு அப்பாச்சி பைக் வாங்கி கொடுக்கனும்.

தரகர்.      :       இவன் வீட்ல சைக்கிளே கிடையாது நி கெட்ட 
                  கேட்டுக்கு பைக்கு வேறயா..?

காதர்.       :                        என்னய்யா முனங்குற...

தரகர்          :    ஒன்னுமில்ல நீங்க மேல சொல்லுங்க.

காதர்.         :        ஃப்ரிஜ், வாசிங் மிஷின் தரனும் இவ்வளவு தான்
                                  மண்டபத்தில் நிக்காஹ் நடக்கனும். ஆயிரம் 
               பேருக்கு பிரியாணி போடனும். எங்க வீட்டுக்கு 500 
               முறுக்கும் 200 குழல் பனியாரம் தரனும்.

தரகர்.       :              மண்டபத்தில் கச்சேரி வைக்கனுமா...?

காதர்.        :            கூடாது... கூடாது... மார்கத்துல அது ஹராம்.

தரகர்,          :               ஏண்டா... இதுக்கு முன்னால நீ கேட்டதெல்லாம்
                                                       மார்கத்தில ஹலாலா..

காதர்.            :     என்னடா மரியாதை இல்லாம பேசுற.

தரகர்.             :    உனக்கெதுக்குடா மரியாதை அல்லாஹ்வும் ரசூலும் 
                                மஹ்ரு  கொடுத்து மணம் முடிக்க சொன்னா 
              வரதட்சணை என்ற பிச்சை வாங்கி பையனுக்கு 
              மணம் முடிக்க பாக்குற இனிமேல என் பையனுக்கு 
                               பொண்ணு  பாருன்னு இந்த   ஏரியா பக்கம் வந்த 
                 தொலைச்சிபுடுவேன் திரும்பி போய்ரு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 
back to top