வியாழன், 10 நவம்பர், 2022

வள்ளல் இமாம் பூஸரியின் வாழ்ந்த கதை சொல்லவா... பாடல்

 


வள்ளல் இமாம் பூஸரியின் வாழ்ந்த கதை சொல்லவா

நாயகத்தை நேசம் கொண்ட நல்ல மனம் அல்லவா

அந்த கதை கேட்டால் எந்த நெஞ்சும் கசியும்

அண்ணலரை காதலிக்கும் அர்த்தம் கொஞ்சம் புரியும்

 

அன்றொரு நாள் அவர்களின் நண்பர் வந்து அமர்ந்தார்

பேசுகின்ற நேரத்திலே கேள்வி ஒன்று தொடுத்தார்

பாச நபி பூ முகத்தை பார்த்ததுமில்லையோ

கனவிலே நபி வந்து காட்சி தந்ததில்லையோ

என்று அவர் கேட்டார் இல்லையென்று உரைத்தார்

இல்லையென்று சொன்ன பின்னர் ஏதோ நெஞ்சில் உணர்ந்தார்

அண்ணல் முகம் காணுகின்ற ஆவல் வர தெரிந்தார்

அன்று முதல் நெஞ்சில் ஆசை தன்னை வளர்த்தார்

எங்கள் உயிர் நபியே என்று தினம் அழைத்தார்

எப்படியும் காட்சி தர வேண்டுமென்று அழுதார்

 

வள்ளல் இமாம் பூஸரியின் வாழ்ந்த கதை சொல்லவா……..


பஞ்சனையில் கண்கள் மூடி பகலிலும் படுத்தார்

கெஞ்சிக் கெஞ்சி நாயகத்தை கண்களுக்குள் அழைத்தார்

நித்தம் நின்று பார்த்திடலாம் என்று அவர் படுப்பார்

நித்திரை களைந்ததுமே ஏமாற்றத்தில் தவிப்பார்

அன்னம் தண்ணீர் மறந்தார் ஆசையிலே நெரிந்தார்

பச்சவாத நோய் கண்டு படுக்கையில் விழுந்தார்

நோயதிலே வீழ்ந்து நெஞ்சில் நாயகத்தை நினைத்தார்

அண்ணலரை நினைத்தே துன்பம்தனை மறந்தார்

மன்னர் நபி மேலே கவி மாலை ஒன்று தொடுத்தார்

பாடி பாடி புர்தா காவியத்தை வடித்தார்

 

வள்ளல் இமாம் பூஸரியின் வாழ்ந்த கதை சொல்லவா…….

 

கன்னி கன்னியாக கவி பாடுகின்ற காலமே

கண்ணயர்ந்து ஒரு நாள் கண்ணிரண்டும் மூடினார்

தோழர் புடை சூழ நபி அங்கு வர பார்க்கிறார்

சுற்றிலும் கஸ்தூரி வாசம் சூழ்ந்து வீச காண்கிறார்

ஏந்தல் நபி வருவீர் என்றழைக்க எழுந்தார்

நோயுடல் மறுத்ததாலே நொந்து மனம் துடித்தார்

தூய நபி தோழர் வந்து தோல் கொடுக்க அமர்ந்தார்

கண்ணீர் பெருகாதோ உள்ளம் உருகாதோ

மன்னர் முகம் பார்த்து பார்த்து மகிழ்ச்சியில் திளைத்தார்

அந்த நேரம் பார்த்து நபி ஆசையொன்றை மொழிந்தார்

 

வள்ளல் இமாம் பூஸரியின் வாழ்ந்த கதை சொல்லவா……

 

என்னை எண்ணி எண்ணி நீங்கள் இயற்றிய பாடலை

இப்பொழுது பாடுவீரே என்று நபி கூறினார்

என்ன தவம் செய்தேன் என இனிமையாய் பாடினார்

ஏகன் நபி கேட்டு தங்கள் பொன்னாடையை போர்த்தினார்

நாவலரின் உடல் மேல் நாயகரும் தடவ

பக்க வாத நோய் நீக்கி பாச நபி போகிறார்

பட்டண கண்கள் திறக்க கனவென்றுணர்கிறார்

அண்ணல் இட்ட ஆடை தன்னுடலில் பார்க்கிறார்

மின்னும் ஒரு சூரியன் போல் தன்னுடம்பை பார்க்கிறார்

அற்புதத்தை எண்ணி எண்ணி அண்ணலரை வாழ்த்தினார்

 

வள்ளல் இமாம் பூஸரியின் வாழ்ந்த கதை சொல்லவா…..


இந்த பாடலின் வீடியோ பார்க்க கிளிக் செய்யவும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக