|
பேசாதீங்க!!
பேச்சில் பலவிதம்………. சிலர் சிரிக்க
சிரிக்க பேசுவர்! சிலர் மற்றவர்களை சிரிக்க வைக்க பேசுவர்! சிலர்
சிந்தித்து பேசுவர்! சிலர் சிந்திக்க வைக்க பேசுவர்! சிலர் பேசினால்
காதில் இரத்தம் கசியும்! சிலர் பேசினால் காதில் தேனும் பாயும்! சிலர் அன்பாக
பேசுவர்! சிலர் பண்பாக பேசுவர்! சிலர் பாசமாக பேசுவர்! சிலர்
கவிதையாய் பேசுவர்! சிலர் கோபமாக பேசுவர்! சிலர் வெறுப்பாக பேசுவர்! சிலர்
வியாக்கியானம் பேசுவர்! சிலர் ரகசியம் பேசுவர்! சிலர் கதை பேசுவர்! சிலர்
காரியத்துக்காக பேசுவர்! சிலர் உண்மையாக பேசுவர்! சிலர் பொய் மட்டுமே பேசுவர்!
சிலர் புறம் பேசுவர்! சிலர் நேர்மையாக பேசுவர்! சிலர் வெகுளித்தனமாக
பேசுவர்! சிலர் தற்புகழ்ச்சி பேசுவர்! சிலர் வியாபாரத்திற்காக பேசுவர்!
சிலர் அடுத்தவரின் மகிழ்ச்சிக்காக பேசுவர்! சிலர் தன் மகிழ்ச்சிக்காக மற்றவர்களை பேசியே புண்படுத்துவார்கள்!
சிலர் பேசுவது அவர்களுக்கும் புரியாது, மற்றவர்களுக்கும் புரியாது! எது எப்படியோ பேச வேண்டும்! பேசாமல் இருக்க முடியாது! இப்படி
பேச்சும், பேசுபவர்களும்
பலவிதம் இருக்க; சிலர் எந்த நேரத்தில்,
எந்த இடத்தில் யாரிடம்
எப்படி பேசுவது என்று தெரியாமல் பேசி, பிரச்சனைகளில் சிக்கி விடுவர்! சிலர் அதே பேச்சால் எவ்வளவு பெரிய சிக்கலில் இருந்தும் கூட
சுலபமாக விடுபடுவர்! ஆனால், ஒன்று மட்டும்
நிச்சயம்! பேசுவது எப்படி
என்று தெரியாமல், அதைக் கற்காமல்,
சபை நாகரிகம் அறியாமல் பேசுவோரின்
பேச்சை நாம் ரசிப்போம்! அது யாரென்றால், குழந்தைதான்! மழலை பேச்சுக்கு மயங்காதோர் இவ்வுலகில் இல்லை! ஒரு
குழந்தை பேசுவதைக் கேட்டால் போதும், அனைத்து துன்பங்களும் பறந்து விடும், குழந்தைகளுக்கு மட்டுமே அந்த சக்தி உண்டு.
அவர்கள் பேச்சு கேட்க கேட்க தெவிட்டாத இன்பம் பயக்கும்! பேசும் கலை மிகச்சிறந்த கலை! அதைக் கற்றுணர்ந்து,
எந்த இடத்தில் எப்படி பேச வேண்டும் என்று
அறிந்து பேச வேண்டும்! சூழ்நிலை உணர்ந்து புத்திசாலித்தனமாக பேசுவதே சிறந்தது!
ஆகையால் பேசுங்க!
பேசுவதற்கு முன் யோசித்து பேசுங்க! புத்திசாலித்தனமாக விழிப்புணர்வோடு சூழ்நிலை அறிந்து பேசுங்க!
பேசுவதற்கு முன் எத்தனை முறை வேண்டுமானாலும் யோசிக்கலாம், பேசிய பிறகு ஒன்றும் செய்ய முடியாது! கொட்டிய
வார்த்தைகள் என்றுமே குப்பைகள் தான்! அதை மறவாமல் அளவோடு பேசி, ஆனந்தமாக வாழுங்கள்! உங்கள் பேச்சு மற்றவர்களை வாழ
வைப்பதாக மட்டுமே இருக்க வேண்டும்!! இல்லையேல்……………….!!!
சில நேரங்களில் பேசப்படும் வார்த்தைகளில் இருக்கும்
அர்த்தத்தின் கனத்தை விட மௌனத்தில் கனம் அதிகமாக இருக்கிறது!!
( إِنَّ الصِّدْقَ يَهْدِي إِلَى الْبِرِّ وَإِنَّ
الْبِرَّ يَهْدِي إِلَى الْجَنَّةِ وَإِنَّ الرَّجُلَ لَيَصْدُقُ حَتَّى يَكُونَ
صِدِّيقًا وَإِنَّ الْكَذِبَ يَهْدِي إِلَى الْفُجُورِ وَإِنَّ الْفُجُورَ يَهْدِي
إِلَى النَّارِ وَإِنَّ الرَّجُلَ لَيَكْذِبُ حَتَّى يُكْتَبَ عِنْدَ اللَّهِ
كَذَّابًا )
நிச்சயமாக உண்மை
நல்லவைகளின் பக்கம் வழிகாட்டுகிறது. நிச்சயமாக நல்லவை சொர்க்கத்தின்
பக்கம் வழிகாட்டுகிறது. உண்மை பேசும் மனிதன்
உண்மையாளனாகிவிடுகிறான். நிச்சயமாக பொய்
தீமையின் பக்கம் வழிகாட்டுகிறது. நிச்சயமாக தீமை நரகத்தின் பக்கம் வழிகாட்டுகிறது. நிச்சயமாக பொய்யுரைப்பவன் அல்லாஹ்விடத்தில் பொய்யன் என்று எழுதப்படுகிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர் : இப்னு மஸ்வூத் -ரலி, நூற்கள் : புகாரீ 5629, முஸ்லிம்)
(அறிவிப்பவர் : இப்னு மஸ்வூத் -ரலி, நூற்கள் : புகாரீ 5629, முஸ்லிம்)
( إِنَّ الْعَبْدَ لَيَتَكَلَّمُ بِالْكَلِمَةِ مِنْ
رِضْوَانِ اللَّهِ لَا يُلْقِي لَهَا بَالًا يَرْفَعُهُ اللَّهُ بِهَا دَرَجَاتٍ
وَإِنَّ الْعَبْدَ لَيَتَكَلَّمُ بِالْكَلِمَةِ مِنْ سَخَطِ اللَّهِ لَا يُلْقِي
لَهَا بَالًا يَهْوِي بِهَا فِي جَهَنَّمَ )
ஒரு அடியான்
அல்லாஹ்வுக்குப் பிரியமான ஒரு வார்த்தையை -அதன் பயனை அறியாமல்-
எதார்த்தமாக கூறுகிறான். ஆனால் அல்லாஹ் அதன் மூலம் அவனுக்கு பல
அந்தஸ்துகளை உயர்த்துகிறான். ஒரு அடியான் அல்லாஹ் வெறுக்கக்
கூடிய ஒரு வார்த்தையை -அதன் விளைவு தெரியாமல்- எதார்த்தமாகக்
கூறுகிறான். ஆனால் அல்லாஹ் அதன் காரணத்தால் அவனை நரகத்தில்
வீசிவிடுகிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர் : அபூஹுரைரா -ரலி, நூல் : புகாரீ 5997)
(அறிவிப்பவர் : அபூஹுரைரா -ரலி, நூல் : புகாரீ 5997)
அழகு முகத்தில்
மட்டும்
அல்ல பல நேரங்களில்
மனதில்! சில நேரங்களில்
வார்த்தைகளில்!
அல்ல பல நேரங்களில்
மனதில்! சில நேரங்களில்
வார்த்தைகளில்!
ஏழைக்கு முன்னால் நின்று கொண்டு உனது
செல்வம் பற்றி பேசாதே!
நோயாளிக்கு முன் நின்று கொண்டு உன்
ஆரோக்கியத்தைப் பற்றி பேசாதே!
பலவீனனுக்கு முன்னால் நின்று உனது
பலம் பற்றி பேசாதே!
மகிழ்ச்சியை இழந்தவனுக்கு
முன்னிருந்து கொண்டு சந்தோஷம் பற்றி
பேசாதே!
சிறைக்கைதிக்கு முன் நின்றிருந்து உன்
சுதந்திரம் பற்றி பேசாதே!
குழுந்தைப் பாக்கியமற்றவனுக்கு முன் நின்று கொண்டு உன் குழந்தைகளைப் பற்றி பேசாதே!
அநாதைக்கு முன் நின்று கொண்டு உனது
தந்தையைப் பற்றி பேசாதே!
அவர்களது காயங்களை இதற்கு மேல்
அவர்களால் சுமக்க முடியாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக