செவ்வாய், 10 ஜூலை, 2012

ஜமாத்துடன் தொழுவது தனித்துத் தொழுதை விட 27.மடங்கு அதிக நன்மை என அறிவிக்கப்பட்டுள்ள ஹதீஸிற்க்கு விளக்கம்


ஜமாத்துடன் தொழுவது தனித்துத் தொழுதை விட 27.மடங்கு அதிக நன்மை என அறிவிக்கப்பட்டுள்ள ஹதீஸிற்க்கு விளக்கம்  

1. பாங்கு சொல்லும் பொழுது தொழுகையை ஜமாத்துடன் தொழு வேண்டும்மென்ற எண்ணத்தில் பாங்குக்கு பதில் சொல்வது.


2. முதல் நேரத்திலேயே அத்தொழுகைக்குப் போய்ச் சேர்வது.


3. அமைதியாக மஸ்ஜிதுக்கு நடந்து செல்வது.


4. துஆச் செய்த வண்ணம் மஸ்ஜிதில் நுழைவது.


5. மஸ்ஜிதுக்குச் சென்றவுடன் தஹியத்துல் மஸ்ஜித் தொழுவது.


6. ஜமாத்தை எதிர்பார்த்திருப்பது.


7. மலக்குகள் அவருக்காக சாட்சி கூறி சலவாத்துச் சொல்வது.


8. இகாமத்திற்க்கு பதில் சொல்வது.


9. இகாமத் சொல்லப்படும் பொழுது விரண்டோடிவிடும் ஷைத்தானை விட்டுப் பாதுகாப்புக் கிடைப்பது.


10. இமாம் தக்பீர் தஹ்ரீமா சொல்வதை எதிர்பார்த்திருப்பது.


11. இமாமுடைய தக்பீரை அவருடன் சேர்ந்தே அடைந்து கொள்வது.


12. வரிசையை நேராக்கி இடைவெளியை அடைத்து நிற்ப்பது.


13. இமாம் ஸமிஅல்லாஹூ லிமன் ஹமிதா என்று சொல்லும் பொழுது அதற்க்கு பதில் செல்வது.


14. இமாமுடன் தொழும் பொழுது பெரும்பாலும் மறதி ஏற்ப்படாமலிருப்பது.


15. இமாம் தவறி விட்டால் அவருக்கு எடுத்துக் கொடுப்பது. உணர்த்துவது.


16. தொழுகையில் உள்ளச்சம் ஏற்ப்படுவது. பெரும்பாலும் வீண் எண்ணங்களை விட்டு நீங்கியிருப்பது.


17. மலக்குகள் அவரைச் சூழ்ந்து கொள்வது.


18. திருக்குர்ஆனை தஜ்வீது முறைப்படி ஓதுவதற்க்கும் பர்லுகளையும் சுன்னத்துகளையும் கற்றுக் கொள்வதற்க்கும் பயிற்ச்சி எடுத்துக் கொள்வது.


19. இஸ்லாத்தின் அடையாளச் சின்னங்களை வெளிப்படுத்துவது.


20. இறைவணக்கத்தை கூட்டாக நிறைவேற்றுவதின் மூலம் ஷைத்தானை மூக்குடையச் செய்வது.


21. வணக்கத்திற்க்கும் சோம்பல் உள்ளவர்களை 
உற்ச்சாகப்படுத்துவதற்க்கும் உதவி செய்வது.


22. நயவஞ்சகத்தனத்தை விட்டும். இவர் தொழுகையை விட்டவர் என்று மற்றவர்கள் தவறாக எண்ணுவதை விட்டும் சுகம் பெறுவது.


23. சலாம் கொடுக்கும் போது இமாமுடைய சலாமுக்கு பதில் சொல்வதை நிய்யத்துச் செய்வது.


24. ஜமாஅத்திலுள்ள நிரப்பமான நல்லவரின் பரக்கத்து குறையுள்ளவரின் மீதும் ஏற்ப்படுவது.


25. அணடை வீட்டார்களுகிடையே அன்பை நிலைப்படுத்தி தொழுகை நேரங்களில் அவர்களின் சந்திப்பை உண்டாக்கிக் கொள்வது.


26. இமாம் ஓதும் போது மௌனமாக இருந்து கிராஅத்தைச் செவிதாழ்த்திக் கேட்ப்பது.


27. இமாம் ஆமீன் சொல்லும்பொழுது ஆமீன் சொல்வது. கடைசியிலுள்ள இரண்டும் சப்தமிட்டு ஓதும் தொழுகைகளில் உள்ளவை.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக