புதன், 30 டிசம்பர், 2015

பாத்திமா நாயகியின்(ரழியல்லாஹூ அன்ஹா )





ஒரு நாள் அண்ணல் நபி ஸல்லல்லாஹூஅலைஹிவ ஸல்லம் அவர்கள் தமது அருமை மகளார் பாத்திமா (ரழியல்லாஹூ அன்ஹா ) அவர்கள் வீட்டுற்கு வந்தார்கள். வீட்டில் பாத்திமா( ரழியல்லாஹூ அன்ஹா ) அவர்கள் சோகமாக காணப்பட்டார்கள். துடிதுடித்துப்போன நபி ஸல்லல்லாஹூஅலைஹிவ ஸல்லம் அவர்கள் எனதருமை மகளே! ஏன்  சோகமாக உள்ளாய்?       என்ன நடந்து விட்டது? சொல்லம்மா என்று  கேட்டார்கள்.

வியாழன், 17 டிசம்பர், 2015

உங்களுக்கு பிடிக்காதவங்கள பழி வாங்க போறீங்களா?????








நினைத்துப் பார்த்தால் நெஞ்சு கொதிக்கிறது சாமீ. எத்தனை பேர் என்னை கேலி செய்திருக்கிறார்கள்? எத்தனை பேர் வசை பாடியிருக்கிறார்கள்?
எத்தனை பேர் என் முதுகில் குத்தியிருக்கிறார்கள்? அவர்கள் ஒவ்வொருவரையும் பழி
வாங்காமல் ஓயமாட்டேன்என்று அந்த சாமியார் முன் வந்து பொருமினான் ஒரு சீடன்.

ஞாயிறு, 13 டிசம்பர், 2015

இறைவன் நம்மை சோதிப்பது ஏன்?



குரு குலத்தில் பாடம் நடந்துகொண்டிருந்தது.
யாருக்காவது ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் கேட்கலாம்என்கிறார் குரு. ஒரு மாணவன் உடனே எழுந்து, “குருவே அனைத்தும் அறிந்த இறைவன் நம்மை சோதிப்பது ஏன்? சோதனைகளை சந்திக்காமல், கஷ்டங்களை சந்திக்காமல் அவனின் அருளை பெறவே முடியாதா?” என்று கேட்கிறான்.

புதன், 25 நவம்பர், 2015

அல்லாஹ்வும் நம்மோடு இருக்கிறான்.







சிறுவனை அழைத்துக்கொண்டு அவனது தந்தை ஒரு காட்டிற்குச் சென்றார். அப்போது மகனுக்கு ஒரு சவாலை முன்வைத்தார். ''மகனே, இப்போது உனக்கு முன் ஒரு பெரிய சவால் உள்ளது. அதில் வெற்றி பெற்றால், நீ பெரிய வீரனாகி விடுவாய். இன்று இரவு முழுவதும் நீ தனியாக இந்தக் காட்டிலேயே இருக்க வேண்டும். உன் கண்கள் கட்டப்படும். ஆனாலும் நீ பயப்படக்கூடாது;
ஒரு ஊரில் ஒரு நிலச்சுவான்தார் இருக்கிறார் அவரிடம் ஏரளாமான செல்வம், பணம், பொருள் இருக்கிறது அந்த ஊரில் நிலங்களுக்கு சொந்தக்காரார், அந்த ஊரில் கிட்டத்தட்ட முக்கால் வாசிப்பேர் இவருடைய பண்ணையில் தான் வேலை பார்க்கிறார்கள் இவரிடம் கூலி வாங்கி தான் ஜீவனம் செய்கிறார்கள்.
ஆனால் இப்படிபட்ட செல்வந்தருக்கு மனதில் நிம்மதியில்லை

உலகில் வாழும் தேவதை.


பிரசவிக்கப் போகும் ஒரு பெண்ணின் பிரசவத்திற்கான ஏற்பாடுகள் நடந்துக் கொண்டிருந்தன.
உறவினர்கள் எல்லாம் காத்திருக்க அந்த தாய் வலியில் கதறிக் கொண்டிருந்தாள்.


வயிற்றிலிருக்கும் குழந்தைக்கு வழக்கத்திற்கு மாறன சத்தம் ஏதேதோ கேட்டது நமக்கு என்ன நடக்கப் போகிறதோ என்ற குழப்பம் குழந்தையின் மனதில் ஓடியது,

திங்கள், 23 நவம்பர், 2015

திருக்குர்ஆன் கேள்வி பதில்கள்





1) திருக்குர்ஆன் ஓதத் துவங்கும் போது என்ன கூற வேண்டும்?
அஊது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம் என்றும் (16:98) மற்றும் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர்ரஹீம் என்றும் (96:1...) கூற வேண்டும்.


2) திருக்குர்ஆன் யாரிடமிருந்து இறங்கியது?
அல்லாஹ்விடமிருந்து இறங்கியது




3) திருக்குர்ஆன் யார் மூலம் இறங்கியது?
ஹழ்ரத் ஜிப்ரயீல் (அலை) மூலம் இறங்கியது.


4) திருக்குர்ஆன் யாருக்கு இறங்கியது?
ஹழ்ரத்முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு இறங்கியது


5) திருக்குர்ஆன் எந்த இடத்தில் இறங்கியது?
ஹிரா என்னும் மலைக் குகையில் இறங்கியது


6) திருக்குர்ஆன் எந்த மொழியில் இறங்கியது?
அரபி மொழியில் இறங்கியது.


7) திருக்குர்ஆனில் முதன்முதலாக இறங்கிய வசனம் எது?
இக்ரஹ் என்னும் வசனம் ஆகும்.


8) திருக்குர்ஆன் எதற்காக வேண்டி இறங்கியது?
மனித, ஜின் வர்க்கத்திற்கு நேர்வழி காட்டுவதற்காகஇறங்கியது.


9) திருக்குர்ஆனின் திருப்பணி என்ன?
நன்மையை ஏவுவதும், தீமையை தடுப்பதும் ஆகும்.


10) திருக்குர்ஆனில் அல்லாஹ் என்ற வார்த்தை எத்தனை இடங்களில் வருகிறது?.
2698 இடங்களில்


திங்கள், 16 நவம்பர், 2015

பேசுவதில் கவனம்





فَقُوْلَا لَهٗ قَوْلًا لَّيِّنًا لَّعَلَّهٗ يَتَذَكَّرُ اَوْ يَخْشٰى‏ 

20:44. நீங்கள் இருவரும் அவனிடம் (சாந்தமாக) மென்மையான சொல்லால் சொல்லுங்கள்; அதனால், அவன் நல்லுபதேசம் பெறலாம்; அல்லது அச்சம் கொள்ளலாம்.

பேசாதீங்க!! பேச்சில் பலவிதம்………. சிலர் சிரிக்க சிரிக்க பேசுவர்! சிலர் மற்றவர்களை சிரிக்க வைக்க பேசுவர்! சிலர் சிந்தித்து பேசுவர்! சிலர் சிந்திக்க வைக்க பேசுவர்! சிலர் பேசினால் காதில் இரத்தம் கசியும்! சிலர் பேசினால் காதில் தேனும் பாயும்! சிலர் அன்பாக பேசுவர்! சிலர் பண்பாக பேசுவர்! சிலர் பாசமாக பேசுவர்! சிலர் கவிதையாய் பேசுவர்! சிலர் கோபமாக பேசுவர்! சிலர் வெறுப்பாக பேசுவர்! சிலர் வியாக்கியானம் பேசுவர்! சிலர் ரகசியம் பேசுவர்! சிலர் கதை பேசுவர்! சிலர் காரியத்துக்காக பேசுவர்! சிலர் உண்மையாக பேசுவர்! சிலர் பொய் மட்டுமே பேசுவர்! சிலர் புறம் பேசுவர்! சிலர் நேர்மையாக பேசுவர்! சிலர் வெகுளித்தனமாக பேசுவர்! சிலர் தற்புகழ்ச்சி பேசுவர்! சிலர் வியாபாரத்திற்காக பேசுவர்! சிலர் அடுத்தவரின் மகிழ்ச்சிக்காக பேசுவர்! சிலர் தன் மகிழ்ச்சிக்காக மற்றவர்களை பேசியே புண்படுத்துவார்கள்! சிலர் பேசுவது அவர்களுக்கும் புரியாது, மற்றவர்களுக்கும் புரியாது! எது எப்படியோ பேச வேண்டும்! பேசாமல் இருக்க முடியாது! இப்படி பேச்சும், பேசுபவர்களும் பலவிதம் இருக்க; சிலர் எந்த நேரத்தில், எந்த இடத்தில் யாரிடம் எப்படி பேசுவது என்று தெரியாமல் பேசி, பிரச்சனைகளில் சிக்கி விடுவர்! சிலர் அதே பேச்சால் எவ்வளவு பெரிய சிக்கலில் இருந்தும் கூட சுலபமாக விடுபடுவர்! ஆனால், ஒன்று மட்டும் நிச்சயம்! பேசுவது எப்படி என்று தெரியாமல், அதைக் கற்காமல், சபை நாகரிகம் அறியாமல் பேசுவோரின் பேச்சை நாம் ரசிப்போம்! அது யாரென்றால், குழந்தைதான்! மழலை பேச்சுக்கு மயங்காதோர் இவ்வுலகில் இல்லை! ஒரு குழந்தை பேசுவதைக் கேட்டால் போதும், அனைத்து துன்பங்களும் பறந்து விடும், குழந்தைகளுக்கு மட்டுமே அந்த சக்தி உண்டு. அவர்கள் பேச்சு கேட்க கேட்க தெவிட்டாத இன்பம் பயக்கும்! பேசும் கலை மிகச்சிறந்த கலை! அதைக் கற்றுணர்ந்து, எந்த இடத்தில் எப்படி பேச வேண்டும் என்று அறிந்து பேச வேண்டும்! சூழ்நிலை உணர்ந்து புத்திசாலித்தனமாக பேசுவதே சிறந்தது!
ஆகையால் பேசுங்க! பேசுவதற்கு முன் யோசித்து பேசுங்க! புத்திசாலித்தனமாக விழிப்புணர்வோடு சூழ்நிலை அறிந்து பேசுங்க! பேசுவதற்கு முன் எத்தனை முறை வேண்டுமானாலும் யோசிக்கலாம், பேசிய பிறகு ஒன்றும் செய்ய முடியாது! கொட்டிய வார்த்தைகள் என்றுமே குப்பைகள் தான்! அதை மறவாமல் அளவோடு பேசி, ஆனந்தமாக வாழுங்கள்! உங்கள் பேச்சு மற்றவர்களை வாழ வைப்பதாக மட்டுமே இருக்க வேண்டும்!! இல்லையேல்……………….!!!

புதன், 11 நவம்பர், 2015

அவர்கள் உங்களுக்கு ஆடை களைப் போன்றவர்கள்,





கணவன் மனைவி உறவு மனித வாழ்க்கையின் மற்றெல்லா உறவுகளையும் விட மிக ஆச்சர்யம் தரத்தக்க உறவு எனலாம். யார் யாருக்கோ பிறந்தவர்கள் திருமணத்திற்குப் பிறகு திடீரென்று இணைந்த பின்னர் இருவரது உள்ளங்களிலும் பெருக்கெடுக்கும் காதல், பிரியம், நெருக்கம், தாம்பத்யம், கருணை, கனிவு, பரிவு, விட்டுக் கொடுத்தல் முதலானவற்றிற்கு நிகரில்லை. அதற்கான காரணம் என்ன என்றும் நாம் அறிய முனைவதில்லை.


செவ்வாய், 3 நவம்பர், 2015

" மகிழ வைத்து மகிழுங்கள் "




எப்படி என் மகிழ்ச்சி ஒரு கதை வடிவில் சொல்கிறேன் :
ஒரு அழகான பெரிய பணக்காரியான அதிக மதிப்புள்ள உடை உடுத்தி ஆடம்பரத்தில் வாழும் ஒரு பெண்.
ஒரு கவுன்சிலிங் செய்பவரை காணச்ச்சென்றாள்

சனி, 31 அக்டோபர், 2015

அழுகை.






وَأَنَّهُ ۥ هُوَ أَضۡحَكَ وَأَبۡكَىٰ                                    

53:43. அன்றியும், நிச்சயமாக அவனே சிரிக்க வைக்கிறான்; அழச் செய்கிறான்.


இமாம் ராஸி ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்.
மூன்று சிரிப்பு அல்லாஹ்வுக்கு கோபத்தை ஏற்படுத்தும்.

1. தொழுகையில் சிரிப்பது.

2. திக்ர் மஜ்லிஸில் சிரிப்பது.

3. ஜனாஸாவின் அருகில் சிரிப்பது.

மூன்று தூக்கம் அல்லாஹ்வுக்கு கோபத்தை ஏற்படுத்தும்.

1. மஃரிப் தொழுகைக்கு பின் தூங்குவது. இஷா தொழுகை தப்பிப் போய் விடும் என்பதால்.

2. தொழுகையில் தூங்குவது.

3. திக்ர் மஜ்லிஸில் தூங்குவது.


அழுகையில் மொத்தம் பத்து வகையான அழுகை இருக்கிறது என அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள்.

1. ஆனந்த கண்ணீர்.

2. கவலையினுடைய கண்ணீர்.

3. இரக்கத்தினுடைய கண்ணீர்.

4. பயத்தினால் வரும் கண்ணீர்.

5. பொய்யான கண்ணீர். காசுக்காக ஒப்பாரி வைக்கும் பெண்களின் அழுகை.
நபி ஸல் அவர்கள் கூறினார்கள். ஒப்பாரி வைக்கும் பெண்கள் நாளை கியாமத் நாளில் தலைவிரி கோலமான நிலையில் தலை மீது கை வைத்தவர்களாக அல்லாஹ்வினுடைய சாபத்தின் முக்காடு அணிந்தவர்களாக நாய் குரைப்பதை போன்று கப்ரிலிருந்து எழுப்ப படுவார்கள் என கூறினார்கள்.

6. ஒத்துப் போக்க் கூடிய கண்ணீர். உதாரணமாக சிலர் அழுவதை பார்த்தாலே நமக்கு கண்ணீர் வருவது.

7. பாசம் பிரியத்தினால் வரும் கண்ணீர்.

8. வேதனையினுடைய கண்ணீர்.

9. நயவஞ்சக கண்ணீர். அதாவது கண் கண்ணீர் வடிக்கும். ஆனால் கல்பு கல் நெஞ்சமாக இருக்கும்.

10. பலஹீனத்தினுடைய கண்ணீர்.


கஃபுல் அஹ்பார் ( ரலி ) அவர்கள் கூறுகிறார்கள்.

உலகில் ஒரு மனிதன் அழுக வேண்டும் அல்லாஹ் ஒரு மலக்கை அனுப்புகிறான் அவர் அந்த மனிதரின் விலாப்பகுதியில் தடவினால் தான் அம்மனிதனுக்கு கண்ணீர் வரும் என்றார்கள்.

يا أيها الناس! ابكوا ، فإن لم تبكوا فتباكوا ، فإن أهل النار يبكون حتى تسيل دموعهم في وجوههم كأنها جداول حتى تنقطع الدموع، فتسيل - يعني - الدماء، فتقرح العيون ، فلو أن السفن أرخيت فيها لجرت ).
قال الالباني في السلسلة الضعيفة

நபி ( ஸல் ) அவர்கள் கூறியதாக ஹஸ்ரத் அனஸ் ( ரலி ) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
மக்களே...! இறைவனிடத்தில் நீங்கள் அழுங்கள். அப்படி அழுக முடியவில்லையென்றால் அழுவது போல நடியுங்கள். ஏனென்றால் நரகவாதிகள் அருவியை போல கண்ணீர் வடிப்பார்கள். கண்ணீர் தீர்ந்த பிறகும் ரத்தக்கண்ணீர் வடித்து அழுவார்கள். அந்த அழுகையின் காரணமாக கன்னமெல்லாம் பொக்களங்களாக மாறிவிடும். அவர்கள் அழுத கண்ணீரில் கப்பலை ஓட விட்டால் கூட அது ஓடும் என்றார்கள்.


நபி நூஹ் (அலை) அவர்களுக்கு நூஹ் என பெயர் வந்ததற்க்கான காரணம். நூஹ் என்றால் அழக்கூடியவர் என்று பொருள்.
அன்றொருநாள் ஒரு நாயை பார்த்து இவ்வளவு அசிங்கமான படைப்பாக இருக்கிறாயே என ஒரு நாயை பார்த்து சொன்ன பொழுது அல்லாஹ் அவரை நோக்கி கூறினான். எனது படைப்பை குறை கூறுவது அது என்னை குறை கூறுவது போல என கூறிய போது நபி நூஹ் (அலை) அவர்கள் அழுதுவிட்டார்கள்


அல்லாமா அப்துர் ரஹ்மான் ஸபுவ்ரி ( ரஹ் ) அவர்கள் கூறினார்கள்.

இந்த துன்யாவிலுல்ல அனைவரது அழுகையும் நபி தாவூத் (அலை) அவர்களது அழுகையோடு ஒப்பிட்டு பார்த்தால் நபி தாவூத் (அலை) அவர்களின் அழுகைக்கு சமமாகாது.

தாவூத் (அலை) அவர்களது கண்ணீரை காட்டில் அதிகமாக நபி நூஹ் (அலை) அவர்களது கண்ணீருக்கு சமமாகது.

நூஹ் (அலை) அவர்களது கண்ணீரை விட நபி ஆதம் (அலை) அவர்களது கண்ணீர் அதிகமாக இருந்தது. என்றார்கள்.

நபி ஆதம் (அலை) அவர்கள் ஜபலுர் ரஹ்மத் என்ற மலையில் ஒரு அறிவிப்பின்படி 200 வருடம் மற்றொரு அறிவிப்பின் படி 300 வருடம் கண்ணீர் வடித்தார்கள் என்று தப்ஸீர் ரூஹுல் பயானில் இடம் பெறுகிறது.


ஆதம் (அலை) அவர்கள் பூமியில் வடித்த கண்ணீரிலிருந்து அல்லாஹ் பேரிச்சை, கடுகு, லவங்கம், மாசக்காய், ஜாதிக்காய் ஆகியவற்றின் மரங்களை விளைவித்தான்.

கடலில் அவர்கள் வடித்த கண்ணீரிலிருந்து அல்லாஹ் வைரக்க கற்களை உருவாக்கினான்.

ஹவ்வா (அலை) அவர்கள் பூமியில் வடித்த  கண்ணீரிலிருந்து அல்லாஹ் மருதாணி, குங்குமப்பூ, சுர்மா ஆகியவற்றின் மரங்களை உருவாக்கினான்.

ஹவ்வா ( அலை) அவர்கள் கடலில் உதிர்த்த கண்ணீரிலிருந்து முத்து, பவளம் உருவாக்கினான்.

இப்லீஸ் பூமியில் வடித்த கண்ணீரால் முற்கள் உருவானது.

இப்லீஸ் கடலில் வடித்த கண்ணீரிலிருந்து முதலை உருவானது,

பாம்பு பூமியில் வடித்த கண்ணீரிலிருந்து தேள் உருவானது.

பாம்பு கடலில் வடித்த கண்ணீரிலிருந்து நண்டு உருவானது.

மயில் பூமியில் வடித்த கண்ணீரிலிருந்து மூட்டை உருவானது.

மயில் கடலில் வடித்த கண்ணீரிலிருந்து அட்டை பூச்சி உருவானது என்று அல்லாமா அப்துர் ரஹ்மான் ஸபுவ்ரி ரஹ் அவர்கள் தப்ஸீர் ரூஹுல் பயானில் கூறுகிறார்கள்.


இந்த உலகில் இறைநேசர்களில் சிலர் கண்ணீருக்கு பதிலாக ரத்த கண்ணீர் வடித்திருக்கிறார்கள்.

அல்லாமா பத்ஹுல் மூவ்ஸிரி (ரஹ்) அவர்களை பார்ப்பதற்காக அவர்களின் சீடர் ஒருவர் சென்றார். அங்கு தனது ஆசிரியரின் கண்ணீர் ரத்தமும் கண்ணீரும் கலந்த நிலையில் கண்ணீர் சிந்தியிருந்தது. சீடர் கேட்டார் அல்லாஹ்வின் மீது சத்தியமாக சொல்லுங்கள் நீங்கள் ரத்தத்தையா கண்ணீராக வடித்தீர்கள் எனக்கேட்ட போது அல்லாமா பத்ஹுல் மூவ்ஸிரி (ரஹ்) அவர்கள் கூறினார்கள். ஆம் நான் ரத்தத்தை தான் கண்ணீராக வடித்தேன். நீங்கள் மட்டும் அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டு கேட்கவில்லையென்றால் நான் இதை சொல்லியிருக்க மாட்டேன் என்றார்கள்.

ஏன் இப்படி அழுகிறீர்கள் எனக்கேட்ட போது, நான் அல்லாஹ்வுக்கு நிறைவேற்ற வேண்டிய ஹக்கை ஒழுங்காக நிறைவேற்றவில்லை. ஆகையால் அதற்கு நான் சாதாரணமாக அழுதால் போததாது என்பதால் நான் ரத்ததை கண்ணீராக சிந்தினேன். என்றார்கள்.

அவரது மரணத்திற்கு பிறகு ஒருவரின் கனவில் தோன்றி சொன்னார். அல்லாஹ் என்னை மன்னித்து நெருக்கமாக ஆக்கினான். இவ்வளவு காலம் ஏன் அழுதீர்கள் என என்னை பார்த்து கேட்டான். யாஅல்லாஹ் உனக்கு நிறைவேற்ற வேண்டிய ஹக்கை நான் சரியாக நிறைவேற்றவில்லை என்பதாற்காக கண்ணீர் வடித்தேன் என்றேன்.

மீண்டும் அல்லாஹ் ரத்தக் கண்ணீர் வடித்ததற்கான காரணத்தை கேட்டான். யாஅல்லாஹ் நான் உனக்கு நிறைவேற்ற வேண்டிய ஹக்கை ஒழுங்காக நிறைவேற்றவில்லை. ஆகையால் அதற்கு நான் சாதாரணமாக அழுதால் போதாது என்பதால் நான் ரத்ததை கண்ணீராக சிந்தினேன். என்றார்கள்.

அல்லாஹ் கேட்டான் உங்களது கணக்கு வழக்கு புத்தகத்தில் நாற்பது ஆண்டு காலம் எந்த ஒரு பாவமும் பதிவிடப்படவில்லையே இருந்தும் ஏன் இந்த அழுகை எனக்கேட்டு நெருக்கமாக்கி என்னை மன்னித்தான் என்றார்கள்.


    உங்களின் மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது

சனி, 24 அக்டோபர், 2015

திருமணமான புதியதில் பெண்கள்.




திருமணமான புதியதில் பெண்கள்..!மற்றும்
சில ஆண்டுகள்,பல ஆண்டுகளின் அலம்பல்கள்


1. கணவர் கூப்பிடாத போதே...என்னங்க கூப்பிட்டீங்களா? இதோ வரேன்.
2. எங்கம்மாவைப் பார்க்கணும் போல இருக்கு. வாங்க இரண்டு நாள் அம்மா வீட்டிற்கு போய் விட்டு வரலாம்..
3. உங்களுக்கு பிடிக்காத முட்டைகோஸ் எனக்கும் வேண்டாம். இனிமேல் செய்ய மாட்டேன்.
4. எனக்கு புடைவையை நீங்கதான் செலக்ட் செய்யணும்.
5. அத்தை லெட்டர் போட்டு இருக்காங்க.
6 .உங்க ஹேர்ஸ்டைல் ரொம்ப நல்லா இருக்கு.
7. நீங்க சிரிக்கும் போது பல் வரிசையாக அழகா இருக்கு.
8. உங்க வீட்டுல எல்லோரும் கலகலப்பான டைப். நல்லா பேசுறாங்க.
9. ஓகே. நான் சினிமாவிற்கு ரெடி.போகலாம் பா.

சிறிது ஆண்டுகள் கழித்து...

1.நான் வேலையா இருக்கேன். அலறாதீங்க.பக்கத்தில் வந்து சொல்லிட்டு போனா என்ன?
2. நானும் குழந்தைகளும் போறோம்.10 நாள்கள் கழித்து வந்தால் போதும் புரியுதா?
3. எனக்கு கோஸ் பொரியல்.உங்களுக்கு ஒன்றும் பண்ணவில்லை. ஊறுகாய் போதும்ல?
4. இது ஒரு கலர்னு எப்படிதான் இந்த சேலையை எடுத்தீங்களோ.
5. ம்ம்ம். உங்க அம்மாகிட்ட இருந்து தான் லெட்டர்.
6. எவ்வளவு நேரம் தான் தலையை வாருவீங்களோ. நல்லாதான் இருக்கு.
7. எது சொன்னாலும் சிரிச்சே மழுப்புவீங்களே!
8. உங்க வீட்டு மனிதர்களிடம் வாய் கொடுத்து ஜெயிக்க முடியுமா?
9. கிரைண்டர் போடுற அன்றைக்கு தான் சினிமாவுக்குக் கூப்பிடுவீங்க. நீங்க போங்க.
பல ஆண்டுகள் கழித்து..

1. காதில் வாங்குவதே இல்லை.
2. போறவளுக்கு வர்ற வழி தெரியும்.யாரும் வர வேண்டாம்
3. இன்னைக்கு கோஸ் மட்டும் தான். பிடிச்சா தின்னுங்க. இல்லாட்டி போங்க.
4. ஒரு 5000 ரூபாய் மட்டும் வெட்டுங்க.புடைவையெல்லாம் நான் பார்த்துக்கிறேன்.
5. உங்களை பெத்த இம்சை மகராசி தான் லெட்டர்.
6. போதும்.போதும் வாரி வாரி தலை சொட்டை ஆனது தான் மிச்சம்.
7. எப்ப பார்த்தாலும் என்ன ஈ...? வாயை மூடுங்க. கொசு போய்ட போது.
8. உங்க பரம்பரையே ஓட்டை வாய்தானோ?
9. சினிமாவும் வேண்டாம். டிராமாவும் வேண்ட்டாம். என் பொழைப்பே சினிமா எடுக்கிறாப்புல இருக்கு