ஞாயிறு, 18 ஜனவரி, 2015

ஜன்னத்.

கருத்துகள் இல்லை:

அல்லாஹ்வை அஞ்சுங்கள் புறத்தால் மட்டுமல்ல அகத்தாலும்.

நபியை பின்பற்றுங்கள் சொல்லால் மட்டுமல்ல செயலாலும்.

ஸாஹாபாக்களை மதியுங்கள் உதட்டால் மட்டுல்ல உள்ளத்தாலும்.

நல்லோர்கள் வழி நடங்கள் நடிப்பால் மட்டுமல்ல நடப்பாலும்.

சுன்னத்தை வழியாக்குங்கள் அறிவால் மட்டுமல்ல அன்பாலும்.

ஆத்திரத்தை அடிப்படையாக்குங்கள் எழுத்தால் மட்டுமல்ல எண்ணத்தாலும்.

மனிதனுக்கு நேர்வழி காட்டுங்கள் சோதனையால் மட்டுமல்ல சாதனையாலும்.

கொள்கையை பின்பற்றுங்கள் பேனாவால் மட்டுமல்ல பேருண்மையாலும்.

ஆணவத்தை அடக்குங்கள் பெயருக்காக மட்டுமல்ல உயர்வுக்காகவும்.

பணிவை பண்பாடு ஆக்குங்கள் பார்வைக்காக மட்டுமல்ல படைத்தவனுக்காகவும்.

ஒற்றுமையாக வாழுங்கள் இனத்தால் மட்டுமல்ல மனத்தாலும்.

உயர்ந்து நில்லுங்கள் பணத்தால் மட்டுமல்ல குணத்தாலும்.

உணர்வை உறுதியாக்குங்கள் எண்ணத்துக்காக மட்டுமல்ல ஜன்னத்துக்காகவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 
back to top