புதன், 1 ஜூன், 2011

தலாக் விளையாட்டல்ல....vellimedai.blogspot.com




الطلاق مرتان فإمساك بمعروف أو تسريح بإحسان ولا يحل لكم أن تأخذوا مما آتيتموهن شيئا إلا أن يخافا ألا يقيما حدود الله فإن خفتم ألا يقيما حدود الله فلا جناح عليهما فيما افتدت به تلك حدود الله فلا تعتدوها ومن يتعد حدود الله فأولئك هم الظالمون 2/229



மீண்டும் ஒரு தலாக் பிரச்சினை உருவெடுத்துள்ளது.



இண்டெர்னெட்டில் மனைவியோடு சாட்டிங்கில் ஈடுபட்டிருந்தகணவன்  விளையாட்டாக நான் உன்னை த்லாக்விட்டுட்டேன்என்றான்.



இது தலாக் ஆகிவிடும் என்று தேவ்பந்த் தீர்ப்பளித்து.



செல்போனில் மனைவியை தலாக் சொன்னான் ஒருத்தன்.மனைவி அந்த வார்த்தை தனக்கு கேட்கவில்லை என்றாள்



இங்கும் தலாக் நிகழ்ந்து விட்ட்து என்று மதரஸா தீர்ப்பளித்த்து.



வழக்கம் போல மீடியாக்கள் விமர்ச்சிக்கின்றன.



இந்த தீர்ப்புக்கள் சரியானவையே! இவ்வாறு  தலாக் கூறியவர்கள்.மார்க்கத்தை மலிவு படுத்திவிட்டனர்.



இது கண்டிக்கத்தக்க போக்காகும். இவ்வாறு நடந்துகொள்கிறவர்களை சமுதாயம் தண்டிக்க வேண்டும்.



இலகுவான ரஹ்மத்தாக கிடைத்த மார்க்கத்தை இவர்கள்தவறாகப் பயன்படுத்துகிறார்கள். அதன் மூலம் மார்க்கத்திற்குஅவப் பெயரை ஏற்படுத்துகிறார்கள்.



மார்க்கம் தலாக்கிற்கான வழி முறைகளை லேசாக்கியிருக்கிறது.ஆனால் தலாக்கை இலேசான விசயமாக கருதவில்லை.



வேண்டா வெறுப்பாகவே தலாக்கிற்கு அனுமதி கொடுத்த்து.



சர்க்கரை வியாதிகாரர் விரலை எடுக்க சம்மதிப்பது போல



அல்லாஹ் அனுமதித்த்தில் அவனுக்கு மிகவும்கோபமூட்டக்கூடியது தலாக்

عن ابن عمر عن النبي قال: أبغض الحلال إلي الله الطلاق – ابوداوود



மார்க்கத்தை கடைபிடிக்கும் ஒரு நல்ல முஸ்லிமுக்கு இதை விடவேறு எச்சரிக்கை தேவையில்லை.



முறையற்ற தலாக்கின் போது அல்லாஹ்வின் அர்ஸ்நடுங்குகிறது என்றும் ஒரு ஹதீஸ் உண்டு. (மஆரிபு



ஒரு பெண் முறையற்று தலாக் கேட்டால்

عن ‏ ‏ثوبان ‏ ‏قال  ‏قال رسول الله : ‏ ‏أيما امرأة سألت زوجها طلاقا في غير ما ‏ ‏بأس ‏ ‏فحرام عليها رائحة الجنة    ترمذي – 1108



இஸ்லாம் தலாக்கில் சீர்திருத்த்ம் செய்த்து.



இஸ்லாத்திற்கு முன்னால் இதில் வரையறை எதுவும் இல்லாமல்இருந்த்து. ஒரு கணவன் நூறு முறை கூட மனவியை தலாக்சொல்வான். திரும்ப சேர்த்துக் கொள்வான். பெண்களுக்கு துன்பம்த்ரும் வழிமுறை.



இஸ்லாம் தலாக்கில் பல வரைமுறைகளை அமுல்படுத்தியது



·         எண்ணிக்கையில் -  3 தலாக் மட்டுமே

·         சொல்லப்படும் சூழ்நிலை. - மனைவியின் சூழ்நிலைதெரிந்து அவள் இத்தாவை கணக்கிடுவதற்கு வசதியாகஉடலுறவு கொள்ளாத சுத்தகாலத்தில் தலாக்சொல்லவேண்டும்.



·         மாதவிடாய் காலத்தில் தலாக் சொல்லக் கூடாது.



عَلَى مَالِكِ بْنِ أَنَسٍ عَنْ نَافِعٍ عَنْ ابْنِ عُمَرَ أَنَّهُ طَلَّقَ امْرَأَتَهُ وَهِيَ حَائِضٌ فِي عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَسَأَلَ عُمَرُ بْنُ الْخَطَّابِ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ ذَلِكَ فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مُرْهُ فَلْيُرَاجِعْهَا ثُمَّ لِيَتْرُكْهَا حَتَّى تَطْهُرَ ثُمَّ تَحِيضَ ثُمَّ تَطْهُرَ ثُمَّ إِنْ شَاءَ أَمْسَكَ بَعْدُ وَإِنْ شَاءَ طَلَّقَ قَبْلَ أَنْ يَمَسَّ فَتِلْكَ الْعِدَّةُ الَّتِي أَمَرَ اللَّهُ عَزَّ وَجَلَّ أَنْ يُطَلَّقَ لَهَا النِّسَاءُ



பெண்ணின் சூழ்நிலை கவனிக்கப் பட வேண்டும் என்கிறபோது அவளுக்கு தகுந்த எச்சரிக்கை செய்யாமல் தலாக்விடுவது நியாயமல்ல.



கடிதம்  செல்போன்  மூலம் தலாக் என்பது அதிகப்ப்பிரசங்கித்தனம். மார்க்கம் ஒரு சௌகரியத்திற்காக அனுமதித்த்தை தவறாகப் பயன்படுத்துவதாகும்.



இஸ்லாமில் தலாக் ஒரு ஆபத்தான சொல்! அதில்விளையாட்டுக்கு இடமில்லை



عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثَلَاثٌ جِدُّهُنَّ جِدٌّ وَهَزْلُهُنَّ جِدٌّ النِّكَاحُ وَالطَّلَاقُ وَالرَّجْعَةُ  - الترمذي 1104 



இஸ்லாம் வழ்ங்கிய எளிய  முறையில் தலாக் என்று சொல்வோர்அது கூறும் வழி காட்டு நெறிகளையும் கடை பிடிக்க வெண்டும்,



இளைய சமுதாயத்திற்கு ஒரு  முக்கியமான அறிவுரை தலாக்என்ற வார்ர்த்தையை விளையாட்ட்டாக்க் கூட யோசிக்காத்தீர்கள்.அது வாழ்வின் வெளிச்சத்தை எடுத்து விடும்.



தேவையற்று இந்த வார்த்தையால் பெண்களை மிரட்டும் பழக்கம தவறானது.

·                     உன்னை த்லாக்  விட்டுறுவேன் என்பது

·                     இரண்டாவது கல்யாணம் செய்துக்குவேன் என்று கூறுவது

·                     எனக்காக் பல பெண்கள் காத்திருக்கிறார்கள் என்று பேசுவது     அழகிய முறையில் குடும்பம் நட்த்தும் அழகல்ல.



பெண்கள் இதை நம்மைப் பார்த்து திருப்பிச் சொன்னால் என்னவாகும் என்று யோசிக்க வேண்டும்.



ஜமாத்துக்களுக்கு ஒரு ஆலோசனை

மாப்பிள்ளைகளுக்கு NOC வழங்கும் போது

அவரை இமாமிடம் அனுப்பி சில சட்டவிதிகளை அறியச்செய்யனும்

குடும்பத்தில் ஏதாவது பிரச்சினை என்றால் ஜமாத்தின் மூலமாக அதை தீர்க்க முயற்சி செய்வேன் என்ற் உறுதி மொழிப்பத்திரத்தில் அவரிடமிருந்து கையெழுத்துப் பெறனும்



கடந்த வாரத்தில் ஒரு கசப்பான செய்தி:

கடந்த வாரத்தில் ஒரு நாள் 65வயது பெரியவர் ஒருவர் வந்தார்.

அவரது மகளுக்கு கல்யாணமாக் 20 வருஷமாச்சு. இரண்டு பேத்திகளில் ஒருவருக்கு கல்யாணம் ஆயாச்சு. மற்றொரு பெண் திருமணத்திற்கு காத்திருக்கிறார். இந்நிலையில் திடீரென கோபித்துக் கொண்டு போன மாப்பிள்ளை. ஏதோ ஒரு வீணாப் போன வக்கீலை அணுகியிருக்கிறார். அவன் விவரமில்லாமல் முத்தலாக் கூறி வாசகம் சொல்லிக் கொடுக்க அதையே கடிதமாக அனுப்பி விட்டார். அந்தப் பைத்திய்க்கார மாப்பிள்ளை. கடித்த்தை அனுப்பி விசய்ம் விபரீதம் என்றானபிறகு ஜமாத்திற்கு வருகிறார்கள் ஆலிம்களைச் சந்திக்கிறார்கள்.



இந்நிலை மாற வேண்டும்,

தலாக்கில் விளையாடக் கூடாது.

முறையாகச் செயல் பட வேண்டும்.

இல்லை எனில் புனித  இஸ்லாம் குறை கூறப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக