திங்கள், 10 பிப்ரவரி, 2025

வஹ்ஹாபியாய் ஒரு நாள்.

வஹ்ஹாபியாய் இருந்த ஒருவர் தான் இருக்கும் பாதை தவறானது என்று உணர்ந்து வருந்தி திருந்தி திரும்பி வந்தவர் இப்போது உங்களோடு பேச வருகிறார்.

அவர் பெயர்………….


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…


அஸ்தஃபிருல்லாஹ் யாஅல்லாஹ் நீ என்னை மன்னித்துவிடு.


யாஅல்லாஹ்….. இவ்வளவு நாள் வஹ்ஹாபியாய் இருந்த என்னை மன்னித்துவிடு. 


தலையில் இருந்த தொப்பியை கழட்டி வீசினேன்.. முஸ்லிமுக்கே உண்டான முக சீனத்தை இழந்தேன்..


தொழுகையில் தக்பீரில் நெஞ்சின் மீது கைகளை வைத்து இரு கால்களையும் அகல விரித்து நின்றேன்.. தொழுகைக்கே உண்டான சாந்த நிலையினை இழந்தேன்..


அத்தஹிய்யாத்தில் சுட்டு விரலை அசைத்து விளையாடினேன்...அடுத்தவர் கவனத்தை சிதறடித்து தொழுகையை பாழாக்கினேன்..


தொழுகை முடிந்து இமாம் திக்ரும் ஸலவாத்தும் ஓதும் போது சட்டென்று எழுந்து பள்ளியை விட்டு விரண்டோடினேன்.. அல்லாஹ்வுடைய திக்ருகள் எரிச்சலைத் தருகின்ற மூதேவியாய் ஆனேன்..


நபிகளாரின் பெயர் கூறக் கேட்டதும் "இவரும் என்னைப் போன்ற மனிதர்தானே.. இவருக்கேன் ஸலவாத்" என எண்ணினேன்.. நன்றிகெட்ட இழி பிறவியாய் மாறிப்போனேன்..


ஸியாரத் என்ற சொல்லைக் கேட்டதுமே எரிச்சலடைந்தேன்.. மௌத்தை மறந்த தறுதலையாய் ஆனேன்..


மரணித்த என் பெற்றோருக்காய் ஒரு சதமேனும் செலவழிக்க மறுத்தேன்.. கஞ்சப்பரதேசியாய் ஆகிப்போனேன்..


நபிகள் பெருமானாரின் புகழ் பேசும் சபைகளை அடியோடு வெறுத்தேன்..

சைத்தானின் நேசனாய் ஆகிவிட்டேன்..


வலிமார்களை தாறுமாறாக திட்டித்தீர்க்கத் துவங்கினேன்.. இறைவனோடு போருக்கு நிற்கத்துணிந்த மாபாவியாய் ஆனேன்..


இமாம்களின் ஆய்வுகளை முதுகின் பின்னால் தூக்கி வீசினேன்.. தறுதலைகளை தக்லீது செய்யும் துர்ப்பாக்கியசாலியாய் ஆனேன்..


பெரியோர்களுக்கு எழுந்து நின்று மரியாதை செய்வதை அடியோடு வெறுத்தேன் .. என் பிள்ளை என் முன்னே காலாட்டிப் பேசுவதை சகிக்கும் நிலைக்குள்ளானேன்..


நல்ல காரியங்களின் போது சூறதுல் பாதிஹா ஓதப்படுவதை கோவில் பஜனைக்கு ஒப்பாக நோக்கினேன்..

குர்ஆன் வசனங்களை ஏளனம் செய்யும் படுபாதாளக் குழியில் வீழ்ந்தேன்..


நல்ல காரியங்கள் அனைத்தையும் "பித்அத் பித்அத்" என்றேன்... கெட்ட பித் அத்தின் மூலகர்த்தாவாக நானே ஆகிப்போனேன்..


( இது ஷிர்க் அது ஷிர்க் இவன் காஃபிர் அவன் காஃபிர் என )

முஸ்லிம்களை எல்லாம் சகட்டு மேனிக்கு காபிராக்கினேன்.. 

குப்ரின் ஆழத்தில் வீழ்ந்து எழ முடியாத நிர்க்கதிக்குள்ளானேன் ..


அல்லாஹ்வுக்கு கை, கால் உருவம் உண்டு என நம்பினேன்..

ஜாஹிலிய்யாக் கால சிலை வணக்கத்தின் வாசலுக்குள் நுழைந்தேன்..


போதும்! போதும்! என் ஒரு நாள் வஹ்ஹாபிச வாழ்க்கை.


 இஸ்லாமியனாக இருந்த என்னை ஈமானற்ற ஈனப்பிறவியாக்கவிட்டது! 


இத்துர்நாற்றக் குழிக்குள் காலமெல்லாம் எப்படித்தான் குடியிருக்கிறார்களோ!


நேர்வழிகாட்டிய வல்ல ரஹ்மானுக்கே புகழனைத்தும் அல்ஹம்துலில்லாஹ்!..


பழைய குறிப்புகள் வாசிக்க 👇🏻 கிளிக் செய்யவும்.

மாணவர்களுக்கான மேடை நிகழ்ச்சிகள்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக