சனி, 29 டிசம்பர், 2012

நபிமார்கள். part.2




1.)    கேள்வி நபி என்பவர் யார்..?


பதில். நபி எனபவர் வஹி அறிவிக்கப்பட்டவர். பழைய வேதத்தின் படி மக்களை வழி நடத்துபவர்.


2. கேள்வி ரசூல் என்பவர் யார்..?


பதில் ரசூல் என்பவர் வஹி அறிவிக்கப்பட்டவர் பழைய வேத்தின்படி மக்களை வழி நடத்துபவர்.


3. கேள்வி நபிமார்கள் எத்தனை பேர்..?


பதில் ஓரு அறிவிப்பின் படி ஓரு இலட்சத்து இருபத்தி நான்காயிரம் நபிமார்கள். இன்னொரு அறிவிப்பின்படி இரண்டு இலட்சத்து இருபத்து நான்காயிரம் நபிமார்கள்.


4. கேள்வி  நபிமார்கள் அனைவரையும் கொண்டு ஈமான் கொள்வது கடமையா...?


பதில். நபிமார்கள் அனைவரின் எண்ணிக்கையை குறிப்பிடுவதன்றி அனைத்து நபிமார்களையும் ஈமான் கொள்வது கடமை.


5. கேள்வி. ரசூல்மார்கள் எத்தனை பேர்…?

 
பதில்.ரசூல்மார்கள் 313 பேர்கள். 


6. கேள்வி. உலுல் அஸ்ம் என்று சொல்லப்படும் நபிமார்கள் எத்தனை பேர். யார் யார்…?


பதில். உலுல் அஸ்ம் என்று சொல்லப்படும் நபிமார்கள் ஐந்து பேர்.


1.ஆதம் அலை.


2.நூஹ் அலை.


3.இப்ராஹிம்.அலை


4.மூஸா அலை.


5.முஹம்மது நபி ஸல். அவர்கள்.


7. கேள்வி. நபிமார்கள் எப்படிப்பட்டவர்கள்…?


பதில். நபிமார்கள் அல்லாஹ்வின் உண்மையான நல்லடியார்கள்.சிறிய பெரிய பாவங்களை விட்டும் பாதுகாக்கப்பட்டவர்கள். நான் நபி என்பதை நிருபிப்பதற்க்கு முஃஜிஸாத் எனும் அற்ப்புதங்களை நிகழ்த்தக்கூடியவர்கள்.


8. கேள்வி. நபிமார்களுக்கு வாஜிபான தன்மைகள் எத்தனை..?
  என்ன...என்ன..?


பதில். நபிமார்களுக்கு வாஜிபான தன்மைகள்


1.புத்தி கூர்மை


2.மக்களுக்கு மார்கத்தை எத்திவைத்தல்


3.நம்பிக்கை


4.உண்மையுரைத்தல். ஆகிவை.


கேள்வி. நபிமார்களுக்கு ஆகுமான தன்மைகள் என்ன..?


பதில். நபிமார்களுக்கு சாதாரண நோய் போன்று அவர்களின் அந்தஸ்தைக் குறைக்காத முறையில் மனிதத்தன்மைகள் ஏற்ப்படுவதாகும்


9. கேள்வி. நபிமார்களுக்கு ஏற்ப்படக்கூடாத தன்மைகள் எத்தனை..அவை என்ன..?


பதில். நபிமார்களுக்கு ஏற்ப்படக்கூடாத தன்மைகள்


1.புத்திகுறைவு


2.மக்களுக்கு மார்க்கத்தை எத்திவைக்காதிருத்தல்.


3.பொய்யுரைத்தல்.


4.மோசடி செய்தல்.


கேள்வி. நபிமார்கள்  சிறந்தவர்களா... மலக்குமார்கள் சிறந்தவர்களா..?


பதில். மலக்குமார்களை விட நபிமார்கள் சிறந்வர்கள்.


10. கேள்வி. எத்தனை நபிமார்கள் பெயர்கள் சூராக்களுக்கு இடப்பட்டுள்ளன...அவை எது...?


பதில். 7.நபிமார்கள் பெயர்களில் ஸூராக்கள் வந்துள்ளன. அவர்கள்


1.இப்ராஹிம் அலை


2.ஹூத் அலை


3.யூனூஸ் அலை

.
4.யூசூப் அலை


5.நூஹ் அலை


6.லுக்மான். அலை


7.முஹம்மது நபி ஸல் அவர்கள்.


11. கேள்வி. நபிமார்களில் சிறநதவர்கள் யார்...?


பதில். நபிமார்களில் சிறந்தவர் எங்கள் நபி ஸல் அவர்கள்.


12. கேள்வி. நபிமார்களின் தந்தை யார்..?


பதில். நபிமார்களின் தந்தை இப்ராஹிம் அலை


13. கேள்வி. மனிதர்களின் தந்தை யார்..?


பதில். மனிதர்களின் தந்தை ஆதம் அலை.


14. கேள்வி. எல்லா நபிமார்களுக்கும் தங்களது சமுகத்திற்க்கு பெருமானாரை பற்றி நன்மாராயம் கூறினார்களா...?


பதில். ஆம் எல்லா நபியும் தனது சமுகத்திற்க்கு பெருமானாரை பற்றி நன்மாராயம் கூறினார்கள்.


15. கேள்வி. கஃபாவில் நபிமார்களின் சிலை இருந்தனவா..?


பதில். இப்ராஹிம் நபி இஸ்மாயில் நபி மரியம் நாயகி ஆகியோரின் சிலை இருந்தன.


16. கேள்வி. மலக்குமார்களின் சிலைகள் கஃபாவில் இருந்தனவா...?


பதில். ஆம். மலக்குமார்களின் சிலைகள் கஃபாவில் இருந்தன.


17. கேள்வி. நமக்கு முஸ்லிம் என்று பெயர் வைத்தவர் யார்..?

 
பதில். இப்ராஹிம் அலை.


18. கேள்வி. முதலில் நரை ஏற்ப்பட்ட நபி யார்..?


பதில். முதலில் நரை ஏற்ப்பட்ட நபி இப்ராஹிம் அலை அவர்கள்.


19. கேள்வி. மஸ்ஜிதுல் அக்ஸா எங்கு யாரால் கட்டப்பட்டது..?


பதில். மஸ்ஜிதுல் அக்ஸா பைத்துல் முகத்தஸ். ஸூலைமான் அலை அவர்களால் கட்டப்பட்டது.


20. கேள்வி. உலகில் ரேஷன் முறையை முதலில் அறிமுகப்படுத்தியது யார்..?


பதில். உலகில் ரேஷன் முறையை அறிமுகப்படுத்தியது நபி யூசுப் அலை அவர்கள்.


21. கேள்வி. பொறுமையில் சிறந்த நபி யார்..?


பதில். பொறுமையில் சிறந்த நபி ஐயூப் அலை அவர்கள்.


22. கேள்வி. அழகில் சிறந்த நபி யார்..?


பதில். அழகில் சிறந்த நபி யூசுப் அலை அவர்கள்.


23. கேள்வி. அரசாட்சியில் சிறந்த நபி யார்..?


பதில். அரசாட்சியில் சிறந்த நபி ஸூலைமான் அலை அவர்கள்.


23. கேள்வி. வீரத்தில் சிறந்த நபி யார்..?


பதில். வீரத்தில் சிறந்த நபி மூஸா அலை அவர்கள்


24. கேள்வி. போர்க்கவசம் செய்வதில் சிறந்த நபி யார்..?


பதில். போர்க்கவசம் செய்வதில் சிறந்த நபி தாவூத் அலை அவர்கள்.

25. கேள்வி. நோய் நிவாரணம் செய்வதில் சிறந்த நபி 


பதில். நோய் நிவாரணம் செய்வதில் சிறந்த நபி ஈஸா அலை அவர்கள்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக