புதன், 20 டிசம்பர், 2017

உலகில் மிக அழகான விடயங்கள் என்ன?

கருத்துகள் இல்லை:


தன் தந்தையின்  மரணத்திற்குப் பின் பதவிக்கு வந்த மன்னன் ஒருவன் சில நாட்களுக்குப்பின் தனது அரசவையைக் கூட்டினான்.

அங்கு கூடியிருந்த அமைச்சர்கள் ,அறிஞர்களிடம் உலகில் அழகான விடயங்கள் என்னென்ன? எனவினவினான்.
   
அமைச்சர்களும் ,அறிஞர்களும் பல விடயங்களைக் கூறினார்கள் ஆனால் அவர்கள் கூறியதில் எதுவுமே மன்னனுக்குத் திருப்தியளிக்கவில்லை.
 அப்பொழுது  அந்நாட்டின் பெரும் மார்க்க அறிஞராக கருதப்பட்ட அறிஞர் ஒருவர்
மன்னா! உலகில் அழகான விடயங்கள் மூன்றுஎன்றவர்,
1மரணம்,2.பெண்கள்,3, நம்மிடம் பிறர் தேவையாகுதல் "
என்றார்.
   அவரை வியப்புடன் பார்த்த மன்னன்,
அறிஞரே! நீங்கள் சொல்வது வியப்பாக இருக்கிறது,உலகிலேயே மக்கள் வெறுப்பது இந்த மூன்றைத்தானே"என்றான்.

 அறிஞர் சொன்னார்:
"மன்னா!  உங்கள் தந்தை மரணத்திற்குப் பின் தானே நீங்கள் மன்னனாக முடிந்தது"
உண்மைதான்"என்றான் மன்னன்

"தாய் என்ற பெண்ணாலேதானே நீங்கள் இவ்வுலகிற்கு வரமுடிந்தது."
நிச்சயமாக" என்று ஆமோதித்தான் மன்னன்.

 "எனக்கு தேவையிருப்பதினால் தானே
உங்களின் அரசவையை அலங்கரித்துக் கொண்டிருக்கிறேன். இல்லையென்றால் நான் ஏன் இங்கே இருக்கிறேன்" என்றார்அறிஞர்.
   
   அவரின் மதிநுட்பத்தைக்க கண்டு மகிழ்ந்த மன்னன்
அவருக்கு நிறைய பொற்காசுகளை வழங்கி சுதந்திரமாக உங்கள் விருப்பப்போல் மக்களுக்கு சேவை செய்யுங்கள்" என அனுமதி வழங்கினான்.
     انيس الجليس
என்ற அரபி நூலிலிருந்து கணியூர் இஸ்மாயீல் நாஜி பாஜில்மன்பஈ,தேவ்பந்தி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 
back to top