சனி, 25 ஜூன், 2016

சொர்கத்தை தரும் நோன்பு.









நோன்பு இருப்பதன் மூலம் பசியுடன் இருக்க வேண்டும் என்று சொல்லி இஸ்லாம் மனிதர்களை சிரமப்படுத்தவில்லை, அடிமைப்படுத்தவும் இல்லை. இஸ்லாம் எதை சொன்னாலும் அதில் ஓர் அழகிய அர்த்தம் இருக்கும்.


நபிகளார் ஒருமுறை கூறும்போது, "சுவனவாசல் திறக்கப்படும் வரை அதன் கதவை தட்டிக் கொண்டே இருங்கள்" என்றார்கள். அப்போது ஆயிஷா ரலி அவர்கள் "அக்கதவை நாம் தட்டுவது எப்படி...?" என கேட்டார்கள். அதற்கு நபிகளார் பதில் அளிக்கும் போது, "அது பசி மற்றும் தாகம் மூலம் தான்." என்று விளக்கம் அளித்தார்கள்.
                                                 ( நூல் பைஹகி)

நமது பசி, தாகத்தால் நாம் இம்மையில் இருந்து கொண்டே மறுமைக்கான சொர்க்க வாசலை தட்ட முடியும் என்றால், அதை நாம் ஏன் செய்யக்கூடாது...?

வெகு வேகமாக இயங்கும் அரவை இயந்திரங்களை விட நமது வாயிம் வயிறும் வருடம் முழுவதும் கிடைத்தவற்றை எல்லாம் அரைத்து தள்ளுவதில் முதலிடம் வகிக்கிறது.

"கொஞ்சம் பசித்திரு" என்று சொன்னால், அதை அவ்வளவு சீக்கிரம் யாரும் கேட்க மாட்டார்கள். அதே நேரத்தில் அந்த பசி நமக்கு நோன்பு என்ற வடிவில் கடமையாக்கப்பட்ட போது மகிழ்வுடன் ஏற்றுக் கொள்வதற்கு காரணம் இறையச்சம் தான்.

வருடம் முழுவதும் கிடைப்பதை எல்லாம் சும்மா சாப்பிட்டுக் கொண்டிருப்பதில் எவ்வித அர்த்தமும் இல்லை. அப்பசியை கொஞ்சமாவது நாம் உண்மையாக உணர வேண்டும்.

பசி என்பது அவ்வளவு சாதாரணமான ஒன்றல்ல. இதையே நாம் முறைபடுத்திச் செய்கின்ற போது அதுவே இஸ்லாமிய மொழியில் நோன்பு எனப்படுகிறது.

சும்மா பசித்திருப்பதற்கும், இறைவனுக்காக பசித்திருப்பதற்கும் இடையே நிறைய வேறுபாடு இருக்கிறது. ஒவ்வொரு பொருளுக்கும் ஜகாத் (தூய்மை வரி) இருக்கிறது. அதுபோல உடலின் ஜகாத் நோன்பு ஆகும். என நபிகளார் கூறியுள்ளதாக நபிமொழிகளை தொகுத்த மார்க்க அறிஞர் இமாம் இப்னு மாஜா தெரிவிக்கிறார்கள்.

சுமார் 14 மணி நேரம் ஒருவர் உண்ணாமல், பருகாமல், உமிழ்நீரைக்கூட விழுங்காமல், பசி தாகத்துடன் பகல் பொழுதை கழிக்கிறார் என்றால், அது சாதாரண செயல் அல்ல.
ஆனால் இவ்வாறு பசித்திருப்பதும், தாகித்திருப்பதும் அல்லாஹ்வுக்காக என்றால், அது சாதாரண செயல் அல்ல.
ஆனால் இவ்வாறு பசித்திருப்பதும், தாகித்திருப்பதும் அல்லாஹ்வுக்காக என்று வரும் போது அவை யாவும் அவருக்கு துன்பமாக தெரிவதில்லை. சொல்லப்போனால் அவை தான் அவருக்கு பேரின்பமாக இருக்கிறது.
ஆம், பசியைத் தந்து, அதற்கு உணவைத் தருபவனே இப்போது "பசித்திரு" என்று சொல்கிற போது அதை ஒரு மனிதனால் எப்படி மறுக்க முடியும்..

"பசித்த பின் புசி" என்பது பண்டைய மருத்துவத்தின் தாரக மந்திரம். இது இஸ்லாம் வலியுறுத்தும் வழிகளில் ஒன்று.
இந்த ரமலானில் (இம்மையில்) பசித்திருப்போம். மறுமையில் அதற்கான பலனை இறைவனிடம் பெறுவோம்.


                               ஆக்கம்.
            மௌலவி எஸ்.என்.ஆர். ஷவ்கத் அலி மஸ்லஹி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக