வியாழன், 16 ஜனவரி, 2020

பாடம். 4




ஸக்காத்.

இஸ்லாத்தின் நான்காவது கடமை ஸக்காத்.

ஏழைகளும் வாழ வேண்டும் என்பதற்காக இறைவனால் வகுக்கப்பட்ட வளமையான பொருளாதாரத் திட்டமாகும்.

ஸக்காத் என்னும் அரபிச் சொல்லுக்கு தூய்மைப் படுத்துதல் என்று பொருளாகும்.

செல்வந்தர்கள் தாங்கள் சேமித்து வைத்திருக்கும் பொருளிலிருந்து வருடத்திற்கு ஒருமுறை இரண்டரை சதவீதம் ஏழைகளுக்கு கொடுப்பதை ஸக்காத் என்று கூறப்படும்.

ஸக்காத் கடமையாகும் பொருட்கள்.

தங்கம்.

வெள்ளி.

பணம்.

வியாபாரப்பொருட்கள்.

ஆடு மாடு ஒட்டகம்.

தானியங்கள் மற்றும் பழங்கள்.

ஸக்காத் எந்த பொருளின் மீது கடமையாகாது.

நமது தேவைக்காக வைத்துள்ள அசையாச் சொத்துக்கள். (உதாரணமாக வசிக்கும் வீடு.)

நாம் உபயோகிக்கும் துணிமணிகள்  விரிப்புகள்.

வீட்டு உபயோகப் பொருட்கள். (உதாரணமாக பிரிட்ஜ் ஏசி. ஏர்கூலர் வாஷிங் மெசின் போன்றவை.)

நாம் உபயோகிக்கும் வாகனங்கள்.

பாதுகாப்பு ஆயுதங்கள்.

சாப்பிட வைத்துள்ள உணவு தானியங்கள்.

வைரம் பவளம் போன்ற உயர்தர கலவைகள்.

படிப்பதற்காக வைத்துள்ள நூல்கள்.

தொழிற்சாலையின் மிஷின்கள்.

வாடகைக்கு விடப்படும் வாகனங்கள்.

ஆகியவற்றில் ஸக்காத் கிடையாது.

( ஷாபிஈ மத்ஹபில் பெண்கள் அணிந்திருக்க கூடிய தங்கம் வெள்ளியில் ஸக்காத் கிடையாது. )

அளவுகள்.

தங்கம் எண்பத்தி ஏழரை­  கிராம் இருந்தால் ஸக்காத் கொடுக்க வேண்டும்.

வெள்ளி அறுநூற்றி பனிரென்டரை  கிராம் இருந்தால் ஸக்காத் கொடுக்க வேண்டும்.

பணம்  வெள்ளியின் எடை அளவு பணம் இருந்தால் அந்த பணத்திற்கு ஸக்காத் கணக்கிட்டு கொடுக்க வேண்டும்.

ஸக்காத் பெறுவதற்கு தகுதியானவர்கள்.

பக்கீர் எனப்படும் பரம ஏழை.

மிஸ்கீன் எனப்படும் யாசகம் கேட்போர்.

ஸக்காத் சேகரிக்க அரசால் நியமிக்கப்பட்ட பணியாளர்.

புதிதாக இஸ்லாத்தை ஏற்றவர்கள்.

முகாதப் பணம் கொடுத்தால் நீ விடுதலை என்று எழுதி கொடுக்கப்பட்ட அடிமைகள்.

கடனாளிகள்.

இறைவழியில் போராடும் போராளிகள்.

வழிப்போக்கர்கள்.


ஹஜ்.

ஹஜ் என்பது இஸ்லாத்தின் ஐந்தாவது கடமையாகும்

உடல் நலமும் பொருள் வளமும் உள்ளவர்களுக்கே இது கடமையாகும். மற்றவர்களுக்கு இது கட்டாய கடமையில்லை.

ஹஜ்ஜையும் உம்ரைவையும் அல்லாஹ்வுக்காகப் பூர்த்தி செய்யுங்கள். அல்குர்ஆன் (2: 196)

ஹஜ் செய்வது முந்திய பாவங்கள் அனைத்தையும் அழித்து விடும். என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர் அம்ர் ப்னு ஆஸ் (ரலி)  நூல் முஸ்லிம்.

ஹஜ் யார் மீது கடமை.

முஸ்லிமான.

பருவ வயதடைந்த.

சுய புத்தியுள்ள.

சுதந்திரமான.

பணத்தாலும் வாகனத்தாலும் சென்று வர சக்தி பெற்றவர்கள்.
மீது ஹஜ் கட்டாய கடமையாகும்.

ஹஜ் யார் மீது கடமையாகாது.

சிறு குழந்தை.

பைத்தியக்காரன்.

அடிமை மீது.

சென்று வர வாகன வசதி பண வசதி இல்லாதவர் மீது.

செல்லும் வழியில் ஆபத்து இருந்தால்.

கணவனோ அல்லது மணம் செய்ய ஹராமான வேறு ஆண்களோ பெண்களோ துணையில்லாத பெண்கள் மீது ஹஜ் கடமையாகாது.

குர்பானி

இஸ்லாத்தின் இரண்டு பெருநாட்களான நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய இரு பெருநாட்களும் இரண்டு விதமான தர்மங்களை அடிப்படையாக கொண்டவை. நோன்புப் பெருநாள் தினத்தில் 'சதகத்துல் ஃபித்ர்' என்னும் தர்மம் கடமையாக்கப்பட்டு இருப்பது போல் ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் 'உழ்ஹிய்யா' எனும் குர்பானி கடமையாக்கப்பட்டுள்ளது. ஆடு, மாடு, ஒட்டகம் ஆகியவற்றை இறைவனுக்காக அறுத்துப் பலியிடுவது தான் குர்பானி எனப்படுகிறது.

ஹிஜ்ரி 2-ம் வருடம் குர்பானி கடமையாக்கப்பட்டது. ஹனபி மத்ஹபின் படி குர்பானி கொடுப்பது வாஜிபாகும்

இமாம் ஷாபிஈ அவர்களிடத்தில் குர்பானி கொடுத்தல் சுன்னத்தே முஅக்கதாவாகும்.

துல்ஹஜ் பிறை 10,11,12,13 அஸர் வரை குர்பானி கொடுக்கலாம்.
இதில் குர்பானி கொடுக்க முதல் (பெரு) நாளே சிறந்ததென ஹஜ்ரத் உமர், ஹஜ்ரத் அலீ, ஹஜ்ரத் இப்னு அப்பாஸ் (ரலி)யல்லாஹு அன்ஹும் போன்ற நபித் தோழர்கள் அறிவிக்கின்றனர்.
நூல்: ஹிதாயா.

குர்பானி எப்போது கொடுக்க வேண்டும்.

குர்பானி கொடுக்க கடமைப்பட்டவர்கள் பெருநாள் தினத்தில் பெருநாள் தொழுகை முடிந்த பிறகுதான் கொடுக்க வேண்டும். தொழுகைக்கு முன்னால் கொடுத்தால் அது குர்பானியாக ஆகாது என்று நபி صى الله عليه وسلمஅவர்கள் கால நிர்ணயம் செய்துள்ளார்கள்.

குர்பானி பிராணியின் வயது

ஒட்டகம்: ஐந்து வருடங்கள் முடிந்து ஆறாம் வருடம் ஆரம்பமாயிருத்தல் வேண்டும்.

மாடு: இரு வருடங்கள் முடிந்து மூன்றாம் வருடம் ஆரம்பமாகியிருத்தல் வேண்டும். எருமையையும் மாடு போன்றே கருதி குர்பானி கொடுக்கலாம்.

செம்மறியாடு அல்லது வெள்ளாடு ஒரு வருடம் முழுவதும் பூர்த்தியடைந்ததாக இருத்தல் வேண்டும்.

ஆறுமாத செம்மறியாடு நன்கு கொழுத்ததாக இருந்து அதை ஒரு வருடத்திய ஆடுகளோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது ஒரு வருடத்திய ஆடு போல் தெரிந்தால் குர்பானி கொடுக்கலாம்.

வெள்ளாட்டுக்கு கண்டிப்பாக ஒரு வருடம் முழுதும் பூர்த்தியடைந்து இரண்டாம் வருடம் ஆரம்பமாயிருத்தல் மிகவும் அவசியம்.

குர்பானிக்கு தகுதியற்ற பிராணிகள்

குர்பானி கொடுக்கப்படும் பிராணி குருடு,

கண்பார்வை குறைந்தது,

நடக்க முடியாதது,

கொம்பு உடைந்தது.

சொறி பிடித்தது,

காது, வால் போன்றவை துண்டிக்கப்பட்டிருத்தல்,

ஆணுமற்ற பெண்ணுமற்ற பிராணி போன்றவற்றை குர்பானி கொடுத்தல் கூடாது.

அறுக்கு முன் ஓத வேண்டிய துஆ

இன்னீ வஜ்ஜஹ்த்து வஜ்ஹிய லில்லதீ பத்ரஸ் மாவாத்தி வல் அர்ழ ஹனீஃபன் வமா அன மினல் முஷ்ரிகீன்.

இன்ன ஸலாத்தீ வ நுஸுக்கீ வ மஹ்யாய வ மமாத்தீ லில்லாஹி ரப்பில் ஆலமீன். லாஷரீகலஹு வபி தாலிக்க உமிர்த்து வ அன மினல் முஸ்லிமீன்.

மேற்கண்ட துஆவை ஓதியபின் குர்பானியின் பிராணியை கிப்லாவின் பக்கம் முகம் இருக்குமாறு படுக்க வைத்த அறுப்பவர் 'அல்லாஹும்ம ஹாதா மின்க வ இலைக்க அல்லாஹும்ம பதகப்பல் மின்னி. பிஸ்மில்லாஹி அல்லாஹு அக்பர்' என்று ஓதியபடியே கூர்மையான கத்தியைக் கொண்டு விரைவாக மூன்று அறுப்பில் அறுத்து முடிக்க வேண்டும்.

பின்னர் அங்கு நின்று கிப்லாவை முன்னோக்கி கைகளை உயர்த்தி கீழ்காணும் துஆவை ஓத வேண்டும்.

அல்லாஹும்ம தகப்பல் மின்னீ கமா தகப்பல்த்த மின் ஹபீபிக்க முஹம்மதின் வகலீலிக்க இப்ராஹிம் (அலை)ஹிஸ் ஸலாம்.

இறைச்சியை என்ன செய்ய வேண்டும்?

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு (அலை)ஹி வஸல்லம் அவர்களின் உம்மத்துக்களான முஃமின்களுக்கு மட்டுமே குர்பானியின் இறைச்சி ஹலாலாக்கப்பட்டுள்ளதுமு. அதிலும் அறுக்கப்பட்ட பிராணியின் இறைச்சியை மூன்று சம பங்குகளாக பிரித்து அதில் முதல் பாகத்தை ஏழைகளுக்கு ஸதகாவாக(தர்மமாக)வும், இரண்டாம் பாகத்தை உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், மூன்றாம் பாகத்தை தமக்காகவும் வைத்துக் கொள்ள வேண்டும்.

குர்பானி பிராணியில் சாப்பிடக் கூடாத உறுப்புகள்.

1.ஆண்குறி.

2. பெண்குறி.

3.இரண்டு விதைகள்.

4 நீர்பை.

5.இரத்தம்.

6. கட்டி.களலை.

7.பித்தப்பை.

ஆடு மாடு ஒட்டகம் ஆகியவற்றில் எந்த பிராணியாக இருந்தாலும் மேற்கண்ட ஏழு உறுப்புகளை சாப்பிடக்கூடாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக