வியாழன், 21 ஜூலை, 2022

மார்க்கக் கல்வியில் பெரிதும் ஆர்வம் உடையோர் ஆண்களே..! 1 பட்டி மன்றம்.

 


பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

அல்ஹம்துலில்லாஹ் வஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா ரசூலில்லாஹ்.

கண்ணியத்துக்குரிய பட்டிமன்ற நடுவர் அவர்களே என் இரு தோழர்களே எதிரணியின் _____________

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ….

மார்க்கக் கல்வியில் பெரிதும் ஆர்வம் உடையோர் யார் என்பது இந்த பட்டிமன்றத்தின் நோக்கம் ஆகும் கேள்வியாகும்

நடுவர் அவர்களே..! இதென்ன கேள்வி சந்தேகமின்றி ஆண்கள் தான் அதிக ஆர்வம் உடையவர்கள்..

ஆதம் நபியை படைத்த அல்லாஹ்..

அவர்களுக்கு மார்க்கக் கல்வியை கற்றுக் கொடுத்தான் ..அவர்கள் கற்றுக் கொண்டார்கள் என்பது குர்ஆன் நமக்கு கூறும் வரலாறு..

ஹவ்வா அம்மையார் அன்றே உணவைப் பற்றி ஆராயத் தொடங்கினார்களே.. தவிர ஆதம் நபியிடம் கற்க துவங்கவில்லை..

இதிலிருந்து நாம் அறிய வரும் செய்தி என்ன தெரியுமா..

ஆதி ஆண் முதற்கொண்டு 2019-ல் இருக்கும் நான் உட்பட ஆண்கள் தான் அதிக ஆர்வம் உடையவர்கள்..

இந்த ஆண்களில் விதிவிலக்கான ஆர்வம் குறைந்தவர்கள் மூன்றே மூன்று பேர்தான்.. அவர்கள் யார் தெரியுமா நடுவர் அவர்களே ..!

உங்களுக்கே தெரிந்திருக்கும் இதோ இந்த___________தான்

நடுவர் அவர்களே..!

பெண்கள் மார்க்க கல்வியில் ஆர்வம் குறைந்தவர்கள் என்று சொன்னேன் அல்லவா..!

அதுல ஒரு சின்ன திருத்தம் என்னென்ன..!

அவர்கள் எல்லாக் கல்வியிலும் அப்படிதான் என்று ஒரு பழமொழி சொல்கிறது

எல்லாருக்கும் தெரிஞ்ச பழமொழிதான்

பெண்புத்தி பின்புத்தி ன்னு சொல்வாங்க

அதுக்கு என்ன விளக்கம் தெரியுமா..!

எந்த விஷயமா இருந்தாலும் ஒரு தடவை அடிபட்ட தான் விளங்குவார்கள்..

பட்டதற்கு பின் புத்தி என்று அதற்கு விளக்கம் முன்னோர்கள் சொல்லி இருக்காங்க நடுவர் அவர்களே!

மார்க்க கல்வியில் அதிக ஆர்வம் உள்ளவங்க யாரும் என்று தானே பேசிக்கிட்டு இருக்கோம்..

எனக்கு ஒரு சம்பவம் ஞாபகத்திற்கு வருது அதை சொன்னால் இங்கு பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன்

நபிகள் பெருமானார் (ஸல்) ஒரு நாள் பள்ளியில் அமர்ந்து பயான் பேசிக் கொண்டிருந்தார்கள் திடீரென ஏதோ ஒரு உள்ளுணர்வு எழுந்து போயிட்டாங்க பொதுவாக நபி (ஸல்) அவர்கள் சபையில் இருந்து எழும் போது தன் கர்சிப், துணி, செருப்பு இதுமாதிரி பொருட்களை அங்கே போட்டுவிட்டு போவார்கள்..

அவர்கள் வருகையை எதிர்பார்த்து சஹாபாக்களும் காத்துக் கொண்டிருப்பார்கள் அன்றும் அப்படித்தான் நடந்தது நபியின் வருகையை எல்லோரும் எதிர்பார்த்து எதிர்பார்த்து கண்பூத்து போனாங்க..

நடுவர் அவர்களே! நன்றாக கவனிக்க வேண்டும் எதிர் பார்க்கும் பொறுமை இந்த சஹாபாக்கள் ஆன ஆண்களின் கல்வி ஆர்வத்தைக் காட்டுகிறது..

அது மட்டுமா அப்போது அங்கிருந்த அபூ ஹுரைரா (ரலி) அவர்களுக்கு கல்வி ஆர்வம் மேலும் அதிகமாகிறது..

உடனே நபி அவர்களின் பாதத் தடம் தேடி செல்கிறார்கள் அது ஒரு தோட்டத்தின் வாசலில் முடிகிறது..

சுற்று முற்றும் பார்த்தால் உள்ளே செல்ல வாசல் இல்லை நீர் வாய்க்கால் ஒன்று கண்ணுக்குத் தட்டுப்படுகிறது கல்வி ஆர்வம் அன்னாரை கூனிக்குறுக செய்தது பவ்யமாக உள்ளே நுழைந்து நபியவர்களை கண்ணுற்றபோது அளவில்லா மகிழ்ச்சி அடைகிறார்கள்

நடுவர் அவர்களே! ஒரு பெரிய சம்பவத்தின் சிறு பகுதியை உங்கள் முன் வைத்துள்ளேன் இந்த கல்வி ஆர்வம் பெண்களிடத்தில் இருந்ததா..?

இப்படி ஒரு அபூஹுரைரா (ரலி) அவர்களைப் போன்று பெண்களில் இருக்கிறார்களா என்று பதிலை எதிர்நோக்கும் சவால் விட்டு செல்கிறேன்

மார்க்க கல்வியின் ஆர்வத்தில் ஆர்வம் மிக்கோர் ஆண்களே.. ஆண்களே..என்று ஆணித்தரமாக கூறி அமர்கிறேன் வாய்ப்பு அளித்ததற்கு நன்றி.. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்

 

இத் தகவலை நமக்கு தொகுத்து தந்தவர் : 

மதிப்பிற்குரிய மவ்லானா மவ்லவி B. முஹம்மது ராஃபி ரஷீதி 

ஹழ்ரத் அவர்கள்.  

ஆசிரியர் ஹிதாயத்துல் இஸ்லாம் மதரஸா. அரக்கோணம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக