வெள்ளி, 13 ஜூலை, 2012

பேராசை பெருநஷ்டம்

கருத்துகள் இல்லை:
நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய ஓரு பிரயாணத்தின் போது ஓரு மனிதன் தானும் அவர்களுடன் வருவதாகக் கூறிச் சேர்ந்து கொண்டான். இருவரும் ஓரு ஆற்றங்கரையோரமாகச் சென்று கொண்டிருந்த போது ஓரு இடத்தில் சாப்பிட அமர்ந்தனர். இருவரிடத்திலும் மூன்று ரொட்டிகள் இருந்தன. இருவரும் ஆளுக்கொரு ரொட்டியைச் சாப்பிட்டனர். ஓரு ரொட்டி மீதி இருந்தது.


ஈஸா அலை அவர்கள் தண்ணிர் குடிப்பதற்க்காக அருகிலிருந்த ஆற்றுக்குச் சென்றார்கள். திரும்பி வந்து பார்த்த போது அந்த ஓரு ரொட்டியைக் காணவில்லை. ரொட்டியை யார் எடுத்தது....?”   என்று அம்மனிதனிடம் கேட்டார்கள்….? எனக்குத் தெரியாது  என்று கூறினான். ஈஸா அலை அவர்கள் எதுவும் பேசாமல் அவனையும் அழைத்துக் கொண்டு அங்கிருந்துச் சென்றார்கள்.


சிறிது தூரம் சென்றபோது ஓரு மான் அதனுடைய இரு குட்டிகளுடன் வந்து கொண்டிருந்த்து. ஈஸா அலை அவர்கள் அவ்விரு குட்டிகளில் ஓன்றை அழைத்தார்கள்.  அது வந்தது, அதனைப்பிடித்து  அறுத்து சமைத்து இருவரும் சாப்பிட்டார்கள். பின்னர் அதன் எழும்புகளையும், மீதியுள்ள பகுதிகளையும் ஓன்று சேர்த்து, அல்லாஹ்வின் அனுமதி கொண்டு எழுந்திருப்பாயாக...!”  என்று கூறினார்கள். அது உயிர் பெற்று எழுந்து ஓடிவிட்ட்து.. அப்பொழுது அம்மனிதனிடம் இந்த அற்புதத்தை உனக்கு காண்பித்த அல்லாஹ்வின் மீது ஆணையாக உன்னிடம் கேட்க்கிறேன். அந்த ஓரு ரொட்டியை எடுத்தது யார்....?  என்று கேட்டார்கள். எனக்கு தெரியாது என அவன் கூறினான்.


பிறகு இருவரும் அங்கிருந்து சென்றனர் வழியில் ஓரு ஆறு குறுக்கிட்டது. ஈஸா அலை அவர்கள் அம்மனிதனின் கைப் பிடித்துக் கொண்டு ஆற்று நீரின் மீது (தரையில் நடப்பது போன்று) நடந்து சென்றார்கள். ஆற்றைக் கடந்த பின் இந்த அற்புததை காண்பித்த அல்லாஹ்வின் மீது ஆணையாக உன்னிடம் கேட்க்கிறேன். அந்த ஓரு ரொட்டியை எடுத்தது யார்....?  என்று கேட்டார்கள். எனக்கு தெரியாது என அவன் கூறினான்.


பின்னர் இருவரும் அங்கிருந்து நடந்து சென்று ஓரு வனாந்திரத்திற்க்கு வந்து சேர்ந்தனர். அங்கு ஓரிடத்தில் இருவரும் அமர்ந்தபோது நபி ஈஸா அலை அவர்கள் அங்கிருந்த மண்ணையும் மணலையும் குவியலாக ஆக்கி  அல்லாஹ்வின் அனுமதி கொண்டு தங்கமாக மாறிடுவாயாக....!”  என்று கூறினார்கள். அது தங்க குவியலாக மாறிவிட்டது. அதனை மூன்று பங்குகளாக ஆக்கி  ஓரு பங்கு எனக்கு...  மற்றொரு பங்கு உனக்கு... மூன்றாவது பங்கு அந்த ரொட்டியை எடுத்தவனுக்கு.  என்று கூறினார்கள். அப்பொழுது அந்த மனிதன் நான் தான் அந்த ரொட்டியை எடுத்தேன். என்று கூறினான்.  அப்படியானால் இவை அனைத்தையும் நீயே எடுத்துக் கொள்.! என்று கூறிவிட்டு அவனைப் பிரிந்து சென்று விட்டார்கள்.


அம்மனிதன் அப்பொற்க்குவியலைப் பாதுகாத்துக் கொண்டு அங்கேயே உக்கார்ந்திருந்தான். அப்பொழுது அவ்விடத்திற்க்கு இரண்டு மனிதர்கள் வந்து சேர்ந்தனர்.  பொற்க்குவியலையும் அம்மனிதனையும் பார்த்த அவர்கள் அவனைக் கொன்று விட்டு அவ்விருவரும் அப்பொருளை எடுத்துக் கொள்ளத் திட்டமிட்டனர். இதனை அறிந்த அம்மனிதன் இந்த பொற்க்குவியலை நம் மூன்று பேரும் சமமாகப் பங்கிட்டுக் கொள்வோம். என்று கூறி அவர்களைச் சமாதானப்படுத்தியப்பின் உங்கள் இருவரில் ஓருவர் ஊருக்குள் சென்று சாப்பிடுவதற்க்கு ஏதேனும் உணவு வாங்கி வரவேண்டும். என்று கூறி அவர்களில் ஓருவனை அனுப்பிவைத்தனர்.


உணவு வாங்கி வரச் சென்றவன், அவ்விருவரையும் கொன்றுவிட்டு அந்த பொற்க்குவியலைத் தானே அடைந்து கொள்ள வேண்டுமென்று எண்ணி உணவில் விஷத்தைக் கலந்து எடுத்துச் சென்றான். இவன் உணவு வாங்கச் சென்றபின் அவர்கள் இருவரும் அவனுக்கு ஏன் இதில் மூன்றிலொரு பங்கைக் கொடுக்க வேண்டும். அவன் வந்தவுடன் அவனைக் கொன்று விட்டு நாம் இருவர் மட்டும் இப்பொருளைப் பங்கிட்டுக் கொள்ளலாம் எனத் திட்டம் வகுத்திருந்தனர்.


அதன்படி உணவு வாங்கச் சென்றவன் வந்தவுடன் இருவரும் சேர்ந்து அவனைக் கொன்றுவிட்டு அந்த உணவைச் சாப்பிட்டனர். சற்று நேரத்திலேயே அவர்கள் இருவரும் இறந்துவிட்டனர். நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மீண்டும் அவ்வழியாக வந்த போது மூவரும் பிணங்களாகக் கிடப்பதை கண்டு தங்கள் தோழர்களிடம் இது தான் உலகம். எச்சரிக்கையாக இருந்து கொள்ளுஙகள். என்று கூறிச் சென்றார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 
back to top