சனி, 12 செப்டம்பர், 2015

இமாமுல் அஃலம் அபூஹனிபா ரஹ் அவர்களின் வாழ்வினிலே......

கருத்துகள் இல்லை:
கூபா நகரின் பள்ளிவாசல் ஒன்றில் பிரபல்யமான ஒரு பேச்சாளர் உரையாற்றிக் கொண்டிருந்தார். அவர் தனது உரையின் இடையில் கலீபா உஸ்மான் (ரலி) அவர்கள் ஒரு யூதர் எனக் கூறினார். கூட்டத்தோடு அமர்ந்து சொற்பொழிவை கேட்டுக் கொண்டிருந்த இமாமுல் அஃலம் அபூஹனிபா (ரஹ்) அவர்களும் இந்த வார்த்தையை கேட்டார்கள்.


மறுநாள் இமாமவர்கள் அந்த பேச்சாளரின் வீட்டுக்கு சென்று உங்களுக்கு திருமண வயதில் ஒரு மகள் இருப்பதாக கேள்விப்பட்டேன் அவருக்கு நல்ல அழகு நல்ல அந்தஸ்துள்ள பணக்கார மாப்பிள்ளை ஒருவர் இருக்கிறார் அவருக்கு உங்கள் மகளை திருமணம் பற்றி பேசலாமா....? என இமாமவர்கள் கேட்டார்கள் உடனே அவர் ஓ... தாராளமாக பேசுங்கள் எனக்கூறிய பொழுது இமாமவர்கள் சொன்னார்கள் ஆனால் ஒரு கண்டிசன் அவர் முஸ்லிமல்ல ஒரு யூதர் எனக் கூறினார்கள்.


இதை கேட்டதும் அந்த பேச்சாளருக்கு கோபம் கொப்பளித்தது. நீங்கள் ஒரு இமாமா...? ஒரு யூதருக்கா என் மகளை பெண் கேட்டு வந்திருக்கிறீர்கள்.  என்று கோபப்பட்ட பொழுது இமாமவர்கள் கூறினார்கள் எங்கள் உயிரினும் மேலான நாயகம் (ஸல்) அவர்கள் தங்களது இரு மகள்களை ஒரு யூதருக்கா திருமணம் முடித்து கொடுப்பார்கள் எனக் கேட்டு அவரின் பேச்சில் உள்ள தவறை மென்மையாக சுட்டிக் காட்டி உணர்த்தி விட்டு சென்றார்கள்.


                                                         தொகுப்பு
                                                             

                                                                     
                           நிஸ்தார் மஸ்லஹி. மேலப்பாளையம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 
back to top