வியாழன், 16 ஜனவரி, 2020

பாடம். 6




கொஞ்சும் குழந்தைகளே!! கொஞ்சம் கேளுங்கள் !!!


எதையும் செய்யத்துவங்கும்போது நான் பிஸ்மில்லாஹ் அல்லாஹ்வின் திருநாமத்தால் என்று கூறி ஆரம்பிப்பேன்.

2. எதையேனும் செய்ய நாடினால் நீ என்ன கூறுவாய்?
நான் இன்ஷா அல்லாஹ்- அல்லாஹ் நாடினால் என்று கூறுவேன்.
  
3. எதையும் பாராட்டும் போது?
மாஷா அல்லாஹ்- எல்லாம் அல்லாஹ்வின் நாட்டமே என்று புகழுவேன்.

4.
பிறர் எதையும் புகழும் போது நீ என்ன கூறுவாய்?
சுப் ஹானல்லாஹ் -அல்லாஹ் மிகத் தூய் மையானவன்என்று கூறுவேன்.

5.
இன்பத்திலும் துன்பத்திலும் நீ யாரை அழைப்பாய் ?
நான் யாஅல்லாஹ் -அல்லாஹ்வே என்று இறைவனை அழைப்பேன்.

6.
பிறருக்கு நீ எவ்வாறு நன்றி கூறுவாய்?
ஜஸாகல்லாஹ் -அல்லாஹ் உனக்கு  நற்கூலி கொடுப்பானாக என்று கூறுவேன்.

7.
நீ செய்த தவறை நினைத்து வருந்தும் போது என்ன கூறுவாய் ?
அஸ்தஃபிருல்லாஹ் -அல்லாஹ் பிழை பொறுப்பானாக என்று கூறுவேன்.

8.
நாம் சத்தியம் செய்தால் எவ்வாறு கூறவேண்டும் ?
வல்லாஹி பில்லாஹ் -அல்லாஹ்வின் மீது ஆணையாக என்று கூறவேண்டும்.

9. யார் மீதும் அன்பு பாராட்டும் போது நீ எவ்வாறு கூறுவாய் ?
லிஹூப்பில்லாஹ் -அல்லாஹ்வின் அன்பிற்காக என்று கூறுவேன்.

10. பிறரிடமிருந்து விடை பெறும் போது எவ்வாறு நாம் கூறவேண்டும் ?
ஃபீஅமானில்லாஹ்- அல்லாஹ்வின் அடைக்கலத்தில் என்று கூறி விடைபெறுவேன்.

11. நமக்கு ஏதும் பிரட்சினைகள் ஏற்பட்டால் நாம் என்ன கூறவேண்டும்
தவக்கல்த்து அலல்லாஹ் -அல்லஹ்வின் மீது நம்பிக்கை வைத்தேன்.
12. நாம் விரும்பியது நடந்தால் என்ன கூறவேண்டும் ?
ஃபதபாரகல்லாஹ் -அல்லாஹ் உயர்வானவன் என்று கூறவேண்டும்.

13.
நாம் விரும்பாத ஒன்று நடந்து விட்டால் என்ன கூறவேண்டும்..?
நஊதுபில்லாஹ் அல்லாஹ்விடம் காவல் தேடுகிறோம் என்று கூறவேண்டும்.

14.
திடுக்கிடக் கூடிய அளவில் ஏதேனையும் நீ அறியும் போது என்ன கூறுவாய் ?

இன்னா லில்லாஹி இன்னா இலைஹி ராஜிஊன் .
நாம் அல்லாஹ்விடமே வந்தோம் மேலும் அவனிடமே திரும்புபவர்களாக உள்ளோம் என்று கூறுவேன்.

15.
தூக்கத்திலிருந்து விழித்தத்தும் ஓதவேண்டிய துஆ
அல்ஹம்து லில்லாஹில்லதீ அஹ்யானா பஃதமா அமாதனா வஇலைஹின் னுஷூர்.
பொருள்: நம்மை மரணிக்கச் செய்த பின் நமக்கு உயிர் கொடுத்தவனாகிய அல்லாஹ்விற்கே புகழ் அனைத்தும் உரித்தாகுக.

16.
ஆடை அணிகிற போது
அல்ஹம்து லில்லாஹில் லதீ கஸானீ ஹாதா(ஸ்ஸவ்ப) வரஜகனீஹி மின் ஃகைரி ஹவ்லின் மின்னீ வலா குவ்வதின்.
பொருள்: இந்த ஆடையானதை அவனுடைய உதவியொடு என்னிடமிருந்து எவ்வித பிரயாசை மற்றும் எவ்வித சக்தியுமின்றி எனக்கு அணிவித்து, அதனைஎனக்கு அளித்தவனுமாகிய அல்லாஹ்விற்கே எல்லாப்புகழும் உரித்தாகுக.

17. புத்தாடை அணியும் போது
அல்லாஹூம்ம லகல் ஹம்து அன்த கஸவ்தனீ அஸ்அலுக மின் கைரிஹி
வகைரி மாஸூஅனி லஹூ அஊதுபிக மின் ஷர்ரிஹி வஷர்ரி மா ஸூஅனி லஹூ.

பொருள் : யாஅல்லாஹ் புகழ் அனைத்தும் உனக்கே உரியது, நீதான் எனக்கு அதை அணிவித்தாய், அதன் நன்மை மற்றும் எதற்காக அதை தயார் செய்யப்பட்டதோ அதன் நன்மையை உன்னிடம் நான் கேட்கிறேன் இன்னும் அதன்தீமை மற்றும் எதற்காக அதைத்தயார் செய்யப்பட்டதோ அந்தத் தீமையிலிருந்து உன்னிடம் நான் பாதுகாக்கத் தேடுகிறேன்.

18. வீட்டிலிருந்து புறப்படும்போது
பிஸ்மில்லாஹி தவக்கல்து அலல்லாஹி வலா ஹவ்ல வலா குவ்த இல்லாபில்லாஹி.

பொருள் : அல்லாஹ்வின் பெயரால் (புறப்படுகிறேன், என் காரியங்களை முழுமையாக ஒப்படைத்து) அல்லாஹ்வின் மீது நம்பிக்கைவைத்து விட்டேன் மேலும், அல்லாஹ்வைக் கொண்டல்லாது (பாவத்திலிருந்து) திரும்புதலும்.(நன்மை யானவற்றைச் செய்வதற்கு) சக்தியுமில்லை.

19. வீட்டினுள் நுழையும்போது
பிpஸ்மில்லாஹி வலஜ்னா,வபிஸ்மில்லாஹி கரஜ்னா, வஅலா ரப்பினாதவக்கல்னா.

பொருள்: அல்லாஹ்வின் பெயரால் நுழைந்தோம் அல்லாஹ்வின் பெயரைக் கொண்டே புறப்படுவோம் நம்முடைய இரட்சகனின் மீது (நம்முடைய காரியங்களை முழுமையாக ஒப்படைத்து) நம்பிக்கையும் கொண்டிருக்கிறோம்.

20. காலை மற்றும் மாலையில் நாம் ஓத வேண்டிய தஸ்பீஹ்..?
அல்ஹம்துலில்லாஹி வஹ்தஹூ, வஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா மன்லா நபிய்ய பஃதஹு.

பொருள் : புகழ் அனைத்தும் அல்லாஹ்விற்கே அவன் தனித்தவன்(அல்லாஹ்வின்) அருளும், சாந்தியும் அவர்களுக்கு பின் நபியில்லையே அத்தகையவர்களின் மீது உண்டாவதாக.

21. தூக்கத்தில் திடுக்கம் மற்றும் பயங்கரத்தால் பாதிக்கப்பட்டவருக்கு ஓத வேண்டிய துஆ

அஊது பி கலிமாத்தில்லாஹித் தாம்மாத்தி மின் ஃகளபிஹி வஇகாபிஹி, வஷர்ரி இபாதிஹி, வமின்ஹமஜாத்திஷ் ஷையாத்தீனி, வஅன்யஹ்ளுருன்.

பொருள் : அல்லாஹ்வின் பரிபூரணமான வாக்குகளைக் கொண்டு அவனின் கோபம், அவனின் தண்டனை அவனுடைய அடியார்களின் தீமை ஆகியவற்றிலிருந்தும் இன்னும் ஷைத்தான்களின் தூண்டுதல்கள் மற்றும் அவர்கள் என்னிடம் ஆஜராகுவதிலிருந்தும் நான் காவல் தேடுகிறேன்.

22. தொழுகை மற்றும் ஓதலில் (ஷைத்தானின்) ஊசலாட்ட(த்தை நீக்க) ஓதவேண்டிய துஆ

அஊது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம் என்று கூறி உம்முடைய இடப்பக்கம் மூன்று முறை துப்புவீராக.

23. நோயாளருக்காக (அவரை நலம் விசாரிக்கையில் ) ஓதும் துஆ?
லா பஃஸ தஹூருன் இன்ஷா அல்லாஹ்.

பொருள்: எந்தக் குற்றமும் இல்லை, அல்லாஹ் நாடினால் (இந்நோயினால் உங்களுக்கு பாவம்) பரிசுத்தமாகும்.

24. காற்று வீசுகின்ற போது ஓதும் துஆ?
அல்லாஹூம்ம இன்னீ அஸ் அலுக கைரஹாஈ அஊது பிக மின்ஷர்ரிஹா.

பொருள்: யாஅல்லாஹ் நிச்சயமாக (க் காற்றான)தன் நன்மையை உன்னிடம் நான் கேட்கிறேன் அதன் தீமையிலிருந்தும் உன்னைக் கொண்டு நான் காவல் தேடுகிறேன்.

25. இடி இடிக்கின்ற போது ஓதும் துஆ?
ஸூப்ஹானல்லதீ யுஸப் பிஹூர் ரஃது பிஹம்திஹி, வல்மலாயிகத்து மின் கீஃபதிஹி.

பொருள் : அவன் தூயவன், அவன் எத்தகையவனென்றால் அவனின் புகழைக் கொண்டு இடி துதிக்கிறது. மற்றும் மலக்குகள் அவனின் பயத்தால் துதிக்கின்றனர்.

26. உணவளித் தவருக்காக விருந்தாளி செய்ய வேண்டிய துஆ
அல்லாஹூம்ம பாரிக் லஹூம் ஃபீமா ரஜக்தஹூம், வஃக் ஃபிர்லஹூம் வர்ஹம் ஹூம்.

பொருள் : யாஅல்லாஹ் அவர்களுக்கு நீ வழங்கியவற்றில் அவர்களுக்கு நீ பரகத்துச் செய்வாயாக, அவர்களுக்கு நீ பாவம் பொருத்தருளவும் செய்வாயாக, அவர்களுக்கு நீ அருளும் செய்வாயாக,

27. நோன்பாளர் அவரை எவராவது ஏசினால் அவர் கூற வேண்டியது?
இன்னீ ஸாயிமுன் இன்னீ ஸாயிமுன்.

பொருள் : நிச்சயமாக நான் நோன்பாளன், நிச்சயமாக நான் நோன்பாளன்.

28. கோபம் நீங்கதுஆ?
அஊது பில்லாஹி மினஷ் ஷத்தானிர் ரஜீம்.

பொருள் : எறியப்பட்ட ஷைத்தானி(ன்தீமையி)லிருந்து அல்லாஹ்வைக் கொண்டு காவல் தேடுகிறேன்.

29. இணை வைப்பதிலிருந்து பயந்ததற்கு துஆ?
அல்லாஹூம்ம இன்னீ அஊது பிக அன் உஷ்ரிக பிக வஅன அஃலமு, வஅஸ்தஃக்ஃபிருக லிமா லா அஃலமு.

பொருள்: யாஅல்லாஹ் நிச்சயமாக நான், அறிந்து கொண்டே உனக்கு இணைவைப்பதிலிருந்து உன்னைக் கொண்டு நான் காவல் தேடுகிறேன், நான் அறியாதவற்றுக்காக உன்னிடம் பாவம் பொருத்தருளவும் தேடுகிறேன்.

30. அல்லாஹ் உமக்கு பறகத்துச் செய்வானாக என்று கூறியவருக்கு துஆ?
ஃபீக பாரகல்லாஹ்.
பொருள் : அல்லாஹ் உம்மிலும் பரகத்துச் செய்வானாக.

31. பிரயாணத்தில் செல்லுகையில் தக்பீர் மற்றும் தஸ்பீஹ் கூறுதல்?
நாங்கள் (மேட்டுப்பகுதியில்) ஏறுகின்ற போது (அல்லாஹூஅக்பர் எனத்) தக்பீர் கூறுவோராக, (பள்ளத்தில்) இறங்குகின்ற போது(ஸூப்ஹானல்லாஹ் எனக் கூறி) தஸ்பீஹ் செய்பவர்களாகவும் இருந்தோம் என ஜாபிர்((ரலி)) அவர்கள் கூறுகிறார்கள்.

32. திடுக்கத்தின் போது கூறப்படுவது?
லாயிலாஹ இல்லல்லாஹூ
பொருள் :வணங்கப்படுபவன் அல்லாஹ்வையின்றி (வேறு) இல்லை.

33. அல்லாஹ்வுக்கு மிக விருப்பமான நாவிற்கு மிக சுலபமான மறுமையில் தராசு தட்டில் மிக கனமான இரு வார்த்தைகள்?

சுபுஹானல்லாஹி வபிஹம்திஹி சுபுஹானல்லாஹில் அளீம்.
பொருள் : பரிசுத்தமானவன் அல்லாஹ் புகழுக்குரியவன், மிகத் தூய்மையானவன் மகத்துவமிக்கவனாவான்.

بارك الله لك وبارك عليك وجمع بينكما في خير

பாரகல்லாஹு (க்) வபாரக (அலை)(க்) வஜமஅ பைன(க்)குமா ஃபீ கைர். நூல்கள்: திர்மிதீ, அபூதாவூத்

பொருள்: அல்லாஹ் உமக்கு அகத்திலும் புறத்திலும் அருள்புரிவானாக! உங்கள் இருவரையும் நற்காரியங்களில் ஒன்று சேர்ப்பானாக!

35.  ஸஜ்தா செய்ய வேண்டிய வசனங்கள்

குர்ஆனில் ஸஜ்தா வசனத்தை ஓதும்போது செய்யும் ஸஜ்தாவின்போது ஓத வேண்டிய துஆ

سَجَدَ وَجْهِى لِلَّذِى خَلَقَهُ وَشَقَّ سَمْعَهُ وَبَصَرَهُ تَبَارَكَ اللَّهُ أَحْسَنُ الْخَالِقِينَ

ஸஜத வஜ்ஹிய லில்லதீ கலகஹு, வஷக்க ஸம்அஹு, வபசரஹு பிஹவ்லிஹி வகுவ்வதிஹி ஃப தபாரகல்லாஹு அஹ்ஸனுல் காலிகீன்.
பொருள் : எனது முகம், அதனை படைத்து, தனது ஆற்றலாலும் சக்தியாலும் அதன் காது-கண் புலன்களுக்கு வழி அமைத்துக் கொடுத்து இறைவனுக்கு ஸஜ்தா செய்துவிட்டது. படைப்பாளர்களில் மிகச் சிறந்தவனாகிய அல்லாஹ் பாக்கியம் உடையவன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக