ஞாயிறு, 29 மே, 2011

மஸ்ஜித்களும் சமூகப் புனரமைப்பும்






துபாயிலுள்ள ஒரு மஸ்ஜித் 
மஸ்ஜித் பாடசாலையின் ஆரம்ப வித்தாக அமைந்ததுஅது இபாதத்துக்குரிய இடமாக மாத்ததிரமன்றி முஸ்லிம்களுக்கு மார்க்க கல்வியையும்உலகக்கல்வியையும் போதிக்கும் கலையகமாகவும் விளங்கியது.
பொதுவாக மஸ்ஜித்களில் நடைபெற்ற வகுப்புகளில் மார்க்கப் பாடங்கள் மாத்திரமன்றி மொழிஇலக்கியம்,இலக்கணம்கவிதைவானவியல்கணிதம் போன்ற பல்வேறு கலைகள் போதிக்கப்பட்டன.
வரலாற்றில் பல மஸ்ஜிதுகள் நீதிமன்றங்களாகவும்ஆலோசனை மன்றங்களாகவும் செயற்பட்டுள்ளன.
மஸ்ஜிதுகளின் வரலாற்று புகழ்மிக்க பங்களிப்புகளும்பணிகளும் இன்று வெறுமனே ஏட்டளவில் காணப்படும் வரலாற்றுச் சம்பவங்களாக மாறிவிட்டனஇன்றைய மஸ்ஜிதுகள் அவற்றின் உயிரோட்டத்தை இழந்திருக்கின்றன.]
மஸ்ஜித்கள் பூமியில் அமைந்துள்ள அல்லாஹ்வின் இல்லங்களாகும்அவனது அருளும் அமைதியும் இறங்கும் இடங்கள் அவைமலக்குகள் தரிசனம் கொடுக்கும் தலங்களாகவும் அவை விளங்குகின்றன.இதனால்தான், ''பூமியில் அல்லாஹ்வுக்கு மிக விருப்பமான இடங்கள் மஸ்ஜித்களாகும்அவனுக்கு மிக வெறுப்புக்குரிய இடங்கள் சந்தைகளாகும்.'' என்றார்கள் நபியவர்கள். (முஸ்லிம்)
இறையச்சம்மிக்க இறையடியார்களின் புகலிடமாகவும் மஸ்ஜித்களே விளங்குகின்றனஅல்லாஹ்வின் அருளையும் ஆன்மாவுக்கு பயிற்சியையும் உள்ளத்திற்கு அமைதியையும் தேடுபவர்கள் ஒதுங்கும் இடம் மஸ்ஜிதாகவே இருக்க முடியும்எமது ஆரம்பகால இறைநேசர்கள் மஸ்ஜிதுடன் எத்தகைய இறுக்கமான உறவைக் கொண்டிருந்தார்கள் என்பதை அறிகின்ற போது எவரும் வியப்படையாமல் இருக்க மாட்டார்.
நாற்பது ஆண்டுகாலமாக பள்ளிவாயலுக்குச் சென்று ஒரு வேளை கூடத் தவராமல் நான் ஜமாஅத் தொழுகையை நிறைவேற்றி வந்திருக்கின்றேன்என்று சொல்கிறார்கள் சஈத் இப்னு முஸய்யிப் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள். 'நான் கடந்த முப்பதாண்டு காலமாக முஅத்தின் அதான் சொல்லும்போதெல்லாம் பள்ளியிலேயே இருந்திருக்கின்றேன்'' என்றும் அன்னார் ஒரு சந்தர்ப்பத்தில் குறிப்பிட்டர்கள்.
இறைவிசுவாசிகள் மஸ்ஜித்களுடன் நெருக்கமான தொடர்புடைய வர்களாக இருக்க வேண்டும் என்பதற்காகவே ''ஒருவர் தனித்து வீட்டில் தொழுவதை விட மஸ்ஜிதுக்கு சென்று கூட்டாக நின்று தொழுவது இருபத்தேழு மடங்கு உயர்வானது'' என்று சொன்னார்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்.
மறுமையில்மஹ்ஷரில்நிழலே இல்லாத அந்நாளில் அல்லாஹ்வின் அர்ஷின் கீழ் நிழல் பெறும் பேற்றைப் பெறும் ஏழு கூட்டத்தாரில் மஸ்ஜித்களுடன் இறுக்கமான உறவு கொண்டிருந்தோரும் அடங்குவர் என்பது பற்றி குறிப்பிடும் ஹதீஸும் இங்கு கவனத்திற் கொள்ளத் தக்கதாகும். (பார்க்க : புகாரிமுஸ்லிம்)
ஒருவர் மஸ்ஜிதுடன் நெருங்கிய தொடர்புடையவராக இருப்பதுஅவர் ஓர் உண்மை விசுவாசி என்பதற்கு போதுமான சான்றாகும்இதுபற்றி குறிப்பிடும் நபிமொழி பின்வருமாறு:
ஒருவர் மஸ்ஜிதுடன் தொடர்புடையவராக இருப்பின் அவருடைய ஈமானுக்கு நீங்கள் சாட்சி கூறுங்கள்(பார்க்க : திர்மிதிஇப்னு மாஜா)
 இவ்வாறு மஸ்ஜித்கள் புனிதத்துவம் வாய்ந்த இடங்களாக விளங்குவது போலவேஅவை முஸ்லிம் சமூகத்தின் நடைமுறை வாழ்வின் இதயமாகவும்அச்சாணியாகவும் காணப்படுகின்றனஏனெனில்சமூக நிர்மாணத்திற்கும்நிர்வாகத்திற்குமான கேந்திர நிலையங்களாக அமைவன மஸ்ஜித்களே.
இதனால்தான்நபியவர்கள் தான் விரும்பும் ஒரு கொள்கை வழிச் சமூகத்தை உருவாக்கும் நோக்குடன் மதீனா நோக்கி பயணமான போது தான் செல்லும் வழியில் இடையில் தங்கிய இடமான குபாவில் கூட ஒரு மஸ்ஜிதை நிர்மாணித்தார்கள்மதீனா சென்றடைந்ததும் அன்னாரின் முதற்கட்ட பணியாக அமைந்ததும் மஸ்ஜித் நிர்மாணமே.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மதீனா சமூகத்தை மஸ்ஜிதுந் நபவியை மையமாக வைத்தே கட்டியெழுப்பினார்கள்அன்று மஸ்ஜிதுந் நபவி வெறும் வணக்கங்கள் நிறைவேற்றப்படும் இடமாக மாத்திரம் இருக்கவில்லைஎல்லா சமூக பணிகளும் அங்குதான் நடைபெற்றனஅங்கிருந்தே அவை முடுக்கிவிடப்பட்டன.
மஸ்ஜிதுந் நபவி உட்பட இஸ்லாமிய வரலாறு நெடுகிலும் மஸ்ஜிதுகள் ஆற்றிய பணிகள் நமது கவனத்திற்குரியவையாகும்.
கலாநிலையங்களாக மஸ்ஜிதுகள்
நபியவர்களி;ன் காலத்திலும் பிற்பட்ட காலங்களிலும் மஸ்ஜிதுகள் கல்விக்கூடங்களாக விளங்கின.மஸ்ஜிதுந் நபவியில் பல நபித் தோழர்கள் பாடம் நடாத்தி வந்தார்கள்அலி ரளியல்லாஹு அன்ஹுஇப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு போன்ற நபித்தோழர்கள் மஸ்ஜிதில் கல்வி கற்றவர்களேஇமாம் மாலிக் இப்னு அனஸ் ரஹ்மதுல்லாஹி அலைஹி தனது வகுப்புக்களை மஸ்ஜிதுந்நபவியில் வைத்தே நடாத்தி வந்தார்கள்.
எகிப்தின் கெய்ரோ நகரத்தில் நிர்மாணிக்கப்பட்ட ஜாமிஉ அம்ரிப்னுல் ஆஸ் பள்ளிவாயலில் ஹிஜ்ரி 36அளவில் பாடப்போதனைகள் ஆரம்பிக்கப்பட்டனஇங்கு 40 க்கும் அதிகமான கல்வி வட்டங்கள் இருந்தன.இமாம் ஷாபிஈ ரஹ்மதுல்லாஹி அலைஹிஇமாம் இப்னு ஜரீர் அத்தபரீ ரஹ்மதுல்லாஹி அலைஹி போன்றோரின் வகுப்புகளும் இந்த மஸ்ஜிதில் நடைபெற்று வந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
இன்றைய உலகில் புகழ்பெற்ற இஸ்லாமிய பல்கலைக்கழகமான அல்அஸ்ஹர் ஆரம்பத்தில் ஒரு மஸ்ஜிதாகவே இருந்ததுஅல்ஜாமிஉல் அஸ்ஹர் எனும் இப்பள்ளிவாயல் ஹி. 361 அளவில் நிர்மாணி;க்கப்பட்டதாகும்டியூனீஸியாவில் அமைந்துள்ள அஸ்ஸெய்தூனா பல்கலைக்கழகமும் ஜாமிஉ ஸெய்தூனா என்ற மஸ்ஜிதில் இருந்தே உருவானதாகும்.
பக்தாதில் அப்பாஸிய கலீபா அபூ ஜஃபர் அல்மன்ஸூர் நிர்மாணித்த ஜாமிஉல் மன்ஸூரிலும் அக்காலத்து புகழ்பெற்ற பல அறிஞர்கள் பாடம் நடாத்தினார்கள்பேரறிஞர் அல்கதீபுல் பக்தாதி இங்கு ஹதீஸ் பாடம் நடாத்தினார்கள்இமாம் அல் கிஸாஈ அரபு மொழியையும்அபுல் அதாஹிய்யா கவிதையையும் கற்பித்தனர்டமஸ்கஸில் அமைந்துள்ள புகழ்பெற்ற அல்ஜாமிஉல் உமவி பள்ளிவாயலிலும் பல்வேறுபட்ட கலைகள் போதிக்கப்பட்டன.
பொதுவாக மஸ்ஜித்களில் நடைபெற்ற வகுப்புகளில் மார்க்கப் பாடங்கள் மாத்திரமன்றி மொழிஇலக்கியம்,இலக்கணம்கவிதைவானவியல்கணிதம் போன்ற பல்வேறு கலைகள் போதிக்கப்பட்டனஇந்த உண்மையை கலாநிதி முஸ்தபா சிபாஈ பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.
மஸ்ஜித் பாடசாலையின் ஆரம்ப வித்தாக அமைந்ததுஅது இபாதத்துக்குரிய இடமாக மாத்ததிரமன்றி முஸ்லிம்களுக்கு மார்க்க கல்வியையும்உலகக்கல்வியையும் போதிக்கும் கலையகமாகவும் விளங்கியது. 'அஞ்ஞான இருளில் இருந்த மேற்குலகிற்கு அறிவொளி பரப்பிய முஸ்லிம் ஸ்பெயினின்அறிவியல் இயக்கத்திற்கு தொட்டிலாகஸ்பெய்னிய மஸ்ஜிதுகளே அமைந்தன என்பது இங்கு ஈண்டு குறிப்பிடத்தக்கதாகும்.' இஷாத் தொழுகையைத் தொடர்ந்து கெய்ரோ ஜும்மா பள்ளிவாசலில் மாத்திரம் 110வகுப்புகள் நடந்ததாக அறிஞர் அல்மக்திஸி குறிப்பிடுகின்றார்.
மக்கள் சமூக நிலையங்கள்
அகதிகள்அநாதரவானவர்கள்வீடற்றோர் முதலானோர் தங்குமிடமாகவும் மஸ்ஜிதுகள் விளங்கின.மஸ்ஜிதுந் நபவியில் தங்கியிருந்த திண்ணைத் தோழர்கள் அநாதரவானவர்களாகவும்,வீடற்றவர்களாகவும் இருந்தவர்களேமதீனாவுக்கு வந்த நஜ்ரான் கிறிஸ்த்தவ தூதுக்குழு நபியவர்களின் பணிப்புரையின் பேரில் மஸ்ஜிதுந்நபவியில் தங்குவதற்கான ஒழுங்கு செய்யப்பட்டமைஅன்று மஸ்ஜித் விருந்தினர் விடுதியாகவும் விளங்கியிருந்தது என்பதற்கு போதுமான சான்றாதாரமாகும்.
மற்றொரு சந்தர்ப்பத்தில் மதீனாவுக்கு வருகைத்தந்த ஒரு தூதுக்குழு மஸ்ஜிதுந் நபவியில் தங்கவைக்கப்பட்டதோடு அவர்களைக் காவல் புரியும் பணியில் உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் ஈடுபட்டதாகவும் தெரியவருகின்றதுபிற்பட்ட காலங்களிலும் மஸ்ஜிதுகள் பிரயாணிகள்விருந்தினர்,ஏழைகள் முதலானோருக்கு புகலிடங்களாக விளங்கியமை பற்றி உலகப் பயணிகளான இப்னு ருஷ்த்இப்னு பதூதாஇப்னு ஜுரைர்அல்மக்திஸி போன்றோர் குறிப்புகளை தந்துள்ளனர்.
ஸகாத்ஸகாதுல் பித்ர் முதலான வரிகளும்தர்மநிதிகளும் சேகரிக்கப்பட்டு விநியோகிக்கின்ற இடங்களாகவும் மஸ்ஜிதுகள் இருந்து வந்துள்ளனவரலாற்றில் பல மஸ்ஜிதுகள் நீதிமன்றங்களாகவும்,ஆலோசனை மன்றங்களாகவும் செயற்பட்டுள்ளனநீதிபதிகள் அரச தலையீடு ஏதுமின்றி பொதுமக்களின் வழக்குகளை விசாரித்து தீர்ப்பு வழங்குவார்கள்.
நீதிபதிகளான ஷுரைஹ்மர்வான் போன்றவர்கள் பள்ளிவாயல்களிலேயே வழக்குகளை விசாரித்து தீர்ப்பு வழங்கினார்கள்எகிப்தில் அம்ரிப்னுல் ஆஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களினால் புஸ்தாத் நகரத்திற்கு நீதிபதியாக நியமிக்கப்பட்ட காழி கைஸ் பள்ளிவாசலையே தனது நீதிமன்றமாக அமைத்துக் கொண்டார்.உஹத்அஹ்ஸாப் முதலான யுத்தங்களின் போது கலந்தாலோசனைகள் மஸ்ஜிதுந் நபவியிலேயே இடம்பெற்றன.
அன்று மஸ்ஜிதுகளில் யுத்தப் பயிற்சிகள் வழங்கப்பட்டனயுத்தத்திற்கான முன் ஆயத்தங்களும் அங்கிருந்தே மேற்கொள்ளப்பட்டனயுத்தங்களில் காயப்பட்டவர்களுக்கு மஸ்ஜிதுகளில் வைத்து சிசிச்சை அளிக்கப்பட்ட சந்தர்ப்பங்களும் வரலாற்றில் இடம் பெற்றுள்ளனஅகழி யுத்தத்தின் போது காயப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக மஸ்ஜிதில் ஒரு விஷேட கூடாரம் அமைக்கப்பட்டதாக வரலாறு கூறுகின்றது.
பொதுவாக முஸ்லிம் மருத்துவர்கள் நோயாளிகளுக்கு மஸ்ஜிதுகளில் அமர்ந்து சிகிச்சையளிக்கும் வழமை இருந்து வந்துள்ளதுபெரும்பாலும் மஸ்ஜிதுகளில் மருத்துவ சிகிச்சைகள் இலவசமாக வழங்கப்பட்டன.இங்கு மருந்துகளை வைப்பதற்கான பிரத்தியேக இடங்களும் காணப்பட்டனஸ்பெயினின் குர்துபா பெரிய பள்ளிவாயல் ஒரு மருத்துவ மனையாகவும் செயற்பட்டது.
தொடர்பாடல் மையங்கள்
சமூகத்துக்கு தேவையான அறிவுறுத்தல்களும்செய்திகளும் மஸ்ஜிதுகளுக்கூடாகவே வழங்கப்பட்டன.இஸ்லாத்தின் தூதை முன்வைக்கும் இடங்களாகவும் அவை இருந்து வந்தனஉரைகள்பிரசங்கங்கள்,உரையாடல்கள்கவியரங்கங்கள்விவாதமேடைகள் முதலானவை மஸ்ஜிதுகளில் பரவலாக இடம்பெற்றனஇவற்றுக்கூடாக இஸ்லாத்தின் தூது முன்வைக்கப்பட்டதுசாபித் பின் கைஸ்ஹஸ்ஸான் பின் சாபித் பேன்ற இஸ்லாமிய கவிஞர்கள் அந்நிய கவிஞர்களுடன் போட்டிக்கு கவிதைகள் பாடி அவர்களை இஸ்லாத்தின் பால் கவர்ந்த நிகழ்வுகளும் மஸ்ஜிதுந் நபவியில் இடம் பெற்றன.
அன்று மஸ்ஜிதுகள் எவ்வாறு சமூகத்தின் பல்துறைசார்ந்த தேவைகளை நிறைவேற்றி வந்தன என்பது பற்றி இமாம் இப்னு தைமியா பின்வருமாறு குறிப்பிடுகின்றார்: 'இஸ்லாமிய அறிஞர்கள் அமரும் இடங்களாகவும்சமூகத்தின் கழகங்களாகவும் மஸ்ஜிதுகளே விளங்கினநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தனது புனிதப் பள்ளிவாயலை தக்வாவின் அடிப்படையில் நிர்மாணித்தார்கள்அங்கு தொழுதல்ஓதுதல்திக்ரு செய்தல்கற்றல்கற்பித்தல் உரைநிகழ்த்துதல் முதலான அனைத்தும் நடைபெற்றனஅரசியல் தலைவர்கள்தளபதிகள் நியமணம்அறிமுகங்கள் எல்லாம் நடந்தன.முஸ்லிம்கள் தமது உலகமறுமை தொடர்பான எல்லா விவகாரங்களுக்காகவும் அங்குதான் கூடினார்கள்'

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக