قُلْ لِّـلْمُؤْمِنِيْنَ يَغُـضُّوْا مِنْ اَبْصَارِهِمْ وَيَحْفَظُوْا فُرُوْجَهُمْ ذٰ لِكَ اَزْكٰى لَهُمْ اِنَّ اللّٰهَ خَبِيْرٌ بِمَا يَصْنَـعُوْنَ
(நபியே!) முஃமின்களான ஆடவர்களுக்கு நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; அது அவர்களுக்கு மிகப் பரிசுத்தமானதாகும்; நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை நன்கு தெரிந்தவன்.
(அல்குர்ஆன் : 24:30)
★. வணக்க வழிபாடுகளில் கூட ஆண்களும் பெண்களும் கலந்து இருக்கக்கூடாது
قال الإمام النووي رحمه الله : وَإِنَّمَا فَضَّلَ آخِرَ صُفُوفِ النِّسَاءِ الْحَاضِرَاتِ مَعَ الرِّجَالِ لِبُعْدِهِنَّ مِنْ مُخَالَطَةِ الرِّجَالِ وَرُؤْيَتِهِمْ وَتَعَلُّقِ الْقَلْبِ بِهِمْ عِنْدَ رُؤْيَةِ حَرَكَاتِهِمْ وَسَمَاعِ كَلَامِهِمْ وَنَحْوِ ذَلِكَ وَذَمَّ أَوَّلَ صُفُوفِهِنَّ لِعَكْسِ ذَلِكَ.
(شرح النووي علي مسلم، ج : ٤، ص : ١٦٠)
இமாம் நவவீ (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் கூறினார்கள் : தொழுகையில் பெண்களுக்கு கடைசி வரிசையை நிற்க வைப்பதற்கு காரணம், ஆண்களுடன் கலந்து விடக்கூடாது என்பதற்காக மேலும் ஆண்கள் பெண்களைப் பார்த்து விடக்கூடாது, அவர்களைப் பார்ப்பதன் மூலம் அவர்களின் அசைவுகளை பார்ப்பது, அவருடைய பேச்சுக்கள் கேட்பது போன்றவற்றின் மூலம் உள்ளத்தில் (ஷைத்தானுடைய) ஊசலாட்டங்கள் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக.
(நூல் : ஷரஹுன் நவவீ அலா முஸ்லிம், பாகம் : பக்கம் : 160)
★. அந்நிய பெண்ணை தெரியாமல் பார்த்தற்க்காக தன்னை மாய்த்துக் கொண்டவர்
நீண்ட வரலாற்றின் சுருக்கம் ……
ஸஃலபா இப்னு அப்துர் ரஹ்மான் (ரளியல்லாஹு அன்ஹு) என்ற சஹாபி ஒருமுறை ஒரு வீட்டை கடந்து செல்லும்போது அவ்வீட்டுப் பெண்மணி குளிப்பதை தெரியாமல் பார்த்து விட்டார்கள். அதை நினைத்து கவலைப்பட்டு வருந்தி யாரிடமும் சொல்லாமல் மலைகளுக்கு இடுக்கிலே சென்று தங்கிவிட்டார்கள். நபி (ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம்) அவர்கள் இதை கேள்விப்பட்டு உமர் (ரளியல்லாஹு அன்ஹு) அவர்களையும் ஸல்மான் (ரளியல்லாஹு அன்ஹு) அவர்களையும் அனுப்பி அந்த சஹாபியை அழைத்து வரச் சொன்னார்கள். அவர்களும் அழைத்து வர, அந்த சஹாபி நபியவர்களிடம் நடந்ததை கூறினார்கள். கவலை வேண்டாம் அல்லாஹ் உங்களை மன்னிப்பான் என்று ஆறுதல் கூறி நபியவர்கள் அனுப்பி வைத்தார்கள். இருந்தாலும் அந்த சஹாபிக்கு குற்ற உணர்வு இருந்து கொண்டே இருந்தது. அந்த குற்ற உணர்ச்சியால் கவலைப்பட்டு எட்டு நாட்கள் நோய்வாய்ப்பட்டிருந்தார்கள். செய்தி அறிந்த நபியவர்கள் அந்த சஹாபியை சந்தித்து, அந்த சஹாபியின் தலையை தன் முபாரக்கான மடியிலே சாய்த்தார்கள். அந்த சஹாபியின் கவலை மற்றும் தவ்பாவின் காரணமாகவும் அல்லாஹ் அவரை மன்னித்து விட்டான் என்ற செய்தியை ஜிப்ரீல் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் வந்து சொன்னார்கள். நபியவர்களும் அந்த சஹாபியிடம் இந்த விஷயத்தை சொன்னார்கள். இதைக் கேட்ட அந்த சஹாபி ஒரு சத்தமிட்டு நபியவர்கள் மடியிலேயே மரணித்து விட்டார்கள்.
(நூல் : அத்தவ்வாபீன் - லிஇப்னி குதாமா, பக்கம் : 69 - 71)
قال ابن الجوزي رحمه الله : اعْلَمْ .... أَنَّ الْبَصَرَ صَاحِبُ خَبَرِ الْقَلْبِ يَنْقُلُ إِلَيْهِ أَخْبَارَ الْمُبْصَرَاتِ وَيَنْقُشُ فِيهِ صُوَرَهَا فَيَجُولُ فِيهَا الْفِكْرُ فَيَشْغَلُهُ ذَلِكَ عَنِ الْفِكْرِ فِيمَا يَنْفَعُهُ مِنْ أَمْرِ الآخِرَةِ.
(ذم الهوي، ص : ٨٢)
இமாம் இப்னுல் ஜவ்ஸீ (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் கூறினார்கள் : பார்வை என்பது உள்ளத்திற்கு செய்திகளை கொண்டு போய் சேர்க்கும் செய்தியாளர். கண் கண்கள் பார்த்த காட்சிகளை உள்ளத்திற்கு கொண்டு போய் சேர்த்து பிறகு அந்த உள்ளம் அந்த காட்சிகளை படமாக வரையும், பிறகு அது சிந்தனையாக மாறும், பிறகு அந்த சிந்தனை மறுமையில் பயன் தரக்கூடிய வகையில் மட்டும் திசை திருப்பி விடும்.
(நூல் : தம்முல் ஹவா, பக்கம் : 82)
وَقَالَ سَعِيدُ بْنُ أَبِي الْحَسَنِ لِلْحَسَنِ إِنَّ نِسَاءَ الْعَجَمِ يَكْشِفْنَ صُدُورَهُنَّ وَرُءُوسَهُنَّ؟ قَالَ: اصْرِفْ بَصَرَكَ.
(تفسير القرطبي)
ஸயீத் இப்னு அபுல் ஹஸன் (ரஹிமஹல்லாஹ்) அவர்கள் ஹஸன் பசரி (ரஹிமஹுல்லாஹ்) அவர்களிடம், அந்நிய பெண்கள் அவர்களின் நெஞ்சையும் (மார்பகங்களையும்), தலையையும் திறந்து விட்டு திரிகிறார்கள் என்று கூறிய போது, (அவர்களை விட்டும்) உன்னுடைய பார்வையை நீ திருப்பி விடு! என்பதாக ஹஸன் பசரி (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் கூறினார்கள்.
(நூல் : தஃப்ஸீருஸ் குர்துபீ)
قال علامة السعدي رحمه الله : ومن غض بصره عن المحرم، أنار الله بصيرته.
(تفسير السعدي، ص : ٥٦٦)
அல்லாமா ஸஃதீ (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் கூறினார்கள் : அல்லாஹ் ஹராமாக்கியதை விட்டும் யார் தன் பார்வையை தாழ்த்திக் கொள்கிறாரோ, அவருடைய பார்வையை அல்லாஹ் ஒளிமயமாக்குவான்.
(நூல் : தஃப்ஸீருஸ் ஸஃதீ, பக்கம் : 566)
وَكَانَ الرَّبِيعُ بْنُ خُثَيْمٍ رحمه الله يَغُضُّ بَصَرَهُ فَمَرَّ بِهِ نِسْوَةٌ فَأَطْرَقَ حَتَّى ظَنَّ النِّسْوَةُ أَنَّهُ أَعْمَى فَتَعَوَّذْنَ بِاللَّهِ مِنَ الْعَمَى.
(ذم الهوي - إبن الجوزي، ص : ٩١)
ஒரு முறை பெண்கள் ரபீஃ இப்னு கைஸம் (ரஹிமஹுல்லாஹ்) அவர்களை கடந்து செல்லும்போது, அவர்கள் தன் பார்வையை தாழ்த்தி, தன் தலையை தன் நெஞ்சின் மீது சாய்த்துக் கொண்டார்கள். எந்த அளவுக்கு எனில், அவர்கள் குருடர் என்று அப்பெண்கள் நினைத்துக் கொண்டார்கள்.
(நூல் : தம்முல் ஹவா, பக்கம் : 91)
قَالَ الْحسن بن مُجَاهِدٍ رحمه الله : غَضُّ الْبَصَرِ عَنْ مَحَارِمِ اللَّهِ يُورِثُ حُبَّ اللَّهِ .
(ذم الهوي، ص :١٤١)
ஹஸன் இப்னு முஜாஹித் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் கூறினார்கள் : அல்லாஹ் ஹராமாக்கியதை விட்டும் யார் தன் பார்வையை தாழ்த்திக் கொள்கிறாரோ, அல்லாஹ்வின் அன்பு அவருக்கு கிடைக்கிறது.
(நூல் : தம்முல் ஹவா, பக்கம் : 141)
عَبْدَ اللَّهِ رضي الله عنهما يَقُولُ : حِفْظُ الْبَصَرِ أَشَدُّ مِنْ حِفْظِ اللِّسَانِ.
(الورع - لإبن أبي الدنيا، ص : ٦٢)
அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரளியல்லாஹு அன்ஹுமா) அவர்கள் கூறினார்கள் : பார்வையை பேணுவது நாவை பேணிவதை விட மிக கடினம்.
(நூல் : அல்வர்ஃ, பக்கம் : 62)
خَرَجَ حَسَّانُ بْنُ أَبِي سِنَانٍ يَوْمَ الْعِيدِ فَلَمَّا رَجَعَ قَالَتْ لَهُ امْرَأَتُهُ: كَمْ مِنَ امْرَأَةٍ حَسَنَةٍ قَدْ نَظَرْتَ الْيَوْمَ إِلَيْهَا؟ فَلَمَّا أَكْثَرَتْ عَلَيْهِ. قَالَ: «وَيْحَكِ مَا نَظَرْتُ إِلَّا فِي إِبْهَامِي مُنْذُ خَرَجْتُ حَتَّى رَجَعْتُ إِلَيْكِ.
(الورع، ص :٦٤)
இமாம் ஹஸ்ஸான் இப்னு அபீ ஸினான் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் ஈது தொழுகையை முடித்துவிட்டு திரும்பி வரும்போது அவர்களின் மனைவி என்று ஈத் தொழுகையில் நிறைய அழகான பெண்கள் வந்தார்கள் பார்த்தீர்களா? என்பதாக கேட்டார்கள். மீண்டும் மீண்டும் அதையே கேட்டார்கள். அதற்கு இமாமவர்கள் உனக்கு நாசம் உண்டாகட்டும்! நான் தொழுகைக்கு சென்றதிலிருந்து திரும்பி உன்னிடம் வரும் வரை என்னுடைய கட்டை விரலை மட்டும் தான் பார்த்து கொண்டிருந்தேன்.
(நூல் : அல்வர்ஃ, பக்கம் : 64)
عَنْ أَنَسٍ رضي الله قَالَ : إِذَا مَرَّتْ بِكَ امْرَأَةٌ، فَغَمِّضْ عَيْنَيْكَ حَتَّى تُجَاوِزَكَ.
(الورع، ص : ٦٦)
அனஸ் (ரளியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறினார்கள் : உன்னை ஒரு பெண் கடந்து சென்றால் அவள் கடந்து செல்லும் வரை உன்னுடைய பார்வையைத் தாழ்த்திக் கொள்!
(நூல் : அல்வர்ஃ, பக்கம் : 66)
وقال معروف الكَرخي رحمه الله : «غُضُّوا أَبْصَارَكُمْ وَلَوْ عَنْ شَاةٍ أُنْثَى»
(ذم الهوي، ص : ٨٤)
மஃரூஃபுல் கர்கீ (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் கூறினார்கள் : உங்கள் பார்வையை தாழ்த்துங்கள்! அது ஒரு பெண் ஆட்டை பார்ப்பதாக இருந்தாலும் சரி.
(நூல் : தம்முல் ஹவா, பக்கம் : 84)
قَالَ أَبُو عِصْمَةَ قَالَ كُنْتُ عِنْدَ ذِي النِّون وَبَيْنَ يَدَيْهِ فَتَى حَسَنٌ يُمْلِي عَلَيْهِ شَيْئًا فَمَرَّتِ امْرَأَةٌ ذَاتُ حُسْنٍ وَجَمَالٍ وَخُلُقٍ فَجَعَلَ الْفَتَى يُسَارِقُ النَّظَرَ إِلَيْهَا فَفَطِنَ ذُو النُّونِ فَلَوَى عُنُقَ الْفَتَى وَأَنْشَأَ يَقُولُ
دَعِ الْمَصُوغَاتِ مِنْ مَاءٍ وَمِنْ طِينِ ... وَاشْغِلْ هَوَاكَ بِحُورٍ خُرَّدٍ عِينِ.
(ذم الهوي، ص : ٨٤)
அபூ இஸ்மா அவர்கள் கூறினார்கள் : நான் தின்னூன் மிஸ்ரி (ரஹிமஹுல்லாஹ்) அவர்களுடன் இருந்தபோது அங்கே ஒரு அழகான வாலிபனும் இருந்தார். அப்போது நல்ல அழகான நல்ல குணமுடைய ஒரு பெண் கடந்து சென்றாள். அந்த பெண்ணை அந்த வாலிபர் பார்த்துக் கொண்டே இருந்தார். உடனே தின்னூன் மிஸ்ரி (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் அந்த வாலிபரின் கழுத்தை முறுக்கினார்கள். பிறகு அந்த வாலிபருக்கு இந்த கவிதையை பாடி காட்டினார்கள்.
களிமண்ணாலும், தண்ணீராலும் சாயம் பூசப்பட்டதை விட்டுவிடு, உனக்காக இருக்கும் கன்னி பெண்களாகிய ஹூருல் ஈன் பெண்களிடம் கவனம் செலுத்து!.
(நூல் : தம்முல் ஹவா, பக்கம் : 84)
وقال ابن الجوزي رحمه الله : وَكَانَ فِي عَصْرِنَا أَبُو الْحَسَنِ بْنُ أَحْمَدَ بْنِ جَحْشَوَيْهِ الْحَرْبِيُّ لَا يَمْشِي إِلا وَعَلَى رَأْسِهِ طَرْحَةٌ لِيَكُفَّ بِذَلِكَ بَصَرَهُ عَنِ الانْطِلاقِ.
(ذم الهوي، ص : ٨٩)
இமாம் இப்னுல் ஜவ்ஸீ (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் கூறினார்கள் : எங்கள் காலத்தில் அபுல் ஹஸனிப்னு அஹ்மத் இப்னு ஜஹ்ஷவைஹி என்பவர் இருந்தார். தன் பார்வை அலைபாய விடக்கூடாது என்பதற்காக அவர் எங்கு வெளியில் சென்றாலும் தலையிலே முக்காடு போட்டு தான் செல்வார்.
(நூல் : தம்முல் ஹவா, பக்கம் : 89)
وقال المسيح عليه السلام : لا يَزْنِي فَرْجُك ما غَضَضْتَ بصرَك.
[عيون الأخبار ٤/ ٨٤].
ஈஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் கூறினார்கள் : உங்கள் பார்வையைத் தாழ்த்திக் கொள்ளும் வரை உங்கள் கற்பு விபச்சாரமாகாது.
(நூல் : உயூனுல் அக்பார், பாகம் : 4, பக்கம் : 84)
عَنِ الْعَلَاءِ بْنِ زِيَادٍ قَالَ : «لَا تُتْبِعْ بَصَرَكَ رِدَاءَ الْمَرْأَةِ فَإِنَّ النَّظَرَ يُجْعَلُ شَهْوَةً فِي الْقَلْبِ».
(الزهد - لإحمد بن حنبل، ص : ٢٠٦)
அலா இப்னு ஸியாத் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் கூறினார்கள் : ஒரு பெண்ணின் ஆடையை பார்க்காதீர்கள்! என்னில் அப்படிப்பட்ட பார்வை உள்ளத்தில் ஆசை ஏற்படுத்தும்.
(நூல் : அஸ்ஸுஹ்த், பக்கம் : 206)
قَالَ سَلْمَانُ: لَأَنْ أَمُوتَ ثُمَّ أُنْشَرَ ثُمَّ أَمُوتَ ثُمَّ أُنْشَرَ ثُمَّ أَمُوتَ ثُمَّ أُنْشَرَ أَحَبُّ إِلَيَّ مِنَ أَنْ أَرَى عَوْرَةَ مُسْلِمٍ أَوْ يَرَاهَا مِنِّي.
(الزهد - لأحمد بن حنبل، ص : ١٢٨)
ஸல்மான் (ரளியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறினார்கள் : ஒரு முஸ்லிமானவரின் அந்தரங்கத்தை பார்ப்பது அல்லது மற்றவர் என் அந்தரங்கத்தை பார்ப்பதை விட, நான் மரணித்து மீண்டும் உயிர்பித்து எழுப்பப்படுவது, மீண்டும் நான் மரணித்து உயிர்ப்பித்து எழுப்பப்படுவது, மீண்டும் நான் மரணித்து உயிர்ப்பித்து எழுப்பப்படுவது எனக்கு மிக பிடித்தமானது.
(நூல் : அஸ்ஸுஹ்த், பக்கம் : 127)
قال الإمام بن القيم رحمه الله : والنَّظرة تفعلُ في القلب ما يفعلُ السَّهم في الرَّميَّة، فإن لم تقتله جرحتْه، وهي بمنزلة الشَّرارة من النَّار تُرْمى في الحشيش اليابس، فإن لم تحرقْه كلَّه؛ أحرقتْ بعضَه.
(روضة المحبين، ص : ١٥٤)
இமாம் இப்னுல் கய்யிம் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் கூறினார்கள் : எரியப்பட்ட அம்பு என்ன செய்யமோ அதேபோன்று (ஹராமான) பார்வை உள்ளத்திலே செய்யும். எரியப்பட்ட அம்பு ஒருவரை முழுமையாக கொல்லவில்லை என்றாலும் காயத்தையாவது ஏற்படுத்தும் அதே போன்று தான் ஹராமான பார்வையும். காய்ந்த புற்களில் எறியப்படும் தீப்பொறி அனைத்தையும் எரிக்கவில்லை என்றால், அதில் சிலவற்றை எரித்து. அதே போன்று தான் ஹராமான பார்வையும்.
(நூல் : ரவ்ழதுல் முஹிப்பீன், பக்கம் : 154)
حَكَّامُ بْنُ سَلَمٍ قَال كُنْتُ عِنْدَ سُفْيَانَ الثَّوْرِيِّ فَجَاءَتْهُ امْرَأَةٌ فَقَالَتْ إِنِّي أُرِيدُ أَنْ أَسْأَلَكَ عَنْ شَيْءٍ فَقَالَ لَهَا أحيفى الْبَابَ ثُمَّ تَكَلَّمِي مِنْ وَرَاءِ الْبَابِ .
(ذم الهوي، ص : ١٦٦)
ஹக்காம் இப்னு ஸலம் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் கூறினார்கள் : நான் ஸுஃப்யான் ஸவ்ரீ (ரஹிமஹுல்லாஹ்) அவர்களிடம் இருந்தேன். அப்போது ஒரு பெண்மணி அவர்களிடம் வந்து, "நான் உங்களிடம் சில விஷயத்தை பற்றி கேட்க வேண்டும்" என்று கூறினார்கள். அதற்கு இமாமவர்கள், "எதுவாக இருந்தாலும் கதவுக்கு பின்னால் நின்று கேளுங்கள்" என்பதாக கூறினார்கள்.
(நூல் : தம்முல் ஹவா, பக்கம் : 166)
★. பார்வையை தாழ்த்திய நல்லடியார்
ஒருமுறை ஸுலைமான் இப்னு யஸார் (ரஹ்மத்துல்லாஹி அலைஹி) என்ற ஒரு நல்லடியார் தன்னுடைய தோழருடன் பிரயாணத்திற்கு புறப்பட்டு, செல்லுகிற வழியில் உணவு வாங்குவதற்காக தான் அமர்ந்து கொண்டு, தன்னுடைய நண்பரை கடைவீதிக்கு அனுப்பினார்கள். ஸுலைமான் இப்னு யஸார் (ரஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்கள் பார்ப்பதற்கு மிகவும் அழகாகவும் பேணுதல் மிக்கவராகவும் இருப்பார்கள்.
அந்த சமயத்திலே மலை வாழ் மக்கள் கிராமத்தைச் சார்ந்த ஒரு பெண்மணி ஸுலைமான் (ரஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்களைப் பார்த்து, அவர்களிடம் வந்தாள். அவர்கள் முழு நிலவை போல மிகவும் அழகாக இருந்தார்கள்.
அவர்களைப் பார்த்து அந்தப் பெண், "எனக்கு கொடுங்கள்" என்று கூறினாள். அவர்கள் அந்தப் பெண்ணை பார்க்காமல் பார்வையை தாழ்த்திக் கொண்டு, இவள் ஃபகீர் (ஏழை) ஆக இருக்கிறாள், இவளுக்கு ஏதோ தேவை இருக்கிறது என்று நினைத்து தன்னிடம் உள்ள சிறிதளவு உணவை அந்த பெண்ணுக்கு கொடுத்தார்கள்.
அதற்கு அந்தப் பெண், எனக்கு உணவு ஏதும் வேண்டாம் ஒரு கணவன் மனைவிக்குள் என்ன தேவை ஏற்படுமோ அதை தான் நான் விரும்புகிறேன் என்று கூற, உடனே ஸுலைமான் (ரஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்களின் முகம் மாறிவிட்டது. "உன்னை இப்லீஸ் தான் வழிகெடுத்து இருக்கிறான்" என்று சத்தமிட்டு சொன்னார்கள். பிறகு தன்னுடைய உள்ளங்கையில் முகத்தை மூடிக்கொண்டு முட்டியின் மீது சாய்ந்து கொண்டு கடுமையாக அழுதார்கள். இதை பார்த்த அந்த பெண்மணி இவர் தன்னைப் பார்க்க மாட்டார் என்று தெரிந்து கொண்டு, முகத்தில் திரையிட்டுக் கொண்டு தன்னுடைய கிராமத்திற்கு சென்று விட்டாள்.
சிறிது நேரத்தில் உணவு வாங்க சென்றிருந்த தோழர் வந்து, ஸுலைமான் (ரஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்கள் அழுவதை பார்த்து ஏன் இப்படி அழுகிறீர்கள்? என்று கேட்க, என்னுடைய பிள்ளைகளுடைய ஞாபகம் வந்துவிட்டது அதனால் அழுகிறேன் என்று ஸுலைமான் (ரஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்கள் கூற, இல்லை உங்களுக்கு ஏதோ ஒரு விஷயம் நடந்திருக்கிறது என்று வற்புறுத்தி கேட்டார் தோழர்.
ஸுலைமான் (ரஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்கள் நடந்த விஷயத்தை கூறினார்கள். இதை கேட்ட தோழர் உணவு விரிப்பை கீழே வைத்துவிட்டு இவர்களும் கடுமையாக அழ ஆரம்பித்து விட்டார்கள். அதற்கு ஸுலைமான் (ரஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்கள், நீங்கள் ஏன் அழுகிறீர்கள்? என்று கேட்க, உங்களை விட அழுவதற்கு நான் தான் தகுதியானவன். உங்கள் இடத்திலே நான் இருந்திருந்தால் என்னுடைய நிலைமை என்ன ஆயிருக்கும்? என்று தோழர் சொன்னார். பிறகு இருவரும் கட்டி அணைத்து அழுதார்கள்.
சில காலத்திற்குப் பிறகு ஸுலைமான் (ரஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்கள் மக்காவிற்கு சென்று கஃபாவை தவாஃப் செய்தார்கள். பிறகு ஒரு கல்லுக்கு அருகாமையில் சென்று சிறிது நேரம் ஓய்வெடுக்க தன்னுடைய ஆடையால் அந்த இடத்தை சுத்தம் செய்துவிட்டு ஒரு சிறு தூக்கம் தூங்கினார்கள். கனவிலே அழகான, மேனியிலே நறுமணம் வீசக்கூடிய ஒரு மனிதரைப் பார்த்து, அல்லாஹ் உங்களுக்கு ரஹ்மத் செய்வானாக! நீங்கள் யார் என்று கேட்க, அதற்கு அந்த மனிதர், நான்தான் யூஸுஃப் (அலைஹிஸ்ஸலாம்)என்று கூறினார்கள். இதை கேட்ட ஸுலைமான் (ரஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்கள் உங்களுக்கும் அஜீஸ் உடைய மனைவிக்கும் இடையிலே நடந்த அந்த விஷயம் மிகவும் ஆச்சரியமான ஒரு விஷயம் என்று கூறினார்கள். அதற்கு யூஸுஃப் (அலைஹிஸ்ஸலாம்)அவர்கள், இல்லை உங்களுக்கும் அந்த மலைவாழ் மக்கள் கிராமத்துப் பெண்ணுக்கும் இடையிலே நடந்த விஷயம் தான் மிகவும் ஆச்சரியமான விஷயம் என்று கூறினார்கள்.
(நூல் : ஹில்யதுல் அவ்லியா, பாகம் : 2, பக்கம் : 191)
★. காதலுக்காக மதம் மாறி இஸ்லாத்தை விடுபவர்களே உங்களைத்தான்!
قال الإمام بن القيم رحمه الله : وَيُرْوَى أَنَّهُ كَانَ بِمِصْرَ رَجُلٌ يَلْزَمُ مَسْجِدًا لِلْأَذَانِ وَالصَّلَاةِ ، وَعَلَيْهِ بَهَاءُ الطَّاعَةِ وَأَنْوَارُ الْعِبَادَةِ ، فَرَقِيَ يَوْمًا الْمَنَارَةَ عَلَى عَادَتِهِ لِلْأَذَانِ ، وَكَانَ تَحْتَ الْمَنَارَةِ دَارٌ لِنَصْرَانِيٍّ ، فَاطَّلَعَ فِيهَا ، فَرَأَى ابْنَةَ صَاحِبِ الدَّارِ فَافْتُتِنَ بِهَا ، فَتَرَكَ الْأَذَانَ ، وَنَزَلَ إِلَيْهَا ، وَدَخَلَ الدَّارَ عَلَيْهَا ، فَقَالَتْ لَهُ : مَا شَأْنُكَ وَمَا تُرِيدُ ؟ قَالَ : أُرِيدُكِ ، فَقَالَتْ : لِمَاذَا ؟ قَالَ : قَدْ سَبَيْتِ لُبِّي ، وَأَخَذْتِ بِمَجَامِعِ قَلْبِي ، قَالَتْ : لَا أُجِيبُكَ إِلَى رِيبَةٍ أَبَدًا ، وَقَالَ : أَتَزَوَّجُكِ ؟ قَالَتْ : أَنْتَ مُسْلِمٌ وَأَنَا نَصْرَانِيَّةٌ وَأَبِي لَا يُزَوِّجُنِي مِنْكَ ، قَالَ : أَتَنَصَّرُ ، قَالَتْ : إِنْ فَعَلْتَ أَفْعَلُ ، فَتَنَصَّرَ الرَّجُلُ لِيَتَزَوَّجَهَا ، وَأَقَامَ مَعَهُمْ فِي الدَّارِ ، فَلَمَّا كَانَ فِي أَثْنَاءِ ذَلِكَ الْيَوْمِ ، رَقِيَ إِلَى سَطْحٍ كَانَ فِي الدَّارِ فَسَقَطَ مِنْهُ فَمَاتَ ، فَلَمْ يَظْفَرْ بِهَا ، وَفَاتَهُ دِينُهُ.
(الداء والدواء، ص : ٣٩١)
இமாம் இப்னுல் கய்யிம் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் கூறினார்கள் : மிஸ்ர் நாட்டிலே ஒரு மனிதர் இருந்தார். அவர் எப்போதும் பள்ளிவாசலில் இருப்பார், அங்கே பங்கு சொல்லிக்கொண்டு தொழுகை வைத்துக்கொண்டு இருப்பார். ஒருமுறை அவர் பாங்கு சொல்வதற்காக மனாராவின் மீது ஏறினார். அந்த மனாராவுக்கு கீழே ஒரு கிறிஸ்துவ மதத்தவரின் வீடு இருந்தது. அந்த வீட்டில் இருந்த பெண்ணை அவர் பார்த்து மெய் மறந்து போனார். பாங்கு சொல்வதை விட்டுவிட்டு அந்த வீட்டிற்கு சென்றார். உங்களுக்கு என்ன வேண்டும்? என்று பெண் கேட்க, நீ தான் எனக்கு வேண்டும் என்று அவர் சொன்னார். எதற்காக நான் வேண்டும்? என்பதாக பெண் கேட்க, நீதான் என் மனதை கொள்ளை அடித்து விட்டாயே! என்று அவர் கூறிவிட்டு, என்னை நீ திருமணம் செய்து கொள்கிறாயா? என்பதாக கேட்டார். அதற்கு பெண் நீ முஸ்லிமாக இருக்கிறாய் நான் கிறிஸ்தவராக இருக்கிறேன் என்னுடைய தந்தை உனக்கு என்னை திருமணம் செய்து வைக்க மாட்டார் என்பதாக பெண் கூறினாள். அப்படியென்றால் நானும் கிறிஸ்துவனாக மாறி விடுகிறேன் அப்போது திருமணம் செய்து கொள்ளலாமா? என்பதாக கேட்க முதலில் நீ கிறிஸ்துவராக மாறு பிறகு பார்க்கலாம் என்பதாக அந்த பெண் சொன்னாள். அம்மனிதரும் பெண்மணியை திருமணம் செய்ய கிறிஸ்தவராக மாறினார் சில நாட்கள் அந்த பெண்ணுடன் அந்த வீட்டிலே தங்கினார். ஒரு நாள் அந்த வீட்டின் முகட்டிற்கி மேலே ஏறினார். அப்போது எதிர்பாராத விதமாக அந்த முகட்டிலிருந்து தடுமாறி கீழே விழுந்து, சம்பவ இடத்திலேயே மரணித்தார். அவருடன் சேர்ந்து அவருடைய தீனும் மரணித்து விட்டது.
(நூல் : அத்தாஃ வத்தவாஃ, பக்கம் : 391)
★. பார்வையை தாழ்த்துவதால் ஏற்படும் பயன்பாடுகள்.
ذكر الإمام ابن القيم رحمه الله وفي غض البصر عدة فوائد ومنها :
١. تخليص القلب من ألم الحسرة
٢. أنه يورث القلب نورا
٣. أنه يورث صحة الفراسة
٤. أنه يفتح له طرق العلم وأبوابه
٥. أنه يورث قوة القلب وثباته وشجاعته
٦. أنه يورث القلب سرورا وفرحة
٧. السابعة أنه يخلص القلب من أسر الشهوة
٨. أنه يسد عن العبد بابا من أبواب جهنم
٩. أنه يقوي العقل ويزيده ويثبته
١٠. أنه يخلص القلب من ذكر الشهوة ورقدة الغفلة
(روضة المحبين - لإبن القيم، ص : ٩٧ - ١٠٣)
இமாம் இப்னுல் கய்யிம் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் கூறினார்கள் : பார்வையை தாழ்த்துவதால் நிறைய பயன்கள் இருக்கிறது.
1. மன வேதனையிலிரருந்து உள்ளம் நீங்கிருக்கும்.
2. உள்ளத்தில் ஒளியை உண்டாக்கும்
3. நுணுக்கமான விஷயங்களை கண்டறிவதில் திறமை ஏற்படுத்தும்
4. கல்வி அடைவதற்கு எளிய வழியையையும், கல்வியின் வாசலையும் திறக்கும்
5. உள்ளத்தின் வலிமை, உறுதிப்பாடு மற்றும் தைரியம் ஆகியவற்றை உருவாக்கும்
6. உள்ளத்தில் சந்தோஷத்தை ஏற்படுத்தும்
7. ஆசை என்னும் சிறையிலிருந்து உள்ளத்தை விடுவிக்கிறது
8. நரகத்தின் வாசல்களில் ஒரு வாசலை அடைக்கிறது
9. அறிவை பலப்படுத்தி, அதிகப்படுத்தி, உறுதியும் படுத்துகிறது
10. ஆசை என்னும் போதையில் இருந்தும், பொடுபோக்குத்தனம் என்னும் தூக்கத்திலிருந்தும் உள்ளத்தை விடுவிக்கிறது.
(நூல் : ரவ்ழதுல் முஹிப்பீன், பக்கம் : 97 - 103)
அல்லாஹு தஆலா நம்முடைய இளைஞர் சமுதாயத்தை வழிகாட்டில் இருந்து பாதுகாத்து அருள் புரிவானாக! ஆமீன்.
ஆக்கம் :
மவ்லவி S. அப்துல் பாஸித் நூராணி, சுங்குவார்சத்திரம்
பழைய கட்டுரைகள் வாசிக்க 👇🏻 கிளிக் செய்யவும்.
إن فتى من الأنصار يقال له ثعلبة بن عبد الرحمن أسلم ، فكان يخدم النبي صلى الله عليه وسلم ، بعثه في حاجة ، فمر بباب رجل من الأنصار ، فرأى امرأة الأنصاري تغتسل ، فكرر النظر إليها ، وخاف أن ينزل الوحي على رسول الله صلى الله عليه وسلم ، فخرج هاربا على وجهه ، فأتى جبالا بين مكة والمدينة فولجها ، ففقده رسول الله صلى الله عليه وسلم أربعين يوما ، وهي الأيام التي قالوا ودعه ربه وقلى ، ثم إن جبريل عليه السلام نزل على رسول الله صلى الله عليه وسلم ، فقال : يا محمد ! إن ربك يقرأ عليك السلام ويقول : إن الهارب من أمتك بين هذه الجبال يتعوذ بي من ناري . فقال رسول الله صلى الله عليه وسلم : يا عمر ويا سلمان ! انطلقا فأتياني بثعلبة بن عبد الرحمن ، فخرجا في أنقاب المدينة ، فلقيهما راع من رعاء المدينة يقال له : ذفافة . فقال له عمر : يا ذفافة ! هل لك علم بشاب بين هذه الجبال ؟ فقال له ذفافة لعلك تريد الهارب من جهنم ؟ فقال له عمر : وما علمك أنه هارب من جهنم ؟ قال : لأنه إذا كان جوف الليل خرج علينا من هذه الجبال واضعا يده على رأسه وهو يقول : يا ليتك قبضت روحي في الأرواح ، وجسدي في الأجساد ولم تجردني في فصل القضاء . قال عمر : إياه نريد . قال : فانطلق بهم رفاقة ، فلما كان في جوف الليل خرج عليهم من بين تلك الجبال واضعا يده على أم رأسه وهو يقول : يا ليتك قبضت روحي في الأرواح ، وجسدي في الأجساد ، ولم تجردني لفصل القضاء . قال : فعدا عليه عمر فاحتضنه فقال : الأمان الخلاص من النار . فقال له عمر : أنا عمر بن الخطاب . فقال : يا عمر ! هل علم رسول الله صلى الله عليه وسلم بذنبي ؟ قال : لا علم لي إلا أنه ذكرك بالأمس فبكى رسول الله صلى الله عليه وسلم . يا عمر ! لا تدخلني عليه إلا وهو يصلي ، وبلال يقول : قد قامت الصلاة . قال : أفعل . فأقبلا به إلى المدينة ، فوافقوا رسول الله صلى الله عليه وسلم وهو في صلاة الغداة ، فبدر عمر وسلمان الصف ، فما سمع قراءة رسول الله صلى الله عليه وسلم حتى خر مغشيا عليه ، فلما سلم رسول الله صلى الله عليه وسلم قال : يا عمر ويا سلمان ! ما فعل ثعلبة بن عبد الرحمن ؟ قالا : هو ذا يا رسول الله . فقام رسول الله صلى الله عليه وسلم قائما فقال : ثعلبة ! قال : لبيك يا رسول الله ! فنظر إليه فقال : ما غيَّبك عني ؟ قال : ذنبي يا رسول الله . قال : أفلا أدلك على آية تكفر الذنوب والخطايا ؟ قال : بلى يا رسول الله ! قال : قل : اللهم آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار . قال : ذنبي أعظم يا رسول الله ! فقال رسول الله صلى الله عليه وسلم : بل كلام الله أعظم . ثم أمره رسول الله صلى الله عليه وسلم بالانصراف إلى منزله . فمرض ثمانية أيام ، فجاء سلمان إلى رسول الله صلى الله عليه وسلم فقال : يا رسول الله ! هل لك في ثعلبة نأته لما به ؟ فقال رسول الله صلى الله عليه وسلم : قوموا بنا إليه . فلما دخل عليه أخذ رسول الله صلى الله عليه وسلم رأسه فوضعه في حجره ، فأزال رأسه عن حجر رسول الله صلى الله عليه وسلم . فقال له رسول الله صلى الله عليه وسلم : لم أزلت رأسك عن حجري ؟ قال : إنه من الذنوب ملآن . قال : ما تجد ؟ قال : أجد مثل دبيب النمل بين جلدي وعظمي . قال : فما تشتهي ؟ قال : مغفرة ربي . قال : فنزل جبريل عليه السلام على رسول الله صلى الله عليه وسلم فقال : إن ربك يقرأ عليك السلام ويقول : لو أن عبدي هذا لقيني بقراب الأرض خطيئة لقيته بقرابها مغفرة . فقال له رسول الله صلى الله عليه وسلم : أفلا أعلمه ذلك ؟ قال : بلى . فأعلَمَه رسول الله صلى الله عليه وسلم بذلك . فصاح صيحة فمات . فأمر رسول الله صلى الله عليه وسلم بغسله وكفنه وصلى عليه ، فجعل رسول الله صلى الله عليه وسلم يمشي على أطراف أنامله ، فقالوا : يا رسول الله ! رأيناك تمشي على أطراف أناملك ؟ قال : والذي بعثني بالحق نبيا ما قَدِرت أن أضع رجلي على الأرض من كثرة أجنحة مَن نزل لتشييعه من الملائكة .
பதிலளிநீக்கு